Followers

Friday, April 24, 2009

மரணத்தைத் தொட்ட இந்தியர்!



உத்தர பிரதேச மாநிலம் ஆஸம்காட் நகரிலிருந்து பிழைப்பு தேடி சவூதி வந்தவர்தான் அபு ரஃபி. வயது 25. வேலை நேரத்தில் சவூதி இளைஞனோடு அபு ரஃபிக்கு வாய்த்தகராறு ஏற்படுகிறது. கோபத்தில் அந்த சவூதி கத்தியை எடுத்து ரஃபியை நோக்கி குத்த வருகிறான். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ரஃபி சவுதியிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவனையே கொன்று விடுகிறார். நீதி விசாரணை நடைபெறுகிறது. 'இது திட்டமிட்ட கொலை' என்று முடிவாகி 'கொலைக்கு கொலை' என்ற இஸ்லாமிய சட்டத்தின் படி அபு ரஃபிக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த இடம் சவூதி அரேபியாவில் இருக்கும் அபஹா என்ற நகருக்கு பக்கத்தில் உள்ள கமீஸ்முஸாயத் என்ற சிற்றூராகும். இந்த சம்பத்தைக் கேள்விப்பட்ட பலரும் இது தற்காப்பு கொலைதான் என்பதை விளங்கிக் கொண்டு நமது இந்திய தூதரகத்தை அணுகியிருக்கிறார்கள். இந்திய தூதர் எம்.ஓ.எச்.ஃபாரூக்(அதாங்க....நம்ம பாண்டிச்சேரி .பாரூக் பாய்தான்) மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் உண்மை நிலையை சம்பத்தப்பட்டவர்களுக்கு விளக்க மூடப்பட்ட வழக்கு திரும்பவும் திறக்கப்படுகிறது. நீதிபதிகள் தீர ஆராய்ந்து 'இது தற்காப்பு கொலைதான்' என்ற முடிவுக்கு வந்து கடைசி நிமிடத்தில் மரண தண்டனையை ரத்து செய்து ரஃபியை விடுதலையாக்கியுள்ளார்கள். மரணத்தின் வாசலைத் தொட்டு விட்டு இன்று ஒரு புது மனிதனாக தனது குடும்பத்தை சந்திக்க உத்தர பிரதேசம் நோக்கி செல்கிறார் அபு ரஃபி.

'என்னால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இறைவன் எனக்கு அளித்த இந்த மறுவாழ்வை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். மக்கா சென்று புனித கடமைகளை நிறைவேற்றவும் எண்ணியுள்ளேன். என் விடுதலைக்காக அல்லும் பகலும் உழைத்த தூதரக அதிகாரிகள் குறிப்பாக தூதர் எம்.ஓ.எச்.ஃபரூக் போன்றோருக்கு நான் என்றும் கடமைபட்டுள்ளேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்'- என்கிறார் அபு ரஃபி

'இறைவன் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்க்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்.'
-குர்ஆன் 17:33

3 comments:

Unknown said...

அவர் உயிர் பிழைக்க பாடுபட்டு உண்மைக்காக உழைத்த சவூதிக்கான இந்தியத்தூதர் புதுச்சேரி பாருக் உள்பட அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சுல்தான்.

Unknown said...

"மரணத்தைத் தொட்ட இந்தியர்!"

Please refer this news from below mentioned link and post your site as exact translation then public will accept your news.

http://www.arabnews .com/?page= 1&section=0&article=121881&d=25&m=4&y=2009

Thank and regards,

Junaith.