Followers

Monday, February 26, 2007

பரம்பரை ஆட்சி பற்றி நீலகண்டன்களுக்கு!

பரம்பரை ஆட்சி பற்றி நீலகண்டன்களுக்கு!

உலகில் பலவிதமான ஆட்சி முறை இருக்கிறது. கம்யுனிஷம், கேபிடலிஸம், பரம்பரையில் வரும் அரசாட்சி, குடி மக்களால் நம் நாட்டு முறைப்படி ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுதல் என்று பலமுறைகளை நாம் பார்த்து வருகிறோம். ஒரு நாட்டில் எந்த ஆட்சி முறை நடைமுறையில் இருந்தாலும் அந்த முறையினால் அந்நாட்டு மக்கள் நன்மையடைகிறார்களா என்பதுதான் முக்கியம்.

இன்று சவுதியை எடுத்துக் கொள்வோம். அந்நாட்டு ஆட்சியாளர்கள் பெரும் பெரும் அரண்மனைகளில் வாழ்ந்தாலும் மக்களின் நலன்களில் அக்கரை உடையவர்களாகவே இருக்கின்றனர். நம் நாட்டைப்போல் 'எங்களை வாழ வைக்கும் தெய்வமே அம்மா! டாக்டர் ஐயா!' போன்ற தனி மனித வழிபாடுகளை சவுதியில் எந்த இடத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. மாநாடுகள் என்ற பெயரிலே ரோடுகள் முழுக்க பள்ளங்களை நோண்டி 50 அடி, 60 அடி கட்அவுட்கள் வைக்கும் கலாச்சாரத்தை சவுதியில் பார்க்க முடியாது. தன்னை விட வயதில் மூத்தவர்களையும் காலில் விழ வைத்து மனிதனை மடையனாக்கும் கலாச்சாரத்தை சவுதியில் காண முடியாது.

தலைவர்கள் இறந்தவுடன் அவர்களின் சமாதியை பல லட்சம் செலவு செய்து மெரீனா கடற்கரையை மயானத் திடலாக்கும் கொடுமை சவுதியில் கிடையாது. சமீபத்தில் தற்போதிருக்கும் ஆட்சியாளர் அப்துல்லாவுக்கு முன்பு ஆட்சி செய்த பஹத் இறந்ததை நாம் அறிவோம். 25 வருடம் சிறப்பாக ஆட்சி செய்த ஒரு ஆட்சியாளருக்காக சவுதியில் அரசு விடுமுறை விடவில்லை. எல்லோரும் அன்றும் பணிக்கு சென்றிருந்தோம். அவருடைய அடக்கஸ்தலம் வெறும் மண்ணாலும் கூழாங்கற்களாலும் மூடப்பட்டிருந்தது. ஒரு அடி கூட சிமெண்டால் அந்த அடக்கஸ்தலம் உயர்த்தப்படவில்லை. இந்த காட்சியை நேரடி ஒளி பரப்பில் பார்த்துக் கொண்டிருந்த இத்தாலி நாட்டைச் சார்ந்த போப்புக்கு நெருங்கிய கிறிஸ்தவ மத போதகர் 'இப்படி ஒரு எளிமையான வாழ்க்கையா?' என்று வியந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்வை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். உலக பணக்காரர்களில் ஒருவரான பஹதுக்குத்தான் இந்ந நிலைமை. இத்தகைய எளிமையை அந்த ஆட்சியாளர்களுக்கு போதித்தது இஸ்லாம் அல்லவா?

ஹஜ் பயணம் செய்யும் பல லட்சம் யாத்ரீகர்களுக்கு கோடிக்கணக்கான டாலர்களை வருடா வருடம் அரசு செலவில் செலவழிப்பதும் இந்த அரசுதானே! இது அல்லாமல் அரசரின் சொந்த பணத்தையும் கோடிக்கணக்கில் செலவழிப்பதை நாம் வருடா வருடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

இது அல்லாமல் அரசு செலவில் ஒவ்வொரு சிறு நகரத்திலும் குர்ஆன் விளக்க உரையும், முகமது நபியின் ஹதீஸ்களையும் கற்றுக் கொடுக்க பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்துள்ளது. இவையனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக பிரத்யேகமாக உண்டாக்கப்பட்டுள்ளது. இதன் வேலை நேரம் மாலை ஆறுமணியிலிருந்து இரவு 11 மணிவரை. உங்கள் இருப்பிடத்திற்கே வாகனம் வந்து அழைத்துச் செல்லும். சாப்பாடு, புத்தகங்கள் அனைத்தும் இலவசம். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நபர்களுக்கு இவை எல்லாம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்காகவும் தனித்தனி ஆசிரியர்கள் பல நாட்டவரையும் நியமித்திருப்பது மேலும் சிறப்பு.

உங்கள் முதலாளி சரியாக சம்பளம் கொடுப்பதில்லையா? இதை கவனிப்பதற்க்கென்றே அரசு செலவில் 'லேபர் கோர்ட்டுகள்' உள்ளன. இவையனைத்தும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசம். இதனால் பலனடைந்த தொழிலாளர்கள் அனேகர்.

இந்த ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை. எல்லோரையும் திருப்திபடுத்தும் வகையில் எந்த ஆட்சியாளரும் நடந்து கொள்ள முடியாது. உலகில் நடக்கும் ஆட்சிகளில் சவதியின் ஆட்சிமுறை சிறப்பாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். இனி நீலகண்டனின் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்

//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? குலப்பரம்பரையில் வரும் அரசருக்கு குடிமக்கள் குரான் சொல்லுவது போல கட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவது எத்துவாளித்தனமல்லவா?//-Aravindhan

'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.
-குர்ஆன் 4 : 59

மேலே றான் சுட்டிக்காட்டியிருக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் சவுதி அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அரசாணைக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டு விட்டார் அரவிந்தன்? அதிகாரத்தில் உள்ளோருக்கு கட்டுப்படுங்கள் என்று குர்ஆன் தெளிவாக விளக்குகிறதே! இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லப்பட்ட வசனம். இந்தியனான நான் தற்போதய ஆட்சியாளர் மன்மோகன் சிங்கிற்கு கட்டுப்பட வேண்டும். தமிழனாகவும் இருப்பதால் கருணாறிதிக்கும் ஆட்சி அதிகாரத்தில் கட்டுப்படுகிறேன். இப்படி ஒரு அதிகார வரம்பு இருந்தால்தான் நம் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அத்தகைய அதிகாரம் இல்லாத ஈராக் இன்று படும் அவஸ்தையையும் கண் கூடாக பார்க்கிறோமே!

//இந்த இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?//

இந்த அரசரை நீக்குவதும் வேறொரு நபரை அந்த பதவியில் அமர்த்துவதும் அரவிற்தனுக்கோ அல்லது சுவனப்பிரியனுக்கோ உள்ள வேலை அல்ல. இது அந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அரசரின் செயல்பாடு சரியில்லை என்றால் அந்நாட்டு மக்களே தூக்கி எறிந்து விடுவார்கள். இன்று வரை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் ஹஜ் பயணம் சென்று கொண்டிருக்கிறது. இப்படி சிக்கலில்லாமல் சென்று கொண்டிருப்பது அரவிந்தனுக்கு கஷ்டமாக இருக்கலாம். என்ன செய்வது?

அடுத்து ஒரு தலித் முஸ்லிமாக மாறினால் அடுத்த நிமிடமே உலக முஸ்லிம்களில் ஒரு சகோதரர் ஆகி விடுகிறார். இங்கும் 'தலித் முஸ்லிம்' என்ற இல்லாத பிரிவை உண்டாக்கி புரோகிதத்தை நுழைக்க வேண்டாம் அரவிந்தன். தலித் மக்களுக்கு செய்த கொடுமைகளெல்லாம் போதும். இனிமேலாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.

//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது தொடர்பாக அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன.//- dinakaran

இதை நான் மறுக்கவில்லையே! எல்லா நாடுகளிலும் எதையும் காமக் கண்ணோடு பார்க்கும் நபர்கள் இருந்துள்ளார்கள். இதற்கு அரபு நாடுகள் மட்டும் விதிவிலக்கல்ல. இதற்க்காக தனி நீதிமன்றங்களே அந்நாடுகளில் உள்ளது. நமது தூதரகங்கள் இதற்கான முழு முயற்ச்சியை எடுக்க வேண்டும். அல்லது வீட்டு வேலைக்கு பெண்களை அனுப்பும் முயற்சி கைவிட வேண்டும். கோடிக்கணக்கான அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் அப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க தூதரகங்கள் முன்வர வேண்டும். சில தூதரக அதிகாரிகள் அரபுகளிடம் பணம் வாங்கிக் கொண்டு நம் நாட்டவருக்கு துரோகம் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். எனவே பல முனையிலும் இதற்கு விடிவு காண வேண்டும்.

அடுத்து நம் நாடு குடிமக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறது என்று பெருமைபட்டுக் கொள்கிறோம். ஜவஹர்லால் நேருவிலிருந்து இன்றைய சோனியாகாந்தி நாளைய பிரியங்கா வரை நடைபெறும் பரம்பரை ஆட்சியையும் பார்க்கிறோம். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு இப்போதே பரிவட்டம் கட்டியாகி விட்டது. அன்பு மணியையும் அமைச்சராக்கி விட்டோம். வாசனையும் அமைச்சராக்கி விட்டோம். இதை நான் குறை சொல்லவில்லை. யார் வந்தாலும் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா!

இதை எழுதுவதால் அரபுகள் பத்தரை மாற்று தங்கங்கள் என்று சான்றிதழ் தருவதல்ல என் நோக்கம். காட்டுமிராண்டிகளாக இருந்த அரபுகளை இன்று ஓரளவு நாகரீக சமுதாயமாக மாற்றியது இஸ்லாமிய வரவால்தான். எனவே அரபுகள் செய்யும் தவறுக்கு இஸ்லாத்தை குறை காண வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

Saturday, February 24, 2007

ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது!

ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது!

இன்று பெரும்பாலான மக்களுக்கு தங்கள் நட்சத்திரம், ராசி, லக்னம் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தை நீட்டி பலன் கேட்டு வருகின்றனர்.

சில பணக்காரர்கள் பேமிலி டாக்டர் போல பேமிலி ஜோதிடர்களையே வைத்துள்ளனர். அவர்களைக் கலந்தாலோசித்தே காரியங்களைச் செய்கின்றனர். பெரும்பான்மை மக்களைத் தன் பிடியில் வைத்திருக்கும் இந்த ஜோதிடம் என்பது உண்மையா? இனி வருபவற்றை ஆழ்ந்து படித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியது நீங்கள்தான்.

உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூுரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கைக் கொள்கை.

விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து சந்திரனும் இதர கிரகங்களும் சூுரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்வெளிப் பாதையை 'சோடியாக்' என்றழைக்கின்றனர். இந்த பாதையைக் கடக்க சூுரியனுக்கு ஓர் ஆண்டு காலம் பிடிக்கிறது. இதைப் பழங்கால ஜோதிடர்கள் 12 பிரிவுகளாக்கினர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு மாதமாகும். மார்ச் 21ந்தேதி வசந்த காலம் ஆரம்பம் ஆகும் போது மேஷத்தில் சூுரியன் சஞ்சரிப்பான். இதை மேலை நாட்டில் 'ஏரிஸ்' என்பர். இந்த ஆடு போன்ற சின்னத்தில் சூுரியன் இருக்கும் போது பிறந்த நபர் ஆட்டுக்குரிய குணாதிசியங்களுடன் இருப்பார் என்பதும் ஜோதிடக் கோட்பாடு. இந்த ஆட்டைப் போலவே சூுரியன் சஞ்சரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த நட்சத்திரங்கள் ஏறத்தாழ பிரதிபலிக்கும் ஒரு உருவத்தை சின்னமாக அளித்திருக்கின்றனர். இப்படி அளிக்கப்பட்ட சின்னங்கள்தான் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற ராசிகள்.

இப்படி பல்வேறு சின்னங்களில் சூுரியன் இருக்கப் பிறந்தவர்கள் இன்ன இன்ன குணாதிசியங்களுடன் இருப்பர் என்று வரையறுத்திருக்கின்றனர். இந்த விண்வெளி கிரகங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வேகமும் சுறுசுறுப்பும் இப்போது இல்லை. தங்கள் சுழற்ச்சியில் வேகம் குறைந்து சற்று சோம்பேறியாகி விட்டன. புவியின் சுழற்ச்சியில் மந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். சூுரியனும் தன் பழைய வேகத்திலிருந்து 'டல்' லாகவே சுற்றுகிறதாம் இப்போது சூுரியன் தன் சுழற்ச்சியில் ஒரு மாத காலம் பின் தங்கி இருக்கிறதாம். ஆக முந்தய கணக்குப்படி மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலம் ஆரம்பிக்கும்போது சுரியன்() இப்போது ஆட்டில்(மேஷத்தில்) இருக்க மாட்டான். அதனுடைய முந்தய ராசியான மீனில்(மீனத்தில்) இருப்பான்.

சிம்மத்தில் பிறந்த ஒருவன் சிங்கம் போன்ற வீரத்துடன் இருப்பான் என்பர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு 'லியோ' என்று சொல்லப்படும் சிம்ம ராசிக்கு அது சரியாக இருக்கலாம். இப்போது 'சிம்மம்' என்று நாம் நினைப்பது உண்மையில் 'நண்டு' என'கிறார் பால் கூடற்க் என்ற பிரபல பிரெஞ்சு வானியல் நிபுணர். 'நண்டு' என்பது சிம்மத்திற்கு முந்தய ராசியான கடகத்தைக் குறிக்கும். எனவே இன்றைய கிரக சஞ்சாரப்படி நமது ராசிகளே அடியோடு மாறி விடுகின்றன.

நமது செல்வம், ஆரோக்கியம், உயர்வு, தாழ்வு ஆகியவற்றை சந்திரன் சூுரியன் உள்ளிட்ட இதர கிரகங்களே நிர்ணயிப்பதாகச் சொல்லப்படுகிறது. கிரகங்களில் குரு, புதன், சுக்கிரன் ஆகியவை நன்மை தரக் கூடிய சுப கிரகங்கள் என்றும் சனி, செவ்வாய் ஆகியன தீமை தரக் கூடிய கிரகங்கள் என்றும் ஜோதிடர்கள் சொல்லி வருகின்றனர். ஜோதிடர்கள் முன்பு வகுத்த கோட்பாடுகள் எல்லாம் இந்தப் பழைய கிரகங்களின் அடிப்படையில்தான்.

ஆனால் 1781-ல் யுரேனஸ், 1946-ல் நெப்டியுன், 1930-ல் புளுட்டோ போன்ற கிரகங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கிரகங்கள் தங்கள் சுப, அசுப பார்வைகளை விசிப் பலன் வழங்குமே! அவற்றை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது?

என்னமோ நீங்களாச்சு உங்கள் ஜோதிட நம்பிக்கையாச்சு!
-நன்றி வாரமலர்

ஜோதிடமும், வாஸ்துவும், இஸ்லாமும்

நம்முடைய முன்னேற்றத்துக்கு இறைவனின் கருணையும், கடுமையான உழைப்பும், திட்டமிடலுமே! அதை விடுத்து படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் மூழ்கி கிடப்பது வேதனையிலும் வேதனை. நம் நாட்டின் ராக்கெட் டை ஏவுவதிலிருந்து, சமீபத்தில் நடந்த திமுக மாநாடு வரை ஜோதிடர்களின் ஆலோசனைப் படி ராகு காலம் பார்த்து நடத்தப்படுகிறது. இப்படி நேரம் காலம் பார்த்து நடத்துபவர்கள் தங்களை பகுத்தறிவாதிகள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ஜோதிடமும் அதைச் சார்ந்த வாஸ்து சாஸ்திரம் முதலானவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை.

மானசரா, மயாமாதம், மனுஷாவியா(ஏதாவது புரிகிறதா) போன்ற நூல்களின் அடிப்படையில்வாஸ்து சாஸ்திரம் கடை பிடிக்கப் படுவதாக அறிய முடிகிறது. வாஸ்து பற்றி விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் ரூ அய்ந்து கோடி வழங்கப்படும் என்று ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் உள்ள ஜன விஞ்ஞான வேதிகா (ஜே.வி.சி) நிறுவனம் அறிவித்துள்ளது. இது பற்றி அதன் அமைப்பாளர் டி.வி.ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால்சிலர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 'ஆஸ்துமா' மருத்துவத்துக்கு மீன் மருத்துவம் என்பதும் இது போன்ற செயல் ஆகும். ஒரு கட்டிடம் என்பது கட்டிட அமைப்பின் முறைப்படி கட்டப்பட வேண்டுமே தவிர 'வாஸ்து' முறைப்படி அல்ல. வாஸ்து பற்றி விஞ்ஞான ரீதியாக நிரூபித்தால் ரூ5 கோடி வழங்கத் தயார்' என்று கூறினார்.
தினத்தந்தி 20-6-2005

இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களிலும் ஒரு சிலர் ஜோதிடத்திலும், சூன்யத்திலும் நம்பிக்கை வைத்து தங்களின் வாழ்நாளை வீணாக்கி வருகின்றனர். தாயத்து தகடுகள் என்று எழுதுபவருக்கே புரியாத மொழியில் எதை எதையோ எழுதி வைத்து, அதை வீடுகளில் தொங்க விடுகிறார்கள். உடம்பில் தாயத்தாக கட்டிக் கொள்கிறார்கள். 786 என்ற எண் புனிதமானது என்று எண்ணுகிறார்கள். (ஒரு சினிமாவில் எதிரி சுடும் போது ரஜினி கழுத்தில் கிடக்கும் 786 என்ற டாலர் அவர் உயிரை காப்பாற்றும்) பத்திரிக்கைகளில் வரும் ராசி பலனில் நம்பிக்கை வைக்கிறார்கள். இப்படியான பல தவறான நம்பிக்கைகளில் முஸ்லிம்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். இது போன்ற நம்பிக்கைகளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

முகமது நபி கூறுகிறார், 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்'ஆதாரம்: அஹமத்

பத்தரிக்கைகளில் வரும் ராசி பலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிலுள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்த வான சாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இறை மறுப்பாளன் ஆகிறான். இதைப்பற்றி முகமது நபி கூறும் போது,

'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.ஆதாரம்: புகாரி

'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்நூல்:அஹ்மத்

'சூன்யக்காரன் எங்கு சென்றாலும் ஒரு போதும் வெற்றி பெற மாட்டான்' அல் குர்ஆன் (20:69)

ஒவ்வொரு ஊரிலும் சூன்யம் எடுக்கிறேன் பேர்வழி என்று சாமியார்கள், மௌலானாக்கள் என்று பல போலிகளிடம் நகைகளையும் பணத்தையும் இழந்த கதைகள் பத்திரிக்கைகளில் ஏராளம். மறைவான விஷயங்கள் இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அப்படி தெரியும் என்று அவன் வாதிட்டால் இறைவனின் வல்லமையோடு அவன் போட்டி போடுகிறான். இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள்மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கை ரேகை பார்ப்பது,பீங்கானில் நீர் ஊற்றிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல் வேறு வழி முறைகளைக் கையாள்கிறார்கள். இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 தடவை பொய சொல்பவர்களாகவே இருக்கின்றனர்.இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து நாம் தான் நம் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Thursday, February 22, 2007

ராணுவத்தைப் பற்றிய நண்பர் சமுத்திராவின் கேள்விக்கான பதில்!

ராணுவத்தைப் பற்றிய நண்பர் சமுத்திராவின் கேள்விக்கான பதில்!

//1.இரானுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால் என்ன பலன் ஏற்படபோகிறது? ஒரு மாநிலம் முழுக்க இருக்கும் மக்களை கொன்றுவிட முடியாது, மேலும் அப்படி நாம் கொல்லும் பட்சத்தில் உலக வல்லரசுகள் இந்தியாவுக்கு எதிராக அதை பயன்படுத்தி நம்மை அழிக்க முயல்வார்கள் என்ற நிலையில் இந்திய இரானுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால் என்ன பயன் என்பதை விளக்குவீர்களா?Is the killing intentional and if so, what are the benefits ?/////-Samudra

நண்பர் சமுத்ரா இப்படி அப்பாவிகளை ஜெயிலில் தள்ளுவதால் ராணுவத்துக்கு என்ன நண்மை என்று கேட்டுள்ளார். இந்த நேரத்தில் நான் முன்பு அப்ஸலைப் பற்றி போட்ட ஒரு ஒரு பதிவு ஞாபகத்துக்கு வரவே திரும்பவும் மறு மதிப்பு செய்கிறேன்.

இதனால் நான் அப்ஸல் தீவிரவாதியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு தண்டனை கொடுப்பதை முழு மனத்தோடு ஆதரிக்கிறேன் என்பதையும் இங்கு தெளிவுபடுத்தி விடுகின்றேன்.

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

யார் இந்த அஃப்ஸல்?'

1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர்.

இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.

''1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.''நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள்.

'22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.''சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.''அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

''அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம்" என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.''இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம்.

ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. ''இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.''கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.

''உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.''என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.''இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.''என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.

'இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13,Terror Over Democracy By Nirmalangshu Mukherji:A Wifes Appeal for justice :Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற் சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.இது சம்பந்தமான பதிவை தற்போது வெளியிட்டிருக்கும் நண்பர் ரோசா வசந்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

posted by சுவனப்பிரியன் @ 6:22 AM
26 Comments:

At 7:06 AM, We The People said...
இந்த திரைகதை வசனம் எந்த படத்துல வருது தலைவா??!!! ராம் ஜெத்மலானி எழுதி தந்தது மாதிரி தெரியுது!! பேஷ்! பேஷ்!! ரொம்ப ஓவரா இருக்கு!!

At 7:47 AM, சிறில் அலெக்ஸ் said...
இத்தனை கசப்பான அனுபவங்களை இந்திய அரசிடம் பெற்ற இவர் பார்லிமெண்ட்டை இடித்திருந்தாலும் அது நல்ல விஷ்யமே.ஒரு கட்டிடம் இடிந்துவிடுவதல்ல இறையாண்மைக்கு இழிவு. தன் நாட்டை நம்பியிருக்கும் ஒரு பிரஜையை அவனுக்குரிய உரிமையை மறுத்து அவனை சித்ரவதை செய்வதுதான் இறையாண்மைக்கு இழுக்கு.அப்சல் விஷ்யத்தில் இன்னொருபக்கத்தை தெளிவுபடுத்தும் பதிவைத் தந்ததற்கு நன்றி.

At 11:34 PM, niyamath said...
ungalin ippadivu kanngalil kanneerai varavalaithu vittana arasiyal aadayathirkaga ennavellam seigirargal indhe kedu ketta arasiyalvadhigal.niyamathdubai

At 9:18 AM, புதுச்சுவடி said...
அன்புள்ள சுவனப் பிரியன், நல்ல பதிவு.நாடாளும் மன்றத் தாக்குதல் என்பது அன்றைய பீஜேபீ அரசினால் 'பொடா'ச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக அரங்கேற்றப் பட்ட நாடகம். அதில் பலியானோர் அப்பாவிகள். ஜீலானியையும் அப்ஸானையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ததைப்போல் அஃப்ஸலையும் விடுதலை செய்திருக்க வேண்டும்; ஆனால் அவரது முந்தைய இயக்கத் தொடர்பு காவல்துறைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டதால் நீதிமன்றம் அஃப்ஸலைத் தீவிரவாதியாகவே பார்க்கிறது.விருதுநகர் பாண்டியம்மாள் வழக்கும் உப்புக் கோட்டை ஸுஜாதா வழக்கும் தமிழகம் அறிந்த ஒன்று...

At 12:48 PM, அழகு said...
உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. அரசியலிலும் நீதித் துறையிலுமுள்ள அயோக்கியர்களின் முகமூடி கிழிபட்டு தொங்குகின்றன. இனி அயோக்கியர்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப் படவேண்டியது ஒன்றே நம் முன் மீந்திருப்பது.

At 3:31 AM, Sirajudeen said...
xU mwpQh; nrhd;dhH. ‘,e;jpa ehL [dehaf ehlh? ,y;iyah? vd;W gyH Mjq;fg; gLfpwhHfs;. ehd; mtHfsplk; Nfl;gJ ,Jjhd; ,J vg;NghJ [dehaf ehlhf ,Ue;jJ. ,g;NghJ ,y;yhky; Nghtjw;F vd;W’. cjhuzj;jpw;F ghghp k];[pj; tpraj;ij vLj;Jf; nfhs;Sq;fs;. vd;W R.S.S, vd;w tp\tpj;J 1924 y; ,e;jpahtpy; Kisj;jNjh md;wpypUe;J ,d;W tiu ,e;j ,e;jpa ehL my;Nyhyg; gl;Lf;nfhz;bUf;fpwJ. ,e;j fhtp cilazpe;j fWg;ghLfs; vy;yh murplq;fisAk; Mf;fpukpj;jjd; tpisT ePjp vd;gNj ,e;jpahtpy; nrj;Jtpl;lJ.

At 8:17 AM, சுவனப்பிரியன் said...
எஸ்.ஏ.ஆர். ஜீலானி!தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப் பட்ட சாட்சியங்கள்.குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.-நிர்மலாங்ஷூ முகர்ஜிஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழுTerror Over Democracy

At 8:18 AM, சுவனப்பிரியன் said...
கஷ்மீரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று நிர்வாணமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் பெண்கள் நாற்பத்தி மூன்று பேர் மீட்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாணியில் எட்டாம் வகுப்பு பெண் குழந்தை ஒன்றை கடத்திச் சென்றதில் தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த பதிமூன்று பேர் உடந்தை. காவல் துறை இதனை சரிவர புலன் விசாரணை செய்யாது என்பதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய்வுத் துறையும் இதனைச் சரிவர புலனாய்வுச் செய்திட வில்லை என கஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி நீதி மன்றத்திலேயே வருத்தப் பட்டுள்ளார். -Indian Express. Pune.29-04-2006'ஜம்மு கஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அடிக்கடி இஸ்லாமியர்கள் அங்கு வாழும் இந்துக்கள் மீது நடத்தும் போர் என்றே காட்டுகின்றார்கள். இது மீடியாக்களின் வழியாக பெரிதுபடுத்தப் படுகிறது. இந்த ஊடகங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் கொலை செய்யப்படும் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதில்லை. கொல்லப் பட்டவர்களில் எண்பது சதவீதம் முஸ்லிம்களே என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.'-The Hindu2-5-2006கடந்த பதினாறு வருடங்களுக்குள் எட்டாயிரம் பேர் வரை காணாமற் போய் விட்டார்கள். இவர்களில் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள். அந்த இளைஞர்கள் எங்கு அடைத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரு விபரமும் பெற்றோர்களுக்கு இதுவரை தெரியப் படுத்தப் படவில்லை.ஸாஹிருத்தீன் என்ற பத்திரிக்கையாளர் தனது 'அவர்கள் காற்றில் கரைந்து போனார்களா?' என்ற நூலில் காணாமற்போன நான்காயிரம் பேர்களின் பட்டியலைத் தருகிறார்.ஐநூறு பேருக்கும் அதிகமாக கஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதை உயர் நீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது.காணாமற்போனோரின் பெற்றோர்கள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்பும் எட்டாயிரம் பேர் என்று கணக்கு சொல்கிறது.இவை எல்லாம் கஷ்மீர் மக்கள் கடைபிடித்து வரும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து அவர்களிடையே கலாச்சார பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று தான் கஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். அடக்கு முறையால் மக்களை தற்காலிமாக வெல்லலாம். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல நம் அரசு முயல வேண்டும். நம் நாட்டு அறிவு ஜீவிகளும், அரசும் இதற்கான முயற்ச்சியில் உடன் இறங்க வேண்டும்.

At 8:18 AM, சுவனப்பிரியன் said...
பில் கிளிண்டன் வருகையின் பொது முப்பந்தைந்து சீக்கியர்கள் காஷ்மீர் சத்தீசிங் புராவில் கொல்லப் பட்டார்கள். அதைச் செய்தவர்கள் என ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபழியைப் போட்டார்கள். அவர்களை கொலை செய்து வழக்கை முடித்துக் கொண்டார்கள்.முன்னால் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் 'தி மைட்டி அண்ட் ஆல் மைட்டி' என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பில் கிளிண்டன் முன்னுரை எழுதியுள்ளார். கிளிண்டன் இந்தியா வந்த வேளையில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன. இந்தப் படுகொலைகளை நடத்தியது ஹிந்துத்துவ வாதிகள் என்று பில் கிளிண்டன் அந்த நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.இந்தப் படுகொலைகளைச் செய்தது கஷ்மீர் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வழக்கம் போல் ஐந்து கஷ்மீரிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது.இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர் நேஷனல், பஞ்சாபி மனித உரிமைகள் அமைப்பு, அரச ஒடுக்குமுறைக்கான இயக்கம் (The movement against state repression) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக் காட்டித்தான் பில் கிளின்டன் இவ்வாறு கூறியுள்ளார்.சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.சீக்கிய பெருங்குடி மக்கள் அன்று அமைதி காத்தார்கள். அதனால் முஸ்லிம்களைத் தாக்கிடவில்லை. (ஒரு வேளை அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்கலாம்.)அப்போது முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஓர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் பாண்டியனுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிபதி பாண்டியன் தன பொறுப்பை சரி வர நிறை வேற்ற இயலாது என்று கூறி இராஜினாமா செய்து விட்டார். பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்குச் சென்றது. அவர்கள் இது எதிர் தாக்குதல் அல்ல மாறாக பட்டவர்த்தனமான படுகொலை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.கொல்லப் பட்ட அந்த ஐந்து முஸ்லிம்களும் நமது ராணுவச் சிறையில் பல மாதங்கள் இருந்தவர்கள். அந்த முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்து விட்டு எதிர் தாக்குதல் என்ற எண்கவுண்டரில் கொன்றதாக அறிவித்து விட்டார்கள்.மத்திய புலனாய்வுத் துறை ஒரு லெப்டினென்ட் கலோனல்,இரண்டு மேஜர்கள், ஒரு சுபேதார் போன்றவர்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல் கஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம். Source: India today. May 9. 2006, “The Mighty And Almighty” –Medlin Albret

At 11:45 PM, We The People said...
//'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது.//சுவனப்பிரியன் அப்ப பாராளமன்ற தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அப்சல்தான், தன் பெயரில் வாங்கினார் என்பதற்கான ஆதரம் - காரின் RC புக்கை விட்டுப்புட்டீங்களே!! அதுவும் பாதுகாப்பு படை வாங்கித்தந்தா?? அது சரி இதை எல்லாம் வாங்கிதற பாதுகாப்பு படைக்கு என்ன பயன்?? நம்ம பாராளமன்றம் தாக்கப்பட்டால் என்ன அவர்களுக்கு லாபம்?? ஓவரா திரைக்கதை வடிவமைக்காதீர்கள் சுவனப்பிரியன்.

At 9:06 AM, சுவனப்பிரியன் said...
அழகு!//இனி அயோக்கியர்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப் படவேண்டியது ஒன்றே நம் முன் மீந்திருப்பது.//எண்ணற்ற அப்பாவிகள் படும் சித்திரவதைகள் முடிவுக்கு வரும் அந்நாளை நாம் அனைவரும் எதிர்ப் பார்ப்போம். நீதி கிடைக்க இந்த ரமலானில் இறைவனிடமும் பிரார்த்திப்போம்.

At 9:07 AM, சுவனப்பிரியன் said...
வி த பீபுள்!//இந்த திரைகதை வசனம் எந்த படத்துல வருது தலைவா??!!! ராம் ஜெத்மலானி எழுதி தந்தது மாதிரி தெரியுது!! பேஷ்! பேஷ்!! ரொம்ப ஓவரா இருக்கு!!//ஏற்கெனவே பல திரைக் கதைகளை எழுதிப் பழக்கப் பட்ட கும்பல் அல்லவா நீங்களெல்லாம்! அது தான் பழைய ஞாபகம் வருகிறது போல. நீதித்துறையிலும் காவல் துறையிலும் உள்ள கறுப்பாடுகளை நீக்கினால் பல கொலைகளையும பல குண்டு வெடிப்புகளையும் எப்படி திட்டம் போட்டு உங்கள் கும்பலால் செய்யப் பட்டது என்ற உண்மை வெளி வரும். பொறுத்திருங்கள். உண்மை என்றுமே உறங்கியதாக சரித்திரம் இல்லை.

At 9:09 AM, சுவனப்பிரியன் said...
சிறில் அலெக்ஸ்!//ஒரு கட்டிடம் இடிந்துவிடுவதல்ல இறையாண்மைக்கு இழிவு. தன் நாட்டை நம்பியிருக்கும் ஒரு பிரஜையை அவனுக்குரிய உரிமையை மறுத்து அவனை சித்ரவதை செய்வதுதான் இறையாண்மைக்கு இழுக்கு.அப்சல் விஷ்யத்தில் இன்னொருபக்கத்தை தெளிவுபடுத்தும் பதிவைத் தந்ததற்கு நன்றி.//அழகாக சொன்னீர்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்ற நியதிக்கேற்ப அரசு மறு விசாரணைக்கு உத்தரவிட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும்.தன் நாட்டு மக்களையே திட்டம் போட்டு சீரழிக்கும் அதிகார வர்க்கம் நிறைந்தது உலகிலேயே நம் நாடாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

At 9:10 AM, சுவனப்பிரியன் said...
புதுச் சுவடி!//விருதுநகர் பாண்டியம்மாள் வழக்கும் உப்புக் கோட்டை ஸுஜாதா வழக்கும் தமிழகம் அறிந்த ஒன்று...//முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குறிப்பிட்டிருக்கும் இரண்டு வழக்குகளைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தகவல் தந்தமைக்கு நன்றி.

At 9:11 AM, சுவனப்பிரியன் said...
நண்பர் சிராஜீத்தீனின் கருத்து யுனிகோடில்!//ஒரு அறிஞர் சொன்னார் 'இந்தியா ஜனநாயக நாடா இல்லையா என்று பலர் ஆதங்கப் படுகிறார்கள்.நான் அவர்களிடம் கேட்பது இது எப்போது ஜனநாயக நாடாக இருந்தது? இப்போது இல்லாமல் போவதற்கு' என்று. ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ வித்து இந்தியாவில் என்று முளைத்ததோ அன்றிலிருந்து இன்று வரை இந்த இந்திய நாடு அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த காவி உடை அணிந்த கறுப்பாடுகள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்ததின் விளைவால் நீதி என்பதே இந்தியாவில் செத்து விட்டது.//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிராஜீத்தீன். யுனிகோடில் எழுத முயற்ச்சியுங்கள்.

At 9:13 AM, சுவனப்பிரியன் said...
நியமத்!//ungalin ippadivu kanngalil kanneerai varavalaithu vittana//நமக்கே இந்த அளவு அதிர்ச்சியாய் இருக்கிறதே! சம்பந்தப் பட்ட குடும்பத்தவரின் நிலை எப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கிறோம். குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம். தற்போது அது ஒன்றுதான் நம்மால் முடிந்தது.பதிவுகளைப் படித்து தொடர்ந்து பின்னூட்டம் இட்டு வருகிறீர்கள். நன்றி.

At 10:51 AM, ravi srinivas said...
The Supreme Court judgment nails every lie being repeated by supporters of Afzal like you.His role in preparing for the attack has been documented in the judgment.He had helped them in many ways.He deserves deathfor his actions.In the Kashmir Sex Scandal the J&K Bar Association prevented any lawyer from appearing on behalf of accused.So the Supreme Court transferredthe case to Chandigarh.Afzal was not denied legal assistance or access to justice.But those who support him now did nothing whenJ&K bar association prevented lawyers from appearing in theSex Scandal case.In fact theyall joined hands to turn thisissue in to a conspiracy theory.Cyril should know that they attacked parliament when it wasin session.Members of the parliament and ministers werethere.So it was not an attackon the building but on the sovergnity of India.Thanks for making your supportto terrorists and enemies of Indiaso open.Your true colors are in theopen now.http://ravisrinivas.blogspot.com

At 10:30 AM, Muse (# 5279076) said...
அரசு வன்முறை ஏழைகளின் மீது பாயும் கொடுமை என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வாக்குமூலம். இத்தகைய கொடுமைகளுக்குள்ளானபோது தன்னுடைய கணவரைச் சந்திக்கும் ஆறுதலையாவது அரஸாங்கம் அவருக்கு அளித்ததா?

At 4:21 PM, பாபு said...
சாதகமாக இருந்தால் பொய்யையும் 'ஆய்வு' என்பார்கள்.பாதகமாக இருந்தால் உண்மையையும் 'திரைக்கதை' என்பார்கள்.RAM (Racial Supremacy, Administration, Money)க்காக சொந்த நாட்டின் மக்களையும் 'அகதி'யாக்குவார்கள்.கடைசியில் மக்களின் மேல் பழியை போட்டு 'வீ தி பீப்பிள்' என்பார்கள்.

At 6:28 AM, சுவனப்பிரியன் said...
வீ த பீபள்!//அது சரி இதை எல்லாம் வாங்கிதற பாதுகாப்பு படைக்கு என்ன பயன்?? நம்ம பாராளமன்றம் தாக்கப்பட்டால் என்ன அவர்களுக்கு லாபம்?? ஓவரா திரைக்கதை வடிவமைக்காதீர்கள் சுவனப்பிரியன்.//'நாடாளுமன்ற தாக்குதல் நடை பெற்ற போது பாரதிய ஜனதா கட்சி சங்பரிவாரத்தையே திருப்தி செய்திட இயலாமல் திணறிக் கொணடிருந்தது. மொத்த சங்க பரிவாரமும் விரக்தி வயப்பட்டு நின்றது. தங்கள் விரக்தியை சிறுபான்மை மக்களை கொலை செய்வதிலும் அவர்களைச் சீண்டி விடுவதிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 'கிரஹாம் ஸ்டீன்ஸ்' என்ற கிறித்தவ சமூக ஊழியரின் கொலை,பாதிரி பெண்களின் கற்பழிப்பு இவை எல்லாம் இந்த விரக்தியின் வெளிப்பாடுகளே! இறுதியாக அயோத்தியாவில் கோவில் கட்டுவோம் என்றும் மிரட்டினார்கள்.''பாரதீய ஜனதா கடசியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அக்கட்சியினர் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவிகளை பெரிய அளவில் பெற்றிருந்தார்கள். தாங்கள் பெற்ற உதவிகளுக்கு கைமாறாக தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கிப் போடுவோம் என்று பணமுதலைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தொழிலாளர் உரிமைகளை முடக்கிப் போட்டிட இயலவில்லை. காரணம் தொழிலாளர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இந்த எதிர்ப்புகளில் இவர்களின் சொந்த அமைப்பான பாரதீய மஸ்தூர் சபாவே கலந்து கொண்டது.'“குஜராத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடப் போகின்றார்கள் என்ற பீதியை ஏற்படுத்தி தேர்தலில் ஜெயித்தார்கள். இந்தப் பீதி இந்து ஓட்டுக்களை அவர்களுக்கு ஒட்டு மொத்தமாகப் பெற்றுத் தந்தன். அதே பாணியில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும், அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தாக்குதலும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஒரு புது வாழ்வையே தந்தன.”-Dec 13 Terror Over DemocracyBy Nirmalangsho Mukherjee.பாராளுமன்றம் தாக்குதல் என்ற நாடகத்தால் யார் அதிகம் பலன் பெற்றார்கள் என்று விளங்குகிறதா? பாரதீய ஜனதா தன் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் குறிப்பிடும் படியாக செய்யவில்லை. சங் பர்வாரத்தின் நெருக்குதல் வேறு. இதை எல்லாம் சமாளிக்க ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதைத்தான் பிஜேபியினர் திட்டம் போட்டு செய்தனர். அவர்கள் நினைத்தது போல் அந்த நேரத்தில் எழுந்த பல பிரச்னைகள் காணாமல் போயின. பத்திரிக்கையிலிருந்து நாட்டு மக்கள் வரை பாராளு மன்ற தாக்குதல் பற்றியே பேச ஆரம்பித்தனர். இப்போது புரிகிறதா இதனால் பலன் பெற்றவர்கள் யாரென்று!ஆனால் இரு தரப்பிலும் இறந்தவர்கள் அப்பாவிகளே! இதன் சூத்திரதாரிகள் இன்னும் மரியாதையோடு நாட்டில் உலா வந்து கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

At 6:14 AM, சுவனப்பிரியன் said...
ரவி ஸ்ரீநிவாஸ்!//The Supreme Court judgment nails every lie being repeated by supporters of Afzal like you.His role in preparing for the attack has been documented in the judgment.He had helped them in many ways.He deserves deathfor his actions.//குற்றம் சாட்டப் பட்டவரின் வாக்கு மூலத்தையே எடுத்துக் கொள்ளாமல் அன்றைய பிஜேபி அரசும், காவல் துறையும், நீதி மன்றமும் ஒரு சார்பாக முடிவெடுத்து தண்டனை வழங்கியிருப்பதாகத்தான் சமூக ஆர்வலர்கள், அஃப்ஸலின் மனைவி போன்றோரின் குற்றச் சாட்டு. அஃப்ஸல் குற்றவாளிதான் என்பது நிச்சயமானால், மறு விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதில்என்ன சிரமம் நம் அரசுக்கு? ஒருக்கால் அவர் சதியில் ஈடுபட வில்லை என்றால் ஒரு அப்பாவியை தூக்கில் ஏற்றிய அவப் பெயர் நம் நாட்டுக்கு வருமல்லவா?//So it was not an attackon the building but on the sovergnity of India.//பாராளுமன்றத் தாக்குதல் நம் நாட்டு சுதந்திரத்துக்கும், அமைதிக்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால் என்பதை நானும் மறுக்கவில்லை. தாக்கியதும், அதற்கு திட்டமிட்டதும் யார் என்பதுதான்இங்கு பிரச்னையே! அஃப்ஸல்தான் என்பது மறு விசாரணையிலும் உண்மையானால் அப்படிப்பட்ட துரோகியை தூக்கிலும் போடுங்கள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.//Thanks for making your supportto terrorists and enemies of Indiaso open.Your true colors are in theopen now.//எனக்குள் இருக்கும் தேச பக்தியையும் நாட்டுப் பற்றையும் நான் யாருக்கும் விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.நான் பிறந்த மண். என் குழந்தைகளையும் என் உறவினர்களையும் என் நாட்டு மக்களையும் சந்தோசமாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் மண். இந்தியர்கள் என்றால் ஒரு வித மரியாதையோடு மற்ற நாட்டுக்காரர்களால் பார்க்க வைக்கப் படும் மண்.இத்தகைய பெருமை வாய்ந்த இந்த மண்ணின் அமைதிக்கும் இறையாண்மைக்கும் பங்கம் வரவழைப்பனை அதிகார மிருப்பின் என் கையாலேயே தண்டனையை கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் கூறிக் கொள்கிறேன். இதைத் தான் இஸ்லாமும் விரும்புகிறது. 'பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கு சாபம் உள்ளது. அவர்களுக்கு மறுமையில் கேடு உண்டு.'13 : 25 - குர்ஆன்.

At 6:15 AM, சுவனப்பிரியன் said...
ராஜ்!RAM (Racial Supremacy, Administration, Money)க்காக சொந்த நாட்டின் மக்களையும் 'அகதி'யாக்குவார்கள்.கடைசியில் மக்களின் மேல் பழியை போட்டு 'வீ தி பீப்பிள்' என்பார்கள்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

At 6:16 AM, சுவனப்பிரியன் said...
ம்யூஸ்!//அரசு வன்முறை ஏழைகளின் மீது பாயும் கொடுமை என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வாக்குமூலம்.//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ம்யூஸ். சட்டம் தன் கடமையை சரிவர செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

At 6:58 AM, Muse (# 5279076) said...
இத்தகைய கொடுமைகளுக்குள்ளானபோது தன்னுடைய கணவரைச் சந்திக்கும் ஆறுதலையாவது அரஸாங்கம் அவருக்கு அளித்ததா?

At 11:52 AM, ravi srinivas said...
The Supreme Court judgment answersquestions about denial of justiceto him.The advocate who argued onhis behalf had refuted the claimsmade by Afzal.See my blog for details.This case has been heardby three courts.The Supreme Courthad given a judgment that is fair.It had acquitted Geelani.TheSupreme Court is the highest courtof the land under the Indian Constitution and it has givena judgment taking into accountall the evidences, submissionsand arguments.It had concludedthat there was enough evidenceto award death sentence.It hadindicated what were those evidences also.It had taken intoaccount the arguments made onbehalf of Afzal.It had not convicted all the accused.So what else need to done in this.Who/which court should go intothis case again.In India courts arenot controlled by the government.Still you repeat the same old lies.Have you ever bothered to read thejudgment.You have not answered my questionregarding sex scandal case in Kashmir.In the Kashmir Sex Scandal the J&K Bar Association prevented any lawyer from appearing on behalf of accused.So the Supreme Court transferredthe case to Chandigarh.Afzal was not denied legal assistance or access to justice.But those who support him now did nothing whenJ&K bar association prevented lawyers from appearing in theSex Scandal case.In fact theyall joined hands to turn thisissue in to a conspiracy theory."They turned it into a conspiracytheory aganist India.Some groupdused this to indulge in moralpolicing.What is your responseto that.Do you support these.

At 6:18 AM, சுவனப்பிரியன் said...
ரவி ஸ்ரீநிவாஸ்!//The advocate who argued on his behalf had refuted the claims made by Afzal.//'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.''உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது.//Supreme Court is the highest court of the land under the Indian Constitution and it has given a judgment taking into account all the evidences, submissions and arguments.It had concluded that there was enough evidence to award death sentence.It hadindicated what were those evidences also.It had taken into account the arguments made on behalf of Afzal.It had not convicted all the accused. So what else need to done in this.Who/which court should go into this case again//சுப்ரீம் கோர்ட் என்ன இறைவனின் ஆணையா? அங்கு அமர்ந்திருப்பவர்களும் மனிதர்கள்தானே! முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூசன் இந்த கேஷைப் பற்றி வாதிடும்போது சொன்னவை“When such a serious offence has been committed by investigating official. It is only by having them punished that such fabrication of documents and the giving of perjury evidence can be stopped by the court.”அதாவது இந்த வழக்கை விசாரித்தவர்கள் பாரதூரமான தவறுகளைச் செய்துள்ளார்கள். ஆவணங்களைத் தங்கள் விருப்பத்திற்குத் திரிப்பது, பொய் சாட்சியங்களைத் தயாரிப்பது ஆகியவற்றில் எந்தக் கவலையும் இல்லாமல் ஈடுபட்டிருக்கின்றார்கள்.இவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 194,195களின் கீழ் ஆயுள் தண்டனைகளை வழங்கிட வேண்டும். அப்போது மட்டுமே இது போன்ற கடுமையான குற்றங்களிலிருந்து அவர்களை தடுக்க இயலும்.'இப்படி அனல் பறக்கும் வாதங்களை அவர்கள் எடுத்து வைத்ததற்க்கான காரணம் வழக்கு விசாரணை முழுவதும் கோணலாகவும் ஒருதலைப் பட்சமாகவுமே நடத்தப்பட்டது.தூக்குத் தண்டனை வழங்கிடுவதில் நீதிபதி அவர்கள் காட்டிய வேகம் அவர்களது கண்களை மறைத்துவிட்டது. உண்மைகள் ஓரங்கட்டுப் பட்டு விட்டன. மூத்த வழக்கறிஞர் சாந்தி பூசன் அவர்கள் பட்ட ஆதங்கத்திற்கு அளவே இல்லை. அவர் மேலும் தன் வாதத்தை வைத்திடும் போது இப்படிக் குறிப்பிட்டார். “The investigating official were prepared to forge and fabricate documents against the appellants”அதாவது 'மனுதாரர்களுக்குஎதிராக ஆவணங்களை பொய்யாக புனைந்திடவும் உருவாக்கிடவும் தயாராக இருந்தனர்.'ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம்(PUDR: Peoples Union For Democratic Rights) என்ற அமைப்பு இவ்வழக்கில் தரப்பட்ட சாட்சியங்களையும் ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு இப்படிக் குறிப்பிட்டது.:“There is no evidence which unerringly implicates them, or whose authenticity is beyond reproach”அதாவது 'தவறுகளே இல்லாமல் இவர்களைக் குற்றத்திற்குள்ளாக்கிடும் சாட்சியங்கள் எதுவுமில்லை. அவதூறு-புனைந்துரை-குறைகள்- இவை இல்லாமல் எந்த சாட்சியமும் இல்லை.' (Dec: 13, Terror Over Democracy, Page 49-50) An unjust law and unfair Trialஅதாவது 'அநீதியான சட்டம் - நியாயத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட விசாரணை' இவற்றால் மூடப்பட்டதுதான் இந்த வழக்கும் விசாரணையும்.அப்படி என்ன நடந்தது?ஆமாம் இந்த வழக்கில் தாங்கள் நினைப்பதையே தீர்ப்பாக வழங்கிட இந்த வழக்கு முற்றாக பொடாவின் கீழ்கொண்டு வரப்பட்டது.அத்தனை வாக்கு மூலங்களும் பொடாவின் கீழ்தான் பெறப்பட்டன. இதனால் தங்களுக்கு சாதகமான பகுதிகளை எடுத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டாத ஆனால் உண்மைகளை வெளிக் கொண்டு வரும் பகுதிகளை விட்டு விட்டார்கள்.அப்ஃஸலின் மனைவி தபசும் தான் எழுதிய கடிதத்தில் மிகவும் தெளிவாகவே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.அடுத்து ஜீலானியின் சம்பவத்துக்கு வருவோம்:டெலிபோனில் தன் சகலையுடன் பேசிய பேச்சுதான் முக்கிய ஆதாரம். அந்த பேச்சை கஷ்மீரி மொழியிலிருந்து ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்தது 'ரஷீத்' என்ற நான்காம் வகுப்பு வரை படித்த ஒரு பழ வியாபாரியைத் தான்.ஒலி பொறியியலாளர்கள் அந்த டேப்களிலிருந்து (ஒலிப் பேழைகளிலிருந்து) வரும் ஒலியைப் பிரித்தறிந்திட முயன்றார்கள். இயலவில்லை. பின்னர் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர் நீதி மன்றம் வந்தது. நீதிபதிகள் இந்த டேப்களில் என்ன பதிந்திருந்தது என்பதைக் கேட்டுத்தெரிந்திட காதைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டார்கள். பின்னர் இப்படிக் கூறினார்கள். “The voice was so inaudible that we could not make head or tail of the conversation”(Annex 16,para346)(Quoted from Dec 13 : Terror Over democracy , chapter: Who attacked parliament, Page no 65)இதன் பொருள்: 'ஒலிப் பேழையிலிருந்து வந்த சப்தம் சற்றும் செவி மடுத்திட முடிந்ததாய் இல்லை. எங்களுக்கு வாலும் புரிந்திடவில்லை, தலையும் புரிந்திட இயலவில்லை.'ஆனால் நமது டெல்லி சிறப்பு புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு படித்த பழ வியாபாரி போலீஸ்ஸ்டேஷனிலேயே வைத்து டேப்பைக் கேட்டு அதில் என்னச் சொல்லி இருக்கின்றது என்பதைச் சொல்லி விட்டாராம்.அடுத்து இந்த ஒலிப் பேழையை டெல்லியிலுள்ள கஷ்மீர் மொழி வல்லுனர்கள் - முறையாக அந்த மொழியைப் பயின்று தேர்ச்சிப் பெற்ற பல்கலைக் கழக பேராசிரியர்கள் - இவர்களிடம் கொடுத்து மொழி பெயர்க்கச் சொல்லிடலாம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையிட்டார்கள்.இந்த முறையீட்டை நீதிபதியே முன் வந்து மறுத்தார். ஓர் எதிர்க் கட்சி வழக்கறிஞர் போல் தனது வாதங்களைப் பதிவு செய்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இப்படி வாதாடினார்:'துளசிதாஸ், கபீர்தாசர் இன்னும் இது போன்றவர்கள் எந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்று மேதாவியானார்கள்?'இப்படி கஷ்மீரிலுள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை துளசிதாஸ், கபீர்தாஸ் போன்றோருக்கு ஒப்பிட்டு அவருடைய மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொண்டார் நீதிபதி.Annex 11 Para 204,December 13: Terror Over Democracy,Chapter who attacked Parliament,PP 65-66ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும் நம் நாட்டு நீதித் துறையின் லட்சணம் இதுதான்.//Still you repeat the same old lies.Have you ever bothered to read the judgment.//யார் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருவது என்பது மறு விசாரணைக்கு உத்தரவிட்டால் தெரிய வரும்.//You have not answered my question regarding sex scandal case in Kashmir.//பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்ட இந்த ஒரு வழக்கு மாத்திரம் அல்ல. தினம் தினமும் இது போல் பல வழக்குகள். பிரச்னை அஃப்ஸலைப் பற்றியதால் இது சம்பந்தமாக பிறிதொரு நாளில் என் வாதத்தை விரிவாக வைக்கிறேன்.//They turned it into a conspiracytheory aganist India.Some groupdused this to indulge in moralpolicing.What is your responseto that.Do you support these.//அருந்ததிராய், வழக்கறிஞர் நந்திதா, நிர்மலாங்சு முகர்ஜி, ராம் ஜெத்மலானி, சாந்தி பூசன், காலிங்சன் சால்வஸ், திருமதி காமினி ஜெய்ஸ்வால், நித்தியா ராமகிருஷ்ணன், போன்ற சமூக ஆர்வலர்கள் அஃப்ஸலை இந்த அளவு ஆதரிக்க என்ன அவசியம் வந்து விட்டது. இந்த சமூக சேவகர்கள் அனைவரும் நம் நாட்டுக்கு எதிரானவர்களா? அஃப்ஸல் பக்கம் நியாயம் இருக்கப் போய்தானே இந்த அளவு நீதிக்காக போராடுகிறார்கள். இதனால் அரசின் கோபத்திற்கும், போலீஸாரின் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறார்கள். நான் முன்பே கூறியது போல் நியாயமான மறு விசாரணைக்கு உத்தரவிட்டு அதிலும் அஃசலின் குற்றம் நிரூபிக்கப்படுமானால் தாராளமாக தூக்கில் தொங்க விடட்டும். அப்பொழுதுதான் இது போன்ற குற்றச் செயல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.எது எப்படியோ இன்று தான் கடைசி நாள் என்று நினைக்கிறேன். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது' என்ற உலக நியதியின் மரபு நம் நாட்டில் காக்கப் படுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். .

Sunday, February 18, 2007

மொழி வெறி நமக்கு தேவைதானா?

மொழி வெறி நமக்கு தேவைதானா?

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.

முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம்.

அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.

என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.

'மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்

'ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி

'உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.

'மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி

'அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்

'அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி

'ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்

இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4

மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.

'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

posted by சுவனப்பிரியன் @ 2:56 AM

6 Comments:

At 3:47 AM, AATHAVAN said...
//'உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி'// இந்த நினைப்பு பல இந்துக்களுக்கும், ஏன் சில முஸ்லிம்களுக்கும் கூட இருக்கிறது.இது பற்றி ஒரு சுவையான சம்பவத்தை என் முஸ்லிம் நண்பர் (XXXX) என்னிடம் சொன்னார்.அவருடைய நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்த ஒரு கிராமத்து உருது முஸ்லிம் அறிமுகமானவுடனேயே மளமளவென்று உருதுவில் பேசத்துவங்க, நமது நண்பரோ தன்னிடம் தமிழில் பேசும்படி கோரியிருக்கிறார். ஏன் உங்களுக்கு உர்தூ தெரியாதா என்று அந்த உர்தூ முஸ்லிம் கேட்கவும் ஆம், தெரியாது என்றும் சொன்னாராம். உடனே அவர்,அப்படின்னா நீங்கள் முஸ்லிம் இல்லையா என்று கேட்டராம். அதிர்ந்து பின் சுதாரித்த நம் நண்பரோ 'நபிகள் நாயகத்து க்கூடத்தான் உருதூ தெரியாது' என்று சொன்னாராம். இன்றும் அதை நினைவுசொல்லி சிரிப்பார்.

At 4:13 AM, Neruppu said...
OK. mozhi veri thevai illai. inimel ella muslim pillaikalukkum antha antha regional language peraye vaikkalaam.regional language-l vaanku othalaam. b'coz Nabikal naayagam mozhi veri koodaathunnu solli irukkaar.

At 9:06 AM, வஹ்ஹாபி said...
தேவையான பதிவு; பாராட்டுகள்!திருத்தங்கள்:\\தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.\\தொழுகை/அழுகை என்ற சொற்களை வினையுடன் ஆளும்போது தொழ/அழ என்றே எழுத வேண்டும்.'தொழுகத் தொடங்கி விடுவார்' என்பதை அழுகையோடு தொடர்பு படுத்தினால் அழுகத் தொடங்கி விடுவார் என்றாகி விடும்.\\அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.\\ என்பது சரியானது. ஆனால்,\\அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது.\\ தவறானது. வெறும் ரஹீம் என்று பெயர் வைப்பதற்கும் தடை இருக்கின்றது, அஃது அல்லாஹ்வின் பெயர் என்பதால். அப்துர் ரஹீம் என்று பெயரிடுதலே சரியானதாகும்.

At 7:48 AM, Abdurrahman said...
//வெறும் ரஹீம் என்று பெயர் வைப்பதற்கும் தடை இருக்கின்றது, அஃது அல்லாஹ்வின் பெயர் என்பதால். அப்துர் ரஹீம் என்று பெயரிடுதலே சரியானதாகும்.//தங்கள் கருத்து தவறானது. அர்ரஹீம் என்றாலே அல்லாஹ்வின் பெயராகும். ரஹீம் என்று யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனாலும் அப்துர் ரஹீம் என்று பெயர் வைப்பது சிறந்ததாகும்.

At 8:08 AM, சுவனப்பிரியன் said...
வருகை புரிந்து எண்ணங்களை வெளியிட்ட ஆதவன், வஹ்ஹாபி, நெருப்பு(வாவ்..... எழுதும் போதே சுடுகிறது)Abdul rahamn அனைவருக்கும் நன்றிகள் பல.OK. mozhi veri thevai illai. inimel ella muslim pillaikalukkum antha antha regional language peraye vaikkalaam.regional language-l vaanku othalaam. b'coz Nabikal naayagam mozhi veri koodaathunnu solli irukkaar. நெருப்பு!பாங்கு வட்டார மொழிகளில் ஏன் சொல்லப் படுவதில்லை என்பதை பதிவிலேயே விளக்கியிருக்கிறேனே பார்க்கவில்லையா! அடுத்து குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர் விரும்பினால் அதற்கு இஸ்லாம் தடை சொல்லவில்லை என்றும் விளக்கியிருக்கிறேனே!

At 8:09 AM, சுவனப்பிரியன் said...
முகமது நபிதான் முஸ்லிம்களின் ஒரே தலைவர் என்று நான் சொன்னது ஆன்மீக தலைமையை. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சூழ்நிலைக் கேற்ப அரசியலில் தலைவர்களை உருவாக்கிக் கொள்ள இஸ்லாம் தடை ஏதும் சொல்லவில்லை. அத்தகைய தன்னலமற்ற தலைமை இதுவரை ஏற்படாதது வருந்தத் தக்கதே!

Thursday, February 15, 2007

வடிவியல் கணித மேதை!

வடிவியல் கணித மேதை

மேற்கத்திய உலகில் தெபித் (Thebit ) என்றழைக்கப்டும் தாபித் இப்னு குர்ரா இயக்கவியல், வானவியல், இயற்கணிதம் மற்றும் வடிவியல் ஆகியவற்றில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

தாபித் இப்னு குர்ரா இப்னு மர்வான் அல்- ஹர்ரானி என்பதுதான் இவரது முழுப்பெயராகும். இவர் கி.பி. 836-ல் ஹர்ரான் (தற்போதய துருக்கி) பிரதேசத்தில் பிறந்தார்.

பக்தாதில் புகழ் பெற்று விளங்கிய மாபெரும் முஸ்லிம் கணித வல்லுனர் முஹம்மது இப்னு மூஸா இப்னு ஸாகிர் உடைய விஞ்ஞான குழுவில் சேர்ந்தார். இந்த விஞ்ஞான குழுவானது அப்பாஸியக் கலீபாக்களால் நிறுவப்பட்டது.

பாரம்பர வடிவியலை ( Traditional Geometry) வடிவியல் சார்ந்த இயற்கணிதத்துக்கு (Geometrical Algebra ) விரிவுபடுத்தியதில் முன்னோடியானவர் தாபித்.

வடிவியலின் தந்தையாக யுக்ளிட் போற்றப்படுகிறார். தாபித் இப்னு குர்ராவின் சிறப்பம்சம் என்னவெனில் யுக்ளிட் கூறாத வடிவியல் தத்துவங்களின் வளர்ச்சிக்கு இவர் முதன்மை பங்கு வகித்தார். கோள நிலை திரிகோண கணிதம் (Spherical Trigonometry ) முழுமைக் கணிப்பெண் ( Integral Calculas ) ஆகிய கணிதத் துறைகளின் வளர்ச்சியில் இவரது பங்கு கணிசமானது.

திண்மத்தினுடைய மேற்பரப்பு மற்றும் கனஅளவு ஆகியவற்றை கணிப்பதற்கு அவர் பயன்படுத்திய முறைதான் பின்னாளில் முழுமைக் கணிப் பெண் என அறியப்படுகின்றது.

குழுமம், உத்தரம், நெம்புகோல் ஆகியவற்றின் நடுநிலை அமைதி (Equilibrium of Bodies Scams and Levers ) பற்றிய நிலைகளை ஆய்வு செய்தது இயக்கவியல் மற்றும் இயற்பியலில் தாபித் உடைய மூலக் கண்டுபிடிப்பாகத் திகழ்கின்றது.

நிலையமைவியலின் (Statics) தோற்றுவிப்பாளராக சில வரலாற்றாசிரியர்கள் இவரை அங்கீகரித்துள்ளனர்.

வானவியலின் தந்தையாகப் போற்றப்படுபவர் தாலமி. வானவியல் பற்றிய இவரது கருத்துக்களை பலர் விமர்சித்து உள்ளனர். ஆனால் தாலமியின் வானியல் கருத்துக்களை விமர்சித்த ஆரம்ப கால அறிஞர்களில் ஒருவராக தாபித் திகழ்கிறார்.

இதே போன்று யுக்ளிட் உடைய பல கோட்பாடுகளில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டிய இவர் அதில் பல முக்கியமான திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.

தாலமியின் வானவியலில் ஒன்பதாவது கோளத்தையும் சேர்த்தவர் தாபித்.

சுரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களில் உள்ள பல பிரச்சனைகளை ஆய்வு செய்த தாபித் கதிர் மணிப்பொறி (Sindial ) பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பீர் மற்றும் மெட்லர் ஆகியோர் தங்கள் புகழ் பெற்ற பணியான டெர்மாண்ட் என்பதில் சந்திரனின் ஒரு பகுதிக்கு தாபித் உடைய பெயரை வைத்துள்ளனர்.

கணிதம்,வானவியல், மற்றும் மருத்துவம் பற்றிய தாபித் உடைய நூல்கள் காலத்தை விஞ்சி இன்றும் நிற்கின்றன.

கலீபா அல் முஃததித் ஆட்சியின் கீழ் இவர் பணியாற்றியபோது அறிவியல் பற்றி கிரேக்க மற்றும் சிரிய மொழிகளில் இருந்த நூல்களை அரபிக்கு மொழி பெயர்த்தார்.

அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்ட இவற்றில் தாலமியின் அல்மாஜஸ்ட், யுக்ளிட் உடைய வடிவியல் பற்றிய மூல தத்துவம் மற்றும் இன்னொரு கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸின் நூல்கள் ஆகியவை அடங்கும்.

மத்திய காலத்தில் ஜெரால்ட் தாபித்துடைய சில நூல்களை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.

தனது பாரம்பரிய அறிவை தனது மகன்களான இப்றாகீம் மற்றும் சினான், பேரக்குழந்தைகளான தாபித் மற்றும் இப்றாகீம், கொள்ளுப் பேரன்களான அபு அல்பரஜ் அகியோரிடம் தாபித் விட்டுச் சென்றார். இவர்கள் எல்லோருமே வடிவியல் வானவியல் மற்றும் மருத்துவத்திற்கு கணிசமான பங்களிப்பை ஆற்றினார்கள்.

அவரது மகன் சினான் கி.பி 931-முதல் மருத்துவர்களுக்கான சான்றிதழ் பரீட்சைகளைத் துவக்கினார். மேலும் மருத்துவர்களுக்கு 800 சான்றிதழ்களை வழங்கினார்.

நடமாடும் மருத்துவமனைகளை அன்றே ஏற்படுத்திய சினான் போதிய சுகாதார முறைகளைக் கண்டறிவதற்க்காக அடிக்கடி சிறைகளிலும் சொதனை நடத்தியவர்.

தாபித் இப்னு குர்ரா கி.பி.901-ல் பக்தாதில் மரணித்தார்.

-நன்றி : ஹஸன்.

Monday, February 12, 2007

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!

இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவன்தான். இந்த உலக மக்கள் யாவரும் ஒரே தாய் தந்தையிலிருந்தே பிறந்து பல்கிப் பெருகியவர்கள் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே ஒத்துக் கொள்கின்றன. இதை நான் முன்பே பல பதிவுகளில் விளக்கியுமிருக்கிறேன். சமீபத்தில் இந்த ஓரிறைக் கொள்கையை மேலும் வலுவாக்கும் விதமாக இந்து மத வேதங்கள் கூறக் கூடிய கருத்துக்கள் சிலவற்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தெளிவாக வேதங்கள் கூறியிருக்க நம் நாட்டில் ஊருக்கு ஒரு இறைவனை ஏன் நம் முன்னோர்கள் உண்டாக்கினார்கள். இது எப்பொழுது ஆரம்பமானது என்று எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடைதான் இல்லை. இனி வேதங்கள் கூறக் கூடிய ஓரிறைக் கொள்கையை பார்ப்போமா?

'ஒரே இறைவனையே வணங்குங்கள். தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' என்று அறிவுறுத்த ஒவ்வொரு சமுதாயத்திற்கும ஒரு தூதரை அனுப்பினோம்.' -குர்ஆன் 16 : 36

நம் எல்லோரையும் படைத்த இறைவன் பாரத நாட்டுக்கும் ஏன் நம் தமிழ் மொழிக்கும் தூதரை அனுப்பியதாக கூறுகிறான்.

இனி பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!

ஈசுவரா சர்வ புதானாம்
ஹிறுத்தே செர்ஜ்ஜீன் திஷ்டதி
ப்ராமயன் சர்வ புதானி
யந்திரு ரூடானி மாய யா
தமேவ சரணம் : கச்ச
ஸர்வ பாவேன பாரதா
தத் பிலஸாதால் பராம்
சாந்திம் ஸ்தானம்
பிறாய்யஸீ சாசுவதம்
(18 : 61 : 62)

எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால் அந்த ஏக இறைவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும்.

யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)

தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்

நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.
-குர்ஆன் 2 : 186

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18

மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

மேற்கண்ட இந்து இஸ்லாமிய கிறித்தவ வேதங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்ல உலகம் முழுவதும் இன்று நாட்டுக்கு நாடு இறைவனின் உருவங்கள் வேறுபடுவதைப் பார்க்கிறோம். வழிபாட்டு முறைகளிலும் பெருத்த வித்தியாசங்கள். இவை எல்லாம் எதனால் ஏற்ப்பட்டது என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா? மதங்களின் பெயரால் வயிறு வளர்த்த மத குருமார்கள் செய்த புரட்டுகளாலேயே இத்தகைய மாற்றங்களைப் பார்க்கிறோம்.

இன்று இந்தியாவில் உள்ள தர்காக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கும் இஸ்லாத்தின் சட்டங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். சமீபத்தில் என் தாத்தா ஹஜ்ஜீக்கு சென்றபோது மதீனாவும் சென்றுள்ளார். அங்கு முகமது நபியின் அடக்கத்தலத்திற்கு முன்பு கைகளை ஏந்தி பிரார்த்தித்திருக்கிறார். உடனே அங்கு நின்ற காவலர்கள் அவருடைய கைகளை பின்புறம் இருக்கும் பள்ளிவாசலின் பக்கம் திருப்பி 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறியுள்ளனர். இறைவன் நிலைக்கு முகமது நபியை உயர்த்திவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். முகமது நபியை விடவா இங்குள்ள நாகூர் தர்காவும், ஏர்வாடியும், அஜ்மீரும் பெருமை பெற்று விட்டன?

இது மனிதனின் இயல்பு. நாம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை அவர்களின் தகுதிக்கு மீறி புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்துவதே நமது வழக்கமாகி விட்டது. அரசாங்க காண்ட்ராக்டுகள் தமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளை 'வாழும் தெய்வமே' என்று நாடு முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுகிறோம். இவை எல்லாம் நம்மை எங்கு கொண்டு சென்று விடும் என்று அறியாமல் செய்து வருகிறோம். பார்க்கப் போனால் போஸடரில் இருப்பவரை விட போஸ்டர் அடிப்பவர் நியாயவானாக வாழ்வதைப் பார்க்கிறோம்.

இறைவன் பெயரால் செய்யப்படும் மோசடிகளை கண்டித்து நாடு முழுக்க மிகப் பெரும் புரட்சியை உண்டாக்கிய பெரியாருக்கே இன்று சிலைகள் மாலைகள் என்று அமர்க்களப்படுத்துகிறோம். பெரியாரின் சிலையின் முன்னால் சென்று கும்பிடுவதாலோ, அச்சிலைக்கு மாலை இடுவதாலோ அந்த சிலை எதை உணர்ந்ததாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்? அந்த பெரியார் சொன்ன கொள்கைகளை வாழ்வில் கடைபிடிப்பது தானே அந்த மனிதருக்கு செய்யும் மரியாதை? இனியாவது இதைப்படிக்கும் பகுத்தறிவாதிகள் சற்று சிந்திக்க வேண்டும்.

இந்து கிறித்தவ இஸ்லாமிய மார்க்கங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்லியிருக்க அதை விடுத்து நம் கற்பனைகளையெல்லாம இறைவனாக்காமல் வாழ்வோமாக!

வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யொவான் (1 : 18)

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
-ரிக் வேதம் 8 : 1

கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)

தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)

யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)

மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103

வானங்களையும் புமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், புமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும்,புமிக்கும் இடையே வசப்படுத்தப் பட்டுள்ளமேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
-குர்ஆன் 2 : 164

Saturday, February 10, 2007

பிச்சை எடுத்து சாப்பிடலாமா? ஓர்அலசல்.

இன்று உலகில் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. சிலர் உடல் உழைப்பில் சம்பாத்தியத்தை தேடுவார்கள். ஒரு சிலர் வட்டி பணத்தின் மூலம் ஏழைகளை சுரண்டி வயிறு வளர்ப்பார்கள். அரசாங்க உத்தியோகம், டேபிள் சேர் வேலை என்று அதிகம் பேர் இன்றைய காலகட்டத்தில் பணம் பண்ணுகிறோம். இவற்றை எல்லாம் தாண்டி பிச்சை எடுத்தே வாழ்வை ஓட்டுபவர்களை உலகெங்கும் பரவலாக பார்க்கிறோம். இப்படி பிச்சை எடுத்து தங்கள் வாழ்வை ஓட்டலாமா என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிறிது அலசுவோம்.

முகமது நபி கூற நான் கேட்டேன்...

'உங்களில் யார் மக்களிடம் யாசகம் கேட்டு தன் வாழ்நாளை ஓட்டுகிறாரோ அவர் மறுமை நாளில் முகத்தில் சதையின்றி எழுப்பப்படுவார்.'
அறிவிப்பவர் : அபுஹீரைரா நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ

'யார் யாசிப்பதில்லையோ அவருக்கு சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'
அறிவிப்பவர்: அபுஹீரைரா நூல்: அபுதாவுத், நஸயீ

'யாரிடமும் யாசகம் கேட்க வேண்டாம். உன் குதிரையின் சாட்டை கீழே விழுந்தாலும் அதை நீயே எடுப்பாயாக! அதை எடுப்பதற்காக மற்றவரை ஏவாதே' என்றார்கள். அதன்படியே என் வாழ்நாளை அமைத்துக் கொண்டேன்.'
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் அவ்ப் நூல்கள் : புகாரி, முஸ்லிம்

ஹக்கீம் இப்னு ஹிஸாம் என்ற நபித் தோழர் சில தேவைகள் பொருட்டு யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். ஒரு முறை இருமுறை அல்ல. மூன்று முறை சென்றார். நான்காவது முறையும் யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். அப்போது முகமது நபி ஹக்கீமைப் பார்த்து

'ஹக்கீமே! செல்வம் பசுமையும் இனிமையும் நிறைந்தது. யார் அதை நிறைந்த மனத்தோடு பெறுகிறாரோ அவருக்கு அதிலே அபிவிருத்தி செய்யப்படும். எவர் பொருளை யாசகமாகப் பெற்று ஊதாரித்தனமாக செலவழிக்கிறாரோ அவருக்கு அப்பொருளால் அபிவிருத்தி செய்யப்பட மாட்டாது. யாசிக்கும் கரத்தை விட யாசகம் கொடுக்கும் கரமே சிறந்தது. எனவே யாசிப்பதை விட்டுவிடுவீராக' என்று அறிவுரை பகர்ந்தனர்.

ஹக்கீம் இப்னு ஹிஸாம் கூறுகிறார் 'இறைவன் மீது ஆணையாக! உலகை விட்டு பிரியும் வரை இனி நான் யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன் என்று அன்று உறுதி எடுத்துக் கொண்டேன்'

முகமது நபிக் காலத்துக்குப் பிறகு மேற்கண்ட நபர் மிகவும் வறுமையில் இருப்பதைக் கேள்விப்பட்ட கலீபாக்கள் அபுபக்கரும் உமரும் அவருக்காக பொருளுதவி செய்ய முன் வருகிறார்கள். 'முகமது நபிக்கு முன்னால் நான் வாக்கு கொடுத்துள்ளேன். எனவே நான் யாரிடமும் எதையும் யாசகமாகப் பெறமாட்டேன்' என்று கடைசி வரை யாரிடமும் கை நீட்டாமலேயே வாழ்ந்து சென்றதைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.

இதன்மூலம் யாசகத்தையே தொழிலாக வைப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. இன்று கை கால்கள் நல்ல நிலையில் உள்ள எத்தனையோ இனைஞர்கள் கூச்சமின்றி யாசகம் கேட்பதைப் பார்க்கிறோம்.

ஒரு வருடம் முன்பு நான் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். ஒரு பாகிஸ்தானியர் நாற்பது வயது மதிக்கத் தக்கவர் வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய பணம் இல்லை என்றும் பணம் தந்துவவுமாறும் கேட்டுக் கொண்டார். என்னோடு வேலை செய்து வரும் எகிப்தியர் அவருக்கு 20 ரியால் கொடுத்தார். எனக்கு அந்த பாகிஸ்தானி மேல் நம்பிக்கை வரவில்லை. நான் எதுவும் தரவில்லை. அதே பாகிஸ்தானியை இரண்டு நாள் கழித்து கடைத்தெருவில் சந்தித்தேன். அங்கு சிலரிடம் 'என் அரபி முதலாளி மோசம் செய்து என்னை எமாற்றி விட்டார். நான் பாகிஸ்தான் செல்ல உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி ரியாலை திரட்டிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஆபரேஷன் முடிந்து விட்டதா?' என்று கேட்டேன். என்னை அடையானம் கண்டு கொண்ட அந்த நபர் எனக்கு பதில் தராமல் அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து விட்டார். இது போல் அன்றாடம் பல மோசடிப் பேர்வழிகளை நாம் வாழ்நானில் சந்தித்து வருகிறோம். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களையும் சந்தேகத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

இதேபோல் பள்ளிவாசல்களிலும், கோயில்களிலும், சர்ச்களிலும் பிச்சை எடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் சிலர் பரம்பரையாக பிச்சை எடுக்கும் தொழிலைச் செய்பவர்கள். பிரார்த்தனையை முடித்து விட்டு வரும் பக்தர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று சில்லரையாக போட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். இது போன்ற பழக்கத்தினால் பிச்சைக்காரர்களை நாமே ஊக்கப்படுத்துகிறோம். இப்படி சில்லரையாகப் போடுவதைவிட வாழ்நானில் நம் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவனுக்கு தையல் இயந்திரம், சிறிய தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கான மூலதனம் போன்றவற்றைக் கொடுத்து உதவலாம். 'இனி நீ பிச்சை எடுத்தால் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விட வேண்டும்' என்ற உத்தரவாதத்தையும் உதவி பெறுபவரிடம் நாம் பெற வேண்டும். இது போன்ற செயல்கள் பிச்சை எடுப்பவர்களை ஓரளவு மட்டுப்படுத்தும்.

இது போன்ற நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதை இனிப் பார்ப்போம்.

'தொழுகையை நிலை நாட்டுங்கள். ஏழை வரியைக் கொடுங்கள்' - குர்ஆன் 2 :110

தொழுது கொள்ள எங்கெல்லாம் இறைவன் கட்டளை இடுகிறானோ அதற்க்கடுத்து ஏழைகளுக்கு உதவவும் வேண்டும் என்று கட்டளை இடுவதன் மூலம் இந்த ஏழை வரியின் முக்கியத்துவம் விளக்கப் படுகிறது.

'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நள்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்.' -குர்ஆன் 2 : 276

இதன் மூலம் தர்மம் செய்வது செல்வத்தை பெருகச் செய்யும் என்று இறைவன் வாக்களிக்கிறான்.

'உங்களின் விளை நிலங்கள் பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள். அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய கடமையை (ஏழை வரியை) வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.' -குர்ஆன் 6 : 141

இதன் மூலம் விளை நிலங்களுக்கும் கணக்கிட்டு ஏழை வரியைச் செலுத்த வேண்டும் என்று விளங்குகிறோம்.

'நம்பிக்கைக் கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். இறைவனின் வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். 'இறைவனின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு' என்று எச்சரிப்பீராக' -குர்ஆன் 9 : 34

நம்மில் பலர் இத்தகைய உதவிகளை மத குருமார்களுக்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உதவிகள் ஏழைகளைச் சென்றடைய வேண்டியது என்று இறைவன் அறிவுறுத்துகிறான்.

'யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை சேகரிப்பவர்களுக்கும், இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது இறைவனின் கடமை. இறைவன் அறிந்தவன். ஞானமிக்கவன்.'
-குர்ஆன் 9 ; 60

மேற்சொன்ன வகையில் அடங்குபவர்களே தர்மத்தின் செல்வத்தினை அனுபவிக்கத் தகுதியானவர்கள். யாசிப்போர்,ஏழைகள், நாடோடிகள் போன்றோர் யார் என்பதற்கும் விரிவான விளக்கங்கள் இருக்கிறது.

'தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காவும், உறவினர்க்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் செலவிட வேண்டும்.' நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்' எனக் கூறுவீராக.
-குர்ஆன் 2 : 215

இந்த வசனத்தின் மூலம் உறவினர்களையும் கவனிக்கச் சொல்லி இறைவன் கட்டளை இடுகிறான். தன் சித்தப்பனும், உடன்பிறந்தவர்களும் வயதான காலத்தில் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்க 'கொடை வள்ளல்' என்று பெயரெடுப்பதற்காக ஊருக்கும்,பள்ளிவாசல்களுக்கும், கோவில்களுக்கும் பிறர் மெச்ச வேண்டி செலவிடுபவர்களையே நாம் அதிகம் பார்க்கிறோம்.

'யார் கஞ்சத்தனம் செய்து தேவையற்றவராகத் தன்னைக் கருதி நல்லதை நம்ப மறுக்கிறாரோ சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்ப்படுத்துவோம்.' -குர்ஆன் 92 : 8,9,10

கஞ்சத்தனம் செய்வோரையும் இவ்வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான்.

'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப்பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' - குர்ஆன் 2 : 271

நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு பாவங்களெல்லாம் தர்மத்தின் மூலம் அழிக்கப்படுகிறது என்று குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

'தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.' -குர்ஆன் 2 : 188

லஞ்சம் வாங்குபவர்களை இந்த வசனம் கடுமையாக சாடுகிறது.

இந்த சட்டங்களையும் இது போன்ற மேலும் பல சட்டங்களையும் படிக்கும் போது இவையனைத்தும் ஏறத்தாழ கம்யுளிஸத்தை ஒத்து வருவதைப் பார்க்கிறோம். கம்யுளிஸ்டுகள் இறைவனை மறுத்து முதலானித்துவத்தை ஒழித்து சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமோ இறைவனின் நம்பிக்கையை ஊட்டி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் உலக நடைமுறைக்கு உகந்ததே என்று கூறி அந்த வித்தியாசத்திலும் சம தர்ம சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது. உலகம் முழுவதும் அதில் வெற்றியும் கண்டுள்ளது.

இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அதே நேரம் சீனா கம்யுளிஸத்தை விடுத்து இன்று பொருளாதாரத்தில் மேன்மையுறுவதையும் காண்கிறோம். முதலாளித்துவத்தையும், கம்யுனிஷத்தையும் பின்பற்றக் கூடிய பல நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததாக நாம் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சியை ஒரு பேட்டை ரவுடியின் வளர்ச்சியாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்கள் கருத்தைப் பதிப்பார்களாக!

நான் எழுத நினைத்த தலைப்பு ஒன்று. ஆனால் அது என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது.

இறைவனே மிக அறிந்தவன்.

Thursday, February 08, 2007

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .

எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது-
"ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

.அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"

ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"

ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது:

"எப்படி சொல்கிறீர்கள்......?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim) இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."மேலும் அவர் சொன்னவை:"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்தபார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)

(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).

நண்பர் சுடடு விரலின் பதிவை மறுபதிப்பு செய்கிறேன்.

Sunday, February 04, 2007

டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.

விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!

தமிழ்மணத்தில் பல வலைப் பதிவர்களின் கருத்தோடு முற்றிலும் மாறுபடக் கூடியவர். தான் சொல்ல வரும் கருத்தை நேரிடையாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லும் தைரியத்தை நினைத்தும் சில நேரம் ஆச்சரியப்படுவதுண்டு. இதனால் பலரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டவர். அவரோடு பல இடங்களில் கருத்துக்களோடு முரண்பட்டாலும் ஆரம்பம் முதலே அவரை மதித்து வந்திருக்கிறேன். அந்த மதிப்பும் மரியாதையும் என்றும் நிலைக்க வேண்டும் என்பதே என் அவா!

சமீபத்தில் லக்கிலுக் இவரை டெண்டுல்கராக மாற்றிய பதிவைப் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தோம்.

இஸ்லாத்தில் உள்ள முத்தலாக் பிரச்னை, இஸ்லாமியர் கல்வியில் பின் தங்கி இருப்பது போன்ற பல விபரங்களை பகிர்ந்து கொண்டோம். இவை எல்லாம் மார்க்கம் அறியாத சில மார்க்க அறிஞர்களின் தலையீட்டால் வந்தது என்று விளக்கினேன். இடையில் சோவைப் பற்றியும் பேச்சு வந்தது. காசு கொடுத்து நான் வாங்கிப் படிக்கும் பத்திரிக்கைகளில் துக்ளக்கும் ஒன்று. சோவின் கருத்துக்களில் எனக்குள் பல முரண்கள் இருந்தாலும் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து படிப்பேன். இது போன்று பல விபரங்களையும் பகிர்ந்து கொண்டோம். களைப்பு தீர இடைஇடையே லெமன் டீயும் அருந்தி கொண்டோம்.

ஒன்பதரை மணிக்கு தாத்தா வந்தார். தாத்தாவையும் ராகவன் சார் சந்தித்து ஆசி பெற்றார். வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்று கூறி எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் தமிழ்மணத்தின் இளைய!, இனிய வலைப்பதிவர். என் அழைப்பை ஏற்றுவருகை புரிந்து என்னோடு இரண்டு மணி நேரம் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழித்த ராகவன் சாருக்கு நன்றிகள் பல.

எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

நான் இந்துவாக மாறத்தான் வேண்டுமா!

நான் இந்துவாக மாறத்தான் வேண்டுமா!

//சுவனப்பிரியன் அவர்களும் ஒருநாள் உண்மை உணர்ந்து இறைவழியாம் அன்புவழியில் இந்துமதத்தில் இணைவார் என்றே விரும்புவோம்.//

www.ezhila.blogspot.com/2007/01/blog-post_26.html

நண்பர் எழில் என்னை இந்து மதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. அழைப்புப் பணி என்பது யாரும் யாரையும் அழைக்கலாம். ஒரு தவறான இடத்தில் இருக்கும் ஒருவரை நேர்வழியின்பால் அழைப்பது அழைப்புப்பணி எனப்படும். நண்பர் எழிலின் விருப்பத்திற்கினங்க நான் திரும்பவும் இந்து மதத்துக்கு வந்தால் நான் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை வரிசையாக பட்டியலிடுகிறேன்.

1.சாதி ஒரு பிரச்னை.

நான் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினால் எழில் என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்ளுவார்? என் ஊரைச்சுற்றி செட்டியார்களும் மூப்பனார்களும் அதிகமிருப்பதால் என் முன்னோர்கள் இந்த சாதிகளில் ஏதோ ஒன்றில் பிறந்திருக்கலாம். என் பழைய சாதி எது என்பதையே இஸ்லாமிய வரவால் மறக்கடிக்ப்பட்டிருக்கிறேன். உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் 'நீ ஒரு முஸ்லிமா?' என்ற ஒரு கேள்வியோடு முடிந்து விடும். ஆனால் நம் இந்தியாவிலேயே நீங்கள் ஒரு இந்து என்றால் அடுத்தாக 'நீ எந்த சாதி?' என்ற கேள்வியும் அடுத்து வருமல்லவா?

2.வழிபாட்டு முறையில் உள்ள வித்தியாசம்.

இன்று நான் சவுதியில் பல முறை தலைவராக நின்று பள்ளிவாயில்களில் தொழுகை நடத்தி இருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி நாட்டவரும் எகிப்து ஆப்ரிக்கா பாகிஸ்தான் நாட்டவரும் தொழுதிருக்கிறார்கள். அவர்கள் என்னை ஒரு இந்தியன் என்று பார்க்கவில்லை. ஒரு முஸ்லிமாகத்தான் பார்த்தார்கள். நிற வெறி, குல வெறி போன்றவற்றை மறந்து உலக நாட்டவர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி அல்லவா? மெக்காவில் உள்ள கஃபா ஆலயத்துக்கு முதல் ஆளாக நீங்கள் சென்றால் மிக நெருக்கத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றலாம்.

அதே சமயம் நான் இந்து மார்க்கத்திற்கு மாறினால் 'ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சாதியினரையும் கருவரை சமீபம் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று எழிலோடு சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டி வரும். 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று நண்பர் எழிலோடு சேர்ந்து கோஷம் போட வேண்டி வரும். இவற்றை எல்லாம் நண்பர் எழில் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

3.இறைக் கோட்பாடு

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தின்படி இன்று ஏக இறைவனை வணங்கி இறைக் கோட்பாட்டில் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கிறேன்.

நண்பர் எழிலின் கோரிக்கையை ஏற்று நான் இந்துவானால் எந்த தெய்வத்தை வணங்குவது? முருகனையா? பிள்ளையாரையா? ஐயப்பனையா?பிரம்மாவையா? விஷ்ணுவையா? நண்பர் எழில் விளக்க வேண்டும்.

இந்து மதத்தை விடுத்து நான் கிறித்தவனாக மாறினாலும் அங்கும் பிரச்னையே! நான் ஏசுவை வணங்குவதா? மேரியை வணங்குவதா? பரிசுத்த ஆவியை வணங்குவதா? பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கும் பிதாவை வணங்குவதா?

4.புரோகிதத்தை ஒழித்தது!

இந்து மத கோட்பாடுகளின் படி புரோகிதர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. இறைவனை வணங்குவதிலிருந்து, கல்யாணம், இறப்பு, பிறப்பு அனைத்திலும் புரோகிதர்கள் மூலமாகவே உங்களின் அனைத்து தேவைகளையும் இறைவனிடமிருந்து பெற முடியும்.

ஆனால் இஸ்லாத்தில் இத்தகைய நிலை இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. யுக முடிவு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களை நேர்வழிப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
-குர்ஆன் 2 : 174
நான் இறைவனிடம் பிரார்த்திக்க எந்த இடைத்தரகரையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என் தாய் மொழியிலேயே என்னைப் படைத்த இறைவனிடம் என் தேவைகளையும் கோரிக்கைகளையும் வைக்க முடியும்.

நான் மேலே சுட்டிக்காட்டிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அனைத்தும் முன்பு இந்து மதத்தில் இருந்தவைகளே! கலாசார மாற்றத்தினால் ஒரு தெய்வக் கொள்கையிலிருந்து பல தெய்வக் கொள்ளைக்கு இன்று நம் நாடு சென்று விட்டது. மனிதர்களிலும் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூகம் சுவீகரித்துக் கொண்டது. திரு மூலரும், சித்தர்களும் மேலும் நமது முன்னோர்களும் எத்தகயை கொள்கையை ஆதியில் கொண்டிருந்தார்களோ அந்த கொள்கைக்கு திரும்பி வாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் பின் பற்றிய ஓரிறைக் கொள்கையை ஏற்று இவ்வுலகிலும் மறு உலகிலும் சுவனத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திவனாக இப்பதிவை முடிக்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்