'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 04, 2009
அன்னை தெரஸாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!
“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”
“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”
“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”
மேலே நாம் படித்த வார்த்தைகள் அனைத்தும் அன்னை தெரஸா உதிர்த்த முத்துக்கள்.
மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இதை நான் இணையத்தில் படித்தபோது முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் நான் படிக்கும் காலத்திலிருந்தே அன்னை தெரஸாவைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தேன். பரலோகத்தில் இருக்கும் ஏசு இதற்காகவெல்லாம் தன்னை ரட்சிப்பார் என்ற நம்பிக்கையில்தான் தெரஸா தனது வாழ்நாளை பொதுப்பணிக்காக அர்ப்பணித்தார். காலம் செல்லச் செல்ல அவருக்கு உண்மை விளங்கியிருக்கிறது. எனினும் உலகம் முழுவதும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். இனி திரும்பி செல்ல வாய்ப்பில்லை என்பதால் மனதுக்குள் வைத்தே ஒரு மௌன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். முடிவில் தன்னையும் மீறி தனக்குள் உள்ள ஆற்றாமையை பல கடிதங்களாக எழுதி அதை ரகசியமாகவும் வைத்து பரலோகத்துக்கு போய் சேர்ந்து விட்டார் அந்த புண்ணியவதி. தற்போதுதான் அவை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். ஏசு தன்னை எக்காலத்திலும் வணங்கச் சொல்லி சொல்லவில்லை. தான் கடவுள் என்றும் சொல்லவில்லை. ஏசுவுக்கு பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக ஏசுவை கடவுளாக்குகிறார்கள். இந்த கருத்தே உலகம் முழுவதும் இன்றுவரை திணிக்கப்பட்டு வருகிறது. 'புதிய ஏற்பாடு' என்பது ஏசுவைப்பற்றி மத்தேயு மாற்கு யோவான் போன்றவர்கள் எழுதிய தொகுப்புகளே! இறைவனால் அருளப்பட்ட வேதமன்று. இப்படி மனிதர்களால் எழுதப்பட்டதை வேதவாக்கியமாக நம்பியதால்தான் தெரஸாவுக்கு முடிவில் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றி திரிந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்.' - (மத்தேயு 4:23)
'ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' - (மாற்கு 1:14)
'காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்' -(மாற்கு 1:15)
ஏசு சொன்னதுபோல் தேவனுடைய சுவிசேஷத்தை அன்னை தெரஸா பின்பற்றியிருந்தால் இத்தகைய ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். துரதிஷ்டவசமாக ஏசு பிரசிங்கித்த வேத வாக்கு மிஷினரிகளால் மறைக்கப்பட்டு விட்டது. ஏசுவுக்கு அருளிய அந்த வேத வாக்கு தற்போது நமக்கு கிடைக்குமானால் அது முற்றிலும் முஸ்லிம்களின் குர்ஆனையே ஒத்திருக்கும்.
என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் முகமது நபியின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்தையும் முடிந்தவரை வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்ச்சிப்பவன். இருந்தாலும் அவரை கடவுள் நிலைக்கு உயர்த்தமாட்டேன். அவரை இறைவனின் தூதராகவே பார்க்கிறேன். அன்னை தெரஸாவும் என்னைப்போல் ஏசுநாதரை ஒரு தூதராக பார்ததிருந்தால் இது போன்ற ஒரு விரக்தி ஏற்பட்டருக்காது. அவரின் வாழ்க்கையில் ஒரு வெறுமையும் தோன்றியிருக்காது.
இறைவனே மிக அறிந்தவன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்னை தெரசா அவர்களின் சீரிய தொண்டுகளுக்காக அவர் மிக மிக மதிப்பு வாய்ந்தவர்.
புனிதராகப் போகிறவருக்கே இந்த நிலைமைதானா?. இயேசுவை கடவுளாக்கினால் கடைசியில் தி.க. கொள்கையில்தான் முடியும் போலுள்ளது.
கிறித்தவ நண்பர்களே! நீங்கள் உண்மையை உணர்ந்து உண்மைக்கே மீளுங்கள்.
வாங்க சுல்தான்!
//பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த ‘அற்புதம்’ நிகழ்ந்தது.
“இயேசு என்முன் தோன்றினார். ‘நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?’ என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. ‘ஒரு உண்மையான விசுவாசி’ கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.’
இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன.//
-புதிய கலாசாரம்
இருக்காதா பின்னே! நம்மவர்களில் கூட தர்காவில் அடங்கியிருக்கும் பெரிய மகான் என் கனவில் வந்தார். இதை செய்ய சொன்னார். அது தருவதாக வாக்களித்தார் என்றெல்லாம் நம்பி உழைக்காமல் காலத்தை வீணாக்குவதைப் பார்க்கிறோம். முடிவில் அந்த மகான் எந்த அற்புதமும் செய்யாமல் போகும்போது யாருக்கும் சொல்லாமல் சம்பத்தப்பட்டவர்கள் இடத்தைக் காலி பண்ணுவதையும் பார்க்கிறோம். கனவு என்பது நமது எண்ணங்களின் மறு வடிவம் தான் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று விளங்கிக் கொண்டால் பல சிக்கல்களிலிருந்து நாம் விடுபடலாம். அது அன்னை தெரஸாவுக்கு சில காலம் கழித்தே தெரிந்திருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment