Followers

Tuesday, May 30, 2023

குலங்களாகவும் கோத்திரங்களாகவும்

 

//சாதினு இருக்குறதே கேவலம்னா மனிதர்களை குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிச்சதா வாக்குமூலம் கொடுக்குற அல்லாஹ் யோக்கியனா?// k.Raman

 

குலம் கோத்திரம் என்பது மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே. அன்ஸாரிகள் என்றும், ஹபஷி என்றும், குரைஷிகள் என்றும் குலம் கோத்திரம் இன்றும் அரபுலகில் உண்டு. அவர்களுக்குள் திருமண உறவு உண்டு. இறை வழிபாடு என்று வந்து விட்டால் தோளோடு தோள் உரசி நிற்பர். இறந்தவுடன் அடக்கம் செய்வதும் ஒரே இடத்தில்தான். தீண்டாமை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

 

ஆனால் உனது இந்து மதத்தில் உள்ளது போல் 'பார்பனன் அல்லாதவன் கல்வி கற்றால் ஈயத்தை காய்ச்சி அவனது காதில் ஊற்று என்று சட்ட புத்தகம் எழுதப்படவில்லை.

 

சூத்திரன் பார்பனன் என்று இதிகாசங்களில் எழுதி வைத்துக் கொண்டு மக்களை பிறப்பால் பிரிக்கவில்லை.

 

பெண்களின் மார்புக்குத் தக்கவாறு 'முலை வரி' போடப்படவில்லை.

 

பார்பனப் பெண்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட பெண்களை 'தேவதாசிகளாக' கோவிலுக்கு நேர்ந்து விட்டு அவர்களின் வாழ்வை வீணாக்கவில்லை.

 

அனல்வாது புனல்வாது என்று கூறி எங்கிருந்தோ வந்த பார்பனர்கள் தமிழர்கள் 8000 பேரை கழுவில் ஏற்றி வஞ்சகமாக கொல்லவில்லை.

 

பார்பனர்களுக்கு எதிராக இருந்தான் என்பதால் ஆதித்ய கரிகாலனை கொன்ற பார்பனர்களை தண்டிக்காது விடவில்லை.

 

சேரி என்றும் அக்கரஹாரம் என்றும் சேரி மக்கள் உள்ளே வந்தால் தீட்டு என்றும் வஞ்சிக்கப்படவில்லை.

 

பொதுக் குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என்று எந்த தடையும் அங்கு போடப்படவில்லை.

 

இறை வழிபாடு செய்ய வந்த நந்தனை உள்ளே புக விட்டு நெருப்பிட்டு பொசுக்கி விட்டு ஜோதியாகி விட்டார் என்று புளுகும் வரலாறு அங்கில்லை. ஆண்டாளுக்கும் இதே நிலைதான்.

 

இப்போது உனக்கு புரிந்திருக்கும் குலம், கோத்திரம் என்பதற்கும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் வர்ணாசிரம நடைமுறைக்கும் எத்தனை வேறுபாடு உண்டு என்பதை.

 

இதெல்லாம் உனக்கும் தெரியும்? பல தலைமுறைகளாக பழகி விட்டதால் உன்னால் பார்பனியத்தை எதிர்க்க துணிவில்லை. துணிந்த என் முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: