Followers

Sunday, November 12, 2006

ஜாகிர் நாயக்கைப் பற்றிய என்னுடைய கருத்து!

ஜாகிர் நாயக்கைப் பற்றிய என்னுடைய கருத்து!

ஜாகிர் நாயக்கைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. போன வருடம் மாற்று மதத்தவரோடான கலந்துரையாடல் நிகழ்ச்சி சவுதி அரேபியா ரியாத் நகரில் நடைபெற்றது. மிகப் பெரிய ஆடிட்டீடாரியத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். பதில் சொல்வதற்காக ஜாகிர் நாயக் வரவழைக்கப் பட்டிருந்தார். அப்பொழுது ஒரு இந்து நண்பர் ''புர்கா என்ற பெயரில் பெண்களை ஏன் முக்காடு இடச் சொல்கிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார்.

இதற்கு விளக்கமளித்த ஜாகிர் நாயக் 'முகம், மணிக்கட்டு இரண்டு பாகங்களைத் தவிர மற்ற பாகங்களை வெளியில் செல்லும் போது முந்தானைகளால்தங்களின் கவர்ச்சித் தரக் கூடிய பகுதிகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்று குர்ஆன் சொல்கிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இதனால் ஏற்படாது' என்று விளக்கினார். அந்த நேரம் மேடையில் ஜாகிர் நாயக்குக்கு அருகில் அமர்ந்திருந்த சவூதி அரசில் மிகப் பெரும் பொறுப்பில் இருந்த அந்த நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த சவூதி நாட்டு அறிஞர் ஜாகிர் நாயக்கின் பதிலுக்குப் பிறகு புர்கா சம்பந்தமாக அவரும் ஒரு தன்னிலைவிளக்கம் கொடுத்தார்.

அதாவது 'குர்ஆன் முகம, கையின் மணிக்கட்டு என்று சொன்னாலும் முகத்தையும் மூடிக் கொண்டால் அன்னியர்களின் கவனம் திசை திருப்பப் படுவதிலிருந்து பெண்கள் பாதுகாப்புப் பெறலாம்' என்று கூறினார். சவூதி பெண்மணிகள் முகத்தையும் மூடிக் கொள்வதை நியாயப் படுத்த வேண்டி இந்த கருத்தை அந்த சவூதி சொன்னார். மார்க்க அறிஞர்களிடையே இது பற்றி சவூதியில் இரண்டு கருத்துகள் உள்ளது.

இவ்வாறு அந்த சவூதி நாட்டவர்சொன்னதை ஜாகிர் நாயக் விரும்பவில்லை. ஜாகிர் நாயக் உடனே எழுந்து மைக் முன்னால் வந்து 'அவர்கள் கேள்வி கேட்டது என்னிடம். அதற்கான பதிலை நான் கொடுத்த பிறகு நீங்கள் ஒரு தனி விளக்கம் கொடுப்பது சரியல்ல. உங்களிடம் கேட்டால் நீங்கள் பதில் சொல்லிக் கொள்ளுங்கள்' என்று கூறி அடுத்த கேள்விக்கு சென்றார். இதை கருத்தரங்கில் கலந்து கொண்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த சவூதி மார்க்க அறிஞரோ 'நான் சகோதரர் ஜாகிர் நாயக்குக்கு பதிலில் மேலதிக விபரமாகத்தான் என் குறிப்பை சொன்னேன். அவரின் கருத்தை மறுப்பதற்காக அல்ல' என்று தன்னுடைய விளக்கத்தில் கூறினார். என் நண்பர்கள் குழாமும் 'அந்த சவூதி அறிஞரின் குறையை ஜாகிர் நாயக் தனியாக சொல்லியிருக்கலாம். இத்தனை பேர் மத்தியில் அவரை குறை கண்டிருக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

பல திறமைகளை உடைய ஒரு நபருக்கு இது போன்ற கோபங்கள் சில நேரங்களில் வந்து விடுவதுண்டு. பதிலை இணையத்தில் கொடுப்பதாக இருந்தால் ஆற அமர யோசித்து பொறுமையாக கொடுக்கலாம். நேருக்கு நேர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நடந்து விடுவதுண்டு.

இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். 'சவூதி ஆரேபியா இரும்புத் திரை கொண்ட நாடு. கருத்துக்களைச் சொல்ல அனுமதி இல்லை.' என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதே சவூதியின் தலைநகரத்தில் பல இந்து நண்பர்கள் இஸ்லாம் சம்பந்தமாக காரசாரமான விமரிசனங்களை அதுவும் ஆங்கிலத்திலேயே வைத்தார்கள். அதற்கு பொறுமையாக ஜாகிர் நாயக்கும்,சவூதி அதிகாரியும் பதிலளித்ததையும் நாம் நேரிடையாக பார்த்தோம்.

பல நேரங்களில் ஜெயராமன், அரவிந்தன் நீலகண்டன், ம்யூஸ், கால்கரி சிவா, பாலா, எழில் போன்றோர் கேட்கும் கேள்விகள் கோபத்தை வரவழைக்கும். அந்த நேரங்களில் ஐஸ் வாட்டர் கொஞ்சம் குடித்து விட்டு அரை மணி நேரம் கழித்து தான் அவர்களின் கேள்விக்கு பதில்எழுத ஆரம்பிப்பேன். ஏனெனில் அந்த கோபத்தோடு பதில் எழுதினால் நம்மையறியாமல் தடித்த வார்த்தைகள் வந்து விழுந்து விட வாய்ப்புண்டு.மார்க்கத்தை முறைப்படி படிக்காத எனக்கே இணையத்தில் பதில் எழுதும் போது இந்த நிலை என்றால் பல மேடைகளை பல நாட்டு மக்களை நேருக்கு நேர் சந்தித்து வரும் ஜாகிர் நாயக்கும் சில நேரங்களில் மனிதன் என்ற முறையில் தவறிழைக்க வாய்ப்புண்டு.

எழில் தன் பதிவில் வைக்கும் வாதம்:

//வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.

"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்

"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "

கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார். "முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"

இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது

"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"

இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.
-
- இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.//


இதே போல்தான் எழில் கொடுத்திருக்கும் பதிவிலும் ஜாகிர் நாயக் சொன்னதாக வந்திருக்கும் ஒரு செய்தி. சவூதியைப் பொறுத்த வரை அது முழுக்கமுழுக்க இஸ்லாமிய சட்டதிட்டங்களை அமுல்படுத்தக் கூடிய ஒரு நாடு. இந்நாட்டின் குடிமக்கள்அனைவரும் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வருபவர்கள்.சவூதி மக்களே அங்கு வேற்று மத பிரச்சாரங்கள் நடைபெறுவதை விரும்புவதில்லை. எனவே இங்கு வேற்று மத பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் நமது பாரத நாடோ மதசார்பற்ற நாடு. எனவே இங்கு எந்த மதத்தவரும் தங்களின் பிரச்சாரத்தை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இரு நாட்டு சட்டங்களையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது என்ற ரீதியில் ஜாகிர் நாயக்கின் பதில் இருந்திருந்தால் சர்ச்சைக்கும் வழி இருந்திருக்காது.

இந்த ஒரு இடத்தில் அவர் சற்று தடுமாற்றத்தோடு பதில் அளித்திருப்பதால் இவரின் மற்ற விளக்கங்களும் இது போன்று இருக்கும் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. மேலும் அவர் சொன்ன கருத்து அவரின் சொந்த கருத்தே ஆகும். அவரின் அந்த வாதத்துக்கு ஆதாரமாக குர்ஆனையோ, நபி வழியையோ காட்வில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண'டும்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

10 comments:

சவூதி தமிழன் said...

சகோதரர் சுவனப்பிரியன்

திருவாளர் எழில் தனக்கு இஸ்லாத்தின் மீது எந்தக் காழ்ப்பும் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய். இஸ்லாத்திற்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்பவர் அவர்.

இறைவனை வரையறுக்க இயலாது என்பது அவரது வாதம். இறைவனின் ஆற்றலை வரையறுக்க இயலாது என்பது முஸ்லிம்களின் வாதம்.

இறைவனுக்கு பலவீனங்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். அதற்குச்சரியான பதில் இல்லாததால் அல்லது தெரியாததால் இப்படி சப்பைக்கட்டு கட்டுகிறார்.

1+1=2 என்று ஒரு காணக்கு மூலம் அனைத்தையும் விளக்கிவிட்டதாக நினைத்துக் கொள்ளும் அவருக்கு 1+0=1 என்பது எந்த அடிமானக்கணக்கிலும், (பத்தடிமானம், பதினாறடிமானம், எட்டடிமானம், ஈரடிமானம்) என எல்லாவற்றிலும் ஒன்று தான்.

1+1=10 என்று அவர் ஈரடிமானம் தவிர வேறெதில் எழுதினாலும் பூஜ்யம் தான் பெறுவார்.

இன்னும் நிறைய இவரது திரித்தல்களைச் சுட்டலாம் நேரம் கிடைக்கும் போது.

அப்துல் குத்தூஸ் said...

அப்படியே கொஞ்சம் நக்கலான கைத்தட்டல்களைக் பற்றியும் விளக்கியிருக்கலாம்.

வாசகன் said...

The answer is simple as that it depends on the government policy.
Islamic Countries like Dubai, Malaysia are allowing 'others' to build their worship places, where very few countries not.

Think the other way, Suppose, if India (God forbid) becomes a Brahmin(Hindu) Nation, Do U think they (Brahmins) will be more generous then others?

The Groups & Friends are vehemently showing their hatred in all possible ways since India is a democratic state.

As U know, ......'s aim is not to understand the explanations but to stirr something in an empty vessel to enjoy his desired music.

மரைக்காயர் said...

இந்து மதம் பற்றி எழில் சொல்லும் கருத்துக்களை வைத்து பார்த்தால் ஜாகிர் நாயக் சொன்னதில் தவறு ஒன்றுமில்லை என்பது விளங்கும்.

//இந்துதுமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை. - எழில்//

இதுதான் இந்துமதம் என்றால், அந்த மதம் இன்னும் முழுமையடையவில்லை என்பது தெரிகிறது. இதுவரை இந்துமதத்தை வளப்படுத்திய ரிஷிக்கள் குருமார்கள் யாருமே ஆன்மீகத்தில் வெற்றியடைய இதுதான் வழி என்பதை உறுதியாக சொல்லித்தரவில்லை. அவரவர்களுக்கு தோன்றியதை ஆன்மீகம் என போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களை பின்பற்றும் மக்களும் trial and error முறையில், யாராவது ஒரு குருவையோ ஞானியையோ பின்பற்றுவதும், பிறகு அவர் சரியில்லை என்று தெரிய வரும்போது அவரை மறுத்து வேறொருவரை தேடுவதுமாக அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த vulnerability-ஐ பிரேமானந்தா போன்ற பலர் சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த கருத்துகளெல்லாம் எழிலின் வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்து கொண்டவையே தவிர நமது சொந்த கருத்துக்கள் அல்ல.

குருமார்களில் பலர் பிரேமானந்தா போல ஏமாற்றுக்காரர்களாக இருப்பதை கண்கூடாக பார்க்கும் மக்கள், யார் சொல்வது உண்மை என்று தெரிந்து கொள்வதற்காக பலரின் போதனைகளையும் வழிகாட்டுதல்களையும் அலசி ஆராய முனைவார்கள். அவர்களில் சிலருக்கு மற்ற மதங்களின் மீதும் ஆர்வம் பிறக்கலாம். தான் இருக்கும் மதத்தை விட இன்னொரு மதம் ஏதோ ஒரு விதத்தில் சிறந்தது என்பதை புரிந்து கொண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் மதத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

இந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் இந்து மதம் ஒரு கட்டுக்கோப்பான மதமாக இல்லாததுதான் என்பது எழிலின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. இதற்கு ஜாகிர் நாயக் என்ன செய்வார்?

ஜாகிர் நாயக் செய்த தவறு, அவர் சொல்ல வரும் கருத்தை கொஞ்சம் நாசூக்காக சொல்லாமல் வெளிப்படையாக சொன்னதுதான்.

suvanappiriyan said...

சவூதி தமிழன்!

//இன்னும் நிறைய இவரது திரித்தல்களைச் சுட்டலாம் நேரம் கிடைக்கும் போது.//

நேரம் கிடைக்கும் போது அவசியம் பின்னூட்டமிடுங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

-----------------------------------------------------------------------------

அப்துல் குத்தூஸ்!

//அப்படியே கொஞ்சம் நக்கலான கைத்தட்டல்களைக் பற்றியும் விளக்கியிருக்கலாம்.//

அதைத்தான் நீங்களே விளக்கி விட்டீர்களே :-) நீண்ட நாட்களுக்குப் பிறகு கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி.


தமிழ் மகன்!

//Think the other way, Suppose, if India (God forbid) becomes a Brahmin(Hindu) Nation, Do U think they (Brahmins) will be more generous then others? //

அடடே! அருமையான சிந்தனை. நான் கூட இந்த ரீதியில் சிந்திக்கவில்லை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

Dear Tamilreber
That is not because of muslim mejority but they said their country is Islamic country and as per Shariah law other than mosques are not worth prayer halls.

The countries what you mention are telling their countries as secular countries including our India and hence we have to fight for our praying rights.

வாசகன் said...

சகோ.எழில் அவர்கள் எதையும் ஒரு நோக்கத்துடன் மஞ்சளாகப் பார்க்க விரும்புபவர் என்பதால் அவருக்கு பின்னூட்டமிட நான் விரும்பவில்லை. எனினும் எடுத்துவைத்துக்கொண்டு பதில் தருகிறார்.என்னே அன்பு!. பின்னூட்ட எண்ணிக்கைக்கு உதவி செய்ய முடிந்த வகையில் மகிழ்வும் நன்றியும்.

பிராமணியத்தை, அது தப்பித் தவறி மிகைத்து விடுவதை வைத்து நான் கேள்வி கேட்டால், சவூதியைப்பற்றி, அவர் என்னிடம் கேட்கிறார். என்னத்தச் சொல்ல? அவன் (சவூதி அரசு) அவனுடைய கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்தால், அதே உறுதியுடன் இவரும் அங்கு போகாமல் இருந்தாலே போதும். அல்லது, ஏதுவான இடமாகச் சென்றாலே முடிந்தது பிரச்சினை.

ஆனால், பிராமணீயம் மிகைத்துவிட்டால், மாட்டுத்தோலுக்குப் பதிலாக மனித உயிர்களல்லவா காவு வாங்கப்படும்? (இந்து என்ற பெயரில் அறியப்படும் மக்களில் பெரும்பாலோர் எந்த மதமும் அற்றவர்கள் (அ) எல்லா மதமும் கொண்டவர்கள் என்பது தான் உண்மை. இதை மிகத் திறமையாக மறைத்து, தம்வயிறல்லாது (மதம் பற்றியெல்லாம்) கவலைப்படத் தெரியாத மக்களின் நெகிழ்ச்சியை பிராமணிய மதத்துக்கு பொன்னாடையாக்குவதில் இந்த பிராமணர்களுக்குத் தான் எழிலான திறமை இருக்கிறது.நவ பிராமணியர்களுக்கும் தான்

வாசகன் said...

//முஸ்லீம் மன்னர்களுக்கு இஸ்லாமை விட நல்ல மதங்கள் உலகத்தில் இருக்கின்றன என்று முஸ்லீம்களுக்குத் தெரிந்தால் இஸ்லாமைவிட்டு ஓடிவிடுவார்கள் என்று பயம் இருக்கிறது. அதனால்தான், இஸ்லாமை தவிர மற்றமதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்றும் பார்க்கலாமே?// - Ezil

What a pity!
Islam proves the fastest growing religion despite the attacks on it while Brahmanism becomes fastest vanishing cult.

suvanappiriyan said...

//மலம் அள்ளூம் தொழிலை இயந்திரம் வைத்து அந்த மக்களை ஏன் விடுதலை செய்யவில்லை 40 ஆண்டு காலம் ஆட்சி புரியும் உங்கள் அன்பு அண்ணன்களும் கலைஞர்களும் தலைவிகளும். அல்லது சமூக நீதி என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்களாவது மலம் அள்ளும் தலித்களுக்காக போராடாலாமே. அப்ஸலை விடுதலை செய் மதானியை விடுதலை செய் என காட்டும் தீவிரம் தலித் விடுதலைகளில் காட்டலாமே. உங்களுக்கு இந்தியாவில் ழுழு உரிமை உள்ளது சார். இந்தியா என்ன சவூதியா? உம் என்றால் சிறைவாசம் இம்மென்றால் வனவாசம் என சொல்லுவதற்கு.//
-Kalkari Siva.


ஆஹா! இதுவரை பெரியார் முதல் இன்று உள்ள பகுத்தறிவாளர்கள்வரை தலித் விடுதலைக்கு அவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவது ஒன்று தான் வழி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேல்சாதி பகுதியிலிருந்து இப்பொழுதுதான் முதல் குரல் வந்துள்ளது. இது மேலும் தொடர வேண்டும். முஸ்லிம்கள் மார்க்கப் பிரச்சாரத்தை இது நாள்வரை தங்களுக்குள்ளேயே செய்து வந்ததால் கால்கரி சிவா போன்றோர்களால் இப்படி எல்லாம் இடித்துரைக்கப் படுகிறது.

எனவே திராவிடர்களே!! முஸ்லிம்களே!நம் நாட்டு பூர்வகுடிகளான தலித்துகளை முன்னேறறுவோம். பல தலைமுறைகளுக்கு முன்பு இந்து மதத்தின் பல சாதிகளிலும் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டோம். நம் முன்னோர்களின் நல்ல முடிவால் பிராமிண்,செட்டியார், நாடார்,மூப்பனார்,தலித் என்று பல சாதிகளிலிருந்து வந்த நாம் 'இஸ்லாம்' என்ற ஒரே சமூகத்தில் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இன்று சாதிகள் இல்லாத ஒரே சமுதாயமாக இந்தியாவிலும் உலகிலும் தலை நிமிர்ந்து வாழ்கிறோம். நாம் பெற்ற இன்பம் நம் நாட்டு மக்களும் பெற வேண்டும். அதற்கான முழு முயற்ச்சியில் ஈடுபடுவோம்.

-----------------------------------------------------------

//பூமி தட்டை என்று பட்வா போட்டான் சவுதியின் தலைமை காஜி. பூமி உருண்டை என்று சொல்பவன் இஸ்லாத்துக்கு விரோதம் என்றான். மேலும், பூமி அசையாமல் நிற்கிறது என்று குரான் சொல்கிறது. அதுவே உண்மை. மீறி சொல்பவர்கள் இஸ்லாத்துக்கு விரோதிகள் என்றும் பட்வா போடப்பட்டது. இதை புகழ்ந்து சவுதி அரசாங்கம் பரிசுகள் கொடுத்தது. நடந்தது 1995 ல் தான் பழைய விஷயமில்லை.

இப்படிப்பட்ட அறிவை தாங்கியவர்களிடம் என்ன பேசுவது?
-JayaRaman //

'அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான் வெளியில் நீந்துகின்றன.'
21 : 33 - குர்ஆன்

சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
36 : 40 - குர்ஆன்.


ஜெயராமனுக்கே விளங்கக் கூடிய வகையில் குர்ஆன் தௌளத் தெளிவாக அனைத்துக் கோள்களும் நீந்துகின்றன என்று சொல்கிறது. பூமி நிலையாக இருக்கிறது என்ற தகவலை எதிலிருந்து எடுத்தார்? இதை ஷேக் பின் பாஸ் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும்அதை முஸ்லிம்கள் உடனே நிராகரித்தும் இருப்பார்கள். பல சிக்கலான சட்டங்களை ஆராய்ந்து இஸ்லாமிய அரும் பணி யாற்றிய ஒரு முதியவரை 'அவன்,இவன்' என்று எழுதும் ஜெயராமனின் தரம் என்ன என்பதும் நமக்கு விளங்குகிறது.

'தோரா (யூதர்களின் வேதம்) அருளப்பட்டு அதன்படி நடக்காமல் இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.'
62 : 5 -குர்ஆன்

எல்லா விபரங்களும் அறிநது கொண்டே பொய்களைப் புனையும் ஜெயராமனை (யூத வழி வந்தவரல்லவா) நோக்கித்தான் இந்த வசனம் பேசுகிறது.

இது போன்ற எழுத்துக்களால் இஸ்லாம் மேலும் வளருமே அன்றி எந்த குறைவும் வந்து விடாது என்பதையும் சம்பந்தப் பட்டவர்கள் விளங்கிக் கொள்ளட்டும்.

இதே பதிவில் இஸ்லாம் சம்பந்தமாக இவர்கள் உளறி இருக்கும் மற்ற அபத்தங்களுக்கும் நேரம் கிடைக்கும் போது ஆதாரத்தோடு அவ்வப்போது பதில் தருகிறேன்.

'இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் இது அருளப் பட்டுள்ளது.'
14 : 52 - குர்ஆன்.

suvanappiriyan said...

பின்னூட்டம் அளித்து கருத்தைப் பதிந்த Marakkayar, sultan,Tamilreber,sadaiyappa, Sengodan, Tamiz magan மற்றும் அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்த வேலை காரணமாக உடனுக்குடன் பதில் எழுத முடியவில்லை. இரண்டொரு நாளில் திரும்பவும் வருகிறேன்.

சுவனப்பிரியன்.