Followers

Sunday, February 04, 2007

டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.

விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!

தமிழ்மணத்தில் பல வலைப் பதிவர்களின் கருத்தோடு முற்றிலும் மாறுபடக் கூடியவர். தான் சொல்ல வரும் கருத்தை நேரிடையாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லும் தைரியத்தை நினைத்தும் சில நேரம் ஆச்சரியப்படுவதுண்டு. இதனால் பலரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டவர். அவரோடு பல இடங்களில் கருத்துக்களோடு முரண்பட்டாலும் ஆரம்பம் முதலே அவரை மதித்து வந்திருக்கிறேன். அந்த மதிப்பும் மரியாதையும் என்றும் நிலைக்க வேண்டும் என்பதே என் அவா!

சமீபத்தில் லக்கிலுக் இவரை டெண்டுல்கராக மாற்றிய பதிவைப் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தோம்.

இஸ்லாத்தில் உள்ள முத்தலாக் பிரச்னை, இஸ்லாமியர் கல்வியில் பின் தங்கி இருப்பது போன்ற பல விபரங்களை பகிர்ந்து கொண்டோம். இவை எல்லாம் மார்க்கம் அறியாத சில மார்க்க அறிஞர்களின் தலையீட்டால் வந்தது என்று விளக்கினேன். இடையில் சோவைப் பற்றியும் பேச்சு வந்தது. காசு கொடுத்து நான் வாங்கிப் படிக்கும் பத்திரிக்கைகளில் துக்ளக்கும் ஒன்று. சோவின் கருத்துக்களில் எனக்குள் பல முரண்கள் இருந்தாலும் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து படிப்பேன். இது போன்று பல விபரங்களையும் பகிர்ந்து கொண்டோம். களைப்பு தீர இடைஇடையே லெமன் டீயும் அருந்தி கொண்டோம்.

ஒன்பதரை மணிக்கு தாத்தா வந்தார். தாத்தாவையும் ராகவன் சார் சந்தித்து ஆசி பெற்றார். வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்று கூறி எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் தமிழ்மணத்தின் இளைய!, இனிய வலைப்பதிவர். என் அழைப்பை ஏற்றுவருகை புரிந்து என்னோடு இரண்டு மணி நேரம் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழித்த ராகவன் சாருக்கு நன்றிகள் பல.

எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

30 comments:

dondu(#11168674346665545885) said...

உங்களுடைய சுவாரசியமான பேச்சு என்னை கட்டிப் போட்டு நிறுத்தியது. அத்துடன் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் ஹாஜியாரை பார்ப்பதும் புண்ணிய காரியம் அல்லவா. மொத்தத்தில் மனதுக்கு நிறைவான சந்திப்பு.

முடிந்தால் 11-ஆம் தேதி ஜோசஃப் சாரும் நானும் அழைத்திருக்கும் சந்திப்புக்கு வரவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நான் இட்ட பின்னூட்டம் வரவில்லையா? ஹாஜியாரின் அன்புக்கும் ஆசிக்கும் நன்றி. கும்பகோணம் செல்லும்போது கண்டிப்பாக அவரை சந்திக்க முயலுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

பறவை இறகை தொட்டால் எப்படி இருக்கும்??
அது போல் இருக்கு உங்கள் எழுத்து... படிக்கும் போது.
பதிவு முடிந்த பிறகும் கீழே பார்க்கிறேன்.வேறு எதுவும் பாக்கி இருக்கிறதா? என்று
தொடர்ந்து எழுதுங்கள் சுவனப்பிரியன்.

வளர்பிறை said...

சந்திப்பை நன்றாக விளக்கியுள்ளீர்கள். மாறுப்பட்ட கருத்து கொண்டவர்கள் சந்திப்பதும், ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதும் ஒரு நல்ல ஆரம்பமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

வடுஊர் குமார்!

//பறவை இறகை தொட்டால் எப்படி இருக்கும்??
அது போல் இருக்கு உங்கள் எழுத்து...//

பாராட்டைப் படிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் பல ஆக்கங்களையும் படித்துள்ளேன். முதல் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

ராகவன் சார்!

தற்போது ஊரில் சொந்த வேலைகள் நிமித்தம் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். சென்னை வந்தால் அவசியம் உங்களையும் வலையுலக நண்பர்களையும் சந்திக்கிறேன். தஞ்சை மாவட்டத்துக்கு வந்தால் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
சுவனப்பிரியன்.

புதுப்பாலம் said...

சுவனப்பிரியர் அவர்களே,

தங்களின் சொந்த ஊர் எது. சவுதியில் எந்த நகரில் பணிப்புரிகிறீர்கள்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

suvanappiriyan said...

வளர்பிறை!

//மாறுப்பட்ட கருத்து கொண்டவர்கள் சந்திப்பதும், ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதும் ஒரு நல்ல ஆரம்பமாக உள்ளது. வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி!

நீங்கள் வாழ்த்துகிறீர்கள். இன்று போலி டோண்டுவிடம் இருந்து அன்பான ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. 'அவரை எப்படி சார் என்று அழைக்கலாம்?' என்ற ரீதியில் மிரட்டும் தோனியில் கேட்டிருந்தார். அவரின் பின்னூட்டத்தை வெளியிடவில்லை. கோபமில்லையே போலி டோண்டு சார்!

suvanappiriyan said...

இஸ்மாயில் கனி!

//தங்களின் சொந்த ஊர் எது. சவுதியில் எந்த நகரில் பணிப்புரிகிறீர்கள்.//

பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும தஞ்சைத் மாவட்டத்தில். தற்போது வேலை செய்வது சவுதி அரேபியா ரியாத் நகரில்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புதுப்பாலம் said...

//ராகவன் சார்!

தற்போது ஊரில் சொந்த வேலைகள் நிமித்தம் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். சென்னை வந்தால் அவசியம் உங்களையும் வலையுலக நண்பர்களையும் சந்திக்கிறேன். தஞ்சை மாவட்டத்துக்கு வந்தால் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
சுவனப்பிரியன்.//

//பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும தஞ்சைத் மாவட்டத்தில்//

ஊர் பெயரை அறிய ஆசைப்பட்டேன். மாவட்ட பெயரை தந்துள்ளீர்கள்.

நானும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் தான்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா

Sirajudeen said...

படிக்க மனதிற்கு இதமாக இருக்கிறது உங்கள் சந்திப்பு. வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் இருக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.

ஏமாறாதவன் said...

சுவனப்பிரியன் அய்யா,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இது சம்பந்தமாக பல கேள்விகள் எழுகின்றன. அதற்கு நீங்கள் பதில் தர வேண்டுகிறேன்.

1. டோண்டு அவர்கள் ஒரு முஷ்ரிகீன் (உருவ வழிபாட்டாளர்) அதனால், அவர் "dirty" அதாவது "நஜி" ஆகிறார் என்று இறைவசனம் இருக்கிறதே.

மலம், மூத்திரம், இணைவைப்பவன் எல்லோரும் நஜி என்று தொடத்தகாத்தாக இறைவசனம் சொல்லுவது தெரியுமா? அதாவது, அல்லாஹூவின் பார்வையில் மலமும், டோண்டுவும் ஒன்று என்று தெரியுமா?

அவருடன் பழக்கம் வைத்துக்கொள்ளாதே, அவரை எங்கு பார்த்தாலும் கொன்று போடு என்று அல்லாஹூ ஆணை செய்வதும் உங்களுக்கும் தெரியுமல்லவா. இருந்தும் ஏனிப்படி? அதுவும் ஹஜ்ஜியான தங்கள் தாத்தாவும் இந்த பாவத்துக்கு ஏன் ஆளாக்குகிறீர்கள்.

2. நீங்கள் சுவனப்பிரியன் என்று பெயர் வைத்த காரணம் என்ன? சுவனத்துக்கு போக நிச்சயமான ஒரே வழி முஷ்ரிகீன்களை போராடி செத்து போவதுதான் என்பது தெரியும். அம்மாதிரி ஏதேனும் ப்ளான் இருக்கிறதா? டோண்டு அவர்களை எப்போது தீர்த்துக்கட்டலாம் என்று நினைக்கிறீர்கள்?

suvanappiriyan said...

Puduppalam!

முகம் தெரியாமல், முகவரி தெரியாமல் வலையுலகில் வலம் வருவது பல வகைகளில் வசதி. அவசியம் ஊர் தெரிய வேண்டும் என்றால் தனி மெயிலிடுங்கள். நன்றி!

ரவி said...

///சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!
///

இது "ஆயில்" என்று எங்கள் கல்லூரியில் அழைக்கப்படும்.

suvanappiriyan said...

ஏமாறாதவன்!

1. டோண்டு அவர்கள் ஒரு முஷ்ரிகீன் (உருவ வழிபாட்டாளர்) அதனால், அவர் "dirty" அதாவது "நஜி" ஆகிறார் என்று இறைவசனம் இருக்கிறதே.

'இறைவனை வணங்குங்கள். அவனுக்கு இணையாக எதையும் கருதாதீர்கள். பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும்,அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும்,தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும்,உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.'
-குர்ஆன் 4 : 36

இந்த வசனத்தில் நெருங்கிய அண்டை வீடு, தூரமான அண்டை வீடு என்று வருவதைப் பாருங்கள். இங்கு எந்த இடத்திலுமே முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அண்டை வீட்டிலே ஒரு யுதர் இருந்தாலும், கிறித்தவரோ, இந்துவோ யாராக இருந்தாலும் அன்பு செலுத்துங்கள். அப்படி அன்பு செலுத்தாமல் பெருமையடிப்பவனை இறைவன் நேசிக்க மாட்டான் என்று அழகாக குர்ஆன் கூறியிருக்க இதற்கு மாற்றமாக நீங்கள் பொய்யுரைப்பது ஏன்? நீங்கள் பார்த்த வசன எண்ணைக் குறிப்பிடுங்கள்.

//அவருடன் பழக்கம் வைத்துக்கொள்ளாதே, அவரை எங்கு பார்த்தாலும் கொன்று போடு என்று அல்லாஹூ ஆணை செய்வதும் உங்களுக்கும் தெரியுமல்லவா. இருந்தும் ஏனிப்படி? அதுவும் ஹஜ்ஜியான தங்கள் தாத்தாவும் இந்த பாவத்துக்கு ஏன் ஆளாக்குகிறீர்கள்.//

'கொலைக்குப் பதிலாகவோ உலக மக்களிடையே செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' மேலும்
'ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5 : 32

இந்த வசனம் சிறு குழந்தைக்கும் புரியும்படி ஒரு மனிதனைக் கொலை செய்தல் எத்தகைய பாவம் என்று குர்ஆன் சொல்லியிருக்க நெஞ்சறிந்து ஏன் இப்படி பொய்யைச் சொல்கிறீர்கள். அல்லது நீங்கள் எந்த வசனத்தில் படித்தீர்கள் என்ற குர்ஆனின் வசன எண்ணைத் தாருங்கள்.

//மலம், மூத்திரம், இணைவைப்பவன் எல்லோரும் நஜி என்று தொடத்தகாத்தாக இறைவசனம் சொல்லுவது தெரியுமா? அதாவது, அல்லாஹூவின் பார்வையில் மலமும், டோண்டுவும் ஒன்று என்று தெரியுமா?//

மறுபடியும் பொய்யான தகவலா!குர்ஆனில் எந்த இடம் என்பதை வசன எண்ணோடு தாருங்கள். காலம் காலமாக தீண்டத்தகாதவர்கள் என்று இன்று வரை யார் யாரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!

//நீங்கள் சுவனப்பிரியன் என்று பெயர் வைத்த காரணம் என்ன? சுவனத்துக்கு போக நிச்சயமான ஒரே வழி முஷ்ரிகீன்களை போராடி செத்து போவதுதான் என்பது தெரியும். அம்மாதிரி ஏதேனும் ப்ளான் இருக்கிறதா? டோண்டு அவர்களை எப்போது தீர்த்துக்கட்டலாம் என்று நினைக்கிறீர்கள்?//

கண்டிப்பாக சுவனத்துக்குப் போவதற்க்குத்தான். ஆனால் அங்கு செல்வதற்கு நீங்கள் சொல்லும் வழிமுறைகள் அல்ல. உங்களையும் என்னையும் படைத்த நம் இறைவன் குர்ஆனில் கூறுவதைப் பார்ப்போம்.

'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60 : 8

முஸ்லிம்கனோடு நீதி நேர்மையோடு நடக்கும் மாற்று மதத்தவர்களுக்கு நன்மையையும் நீதியையும் செலுத்த இறைவன் கட்டளையிடுவதை சிந்தியுங்கள் ஏமாறாதவரே!

'நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைச் சுவனச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப் பகுதிகளில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.'
-குர்ஆன் 4 : 57

இந்த விபரங்களைக் கூட சரியாகப் பார்க்காமல் யாரோ சொன்னதை பின்னூட்டமிட்டு ஏமாந்து 'ஙே' என்று விழிக்கும் ஏமாறாதவரே! பெயருக்கேற்றார்போல் இனிமேலாவது ஏமாறாமல் இருக்கவும்.

எனக்கும் டோண்டு ராகவன் சாருக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் என்னுடைய நம்பிக்கையின்படி என்னுடைய மூதாதையரும் அவருடைய மூதாதையரும் ஆதாம் ஏவாளிலிருந்து உருவானவர்கள். எனவே எனக்கு அவர் சகோதரர் ஆகிறார். நீங்களும் இந்த உலகில் உள்ள ஆண் பெண் அனைவருமே என்னுடைய சகோதர சகோதரிகளே! மனத்தாலும் யார் மேலும் வெறுப்போ கோபமோ எனக்கு ஏற்படாது என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

இனிமேலாவது ஏமாறாமல் இருக்கவும்.

suvanappiriyan said...

சிராஜித்தீன்!

//படிக்க மனதிற்கு இதமாக இருக்கிறது உங்கள் சந்திப்பு. வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் இருக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

முகமது நபி அவர்கள் கூற நான் கேட்டேன்:
'மனிதர்களுக்கு கிருபை காட்டாதவனுக்கு இறைவன் கிருபை செய்ய மாட்டான்.'

அறிவிப்பவர்:ஜரீர் இப்னு அப்துல்லாஹ்
நூல்: புகாரி,முஸ்லிம்

மரைக்காயர் said...

//இந்த விபரங்களைக் கூட சரியாகப் பார்க்காமல் யாரோ சொன்னதை பின்னூட்டமிட்டு ஏமாந்து 'ஙே' என்று விழிக்கும் ஏமாறாதவரே! பெயருக்கேற்றார்போல் இனிமேலாவது ஏமாறாமல் இருக்கவும்.//

அழகான விளக்கங்கள் சுவனப்பிரியன் அவர்களே. மதத்துவேஷத்தையும் விஷக்கருத்துக்களையும் மனம் முழுக்க யாரோ திணித்ததை சுமந்து கொண்டு தான் ஏமாந்து நிற்பதை கூட உணர்ந்து கொள்ள முடியாமல் பெயரை மட்டும் 'ஏமாறாதவன்' என்று வைத்துக் கொண்ட நண்பர் இனிமேலாவது விழித்துக் கொண்டால் சரிதான்.

ஏமாறாதவன் said...

சுவனப்பிரியன்,

தங்கள் பதில்களில் நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். ஒருவேளை உங்களுக்கு சமய அறிவு கொஞ்சமும் இல்லாமல் இருக்கிறது. அல்லது, இரண்டாவது, தக்கியா என்ற ஏமாற்றுவேலையை நீங்கள் செய்கிறீர்கள். தக்கியாவை இஸ்லாம் அல்லாதவர்களை ஏமாற்ற அல்லாஹூ அனுமதிப்பது தெரியும். ஏனென்றால் அல்லாஹூவே நான் சிறந்த ஏமாற்றுக்காரன் என்று இறைவசனத்தில் சொல்கிறான்.

இதில் நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும்.

விரிவான விடை எழுத வேண்டியிருக்கிறது. நான் அலுவலகத்தில் உள்ளதால் மாலையில் இன்ஷாஅல்லா பதிகிறேன்.

அதுவரை நீங்கள் ஒரு கேள்விக்கு விடை தாருங்கள். இறைவசனமான திருக்குர்ரான், ஷாஹூ ஹதீஸ்களில் நான் சொல்லவை சொல்லப்பட்டிருந்தது என்று நான் நிரூபித்தால் நீங்கள் மார்க்கத்தை விட்டு விலகத்தயாரா? அல்லது, நீங்கள் திருக்குர்ரானில் சொன்னவை உண்மையல்ல என்று ஒப்ப தயாரா?

இதற்கு விடை மாலைக்குள் எதிர்ப்பார்க்கிறேன்.

அட்றா சக்கை said...

சுவனப்பிரியன்,

ஏமாறாதவன் என்பவர் பிறரை ஏமாற்றத் தான் அந்த பெயரில் உலா வருகிறார்.

திரு. டோண்டுவுடன் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது கருத்து மோதலாகத் தான் இருக்குமே தவிர தனிநபர் வெறுப்பு ஆகாது என்பதை இச்சந்திப்பு மூலம் பலருக்கு உணர்த்தி உள்ளீர்கள்.

அதையே திரு டோண்டு தன் பதிவிலும் எழுதி இருக்கிறார். இந்த சுமுக விவாதம் தொடரக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் வேண்டுமென்றே இக்கேள்விகளை வைத்து மூக்குடை பட்டு நிற்கிறார்கள்.

அழகிய பதிவுக்கு நன்றி.

suvanappiriyan said...

செந்தழல் ரவி!

வேலை வாய்ப்பு சம்பந்தமாக பல அரிய சேவைகளை செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

//இது "ஆயில்" என்று எங்கள் கல்லூரியில் அழைக்கப்படும்.//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. சற்று விபரமாக விளக்குங்களேன்.

suvanappiriyan said...

ஏமாறாதவன்!

//அதுவரை நீங்கள் ஒரு கேள்விக்கு விடை தாருங்கள். இறைவசனமான திருக்குர்ரான், ஷாஹூ ஹதீஸ்களில் நான் சொல்லவை சொல்லப்பட்டிருந்தது என்று நான் நிரூபித்தால் நீங்கள் மார்க்கத்தை விட்டு விலகத்தயாரா? அல்லது, நீங்கள் திருக்குர்ரானில் சொன்னவை உண்மையல்ல என்று ஒப்ப தயாரா?

இதற்கு விடை மாலைக்குள் எதிர்ப்பார்க்கிறேன்.//

உங்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். குர்ஆனில் எந்த இடத்தில் நீங்கள் சொல்வது போன்ற வாசகங்கள் வருகின்றன என்பதை வசன எண்களோடு நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம். ஏனென்றால் சவால் இரண்டு பக்கமும் நியாயமாக இருக்க வேண்டும் அல்லவா!

suvanappiriyan said...

அட்ரா சக்கை!

//அதையே திரு டோண்டு தன் பதிவிலும் எழுதி இருக்கிறார். இந்த சுமுக விவாதம் தொடரக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் வேண்டுமென்றே இக்கேள்விகளை வைத்து மூக்குடை பட்டு நிற்கிறார்கள்.

அழகிய பதிவுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

'மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும் நேர் வழியையும் மறைப்பவர்களை இறைவன் சபிக்கிறான். சபிப்பதற்கு தகுதியடையவர்களும் சபிக்கின்றனர்.'
-குர்ஆன் 2 : 159

suvanappiriyan said...

மரைக்காயர்!

// பெயரை மட்டும் 'ஏமாறாதவன்' என்று வைத்துக் கொண்ட நண்பர் இனிமேலாவது விழித்துக் கொண்டால் சரிதான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

'அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்'
-குர்ஆன் 2 : 146

மது said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

At 10:31 PM, மதுசூதனன் said...

ஏமாறாதவன் என்ற பெயரில் எழுதும் இந்த ....... இஸ்லாமியர்களுக்கும் இட்ன்ஹுக்களுக்கும் பகையுணர்வை மூட்ட நினைக்கிறது.

கவனமாக இருங்கள் சுவனப் பிரியன் சார்.

அட்றா சக்கை said...

சுவனப்பிரியன்,

ஏமாறதவன் என்ற பெயரில் வந்தவர் வலைக்குப் புதிய நபர் இல்லை. மற்றவர்களை ஏமாற்ற நினைத்து வைத்த பெயர் இதோ அம்பலம் ஆகிவிட்டது!! சவால் விட்டு எங்கே போய்த் தொலைந்தார்?

ஒரு வேளை மீண்டும் 'உள்வாங்கல்' படலமோ??

என்னமோ போங்க!!!

திருந்தாத ஜென்மங்கள்!!

கொசு said...

சமீபத்தில் 192007 பிப்ரவரியில் உங்க நண்பர் போலியாக எழுதி மாட்டிக் கொண்டாரே தெரியுமா?

suvanappiriyan said...

அட்ரா சக்கை!

உங்களைப் போலவே ஏமாறாதவனின் சவாலை எதிர் கொள்ள காத்துக் கொண்டிருக்கிறேன். மனிதரின் பின்னுஸட்டத்தை அதன் பிறகு காணவில்லை. நீங்களாவது கொஞ்சம் தேடிப் பாருங்களேன்.

suvanappiriyan said...

கொசுபுடிங்கி!

டோண்டு அவர்களைப் பற்றி ஒரு வாரமாக நடந்து வரும் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. வேறொன்றும் சொல்வதற்க்கில்லை.

முதல் வருகைக்கு நன்றி!

ஏமாறாதவன் said...

சுவனப்பிரியன்,

நீண்ட நாளாக பதில் எழுதாத்து என் பிழையே.

வேலையில் வயிற்று பிழைப்புக்காக இந்த வாக்குறுதியை நிறைவு செய்ய இயலவில்லை. ஆனால், ஓரிரு நாட்களில் பதில் எழுதுகிறேன். உங்கள் இஸ்லாமிய புரட்டை அம்பலப்படுத்துகிறேன். இன்ஷாஅல்லாஹ். நீங்கள் மார்க்கத்தை விட தயாராகுங்கள் :-))

ஏமாறாதவன்