Followers

Monday, August 24, 2026

குர்ஆனில் உள்ள வசனங்களை சொல்வதற்கெல்லாம் கைது செய்வீர்களா?

 



பரேலி, உத்தரப் பிரதேசம்

 

சமூக ஊடகப் பிரபலம் மாரூஃப் ரஸா கான், ஓரிறைக் கொள்கை தொடர்பாக குர்ஆனின் சூரா அல்-இக்லாஸ் (112:3-4) வசனத்தை மேற்கோள் காட்டினார்—

 

அவன் பெற்றெடுப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை; அவனுக்கு நிகர் எவரும் இல்லை.”

 

பூமி, வானங்கள் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தின் படைப்புகள் அனைத்தும் அவனாலேயே உருவாக்கப்பட்டவை என்று அவர் கூறினார். இந்தப் பிரபஞ்சம் முழுவதற்கும் அவனே ஒரே உரிமையாளரும் படைப்பாளரும் ஆவான்.

 

இந்தக் கூற்றைத் தொடர்ந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டி பரேலி காவல்துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

 

குர்ஆனில் உள்ள வசனங்களை சொல்வதற்கெல்லாம் கைது செய்வீர்களா?

 

ஓரிறைக் கொள்கையை இந்து மதமும் போதிக்கிறதே? இதற்கு யாரைப் போய் கைது செய்வீர்கள்?

 

சங்கிகள் மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.

 

'ஏகாம் எவாத்விதியாம்'
'
அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'

'
அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'

'
அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'

'
அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'

'
அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'
அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'

'
இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

No comments: