Followers

Saturday, February 07, 2009

ஆரம்பிச்சுட்டாங்கய்யா!- ராமர் கோவிலாம்...




நேற்று நாக்பூரில் பாஜக வின் இரண்டாம் நாள் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் 'ராமர் கோவிலை குறிப்பிட்ட இடத்தில் கட்டியே தீருவோம்' என்று பழைய அஸ்திரத்தை திரும்பவும் கையில் எடுத்திருக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு நாள் குறிக்கும் செய்தி அரசல்புரசலாக வர ஆரம்பித்ததும் ராஜ்நாத்சிங்கிற்கு ராமர் பாசம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்கிறது. ஆறு வருடம் ஆட்சிக் கட்டிலில் இருந்த போது ராமர் கோவிலைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. ஏனெனில் அப்போது ராமர் பாசத்தை விட பதவி சுகம் பெரிதாகத் தெரிந்தது.

பலவீனப் பட்டிருக்கும் இன்றைய நிலையில் இந்துக்களின் ஓட்டை மொத்தமாக அள்ள இன்றிலிருந்தே காயை கச்சிதமாக நகர்த்த ஆரம்பித்திருக்கிறது பாஜக. இதனால் எத்தனை தலைகள் உருண்டாலும் பரவாயில்லை, எத்தனை தாலிகள் அறுந்தாலும் பரவாயில்லை. தாங்கள் ஆட்சியில் அமர வேண்டும். ஆஹா.. என்ன ஒரு தேசபக்தி.

உண்மையான இந்து மத ஆர்வலர்களான விவேகானந்தர், காந்தி, நம்மூரில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்றோர்களால் இந்துமதத்தின் பெருமை பல நாடுகளுக்கும் பரவியது. தற்போது இந்துத்துவ வாதிகளாகக் காட்டப்படும் மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் போன்றோரால் இந்து மதத்தின் வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுக்க எத்தனையோ கோவில்கள் பாழடைந்து சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் கவனம் செலுத்தி பூஜைகள் நடத்தி இந்துக்களின் ஓட்டைப் பெற இது வரை ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை. மேடையில் இருந்த பலருக்கும் ராமர் பிரச்னை அலுப்பு தட்டவே பலரும் தூங்க ஆரம்பித்து விட்டனர். யஸ்வந்த் சின்ஹா ரம்மியமான ஒரு தூக்கம் போட்டதை பல சேனல்களும் ஒலிபரப்பின. தலைவனுக்கே இந்த நிலை என்றால் தொண்டர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

இனியும் ராமர் பெயரால் ஓட்டு பொறுக்குவதை விடுத்து நாடு முன்னேற ஒரு பொறுப்புள்ள கட்சியாக பாஜக செயல்பட வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

அதற்கெல்லாம் வழியே இல்லை என்கிறீர்களா,,,,,, பார்ப்போம் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை கூத்துகள் அரங்கேறுகின்றன என்பதை........

1 comment:

suvanappiriyan said...

நாக்பூர் : உள்நாட்டு சக்திகளின் ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதல் நடந்திருக்காது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். நாக்பூரில் நடைபெற்று வரும் பா.ஜ., செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஜராத் முதல்வர் மோடி கூறியதாவது : மும்பை தாக்குதலில் உள்நாட்டு சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. உள்நாட்டு சக்திகளின் ஆதரவில்லாமல் மும்பை தாக்குதல் நடந்திருக்காது; நாட்டில் நிலவி வரும் பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தற்போதைய அரசின் பொளாதார, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை போன்ற அனைத்து கொள்கைகளிலும் தற்போதைய அரசு படுதோல்வி அடைந்துள்ளது; மும்பை தாக்குதல், பாதுகாப்புத்துறையில் மத்திய அரசின் தோல்வியையே காட்டுகிறது. மன்மோகன் சிங் ஒரு கண்ணுக்குத் தெரியாத பிரதமர் ஆவார்; கடந்த 5 வருடங்களில் அவர் ஒரு ஆக்கப்பூவ சக்தியாக செயல்படவில்லை; இந்தியாவின் அடுத்த பிரதமரர்அத்வானி தான்; பா.ஜ.,வின் சக்தி வாய்ந்த தலைவரும் அவரே ஆவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அரசு மீது நரேந்திர மோடி கூறியுள்ள சரமாரியான குற்றச்சாட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-Dinamalar

Karuna nithi,

Learn from Modi, How to become a good CM ?

by b rama,India
Posted on பிப்ரவரி 08,2009,15:02 IST

Without local support Mumbai attack would not took place and therefore immediately after attack took place, Modi visited Mumbai and oversee whether the attackers have revenged Karekeri, who was the Investigation officer of Malegan where the Hindu extremist involved.

by A Hasan,India

Dinamalar