Followers

Tuesday, November 28, 2006

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன! - அறிவியல் உண்மை.

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன! - அறிவியல் உண்மை.

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன எனபதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?'
21 : 30 -குர்ஆன்

இந்த பூமி எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை குர்ஆன் எவ்வளவு அழகாக கூறுகிறது பாருங்கள். இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பல விதமான கட்டுக் கதைகளைத்தான் இதற்கு முன் படித்திருக்கிறோம். திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை முகமது நபி காலத்திலேயே சொல்லி விட்டது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை தானே பிரித்துப் பிளந்து எடுத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்.

இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது.

இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? அல்லது எப்படி உருவானது?

பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

பெரு வெடிப்புக் கொள்கை என்றழைக்கப் படும் இந்தத் தத்துவமே இன்று பிரபலமானது. 1973 ஆம் ஆண்டு நன்றாக விவரிக்கப்பட்ட இந்த பெரு வெடிப்புக் கொள்கை பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு உயர் அந்தஸ்தும் கொடுக்கப் பட்டது.

படிப்பறிவில்லாத முகமது நபிக்கு இந்த உண்மை எவ்வாறு தெரிந்தது? என்று வியக்கிறோம்.

அதே போல் உயிருள்ள பொருள்களின் மூலம் தண்ணீர் தான் என்ற உண்மையையும் குர்ஆன் கோடிட்டு காட்டுகிறது. இந்த உண்மையையும் தன் அனுபவத்தால் முகமது நபி கூறியிருக்க முடியாது என்ற முடிவுக்கும் வருகிறோம். அடுத்து வானத்தைப் பற்றிய மற்றொரு உண்மையையும் குர்ஆன் கூறும் அழகைப் பார்ப்போம்.

'வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில்உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.'
21 : 32 - குர்ஆன்

வானத்தை பாதுகாக்கப் பட்ட முகடு என்று குர்ஆன் கூறுகிறது.

வானத்தை முகடு என்று குர்ஆன் ஏன் கூற வேண்டும்?

விண்ணிலிருந்து வருகின்ற பற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற எரி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப் பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.

மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தை பூமிக்கு நேரிடையாக அனுப்பாமல் மட்டுப் படுத்தப்பட்டு மனிதன் தாங்கக் கூடிய அளவுக்கு வெப்பத்தை அனுப்புகிறது. இது போன்ற பாதுகாப்பை உயிரனங்களுக்காக செய்வதால் இறைவன் வானத்தை முகடு என்று வர்ணிக்கிறான்.

'அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான் வெளியில் நீந்துகின்றன.'
21 : 33 - குர்ஆன்


இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம். கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான 'நீந்துதல்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை படிப்பறிவில்லாத முகமது நபியால் சிந்திக்க முடியுமா? உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றும் கூட நம்மில் பலர் பூமி உருண்டை என்பதையும் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையையும் நம்பாதவர் இருக்கின்றனர்.

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை படைக்க இறைவன் நாடினான். "
41 : 11 - குர்ஆன்.

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. வானம் பூமி அனைத்தும் ஒன்றாக இருந்து பின்னர் பிரித்து எடுக்கப்பட்டதுதான் என்பதை முன்பே பார்த்தோம். இவ்வாறு பிரித்தெடுக்கப் பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன்பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின: என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை குர்ஆன் அன்றே கூறியிருக்கிறது.

குர்ஆன் கூறும் இந்த உண்மைகளை யொட்டிய ஒரு அறிவியல் கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதை அப்படியே கீழே தருகிறேன்:

உலகில் எந்த மூலகமும் மனிதனால் உற்பத்தி செய்யப் படுவதில்லை. ஹீலியம் என்ற மூலகத்தில் தொடங்கி கார்பன், ஆக்சிஜன், இரும்பு, செம்பு, வெள்ளி, நிக்கல், தங்கம் வரை பல மூலகங்களும் நட்சத்திரங்களில் அல்லது அவற்றின் மடிவின் போது தான் உற்பத்தியாகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் தங்கமோ, வெள்ளியோ எல்லாமே ஹைட்ரஜனிலிருந்து தான் தொடங்குகின்றன. அதாவது அனைத்துக்கும் மூலப் பொருள் ஹைட்ரஜன் வாயுதான். வேறு விதமாகச் சொல்வதானால் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு வகையில் மூலக உற்பத்தி 'தொழிற்சாலைகளே'.

சூரியன் போன்ற நட்சத்திரத்தில் முதல் கட்டமாக அணுச் சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாகிறது. ஹீலியம் பின்னர் கார்பன்ஆகிறது. சூரியனை விட பலப் பல மடங்கு பெரிய நடசத்திரங்களில் மேலும் கடும் வெப்பத்தில் கார்பன் அணுக்கள் இடையில்அணுச் சேர்க்கை ஏற்பட்டு ஆக்சிஜன்,நியான் என பல மூலகங்கள் உற்பத்தியாகின்றன.

சில வகை நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கட்டத்தில் வெடிக்கின்றன. அது பயங்கர வெடிப்பாகும். அந்த வெடிப்பின் போது அதிக எடை கொண்ட (அதிக எண்ணிக்கையிலான புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் கொண்ட) தங்கம் வெள்ளி பிளாட்டினம் முதலான மூலகங்களின் அணுக்கள் உற்பத்தியாகின்றன. இவ்விதம் விண்வெளியில் எண்ணற்ற நட்சத்திரங்கள் வெடிக்கும் போது இந்த கன ரக மூலகங்களின் அணுக்கள் விண்வெளியில் பரவி நிற்கின்றன.

இவை விண்வெளித் தூசுடனும் ஹைட்ரஜன் வாயுவுடனும் சேர்ந்து பிரம்மாண்டமான முகில்களாக உருவெடுக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த வாயு முகில்கள் மொத்தையாகத் திரளுகின்றன. அப்போது ஈர்ப்பு சக்தி காரணமாக இவை வடிவில் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. மாபெரும் உருண்டையாக உருவெடுக்கும் போது உட்புறத்தில் கடும் அமுக்கம் காரணமாக பல மில்லியன் டிகிரி அளவுக்கு வெப்பம் தோன்றி அணுச் சேர்க்கை நடக்கத் தொடங்கி அந்த வாயு மொத்தையானது நட்சத்திரமாக உருவெடுக்கிறது. இறுதியில் ஒரு வேளை அந்த நட்சத்திரத்தின் வாழ்க்கை வெடிப்பில் போய் முடியலாம்.

இப்படியாக விண்வெளியில் அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மடிவதும் மீண்டும் வாயு முகில்கள் தோன்றுவதும் அவற்றின் மூலம் புது நட்சத்திரங்கள் தோன்றுவதும் நிகழ்கின்றன. இப்படியாக ஒரு வாயு முகில் மூலம் தோன்றியது தான் சூரியன் என்ற நமது நட்சத்திரம். சூரியனுடன் சேர்ந்து தான் பூமியும் இதர கிரகங்களும் தோன்றின.

அந்த வகையில் பார்க்கும் போது பூமியில் அடங்கிய கார்பன், ஆக்சிஜன், இரும்பு, அலுமினியம், தங்கம், வெள்ளி, முதலான எல்லா மூலகங்களும் என்றோ விண்வெளியில் நட்சத்திரங்களின் உட்புறத்தில் அல்லது அவற்றின் வெடிப்பின் போது தோன்றியவையே!

15-10-2006 - தினமணி

இனி இப்பேரண்டத்தைப் பற்றியும், அறிவியல் முடிவுகளைப் பற்றியும் ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

'பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாய் அமைந்த கொள்கைகளும் மார்க்ஸ் லெனின் ஆகியோரின் கருத்துக்களும் வெற்றுருத் தத்துவமாயுள்ள (வெறும் கருத்தாயுள்ள - உண்மையில் நடைமுறையில் இல்லாத) கற்பனை மனிதர்களுக்கு மட்டுமே பொருந்துவனவாகும். மனித உறவுகளுக்கான சட்டங்கள் இன்னும் அறியப்படாமலே இருக்கின்றன என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய சமூகவியலும் பொருளியலும் வெறும் அனுமானத்தின் - ஊகத்தின் அடிப்படையிலான இயல்களே ஆகும். அதாவது போலி அறிவியல்களாகும்.

- பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் அலெக்ஸிஸ் கேரல்(Dr. Alexis Carrel)
- Book : Man The Unknown


'இப்பேரண்டத்தைப் பற்றிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இருப்பினும் அறிவியல் சிந்தனையின் வரலாற்றிலேயே மிகவும் மர்மமான ஒன்றாக பெரும் புதிராக இன்று வரையிலும் விளங்கிக் கொண்டிருப்பது இப்பேரண்டமேயாகும். இயற்கையைப் பற்றி தற்காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு முந்தய யுகம் எதனையும் விட அதிகமானதே என்றாலும் இதுவும் கூட போதுமானதன்று. ஏனெனில் நாம் இப் பேரண்டத்தில் எங்கு திரும்பினாலும் புதிர்களும் முரண்பாடுகளுமாகவே காடசியளிக்கின்றன.'

அறிஞர் : J.W.N. SULLIVAN

வாழ்க்கை என்பது இன்னும் கூட விடுவிக்க முடியாத ஒரு புதிராக இருந்து வருகிறது. என்பதனை நவீன மனிதன் ஒத்துக் கொள்கிறான்.இருந்தும் நிச்சயம் ஒருநாள் இந்தப் புதிருக்கான விடையை நாம் கண்டு பிடித்தே தீருவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறான். மனித வாழ்வியல் துறைகளில் மூழ்கி ஆய்வு செய்த பலரும் இன்னும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியாமல் தமது சொந்தக் கற்பனைகளின் உலகில் திசை தெரியாமல் தடுமாறி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் அதிகமானோர் முடிவில் விரக்தியடைந்து நாத்திகத்தின் பக்கம் சென்றுவிடுகின்றனர். இதை நாம் கண் கூடாக நம் தமிழகத்திலேயே பரவலாகப் பார்க்கிறோம்.

நம் வலைப் பதிவர்களில் கூட ஒரு சில நண்பர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையால் அவன் எப்படிப் பட்டவன், அவனை எவ்வாறு அடையலாம் என்ற சிந்தனைகள் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

//எப்போதும் நமது மனதில் இடையறாது இருக்கும் செக்ஸ் பற்றிய பிரக்ஞையை கடவுளின் பால் திருப்ப அதையே வணங்கும் பொருளாக ஆக்கியிருப்பர் பண்டைய பாகன்மார்கள் என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் அது இன்றைய சிவலிங்கமாக மாற்றம் பெற்றிருக்கலாம்.//
-Nesa Kumar

//தமிழகத்தின் தென்பகுதியில் இயங்கும் ஒரு ஆன்மீகக் குழுவைப் பற்றி ஒருநாள் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார், அக்குழுவின் சித்தாந்தத்தில் மற்றவர்கள் தலையிடுவது தவறு என்று.அக்குழுவில் இருப்பவர்கள் , தமது வளாகத்திற்குள் ஆடையெதுவும் அணிவதில்லை. திருமண பந்தமென்று எதுவும் அங்கில்லை. பிடித்திருந்தால், உறவு கொள்ளலாம். எவ்வித நிர்ப்பந்தமும் அங்கில்லை.//
-Nesa kumar

//ஆனால், விரும்பி ஒருவரை ஒருவர் புணர்ந்தால், திருமணம் கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தால் - அதில் ஒழுக்கக்காவலர்களுக்கென்ன பிரச்சினை. //
-Nesa kumar

//திராவிடத்திலும் தெய்வங்கள் இருக்கிறது. ஆனால் அவை சக மனிதன் போல் கள்ளும் சாராயமும் குடிப்பவை.எந்த வேதத் தன்மையோ புனிதத்தன்மையோ இல்லாதா "துடியான" தெய்வங்கள்.//
-Kalvettu

//ஆனால் அந்த வழிபாடு உருவான விதம் அப்படி அல்ல. வேத இலக்கியத்தில் பிரம்மாண்டம் முழுவதும் "ஸ்கம்பம்" என்ற தூணாக உருவகிக்கப் பட்டு, அதன் பிரதியாக ஒரு தடி யாகங்களில் வணங்கப் பட்டது, இதுவே பின்னர் சிவலிங்கமாயிற்று. தடியைத் தூக்கிச் சென்ற எருது நந்திதேவராயிற்று. சுவாமி விவேகானந்தரும் இதே கருத்தைத் தான் கூறுகிறார் - //
-Jadayu

//ஒஷோ எதற்கும் தடை இல்லையென்றார். அவரின் (நான் சென்றதில்லை) ஆசிரமத்தில் வன்முறைக்கு இடமே இல்லை. வன்புணர்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. பெரும்பாலோர் தியானத்திலே களிப்பர் வெகு சிலரின் காம தியானத்தை நம் அழுக்குப் பிடித்த பரபரபு மீடியாக்கள் எழுதி காசுப் பார்த்தன.//
-Kalkari Siva

//யூதர்கள் அத்தகய அட்டூளியங்கள் செய்யவில்லை.காரணம், யூதர்கள் மதம் மாற்றுவதில்லை, அவர்கள் தங்களுக்குள்ளேயே குளுக்களாக இருந்து spiritual enlightenment அடைந்து வந்துள்ளனர். நீங்கள் சுட்டிய esenes//
-Vajra
//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.////ஈசன் எங்குமிருக்கிறான். பிரபஞ்சத்தில் இருப்பவன் நம் உடலில் இல்லாமலா போய்விடுவான்?பிரபஞ்சம் - அண்டம்உடல் - பிண்டம்//-Njaanavettiyan

இறைவனை நானும் தேடுகிறேன் என்று தன் மனம் போன போக்கில் தேடினால் மேலே சுட்டிக் காட்டிய எண்ணங்களெல்லாம் அனைவரின் மனதிலும் எழ ஆரம்பிக்கும். இது மேலும் பல குழப்பங்களுக்குத்தான் வழி வகுக்குமேயன்றி ஒரு தீர்வைத் தராது.
நம்மைப் படைத்த இறைவனைப் பற்றியும், இந்த உலகம் உருவான விதம் பற்றியும், தெளிவாக எளிய நடையில் விளக்கியிருக்கும் குர்ஆனை ஏனோ பலரும் திறந்து பார்க்க விரும்புவதில்லை. 'குர்ஆன் என்பது முஸ்லிம்களின் வேதம். அதை நாம் ஏன் விளங்க வேண்டும்'என்ற எண்ணம் தான் பலரிடமும் இருக்கிறது. இறைவன் குர்ஆனில் பல இடங்களில் 'மனிதர்களே!' என்று உலகமக்களைப் பார்த்துதான் அதிகமாகப் பேசுகிறான்.

'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே தூதராக உம்மை அனுப்பியுள்ளோம்.எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
34 : 28 - குர்ஆன்

'இக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். முஹம்மதே! அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் 'நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை' என்று இந்தக் குர்ஆனை மறுப்போர் கூறுவார்கள்.'
30 : 58 -குர்ஆன்

'இந்த முன்னுதாரணங்களை மக்களுக்காக கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள்.'
29 : 43 - குர்ஆன்.

'இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் இது அருளப் பட்டுள்ளது.'
14 : 52 - குர்ஆன்.

'மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு இவ் வேதத்தை அருளினோம்.'
14 : 1 - குர்அன்.

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார்.நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்' என்று முஹம்மதே! கூறுவீராக.
10 : 104 - குர்ஆன்.இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

9 comments:

வளர்பிறை said...

இறைவனைப்பற்றி நாம் ஓரளவு, அறிய வேண்டுமென்றால் அவுனுடைய படைப்பினங்களின் மூலம் ஓரளவு, நம் சிற்றறிவுக்கு தகுந்தவாறு தெரிந்து கொள்ளலாம். அவனுடைய தன்மைகளை அறிய வேண்டுமென்றால் அது நம் அறிவுக்கு அப்பாற் பட்டாதாகவே இருக்கு வேண்டும். ஏனேன்றால் அவுனுடைய படைப்புகள் அவ்வளவு பிரமாண்டம், நுண்ணியம்.


தாய் எப்படி தம் குழந்தைகளுக்கு ஓவ்வொன்றாக சொல்லி விளக்குவாளோ, அது மாதிரி தான் இறைவன், அவன் கூறும், படைப்புகளிலே சிறந்த படைப்பினமாகிய மனிதர்களைப்பார்த்து இந்த கேள்விகளைக் கேட்கிறான். தம்படைப்பினங்களை காட்டி மனிதர்கள் அனைவரையும் சிந்திக்கச் சொல்லும் இறைவனின் பரிவு உலகில் குர்ஆனில் மட்டும் தான் பார்க்க முடியும். குர்ஆன் ஓர் அருட்கொடையாகவே மனிதர்களுக்கு உள்ளது என்பதை அற்புதமாக விளக்குகின்றான்.

தொடர்ந்து மிக அழகான பதிவுகளை தருகிறீர்கள். நேசகுமார், நீலக்கண்டன், வஜிரா போன்றோர்கள் கேட்கும் விஷமத்தனமான கேள்விகளால் எம் போன்ற அறைகுறையான முஸ்லீம்களுக்கு உங்கள் பதிவுகள் மூலம் மிக நல்ல விளக்கங்கள் கிடைக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்
வளர்பிறை

ஸயீத் said...

உங்கள் மீது சாந்தியும் சமாதனமும் மற்றும் இறைவனின் அருளும் உண்டாகட்டும்.

\\'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார்.நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்' என்று முஹம்மதே! கூறுவீராக.
10 : 104 - குர்ஆன்.\\

இவ்வளவு அருமையாக விளக்கி நீங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டவன் என்று நிருபிக்கிறீர்கள் ஆனால் ஒரு சிலர் உங்கள் மீதே நீங்கள் ஒரு இந்துத்துவா ஆசாமி என்றும் அவர்களுக்கு இப்படியெல்லாம் பதிவு போட்டு உதவுவதாகவும் அவதூறு கூறியுள்ளனர். என்ன செய்ய அவர்களுக்கு இருப்பது அவ்வளவுதான். இதெல்லாம் உங்களை வம்புக்கிழுக்கும் முயற்சி இதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடரட்டும் உங்கள் அருமையான பணி. இறைவன் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

abdullah said...

NATRAKAA EZUTHI VARUKIREERKAL...VAZTTHUKKAL Suvanaprriyan!

abdullah said...

NANTRAKA EZUTHI VARUKIREERKAL VAZTTHUKKAL.............

சுவனப்பிரியன் said...

Thanks for comments Mr Valarpirai,Saeed,Abdullah.

சுவனப்பிரியன் said...

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால்முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில் இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.

சுவனப்பிரியன் said...

Question: ஏகத்துவத்தை நன்கு உணர்ந்தாக கூறும் தாங்கள் இன்னும் உருவ வழிபாடு செய்கிறீர்களா. பிறப்பின் அடிப்படை யில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆத்மராம்: "மனுநீதி அடிப்படையிலான சாதி அமைப்பு முறை நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் அதன் நோக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகில் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் மனுநீதி குறிப்பிடும் பிராமணர் ஆகமாட்டார்கள். எனவே பிராமணர் என்று யாரும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது. உருவ வழிபாடு ஆன்மீகத்தின் ஓர் அங்கமே! சாதாரண மக்கள் இறைவனை அடைவதற் கான ஒரு எளிய முயற்சிதான். எப்படி எல்லா நதிகளிலும் கடலில் சென்று கலக்கிறதோ அது போன்றே வழிபாட்டு முறை பலவாறாக இருந்தா லும் கடவுளை அடைவதே நோக்கமாகும். நான் உருவ வழிபாட்டை தவிர்த்து வருகிறேன். உருவமற்ற வழிபாட்டு முறை ஆன்மீகத் தின் உயர்ந்த படித்தரம் எனினும் அதனை எல்லோராலும் பின்பற்ற முடியாத நிலையே உள்ளது. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து திருந்தினால்தான் தடுக்க முடியும். நாளடை வில் அது குறைந்து விடும். படித்தவர்களால் மட்டுமே அது சாத்தியம். நான் படித்தவன் என்பதால், இறைவன் நாடினால் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடிக்கக் கூடியவனாக மாறுவேன்... "என்றார்.

அவரது நேர்வழிக்காக நாமும் பிரார்த்திப்போமாக!

சுவனப்பிரியன் said...

Bharathiyar!

" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."
-Subramania Bharathi
Tharasu,
Thanks Mr malan.

tamilreber said...

முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."

Yes they will know how these muslims think and justify
their crimes in name of islam.
It will help them in tackling the
muslim menace.