Followers

Thursday, April 02, 2009

அக்ஷய் குமார் என்ற புது கோமாளி(கூத்தாடி)!


அக்ஷய் குமார் என்ற புது கோமாளி(கூத்தாடி)!

மும்பையில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். மனிதருக்கு உற்சாகம் அதிகரிக்கவே வேகமாக வந்து தனது மனைவின் கையால் தனது ஜீன்ஸ் பேண்டின் பட்டனை அவிழ்க்க சொல்கிறார். அவரின் மனைவி டிவிங்கில் கன்னாவும் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பொது மக்கள் முன்னிலையில் அவிழ்க்க அது தற்போது விவாதமாகி இருக்கிறது. இந்த கூத்தாடிகள் தங்களின் பெயர் செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தயாராகி விடுகிறார்கள்.

இந்த விவகாரத்தை போலீஸ் வரை சிலர் கொண்டு போக தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இந்த கூத்தாடிக்கு இது தவறு என்பது முன்பே தெரியாதா? தனது மனைவியாகவே இருந்தாலும் பொது மக்கள் முன்னிலையில் இப்படி ஒரு காரியம் செய்பவன் ஒரு கிறுக்கனாகத்தானே இருக்க முடியும்?. இந்த கூத்தாடிகளையும் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு இவர்கள் பின்னால் அலையும் இளைய சமுதாயத்தை திருத்துவது யார்? சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் 'ஏய் பேசிக்கிட்டிருக்கேன்ல' என்று ரசிகர்களை கேவலப்படுத்தியதையும் பார்த்தோம்.

நமது அரசியல்வாதிகளும் இந்த கூத்தாடிகளின் பின்னால் செல்வதுதான் மேலும் வேதனை. விஜயகாந்த் என்ற கூத்தாடிக்கு முதல்வராவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மரத்தை சுற்றி சுற்றி நடிகைகளை துரத்தியதை தவிர வேறு எந்த திறமையும் இல்லை. இன்று இவரும் முதல்வராகி விடலாம் என்று இவர் நினைக்கும் நிலையில்தான் தமிழக வாக்காளர்களின் எண்ண ஓட்மும் இருக்கிறது.

'ஜெய் ஹோ!'

6 comments:

FunScribbler said...

//நடிகர் விஜய் 'ஏய் பேசிக்கிட்டிருக்கேன்ல' என்று ரசிகர்களை கேவலப்படுத்தியதையும் பார்த்தோம்.//

அவர் கத்தியது தவறாக இருக்கலாம்! ஆனால், எந்த வகையில் ரசிகர்களை கேவலப்படுத்தினார் என்பது புரியவில்லை?:(

dondu(#11168674346665545885) said...

கூல் டௌன் நண்பரே. அக்‌ஷய்குமார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான்.

அதே சமயம் நடிகர் அரசியல்வாதியாக வரமுடியாது என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியுமா? அவர்களும் வருகிறார்கள். முதலில் பாப்புலாரிடி காரணமாக அவர்களுக்கு சாதகம் இருப்பது உண்மைதான். ஆனால் அதே சமயம் அவர்கள் திறமையில்லாது இருந்தால் அடையாளம் காணப்பட்டு ஓரம் கட்டப்படுகின்றனர். உதாரணம் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர்.

விஜயகாந்த் இப்போது சோதனை காலகட்டத்தில்தான் உள்ளார். இந்த தேர்தலும் 2011 தேர்தலும் அவரை அடையாளம் காண்பித்து, மக்கள் அவரை ஏற்று கொள்ளலாம் அல்லது ஒதுக்கலாம்.

இப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்காகவேதானே அடையாளம் காணப்படுகின்றனர்?

ஹாஜியாருக்கு எனது வணக்கங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ttpian said...

தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!

suvanappiriyan said...

டோண்டு சார்!

//கூல் டௌன் நண்பரே. அக்ஷய்குமார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான்.//

சௌக்கியமா?

நடிகர்கள் சினிமாவில் எதையாவது செய்து தொலைக்கட்டும். பொதுமக்கள் முன்னிலையில் தன் மனைவியுடன் இது போல் நடந்து கொண்டதுதான் என் கோபத்துக்கு காரணம்.

//உதாரணம் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர்.//

நாட்டுக்காக ஏதாவது தியாகம் செய்திருக்க வேண்டும். அல்லது மக்களுக்காகவாவது ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டிருக்க வேண்டும். பாடலாசிரியர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, டைரக்டர் போன்றோரின் உதவியால் பிரம்மிப்பாக்கப் படுபவரே நம் சினிமாக்களின் ஹீரோக்கள். இவர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமா என்பதுதான் என் ஆதங்கம். ஓட்டுப் போடும் மக்களைத்தான் இதில் குறை சொல்ல வேண்டும். நமது பக்கத்து மாநிலம் கேரளாவை ஒரு நல்ல முன்னுதாரணமாக இது விஷயத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

//ஹாஜியாருக்கு எனது வணக்கங்கள்.//

ஹாஜியார்(தாத்தா) நலமுடன் உள்ளார். பேரக்குழந்தைகளுடன், இறை வணக்கத்திலும் தனது கடைசி காலங்களை கடத்திக் கொண்டிருக்கிறார். தொலைபேசியில் நீங்கள் விசாரித்தாக சொன்னேன். தாத்தாவும் உங்களை விசாரித்ததாக சொல்லச் சொன்னார். 'எங்கே பிராமணன்' தொடரையும் படித்து வருகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

தமிழ் மாங்கனி!

//அவர் கத்தியது தவறாக இருக்கலாம்! ஆனால், எந்த வகையில் ரசிகர்களை கேவலப்படுத்தினார் என்பது புரியவில்லை?:(//

ரசிகன் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தில்தான் விஜய்யின் ஆடம்பர வாழ்க்கையே ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ரசிகனின் கூச்சலைக் கூட இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா! இதில் முதல் குற்றம் ரசிகர்களைத்தான் சொல்ல வேண்டும். கூத்தாடிகளை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அங்கு வைக்காதது ரசிகர்களின் தவறுதானே!

suvanappiriyan said...

டிடிபையன்!

//தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!//

சரியாகச் சொன்னீர்கள்.