Followers

Monday, February 23, 2009

ஆஸ்கார் அவார்டும் சில எதிர்பார்ப்புகளும்!



பலரும் எதிர்பார்த்தபடி 'ஸ்லம்டாக் மில்லினர்' மற்றும் 'பிங்கி' ஆகிய இரு இந்திய படங்களுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்து விட்டது. இந்தியர்கள் என்ற வகையில் அனைவரும் பெருமைப்படக் கூடிய நிகழ்வு இந்த வருட ஆஸ்கார் தெரிவு.

ஏ.ஆர்.ரஹ்மான்: திறமை இருந்தால் அங்கீகாரம் தானாக தேடி வரும் என்பதற்கு நல்ல உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். விருது வாங்கும் போது தமிழை மறக்காமல் தமிழிலேயே 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். தாய் மொழியின் மேல் அவருக்குள்ள பிடிப்பை நினைத்து நெகிழ்ந்தேன்.

இந்தி பேசும் மாநிலங்களில் பல இந்திக்காரர்கள் ரஹ்மானின் ஆள் உயர கட்அவுட்களை வைத்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழன் என்ற முறையில் நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம் இது.

ரசூல் குட்டி: சவுண்ட் மிக்ஸிங்கில் சிறப்பாக பணியாற்றிய மற்றொரு இந்தியர் ரசூல் குட்டிக்கும் ஆஸ்கார் அவார்ட் கிடைத்துள்ளது. மனிதர் விருதை வாங்கும் போது உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஆனந்தத்தில் திளைக்கிறார். இவரைப்பற்றி அதிகம் நானும் படித்ததில்லை. பூர்வீகம் கேரளா என்று நினைக்கிறேன். மேலதிக விபரம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

இந்த விருதுகளால் இந்தியர்கள் என்ற முறையில் நாம் பெருமைபட்டுக் கொள்ளும் இதே நேரம் இந்த படம் உருவான மும்பை தாராவி சேரிகளின் வாழ்க்கை முறைகளை நினைத்தால்தான் மனம் கனக்கிறது. நம் தமிழ் நாட்டிலும் பல சேரிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் ஏதும் இன்றி நாட்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தைப் பார்த்தாவது நமது அரசியல்வாதிகள் சேரி மக்களின் வாழ்க்ககையை முன்னேற்ற திட்டங்கள் வகுக்க வேண்டும். இங்கு வாழும் அந்த சிறுவர்களின் வாழ்க்கைத் தரம் இனியாவது உயர்ந்தால் அதுவே இப்படத்துக்கு உண்மையான அவார்டாக இருக்கும்.

3 comments:

suvanappiriyan said...

இந்தியாவுக்கு பெருமை: கிட்டத்தட்ட, 75 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், சர்வதேச அளவில் இதுவரை, 735 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இதற்கு முன் 1983ம் ஆண்டு, ரிச்சர்டு ஆட்டென்பரோவின், "காந்தி' படத்தில், காஸ்ட்யூம் டிசைனுக்காக பானு அத்தையாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பிரபல சினிமா இயக்குனர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.அதற்குப் பின், இந்தியாவைச் சேர்ந்த சினிமா கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது என்பது ஒரு கனவாகவே நீடித்து வந்தது.இந்நிலையில், ரஹ்மானுக்கு ஒரே நேரத்தில் கிடைத்த இரண்டு ஆஸ்கர் விருதுகள், கேரளாவைச் சேர்ந்த பூக்குட்டிக்குக் கிடைத்த இன்னொரு விருது ஆகியவை இந்தியாவையே பெருமிதப்படுத்தி உள்ளது

இது மட்டுமின்றி, மேலண்ணம் பிளவு பட்ட சிறுமியின் வாழ்க்கைப் போராட்டம் குறித்து இந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் தயாரிக்கப்பட்ட, "ஸ்மைல் பிங்கி' என்ற 39 நிமிடம் ஓடக்கூடிய குறும்படமும், ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.இந்தப் படத்தை எம்மி விருது பெற்ற மேகன் மைலன் இயக்கியுள்ளார். உ.பி., மாநிலம் வாரணாசியிலும், சிர்சாபூரிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன."ஸ்லம்டாக் மில்லினர்' படத்துடன், பிராட் பிட் நடித்த, "தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்' என்ற ஹாலிவுட் படம் கடுமையாகப் போட்டியிட்டது. இந்தப் படம் 13 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன."டைட்டானிக்' படத்தின் மூலம், உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை கேட் வின்ஸ்லெட், "தி ரீடர்' என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்."மில்க்' என்ற படத்தில் ஓரினச் சேர்க்கையாளர் ஆதரவாளராக நடித்ததற்காக, சியான் பென், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர், "தி டார்க் நைட்' என்ற படத்தில் "ஜோக்கராக' நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதும், "விக்கி கிறிஸ்டினா பார்சிலோனா' படத்தில் நடித்த ஸ்பெயின் நாட்டு நடிகை பெனிலோப் குரூசுக்கு சிறந்து துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன.

"ஜாய் ஹோ' மற்றும், "ஓ சாயா' பாடல் பாடினார்: விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, "ஸ்லம்டாக் மில்லினர்' படக்குழுவினருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கிடைத்தது.விழாவில், "ஜாய் ஹோ' மற்றும், "ஓ சாயா' பாடலை, பாடகர் ஜான் லெஜண்டுடன் இணைந்து பாடி, அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார் ரஹ்மான்.இந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற ரஹ்மானுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்."வந்தே மாதரம்' பாடல் இசையில் நனைந்த இந்தியர் அனைவரும் இவரது வெற்றி கேட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

தமிழில் பேசினார் ரஹ்மான்: "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பின்னணி இசைக்கும், பாடலுக்கும் இரண்டு விருதுகளைப் பெற்ற ரஹ்மான், தன் திறமையால் இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்ட ரஹ்மான், "எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் கூறினார்.

ஆஸ்கர் விருது பெற்றுக் கொண்டு ரஹ்மான் பேசியதாவது:

இங்கு வருவதற்கு முன், எனக்கு பரபரப்பும் பதட்டமுமாக இருந்தது. இதற்கு முன், திருமணத்தின் போது இந்த உணர்வு ஏற்பட்டது. இந்தியில் ஒரு வாசகம் உள்ளது; "மேரே பாஸ் மா ஹை' என்று என்னிடம் எதுவும் இல்லாவிட்டாலும், இங்கு எனது தாய் இருக்கிறார். என் வாழ்நாள் முழுவதும் எனக்கு உதவிய எனது தாய்க்கு நன்றி தெரிவிக்கிறேன்.எனது வாழ்க்கையில் எப்போதுமே அன்பு, வெறுப்பு என்ற இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அதில், அன்பை தேர்ந்தெடுத்தேன். அதனால், நான் இப்போது இங்கு நிற்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே.

இவ்வாறு ரஹ்மான் பேசினார்.

மற்றவற்றை ஆங்கிலத்தில் பேசினாலும், "எல்லா புகழும் இறைவனுக்கே' என்பதை மட்டும் தமிழில் கூறினார் ரஹ்மான்.லாஸ் ஏஞ்சல்சில் நடந்த விழாவில், ரஹ்மானின் தாய் கரீமா பேகமும், பார்வையாளர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு, தனது மகன் விருது வாங்குவதை நேரில் பார்த்து பரவசப்பட்டார்.விருதை பெற்றுக் கொண்ட ரசுல் பூக்குட்டி, "இந்த விருதை எனது நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். இது வெறும் விருது அல்ல; ஒரு வரலாறு' என்று குறிப்பிட்டார்.

இந்திய மக்களின் அன்பு நெகிழ்கிறார் ரஹ்மான்: ""எதையும் எதிர்பார்த்து எந்த வேலையையும் செய்யக்கூடாது. ஸ்லம்டாக் மில்லியனர்' படம் இவ்வளவு தூரத்துக்கு போகும் என்று நான் எப்போதும் நினைத்ததே இல்லை,'' என்று ரஹ்மான் கூறினார்.ஆடியோ கான்பரன்சிங் மூலம் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து பேட்டியளித்தார் ரஹ்மான். அப்போது அவர் கூறியதாவது:நமக்கு என்று சில கட்டுப்பாடுகள் வகுத்துக் கொண்டால், குறிப்பிட்ட சிலரைத் தான் திருப்திபடுத்த நினைப்பீர்கள். அது மூளையில் ஏற்படும் கேளாறு. ஒருவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்ற வேண்டும். ஒரு படத்துக்கும், அது வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் உண்மையானவனாக பணியாற்ற வேண்டும்.

"ஜெய் ஹோ' பாடலை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் குல்சார். வார்த்தைகளுக்கு என்று சக்தி உண்டு. வாழ்க்கையில் செயல்பாடுகளையும், நோக்கத்தையும் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன. எப்போதுமே, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவதை எதிர்த்து, பாடலாசிரியர்களுடன் நான் தர்க்கம் செய்வது உண்டு."ஜெய் ஹோ' பாடல், நான் இதற்கு முன் பணியாற்றிய "யுவராஜ்' படத்தின் போது, எண்ணத்தில் உதித்தது. எனக்கு கிடைக்கும் பாராட்டுகள், என்னை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. இந்திய மக்களின் பிரார்த்தனைகள், அவர்களின் அன்பு, எனக்கு ஓட்டளித்த அமெரிக்கர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

சென்னையில் குடும்பத்தினர் கொண்டாட்டம்: தலைவர்கள் பாராட்டு: ""இசைத்துறைக்கு வந்தபோது ரஹ்மான் இந்த அளவுக்கு உயர்வார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. "ஜென்டில்மேன்' படத்திற்கு இசையமைத்த பிறகு, அவர் உலக சாதனை படைக்கும் அளவிற்கு உயர்வார் என்று நினைத்தேன். ஆஸ்கார் விருது பெற்றுவிட்டார்,'' என்று ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளருமான ரஹானா கூறினார்.ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்குவதை சென்னையில் உள்ளஅவரது சகோதரிகள் "டிவி'யில் பார்த்து மகிழ்ந்ததுடன், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உறவினர்கள், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவரது மூத்த சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹானா சென்னையில், நமது நிருபரிடம் கூறியதாவது:ரஹ்மானுக்கு இசையின் மீது தீவிர ஆர்வம். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

"சின்ன சின்ன ஆசை' : பிளஸ் 1 படிக்கும்போது இசையில் தீவிர ஆர்வம் காட்டியதால், பள்ளிக்குச் செல்லாமல் கீபோர்டு கற்றுக்கொண்டார்.அவருடைய நினைப்பெல்லாம் இசை மீதே இருந்ததால், எந்நேரமும் இசை பற்றிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். மணிரத்னத்தின் "ரோஜா' படத்தில் "சின்ன சின்ன ஆசை' பாடல் அதிரடியாக ரசிகர்களை இவரின் பக்கம் ஈர்த்தது;இசைத்துறைக்கு வந்தபோது அவர் எந்த இடத்திற்கு உயர்வார் என்று என்னால் அப்போது கணிக்க முடியவில்லை. "ஜென்டில்மேன்' படத்திற்கு இசையமைத்த பிறகு, அவரது இசையின் அதிரடி வீச்சை பார்த்து பிரமித்துப் போனேன்.ரஹ்மான், இசையில் உலக சாதனை படைக்கும் அளவுக்கு உயர்வார் என்று நினைத்தேன். "ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில்வரும் "ஜெய் ஹோ' பாடலும் என்னை ரொம்ப ஈர்த்தது. படத்திற்கு கோல்டன் குளோப் விருது, பாப்டா விருதுகள் கிடைத்தபோதே, நிச்சயம் இந்தப் படத்திற்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.ஆஸ்கார் விருது வாங்கியே ஆவேன் என்று இந்தியத் திரையுலகில் பலர் பேசிக்கொண்டிருக்க, ரஹ்மான் அமைதியாக, முந்திக்கொண்டு சாதனை படைத்துள்ளார். சிறந்த பின்னணி இசைக்காகவும், பாடல் இசைக்காகவும் இரண்டு விருதுகள் கிடைத்திருப்பது மிகப் பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. உலகின் உயர்ந்த இசைமைப்பாளர்கள் வரிசையில் அவரது பெயரும் நிச்சயம் இடம்பெறும்.இவ்வாறு ரஹானா கூறினார்.மற்றொரு சகோதரி பாத்திமா கூறும்போது, ""அண்ணா இசை மீது வைத்துள்ள பக்தியே அவரை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. அவர் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும்போது அந்த பாடல் எப்போது வெளிவரும் என்று காத்திருந்து கேட்டு ரசிப்பேன். இசைத் துறையில் வேகமாக முன்னேறி ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம்,'' என்றார்.

தமிழக முதல்வர் கருணாநிதி: இசை என்றாலே தமிழில் புகழ் என்று தான் பொருள். அந்த பொருளுக்கேற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி, இன்று சிகரத்திற்கே சென்று, சிரித்த முகத்துடன் நம்முடைய வாழ்த்துகளைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது. இது நம் வீட்டுப் பிள்ளைக்கு கிடைத்த மிகப் பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை.ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா:இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறீர்கள். அதன் மூலம் தமிழர்களையும், இந்தியர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறீர்கள். மிகுந்த மிகழ்ச்சியடைந்திருக்கும் உங்களது அம்மா, மனைவி மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் நானும் மகிழ்ச்சியில் இணைகிறேன். உங்களது நல்ல பணியை தொடருங்கள்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தமிழுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை உலகே ஆவலாக கேட்க, அவர் தமிழில் பேசினார். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் வாய்ப்பு கிடைத்தால், அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதன் மூலம், உலகத்தின் உச்சாணிக் கிளைக்கு செல்வர் என்பதை நிருபித்துள்ளார்.

கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பா.ஜ., எம்.பி., திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் வரதராஜன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சட்டசபையில்: இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, சட்டசபையில் நேற்று பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.கேள்வி நேரம் முடிந்ததும், பாராட்டுச் செய்தியை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாக மேஜையைத் தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: | More Picture |
மின்னஞ்சல் | |


வாசகர் கருத்து உங்கள் கருத்துக்களை வெளியிட

Many Congratulations to our Indian gold A.R.RAHMAN.
A.R. Rocks......... We should be proud to be an Indian and a Tamilan.

'Ella Pugalum Oruvanukkae'
by P Shivesh,India
Posted on பிப்ரவரி 23,2009,15:39 IST
எங்கள்த் தமிழன் ஏ∙ஆர்∙ரகுமான் என்றோ தகுதிப் பெற்றுவிட்டார் ஆஸ்காரைப் பெறுவதற்கு. ஆனால் ஆஸ்கார் இன்று தான் தகுதிப் பெற்றது எங்கள்த் தமிழன் ஏ∙ஆர்∙ரகுமானின் கையைத் தொட.
வாழ்த்துக்௧ள்.
இரா∙நாராயணன், புதுச்சேரி
by R Narayanan,India
Posted on பிப்ரவரி 23,2009,15:31 IST
எங்கள்த் தமிழன் ஏ∙ஆர்∙ரகுமான் என்றோ தகுதிப் பெற்றுவிட்டார் ஆஸ்காரைப் பெறுவதற்கு. ஆனால் ஆஸ்கார் இன்று தான் தகுதிப் பெற்றது எங்கள்த் தமிழன் ஏ∙ஆர்∙ரகுமானின் கையைத் தொட.
வாழ்த்துக்௧ள்.
இரா∙நாராயணன், புதுச்சேரி
by R Narayanan,India
Posted on பிப்ரவரி 23,2009,15:28 IST
ஆஸ்கர் விருதுகளால் இந்தியாவின் புகழை உலகுக்கு உணர்த்திய தமிழா... வான் புகழில் மிதக்கும் உனக்கு... இந்த இந்தியனின் மனமார்ந்த வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்...
by R Ramkumar,India
Posted on பிப்ரவரி 23,2009,15:26 IST
Congratulations Rahman. We wish you to get this Award Every Year.

Long Live with Love Senthil
by A Senthil ,Qatar
Posted on பிப்ரவரி 23,2009,15:03 IST

I am very proud to be A.R.Rahuman as Indian as well as tamilan. May God Blessings to be bring all awards
by suren surendiran,India
Posted on பிப்ரவரி 23,2009,14:57 IST

எல்லா புகழும் இறைவன் ஒருவனுகே ......
ஆஸ்கர் நாயகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள் ...
Ramesh.S
blk 502. singapore
by S Ramesh,India
Posted on பிப்ரவரி 23,2009,14:57 IST

வாழ்க தமிழ்
வளாக ரகுமான்
உன்னை
நானக நினைத்த தமிழன்!
by kanagurajesh
by k Rajesh,India
Posted on பிப்ரவரி 23,2009,14:52 IST

Congratulation Dear Mr.Rahman, we are very
proud of you as on indian.
by t shahulhameed,India
Posted on பிப்ரவரி 23,2009,14:01 IST

AR Rehmam, Pookutty, and the rest of Slumdog Millionaire Crew - Congratulations! May God Bless you all. Thanks for proving Indians can reach anywhere and proud to be a Indian and then a Tamilian.
by Mr. Mohamed Sherif,India
Posted on பிப்ரவரி 23,2009,13:58 IST

தமிழுக்கு அமுதென்று பெயர்
அவ்வமுதிற்கு பெருமை சேர்த்த எங்களின் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,
கடல் கடந்து வாழ்ந்தாலும்,
மெய்சிலிர்க்க வைத்த அந்த கனநேரம்
மறக்க முடியவில்லை.
அவர் கையில் ஏந்திய விருதை, ஏனோ தமிழ்த்தாய் பெற்றதைப் போன்ற உணர்வு, உண்மையில் மெய்சிலிர்த்தது. தமிழுக்குப் பெருமை சேர்த்த எங்களின் ரஹ்மானுக்கு கோடான கோடி நன்றி. இசையில் ஓர் உலக சாதனை புரிய எங்களது வாழ்த்துக்கள்

சத்யா சுந்தர் மற்றும் நண்பர்கள்
சிங்கப்புர்
by s sathiah sundar,India
Posted on பிப்ரவரி 23,2009,13:53 IST

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!!
Congratulation to AR Rahman for his excellent efforts in bagging the topmost awards. I'm very happy as you guys are. Great News!! I'm sure ARR will continue to grow in his career. He is a big asset for our countries pride and for our people. Keep Going!!
by T Nazar,Tunisia
Posted on பிப்ரவரி 23,2009,13:47 IST

no words to express you.......you made our nation proud..........keep rocking..........
by V RENGA PRASAD,India
Posted on பிப்ரவரி 23,2009,13:47 IST

Wish you have more sucess & Good health in life. I like your piliteness, that makes you to reach this height

Hope you can bring out Tamil Isai to this world too..
by C Lingam,Singapore
Posted on பிப்ரவரி 23,2009,13:45 IST

ஏ.ஆ.ர். ரஹ்மான். - சாதனை நாயகன் நீ! உலகத்தமிழர்களின் அங்கீகாரம் நீ!! உண்மையில் உன்னை பெற்றதற்கு உன் தாய் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும்!, இந்தியாவும்! நன்றியை வரலாற்றில் பதிவு செய்யும்!
உனக்கு நன்றிகள்!
உன் சாதனைக்கு வாழ்த்துக்கள்!!.
by S Muthamilselvan,India
Posted on பிப்ரவரி 23,2009,13:42 IST

Hard work never fails to reach top, example Mr. A.R. Rehman. His efforts & hardwork put him in great position. I wish him for all great success.
by mee kannan,India
Posted on பிப்ரவரி 23,2009,13:39 IST

i love rahman
by r ramesh,India
Posted on பிப்ரவரி 23,2009,13:34 IST

Hai my dream Music king man of Tamizhan A.R Rahman u are a one of the god gift in india . Many many congragulation for win to Ocsar Award. all tamizhan congragulate to you...
by R vinoth,India
Posted on பிப்ரவரி 23,2009,13:33 IST

Congratulations Rehmanji,You have long deserved this honour,now the time has come to recognise indian music as you always wished.We wish you to reach much more heights in the world of music,Long live and god be with you.
by Dhaya Babu,China
Posted on பிப்ரவரி 23,2009,13:31 IST

Hard Work & God grace have taken A.R.Rahman to this noble position.His matured calmness will fetch him a lot more
by vn Doha Naga,Qatar
Posted on பிப்ரவரி 23,2009,13:29 IST

Dear A.R.RAHMAN. MY BEST WISHES FOR YOU. MAY GOD GIVE ALL SUCCESS TO YOU. EALLA PUGALUM ORUVANUKAE...
by SEKAR SURESH,India
Posted on பிப்ரவரி 23,2009,13:19 IST

congratulations a r r sir.
we must be proud about u.
by l mythili,India
Posted on பிப்ரவரி 23,2009,13:19 IST

simple man

hard work

Regards
by k lakshmi,India
Posted on பிப்ரவரி 23,2009,13:17 IST

Congrats Mr.A R Rahman,we are very proud because you are the tamilan and also we.
by G PRABHU,India
Posted on பிப்ரவரி 23,2009,13:16 IST

Hi A.R.Rahman.....You did it for us - we all are proud of you. Please bring more & more credit to our nation.
by s saravanan,India
Posted on பிப்ரவரி 23,2009,13:16 IST

Congrats Mr.A R Rahman,we are very proud because you are the tamilan and also we.
by G PRABHU,India
Posted on பிப்ரவரி 23,2009,13:16 IST

Congrats to A.R.Rahman,
we are very proud of think about u.
Today is greatest day in our Indian History.
Especially for Tamil people.
by maha lingam,India
Posted on பிப்ரவரி 23,2009,13:11 IST

Its ur Sinciere work & grace of god also, continue it, thanks for ur teams gros bisous
by souri SURYA,France
Posted on பிப்ரவரி 23,2009,13:09 IST

jai ho my Mr A.R.Rahman
by N azeez ur rahiman,India
Posted on பிப்ரவரி 23,2009,13:09 IST
We Wish You Heartly Congratulations and We are pround of you as an INDIAN.
by t shivaraj,India
Posted on பிப்ரவரி 23,2009,13:07 IST

Congra for A.R.RAHMAN.I'm proud of u.
by mike michael,India
Posted on பிப்ரவரி 23,2009,13:06 IST

Dear Mr. Rahman, We all are simply proud as an Indian and in specially as a Tamilian today. The reason being your mother gave such a hall of fame son's birth to India/Tamilnadu. The great thing in all you gave a speech in Tamil 'Ella Puhazhum Irraivanukke' and praised your mother. I don't have much age to bless but still you live hundred more years to make pride of India/Tamilnadu.
by R Gopaldoss,India
Posted on பிப்ரவரி 23,2009,13:05 IST

வாழ்த்துகள் ரஹ்மான், உலகின் எல்லா புகழும் உங்கள் முன் நிற்கும் பொழுது தாங்கள் கூறிய உண்மை வார்த்தை 'எல்லா புகழும் இறைவனுக்கே', நாங்களும் கூறுகிறோம் 'எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே'.
by Mr. Burhanudeen,India
Posted on பிப்ரவரி 23,2009,13:04 IST

Congradulation Dear Brother Mr.Janab A.R.R. Its very much pleasure appricate to you. We are all Proud of your achive to our nation.
THANKS A LOT
by O.S.M Shaikh Miyakkhan,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,13:04 IST

Dear Mr.Rahman, We are very proud of you. Particularly the 1st Indian and Tamilian getting Oscar Award. ELLA PUGAZHUM IRAIVANUKKE. God will always bless you.
by P Balasubramanyan,India
Posted on பிப்ரவரி 23,2009,13:02 IST

A very very proud moment for Indians, particularly Tamilians,as we watched our very own A.R.Rahman win the oscars, perform on-stage and speak in Tamil 'Ellam Iraiyavan Seyal'.

What a day to remember and relish.

Congratulations to the entire cast and crew of SM.

Very inspiring for the younger generation indeed.
by J Jayashree D,United States
Posted on பிப்ரவரி 23,2009,13:00 IST

Congrats to A.R.Rahman,
we are very proud of think about u.
Today is greatest day in our Indian History.
Especially for Tamil people.
by G SathisKumar,India
Posted on பிப்ரவரி 23,2009,12:59 IST
congralutations Mr.A.R.Rahman Sir......... excellant job... Proud of Indians.
by l Dhana,India
Posted on பிப்ரவரி 23,2009,12:59 IST
a.r rahman = he is indian kohinoor
by s karunakaran,India
Posted on பிப்ரவரி 23,2009,12:58 IST
Its a very grate happy time to all Indians around the world. I wish you very happy congratulations to our Mr.A.R.Rahman. and also I pray for him to get many more Awards in his life. Good luck Sir.
by B Sarangaraja,Japan
Posted on பிப்ரவரி 23,2009,12:55 IST
Congratulation !!!! Mr. RAHMAN , Thank God
by H. jamani,Singapore
Posted on பிப்ரவரி 23,2009,12:55 IST
Best Wishes to Slumdog Millionaire Team.

MR.A.R Keep up your Good Work.
by G Mathan,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,12:52 IST
Isai Puyal A.R. Rahman, Congratulation for Oscar, We are very proud to be an Indian.

Ella Pugalum Iravanukke
We Love your simplicity and your valuable music knowledge.

Best of Luck.
by P Rajmohan,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,12:52 IST
Congrats A.R Rahman..
by P kanagalakshmi,India
Posted on பிப்ரவரி 23,2009,12:51 IST
god bles you i am very happy my brother

mohamead arif bahrain
by moham mohamed arif,Bahrain
Posted on பிப்ரவரி 23,2009,12:50 IST
Congragulations Mr A.R.Rahman and Poonkutty and slamtak film team work
by S Yusoof Malim,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,12:50 IST
Every Indians proud of you Mr.Rahman, I wish to Pray every success in future. god bless u. Thanks A.Kennedy, Salem.
by A Kennedy,India
Posted on பிப்ரவரி 23,2009,12:48 IST
We are very much glad about A R Rahman Achievement..

Be a indian..Jaihind...
by P Suresh,India
Posted on பிப்ரவரி 23,2009,12:18 IST
dear Mr.Rahman:
You have taken all Indians to the Moment of Pride through your this Great Achievement. I pray God to give you long healthy life and many more sucesses. My sincer request to you is that please save Our Tamil Film Music through your melodies becuase the Music in Tamil Films are rusting,corroding day by day. please save this!
by R Neelamegam,India
Posted on பிப்ரவரி 23,2009,12:05 IST
Congratulations to the terrific music director Mr.AR Rahman. In 1992 hole indian cinema to turn in tamilnadu cinema. Now world cinema turns to Indian Cinema.
by S Thahir Ali,India
Posted on பிப்ரவரி 23,2009,11:58 IST

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா ''''''''' பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு ! பேசும் வார்த்தை எல்லோர்க்கும் புரியும் ஆனால் மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் . எல்லா புகழும் இறைவனுக்கே

இன்னும் உன் புகழ் இவ்வுலகம் பார்கட்டும் உங்கள் ரசிகன்
கனி ராஜா smartkani2000@yahoo.com
by kani kani raja,Malaysia
Posted on பிப்ரவரி 23,2009,11:58 IST

Congratulations to A.R. RAHAMAN you deserved it also congratulations to the whole team of SLUM DOG MILLIONAIRE WELL DONE
by K NANDA,India
Posted on பிப்ரவரி 23,2009,11:49 IST

GOD IS GREAT...
CONGRATULATION MR.A.R.RAHMAN,
YOU ARE MUSIC LEGEND.....
ALL ARE KNOWS...... SO YOU GOT TWO....
NOW TWO....
IN FUTURE.......... MORE...........

ONCE AGAIN, WE (INDIAN) THANKS TO GOD...


by R SIDDIQ,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:42 IST

It's great honor for tamilnadu and india. that's why you got 2 oscar? ;-) We enjoyed your humble sppech. plese do appreciate and think about people who with you all along and help them all the way and select good movies and score again and again....see you soon again for another nomination.. God bless you!!
by R Govi ,United States
Posted on பிப்ரவரி 23,2009,11:35 IST

Congraaats to The Great A.R. Rahman, This Winning Our Nation Victory,
by T VIGNESH,India
Posted on பிப்ரவரி 23,2009,11:33 IST
Congratulation Mr. Rahman. I wish you to get more and more awards in the future.
by N Nour Ibraguime,India
Posted on பிப்ரவரி 23,2009,11:32 IST
Congratulation

Mr A R Rahman

Yellampugalum
Iraivanuky

Regards

sadiq
by Z.M SADIQ BATCHA,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:32 IST

i am very glad wish to A.R.Rahuman.congress
by D kokils,India
Posted on பிப்ரவரி 23,2009,11:31 IST
Very proud of you A.R.R
He is the real role model for youth
once again he proved hardwork never fails
hats off to him
by k Navin,India
Posted on பிப்ரவரி 23,2009,11:30 IST

Congratulations A.R. GOD BLESS YOU
by N. Renuka,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:29 IST
i feel very proud to be that a.r.rahman be the indian and tamilian.i am very glad to wish a.r.i wish rahman to great that to thanks in tamil.
by S Rajeshkumar,India
Posted on பிப்ரவரி 23,2009,11:23 IST
hi RAHMAN congrass You are simply great INDIANS can do anything..CONGRASS...
by P Preetha,India
Posted on பிப்ரவரி 23,2009,11:22 IST

Congratulation to Mr.A.R.Rahman. All the credit goes to you only
by NJ Kumaran,India
Posted on பிப்ரவரி 23,2009,11:21 IST
தமிழா தமிழா நாளை நம் நாளே...
தமிழா தமிழா நாடும் நம் நாடே !!!
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா...
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா !!!

இனி A.Rரஹ்மானின் இசை உலகமெங்கும் இசைக்கட்டும்...
by NS Srinivasan,India
Posted on பிப்ரவரி 23,2009,11:21 IST

Excellent A.R.Rehman & entire Slumdog Millionaire crew, proud of being both Indian & American for these extra ordinary awards.
by nik idhay,United States
Posted on பிப்ரவரி 23,2009,11:20 IST

Hey Rahman, We love u, we are proud of u, Praise the Lord for such a grand sucess.
East or west India is the best Jai hind
by S Prenesh,India
Posted on பிப்ரவரி 23,2009,11:18 IST

Congratulation Mr. A.R ;)

Cheers!!!
by S Potrivel ,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:17 IST

very proud of you.congratulation for AR RAHMAN AND MR.RASOOL POOKUTTY
by m markmaheshrayan,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,11:17 IST

Dear Brother, my hearty congratulations to you and your team. Thanks to the Almighty who has blessed you with such a great honor.
by S Shaik Siraj Meeran,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:17 IST

Great Rahman... It is a milestone in indian Music history. Pride never affect you. you are the role model for futre Indians. Oh .. universe.. Listen.. Indian can achive anything...
by M SYED ABDAHEER,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:14 IST

hearty congratulations Mr. A. R. Rahman. you are simply great.
by s vetri,Taiwan
Posted on பிப்ரவரி 23,2009,11:14 IST

Great Indian, Nalla Thamilan. Proud be a Thamilan. Nandri to every one.
by A. Kumar,India
Posted on பிப்ரவரி 23,2009,11:13 IST

Congratz Rahman!!! Still more Tamil talents are to be recognized by the entire world!!!
by Fid Fidelis,United States
Posted on பிப்ரவரி 23,2009,11:13 IST

இசைக்கு எல்லையே இல்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இசைக்காக ரகுமானின் பாடல்களைக் கேட்ட மொழி தெரியாத பாக்கிஸ்தானிகளையும் ரோஜா பட பாடல் ஈர்த்தது (இல்லை மயங்க வைத்தது) என்றால் அதன் பிரதிபலிப்பு தான் இன்று இந்த விருது. இசை என்பதே ஒரு தனி உலகம் தான் அந்த தனி உலகத்துக்கு ஒரு உலக அங்கிகாரம். மனம் நிறைந்த வாழ்த்துகள்
by G Abdul Rahman,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,11:13 IST

Great Rahman... It is a milestone in indian Music history. Pride never affect you. you are the role model for futre Indians. Oh .. universe.. Listen.. Indian can achive anything...
by M SYED ABDAHEER,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,11:12 IST

நீ ஆறரை கோடி பேரில் ஒருத்தன் அல்ல ... நூறு கோடியில் ஒருத்தன் ... ஆங்கிலயேர் முன் தமிழில் நன்றி கூறிய உனக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
by AL Mariappan Dinesh,India
Posted on பிப்ரவரி 23,2009,11:12 IST
congrats to achieve the Oscar award&First tamilan.
by Naga Nagarajan@Muthu,India
Posted on பிப்ரவரி 23,2009,11:12 IST
Hearty Congrats to u Mr ARR...God bless u and proud to be an Indian bcas of u....
by P Chithra,Australia
Posted on பிப்ரவரி 23,2009,11:10 IST
best news papper in india i
by j sundara rajan,India
Posted on பிப்ரவரி 23,2009,11:08 IST
You deserved it. Congratulation and we are proud of you.

Regards
Athi
by K Athinarayanan,Singapore
Posted on பிப்ரவரி 23,2009,11:08 IST
Congratulations, especially for using tamil words in that stage !!!
by v christopher,Yemen
Posted on பிப்ரவரி 23,2009,11:06 IST
HI MASTRO,

WISH YOU HEARTY CONGRATULATION,

WE ARE PROUD OF YOU AS AN INDIAN
by SA Othman,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,11:06 IST
All Praise go to the almighty God, Our Heartfull wishes to your dear brother A.R.Rahman and the whole team of Slumdog Millionaire. John
by J John,India
Posted on பிப்ரவரி 23,2009,11:01 IST
HEARTLY CONGRATS TO MR.A.R.RAHMAN.
HE IS REALLY MOST GENIUS IN MUSIC WORLD.
by s Faruk,India
Posted on பிப்ரவரி 23,2009,10:59 IST

We feel proud of you,
You reached max level of the music
Lenin
by s Lenin,China
Posted on பிப்ரவரி 23,2009,10:59 IST
Hats off to AR Rahman for his awesome record ... ur simply the superb ... wishing u more & more sucess in the upcoming years...
by S Ahamed Shinto,India
Posted on பிப்ரவரி 23,2009,10:59 IST

Yellam pugalum iraivanukay

Congress.. ARR
by mr Sankar TJR,India
Posted on பிப்ரவரி 23,2009,10:58 IST
தமிழ் இசை விண்ணை பிளக்கும் உலக மக்களை ரசிக்க வைக்கும் என நிருபித்த இசை புயல் எ.ஆர். ரெஹ்மான் உண்மையான உலக நாயகன். தங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள். விநாயகமூர்த்தி
by C Vinayagamoorthi,India
Posted on பிப்ரவரி 23,2009,10:57 IST
Congrats to A.R. Rahman and entire team of SLUMDOG MILLIONAIRE to achieve this unforgettable moment.
by Raa sreeka,India
Posted on பிப்ரவரி 23,2009,10:56 IST
congratulation to A R Rehman for achivement of great OSSCAR AWARD.
by s sivakumar,India
Posted on பிப்ரவரி 23,2009,10:56 IST

your great mr.a r
god bless you
by mr jalal,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,10:56 IST

Proud to be an Indian. Well Done. You have made the world wind to turn into India side.
by DK Singai Suresh,Singapore
Posted on பிப்ரவரி 23,2009,10:56 IST

The Boss -- AR Rahman
by D GopalaKrishnan,India
Posted on பிப்ரவரி 23,2009,10:55 IST

Great, We feel very proud..
Congrats Mr.ARR..
Jaihind..
by A Sasi,Malaysia
Posted on பிப்ரவரி 23,2009,10:49 IST

Great, We feel very proud.. Congrats Mr.ARR..
Jaihind..
by A Sasi,Malaysia
Posted on பிப்ரவரி 23,2009,10:48 IST

GOD BLESS
SIMPLE MAN
HARD WORK
NON-EGO PERSON
GOD FEAR. GOOD PERSONALITY
by p raj,India
Posted on பிப்ரவரி 23,2009,10:48 IST
தாய் மண்ணே வணக்கம்......... தமிழ் சிங்கம் சிங்கள் ஆக வந்து டபுள் ஆஸ்கார் விருதினை பெற்றுள்ளது...... ஜெய் ஹிந்த்...........
by M Anandhajothi Tirukoilur,United Arab Emirates
Posted on பிப்ரவரி 23,2009,10:48 IST

CONGRATULATION MR AR RAHMAN AND MR POONKUTTY.
by m abdulwahab,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,10:48 IST

ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள். அவர் இசைக்கு உலக அளவிலான அங்கீகாரம் இது. தொடரட்டும் வெற்றிப்பயணம்.
by s venkatesh,India
Posted on பிப்ரவரி 23,2009,10:47 IST
CONGRATS... TO GREAT LEGEND OF MUSIC.. AR RAHMAN... WE WISH U MANY MORE AWARDS LIKE THIS IN FUTURE..
by s GANESH,United States
Posted on பிப்ரவரி 23,2009,10:45 IST
Mr.Kamalhasan....pls don't call yourself as 'Ulaga Nayagan' here after...there is someone real ulaga nayagan now AR RAHMAN.....Be Real Mr. Kamal
by P Babu,United States
Posted on பிப்ரவரி 23,2009,10:45 IST

Congrats Mr. Rehman. ..Its a prestigious moment for all the Indians. You created history and made all tamilians proud.
by J.R. Gokul,India
Posted on பிப்ரவரி 23,2009,10:45 IST
yella pugalum unakke.....good job.
by c chowdhry,United States
Posted on பிப்ரவரி 23,2009,10:44 IST

A R Rahman sir........ you are great.
by M Murugeswaran,India
Posted on பிப்ரவரி 23,2009,10:41 IST
CONGRATULATIONS MR REHMAN LONG LIVE REHMAN
by G JAYANTHI,India
Posted on பிப்ரவரி 23,2009,10:40 IST
I am very happy and very proud in this moment.

Congrats to MR. AR and MR. Pookutty.
by P Saravanan,India
Posted on பிப்ரவரி 23,2009,10:38 IST
HATS OFF AR.RAHMAN SIR FOR YOUR OSCAR AWARD , WE SALUTE YOU .
by G Lakshmanan,India
Posted on பிப்ரவரி 23,2009,10:37 IST
We are proud of you Mr.Rehman ji.
by Aru Arumugam Ekambaram,India
Posted on பிப்ரவரி 23,2009,10:36 IST
A.R.RAHMAN IS A AMAZING PERSON,GOD GIVE MORE AWARDS IN HIS FUTURE.
by G. NAZER,Saudi Arabia
Posted on பிப்ரவரி 23,2009,10:33 IST

It's great honor for A.R.Rahman. All Indians are wishing him.
by N Akash Danush,India
Posted on பிப்ரவரி 23,2009,10:32 IST
congrats rehman. வாழ்த்துக்கள்.
by r suresh,United Kingdom
Posted on பிப்ரவரி 23,2009,10:31 IST

wow really amazing...thanks to god ....great job....slumdog and ar rehman rocking..... as a indian i feel really proud and happy hats of ar jii...and slum dog team Arunprasath.v
tamilnau.india
by vee arunprasath,India
Posted on பிப்ரவரி 23,2009,10:30 IST

A R Rahman is made histroy.... we are gifted for being with him... Dear A R R, I wish u all success.. Jai Hooooooooooooooo
by B Manikandan,India
Posted on பிப்ரவரி 23,2009,10:30 IST

ohh!! thanks god...

he has a god for music world!!!!!

tamil man win the world!!!!!
by v saba,Singapore
Posted on பிப்ரவரி 23,2009,10:30 IST
wow its a great pleasure,,, MR,Rahman you deserve dor this, we realy proud of you as a Indian as a Tamilian,,

my hearty CONGRATULATIONS

GOD BLESS YOU
by m nethaji,India
Posted on பிப்ரவரி 23,2009,10:30 IST
Rehmanji, you deserve it.

Ungal isai payanam, melum melum thodarnthu, innum pala virudhugal pera, anaithu makkalin sarbaga, vaazhthukkal.

GOD BLESS YOU..........
by N Murali,India
Posted on பிப்ரவரி 23,2009,10:30 IST
ohh!! thanks god...

he has a god for music world!!!!!

tamil man win the world!!!!!
by v saba,Singapore
Posted on பிப்ரவரி 23,2009,10:29 IST
உலக நாயகனே உன்னை கண்டங்கள் கண்டு வியக்கும் ! தமிழனுக்கு இனி ஆஸ்கர் தூரமில்லை !
by Guru murthy,India
Posted on பிப்ரவரி 23,2009,10:28 IST
Very Proud to have Oscar Award. Congratulation to Mr.A.R. Rehman, a member from Tamilnadu, India, It will be more joyable if the flim directed by any India Director in any Indian Language. Anyhow, we the indian deserve to have a caveted title. Jai Hind.
by TR Susindran,India
Posted on பிப்ரவரி 23,2009,10:27 IST

Rahmanji.... Not only tamilinas the whole is proud of your achievement.....

WE LOVE YOU SO MUCH.... JAI HIND
by MS Annadurai,India
Posted on பிப்ரவரி 23,2009,10:27 IST

Rahman ji! we love you!!! You deserved it .. very many oscars to be followed... keep the good work jiii!!! All time prayers for you!
by M Mahesh,India
Posted on பிப்ரவரி 23,2009,10:08 IST
it's more more great pleasure for indians and particulary Tamilian.

India is great indians are more great persons in the world, ex A R Rahman

Regards,

mani K
by K Mani,India
Posted on பிப்ரவரி 23,2009,10:05 IST
THIS IS CORRECT AND PROPER. ALL THE BEST
by KM MOHANASUNDARAM,India

-Dinamalar

ஆ.ஞானசேகரன் said...

சுவனப்பிரியன் என்ன சொல்லியுள்ளார்... படித்து சொல்லுங்களேன்..

suvanappiriyan said...

ஞானசேகரன்!

//சுவனப்பிரியன் என்ன சொல்லியுள்ளார்... படித்து சொல்லுங்களேன்..//

மெய்யாலுமா!

புரியலையா!

அடக்கடவுளே!