Followers

Friday, October 24, 2008

மாலிகான் குண்டு வெடிப்பில் வி.ஹெச்.பி தொடர்பு!

மாலிகான் குண்டு வெடிப்பில் வி.ஹெச்.பி தொடர்பு!

சமீபத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம் மாலிகானிலும், அஹமதாபாத் மூடசா நகரிலும் நடந்த குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாரிகள் மூன்று பேரை மஹாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது. போலீஸ் அதிகாரி சூர்ய பிரகாஷ் குப்தா இது பற்றி கூறும்போது 'குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஒரு பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் இதில் சம்பந்தப்பட்ட மேலும் மூவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் வி.ஹெச்.பி. யின் பிரிவான 'ஜனத் ஜாக்குதி சமிதி' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தது நினைவிருக்கலாம். இன்னும் பல குண்டு வெடிப்புகளில் இவர்கள் சம்பத்தப் பட்டுள்ளார்களா என்பதை இனி வரும் விசாரணைதான் முடிவு செய்யும்' என்றார்.

-மக்கள் தொலைக்காட்சி செய்தி

எடுத்த எடுப்பிலேயே இந்த குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று சொன்ன அறிவுஜீவிகள், பல அப்பாவி முஸ்லிம்களை உள்ளே தள்ளிய காவல் துறையினர் தற்போது என்ன பதில் வைத்துள்ளார்கள்?

10 comments:

Unknown said...

எதற்கெடுத்தாலும் முஸ்லீம்கள் பெயரைச் சொல்லி தப்பிப்பதை விடுத்து சரியான பாதையில் விசாரணையை எடுத்துச் சென்றால், இதுபோல் எத்தனையோ உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

suvanappiriyan said...

திரு சுல்தான்!

குண்டு வெடிப்பில் முஸ்லிம்கள் சந்தேகிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கசிந்தவுடன் வரிந்து கட்டிக் கொண்டு பதிவுகள் எழுதும் பதிவர்கள், குண்டு வெடிப்புக்கு வி.ஹெச்.பி காரணம் என்று நிரூபணம் ஆகும் போது கண்டும் காணாமல் இருப்பது வியப்பளிக்கிறது. தினமலரிலும் இது பற்றி எந்த செய்தியையும் காண முடியவில்லை. ஆக மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை முஸ்லிம்களின் பெயரை எப்பாடுபட்டாவது கெடுத்தே தீர வேண்டும் என்று முழு மூச்சுடன் சிலர் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களின் முயற்ச்சி தோல்வியில்தான் முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத்திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.

பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.
இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.

1. மங்கேஷ் தினகர் நிகாம்2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி3. சந்தோஷ் ஆங்ரே4. விக்ரம் பவேஎன்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.

முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.

பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:

1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)2. 20 டெட்டனேட்டர்கள்3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்4. டைமர்கள்5. வோல்டேஜ் மீட்டர்கள்6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்7. ரிமோட் கண்ட்ரோல்கள்8. ரிவால்வர்கள்9. 92 தோட்டாக்கள்
சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா?-அபூசாலிஹ்.

suvanappiriyan said...

கவுகாத்தி, ஆக.5- குஜராத் மாநிலம் சூரத்தில் வெடிக்கப்படாமல் கண்டு எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சதித்திட்டத்தின் செயலாகும் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்ஸ் ஜனாந்த தேவதீர்த் குற்றம் சாற்றியுள்ளார்.

வெடிக்கப்படாமல் கண்டு எடுக்கப்பட்ட அனைத்து வெடிகுண்டுகளும் மதக் கலவரத்தைப் பரப்புவதற்காக வைக்கப்பட்டவை என்று தான் நம்புவதாக செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால் கோத்ரா நிகழ்வுகள் போல் ஒரு வெடி விபத்தை மீண்டும் நடத்திக் காட்ட மோடி முயல்வதாக, பூரி சங்கராச்சாரியார் குற்றம் சாற்றினார்.

மோடி எதையும் செய்யும் திறமை படைத்தவர் என்பதால் மத்திய அரசு அவரைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க மோடி முயல்வதாகவும் தேவதீர்த் கூறினார். பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். உளவுத்துறை மற்றும் பன்னாட்டுச் சதி என்று கூறப்பட்டாலும் சூரத் நகரில் 24 வெடிக்கப்படாத குண்டுகள் கண்டு எடுக்கப் பட்டதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இணைந்துள்ளதால் மதத்தின் பெயரால் நரேந்திர மோடி அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறிய சங்கராச்சாரியார் - இதுபோன்று ஏற்கெனவே நடத்திக் காட்டிய முதல்வர் அதை மீண்டும் செய்து காட்டும் திறமை உள்ளவர் என்று கூறினார். தங்களுடைய அரசியல் லாபத்திற்காக சிலர் மதத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாற்றினார்.

http://files.periyar.org.in/viduthalai/20080805/news03.html

suvanappiriyan said...

மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களின்
இசுலாமியர் பகுதிகளில் குண்டு வெடிப்பு
ஓய்வு பெற்ற 2 ஆர்.எஸ்.எஸ். ராணுவ
அதிகாரிகளுடன் ஆர்.எஸ்.எஸ். பெண் சாமியார் கைது


புனே, அக். 27- மகாராட்டிர மாநிலம் மலேகானில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சிமி அலு வலகத்துக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 90 பேர் படுகாயமடைந்தனர்.
நாசிக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட் டார் சைக்கிளில் மர்ம மனிதர் கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத் திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத்தப் பட்டிருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அம்மோ னியா நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தினர். வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட மோட் டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சியாம் சாகு, திலீப் நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை காவல்துறையி னர் பிடித்து விசாரித்தனர். குண்டு வெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பெண் சாமியார் சாத்வி பிரக்யா பெயரில் வாங் கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் பெண் சாமியார் பிரக்யா பற்றிய தகவல்களைத் திரட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.
பெண் சாமியார் பிரக்யா வின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் என்ற கிராமம். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ராமஜென்மபூமி போராட்டங்களில் ஈடுபட்ட வர். பிறகு இந்து ஜக்ரான் மஞ்ச் எனும் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்தார். அப்போது சாமியார் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புக்கு குஜராத் மாநில அரசு நிதி உதவி செய்து ஆதரித்தது. இதனால் பிரக்யா குஜராத் மாநிலம் சூரத் நகரில் குடியேறினார். பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.
பெண் சாமியார் பிரக்யா வுக்கும், குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் திரட்டப் பட்டன. குறிப்பாக மலேகா னில் குண்டு வெடித்த தினத் தன்று குஜராத் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பும் ஒரே மாதிரி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. சிமி இயக்கத்தின ரைப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமி யார் உள்ளிட்ட குழுவினர் நடத்தி இருக்கலாம் என்று கருதி பிரக்யாவைக் காவல் துறை இன்று கைது செய்தது. இது இந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து மற்றும் டைமர் கருவியை இந்து அமைப்பினர் எங்கிருந்து, எப்படி பெற்றனர் என்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். அப்போது பெண் சாமியார் பிரக்யாவுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்கள் நெருக் கமாக இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் நாசிக் அருகே ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்கள். இப்பள்ளியை இந்து ராணுவக் கல்விக் கழகம் நடத்தி வந்தது. இந்தப் பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப் படி, வெடிகுண்டுகளைக் கையாள்வது எப்படி என்ற பயிற்சியையும் ஆயுதப் பயிற் சியையும் இந்த இரு ராணுவ முன்னாள் அதிகாரிகள் அளித்து வருவது கண்டு பிடிக்கப்பட் டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான ராணுவ வீரர் களில் ஒருவர் பிரபாகர் குல் கர்னி; மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றி யவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க இவர் கள் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கின்றனர்.
தற்போது கைதான பெண் சாமியார் பிரக்யா உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் விசாரணை செய்வதற்காகக் காவல்துறையினர் மும்பை கொண்டு சென்றுள்ளனர்.
மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியா ரும், 2 முன்னாள் ராணுவ வீரர்களும் கைதாகி இருப்பது வடமாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suvanappiriyan said...

India

Three arrested on terror charges
IANS
Published: October 25, 2008, 00:08
Mumbai: Three activists - including a woman - of the Madhya Pradesh-based Hindu Janjagriti Samiti (HJS) were arrested in connection with terror blasts in Malegaon and Modasa (Gujarat), a police official confirmed on Friday.
Pragnya Chandrapalsingh Thakur, Shivnarayan Singh, and Shyam Bhanwarlal Sahu were remanded to police custody till November 3 by a Nashik court.
The remand hearing, in a departure from normal, was conducted 'in-camera' by the magistrate. The court permitted only the prosecution and defence lawyers and the accused to remain during the brief proceedings on Friday.
The police said the trio is accused of planning and executing the September 29 blast in Muslim-dominated town of Malegaon that left five dead, followed by a blast in Modasa the same day, in which one person was killed.
________________________________________
The explosions took place during the late evening period of the holy month of Ramadan when thousands of Muslims were out after evening prayers and breaking fast.
On the day of the blasts, Singh and Sahu were present in Malegaon and had a detailed telephonic conversation with Thakur, according to police.
Watch list
The HJS, believed to be on the terror watch list of the police, is said to have close links with the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), the student wing of the Bharatiya Janata Party (BJP).
According to the police, the HJS attempted to confuse the investigators by placing the motorcycle outside the office of the banned Students Islamic Movement of India (SIMI) in Malegaon, bearing stickers in Urdu.
The police investigations centred around the involvement of SIMI and the now-notorious Indian Mujahideen (IM), which carried out serial blasts in several Indian cities during the past four months.
The first breakthrough came after the police traced the motorcycle's chassis number through the Regional Transport Office (RTO). It was found to be registered in Indore in the name of Thakur.
This is not the first time that the role of Hindu outfits has been revealed in terrorist activists.
Early this month, the Anti-Terrorist Squad (ATS) had nabbed two persons belonging to the Sanathan Sanstha of Thane, in connection with the blasts in Panvel and Thane, and recovery of an unexploded bomb in Vashi in May this year.

http://archive.gulfnews.com/ articles/08/10/25/10254240.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கோட்சே காலம்முதல் இன்றுவரை

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின்

திரைமறைவுச் சதிகள்-கொலைகள்




சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!!

இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!

ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...

ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!

இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.

பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

காந்தியாரைக் கொன்ற கோட்சே!

1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம் களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?

காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப் பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச் சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.

சதுமுகையில்...

2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்ன ணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இரு வரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).

தென்காசியில்...

3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.

இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண் டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!

இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயா ரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

கான்பூரில் நடந்தது என்ன?

4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.

பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.

மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.

இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!

வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.

மகாராட்டிரத்தில்...

5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).

பெண் சாமியார் சிக்கினார்

6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசு லாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!

படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின் றனர்.

குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்த தையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!

மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.

சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!

சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.

நடவடிக்கைகள் தேவை

மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

சென்னை
28.10.2008


தலைவர்,
திராவிடர் கழகம்.



Source-http://files.periyar.org.in/viduthalai/

Anonymous said...

Terrorism in India

The arrest of a number of terrorists belonging to Hindu extremist groups vindicates the claim by many Muslim and non-Muslim organizations that it is unfair to blame Muslims for the bombs in various parts of India. The fact is that Muslims are the real victims of these blasts. They gain nothing from them. Whenever a blast occurs, they are arrested at random and police and other agencies terrorize and blackmail them. Many Muslim families have had to mortgage their homes and sell their gold ornaments to pay police officers in order to spare their young members police harassment.

There needs to be an impartial investigation into these bomb blasts and riots to find their real causes, who is behind them and who benefits from them. Elections are near and the Sangh Parivar groups — RSS, Vishwa Hindu Parishad, Bajrang Dal, Akhil Bharatiya Vidyarthi Parishad and others — will leave no stone unturned to help the BJP win a majority in Parliament. The surest way for that is to play the hate card. Riots and bomb blasts help them in their campaign. Many members of Bajrang Dal and VHP were recently caught with explosives in Nanded, Aurangabad, Kanpur, Meerut, Chennai and Hyderabad.

The role of government agencies also needs to be scrutinized. The fairness of many of them is suspect. They behave as if they were allies of Hindu extremist groups in their nefarious schemes. These issues have to be sorted out if the nation is to avoid a recurrence of such tragedies.



Rafiuddin Farooqui, Riyadh published 5 November 2008


--------------------------------------------------------------------------------

Terrorism in India 2

Against the backdrop of the arrest of the terrorists behind the Malegaon blasts in India — one Sadhvi and two former military men — Prime Minister Manmohan Singh commented that terrorism had no religion. He was right. However, it is sad that such a statement did not come from him when Muslims were being harassed after these and other blasts in different parts of India. They would have appreciated it greatly. It would have also delivered a clear message of disapproval to fascist forces, and the media would have been persuaded to stop demonizing Muslims.

The NHRC has sent a reminder to the provincial government in Delhi and the police demanding their report of the Delhi encounter. The Congress party took the stand that no judicial or CBI inquiry was needed on the controversial encounter of Batla House in Delhi because an inquiry would “demoralize” the police force who had lost one of its sharpshooters. In contrast, Maharashtra’s Chief Minister Deshmukh has ordered a high-level inquiry against the police constable who shot dead one Bihari boy in Mumbai. Two different yardsticks for two different communities? However, Muslims should not be disheartened by the present situation. In India, we have a majority of secular citizens and various human rights bodies and NGOs that support Muslims against injustice.



Rashmi Wajid, Jeddah published 5 November 2008


--------------------------------------------------------------------------------

suvanappiriyan said...

நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது?

- முகம்மது அன்சாரி, தஞ்சை.

இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''.

அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார்.

"ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''.

இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே?

இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.

arasu.

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/pg19.php