Followers

Sunday, October 19, 2008

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமா!

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமா!

'பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.'
-பெரியார்-குடியரசு-08-03-1936

'நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இருந்தேனேயில்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.'

'பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை'

'ஆனால் நாகம்மாளோ, பெண் அடிமை விஷயமாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.'

-பெரியார்-குடியரசு-14-05-1933

மேலே உள்ள கருத்துக்கள் அனைத்துமே பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் சொந்தக் கருத்துக்களாகும். இதை இங்கு பதிவதின் நோக்கம் 'ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்' என்ற எண்ணம் மேடைப் பேச்சுக்கும், எழுத்துக்கும் வேண்டுமானால் புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் ஒத்து வராத சித்தாந்தம். ஆனானப்பட்ட பெரியாருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கோ இன்னும் சிரமமான காரியமாகவே படும்.

ஏனெனில் ஆணுக்கு சில சிறப்புகளையும் பெண்ணுக்கு சில சிறப்புகளையும் படைத்தவன் வழங்கியிருக்கிறான். மேலும் பெண்ணை விட ஆணுக்கு சில சிறப்புத் தகுதிகளையும் அதே இறைவன் கொடுத்துள்ளான். இதை எல்லா வேதங்களும் உண்மையும்படுத்துகின்றன. இதற்கு மாற்றமாக 'நாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்தான்' என்று வாதிடும் பெண்கள் உடல் உழைப்பை வெளிப்படுத்தும் வேலைகளை செய்ய முன் வருவதில்லை. அதற்கு அவர்களின் உடலும் ஒத்துழைக்காது.

தாய்மை என்ற மிகச் சிறந்த பொறுப்பை பெண்களுக்கு வழங்கிய இறைவன் அதை ஆண்களுக்கு தரவில்லை. அதே போல் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களுக்கு வழங்கிய இறைவன் பெண்களை இது விஷயத்தில் விட்டு விடுகின்றான். இதற்கு மாற்றமாக நடக்கும் மேலை நாடுகளில் குடும்ப வாழ்வு சீரழிந்து குழந்தைகள் தறி கெட்டு தவறான வழிகளில் செல்வதையும் பார்க்கிறோம்.

அடுத்து இஸ்லாமியர்களில் பெண்களை அதிகம் கல்லூரி வரை அனுப்புவதில்லை. பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் எந்த வகையிலும் தடை செய்யவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து கல்வி கற்பதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. தற்போதுதான் இஸ்லாமிய பெண்களும் அதிக அளவில் கல்லூரி வரை செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர வேண்டும்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதில் பேராசைக் கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாகவே இருக்கிறான்.'
-குர்ஆன் 4:32

'பெண்களுக்கு கடமைகள் இருப்பது போல் அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு'
-குர்ஆன் 2:228

4 comments:

suvanappiriyan said...

சுவனப்பிரியன் 7:05 PM, October 19, 2008

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்
கோவி.கண்ணன் 10:23 PM, October 19, 2008
// சுவனப்பிரியன் said...

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்//

சுவனப்பிரியன்,

ஆப்ரகாமிய மதங்களில் மறுபிறப்பு தத்துவும் கிடையாது அதனால் உங்கள் வாதம் அதை ஒட்டியே அமையும் என்பதில் வியப்பு இல்லை. இந்திய சமயசார் தத்துவங்கள் எதுவுமே மறுபிறப்புக் கொள்கை இல்லாது அமையவில்லை. ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்றே இந்திய சமயதத்துவங்கள் கூறுகின்றன. நான் உங்களை நம்பச் சொல்லவில்லை. ஆனால் அப்படி இருக்கவே முடியாது என்று நம்புவர்கள் குறித்து தவறு என்று சொல்வதும் தவறுதான்.

ஆன்மாக்கள் குட்டிப் போடுமா ? இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் 30 கோடியாக இருந்தது தற்பொழுது 100 கோடியாக ஆனது எப்படி என்றே பலரும் கேட்கிறார்கள், ஒரே சமயத்தில் விதைக்கும் விதைகள் ஒவ்வொன்றாக கால சூழலைப் பொறுத்தே முளைக்கும், எங்கு மழையும் சூழலும் இருக்கிறதோ அங்குதான் விதைத்த விதைகள் முளைக்கும், அதுவரை அப்படியே இருக்கும், உற்பத்தி திறன் பெருகிய போது பிறப்பெடுக்காமல் இருக்கும் ஆன்மாக்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு பிறப்பதாகத்தான் எனக்கு சிலர் விளக்கமளித்தனர். முளைத்து வளர்ந்து மீண்டும் விதையைக் கொடுப்பது மீண்டும் விதைப் பயிராகவேக் கூட பயன்படுத்தப் படலாம் அல்லவா ? இதுதான் ஆன்மா மற்றும் மறுபிறவி பற்றிய சித்தாந்ததங்கள். உங்களுக்கு புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவரும் பிறக்கும் போதே அவர்கள் எதையெல்லாம் நம்புவார்கள், எந்த மதத்தில் பிறப்பார்கள் என்பது அவர்களின் ஆன்மாவிலேயே இருக்கும் விதி நீங்கள் நினைத்தாலும் அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளவே முடியாது. உங்கள் நம்பிக்கை முன்கூட்டியே தீர்மாணிக்கப் பட்டது என்பதை இந்திய சமயத்தத்துவம் அழகாகச் சொல்லி முற்றுப் புள்ளி வைத்துவிடும்.

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//இதுதான் ஆன்மா மற்றும் மறுபிறவி பற்றிய சித்தாந்ததங்கள். உங்களுக்கு புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.//

:- (

//ஒவ்வொருவரும் பிறக்கும் போதே அவர்கள் எதையெல்லாம் நம்புவார்கள், எந்த மதத்தில் பிறப்பார்கள் என்பது அவர்களின் ஆன்மாவிலேயே இருக்கும் விதி நீங்கள் நினைத்தாலும் அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளவே முடியாது. உங்கள் நம்பிக்கை முன்கூட்டியே தீர்மாணிக்கப் பட்டது என்பதை இந்திய சமயத்தத்துவம் அழகாகச் சொல்லி முற்றுப் புள்ளி வைத்துவிடும்.//

20 வயதிலும் 30 வயதிலும் தங்கள் வாழ்க்கை சட்டங்களையும் தங்கள் மதத்தையும் மாற்றிக் கொள்பவர்களை எதில் சேர்ப்பீர்கள்?

முற்ப்பிறவியில் செய்த பாவங்கள்தான் நாம் இப்பிறவியில் அனுபவிப்பது என்றால் எந்த குற்றத்துக்காக இந்த பிறவியில் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பதும் எவருக்கும் தெரியவில்லையே! இந்த குற்றத்துக்காக இந்த தண்டனை என்பதை மனிதன் விளங்கினால்தானே திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

30 கோடி முகமுடையாள் என்று பாரதி பாடிய பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. தற்போதய இந்திய மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல். மறுபிறவி சாத்தியம் என்றால் இன்றும் அதே 30 கோடி மக்கள் தான் நம் பாரத நாட்டில் மறு பிறவி எடுத்து இருக்க வேண்டும்.

Anonymous said...

பெண்ணடிமையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

suvanappiriyan said...

பெண்ணடிமையை முழுமையாக எதிர்க்கிறேன்.

பெண்ணுக்கு சொத்தில் உரிமையை நாம் இந்த நூற்றாண்டில்தான் சட்டமியற்றி கொடுத்து வருகின்றோம். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமியற்றி அதை நடைமுறையும் படுத்தி வருவதையும் இங்கு நாம் நினைவு கூற வேண்டும். விவாகரத்து செய்யும் உரிமை, மறுமணம் செய்து கொள்ளுதல், பொருள் ஈட்டுதல் என்று எதிலுமே இஸ்லாம் பெண்களுக்கு துரோகம் இழைக்கவில்லை.