'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, January 03, 2015
"குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!" - திருமூலர்
//"ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"
அரேபிய மாா்க்கம் தான் உண்மை என வாதிடுபவனை குரைக்கும் நாய் என்கிறாா் திருமூலா்.சுவனப்பிாியன் நாயா ?//
நான் நாயா? அல்லது திரு மூலர் திருமந்திரத்தின்படி யாரை நாய் என்கிறார் என்பதை சற்று விரிவாக பார்போம்.
திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று சிலரும்
பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும்
சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்
வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர்.
இந்த சமயங்களுக்குள் அடிதடி நிறையவே நடந்துள்ளது. அதிலும் சைவமும் வைணவமும் மிக அதிகமாக பூசலை ஏற்படுத்தி பல கொலைகளையும் நடத்தியுள்ளது. கமலஹாசனும் தனது 'தசாவதாரத்தில்' சிறிதாக இந்த நிகழ்வுகளை தொட்டிருப்பார். திருமூலர் வாழ்ந்த காலத்தில் இந்து ஆறு சமயங்களே மக்களின் பயன் பாட்டில் இருந்துள்ளன. எனவே தான் அதனை தனது பாட்டில் எடுத்தாள்கிறார் திருமூலர்.
பாடலின் முதல் இரண்டு வரிகளில் வீடுபேறு எனும் முக்தி நிலையை ஒரு பெருநகரமாகவும், ஆறு சமயங்களையும் அந்த நகரத்தைச் சென்றடையும் ஆறு வீதிகளாகவும் உருவகப் படுத்துகிறார் திருமூலர். பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கும். கிராமத்தின் உள்ளே செல்லும் அந்த வீதியில்தான் வெளியே வரவும் முடியும். ஆனால் பெரு நகரங்களைப் பொறுத்தவரையில் பல வீதிகள் பல இடங்களிலிருந்து அங்கே வந்து சேரும் நகரத்தின் அளவும் முக்கியத்துவமும் அதிகமாக அதிகமாக, அதில் வந்து சேரும் வீதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பது போல் கடவுளை அடைய பல சமயங்கள் நம்மிடையே உள்ளன. அதில் இரு பெரும் சமயங்களான சைவமும் வைணமும் நீ பெரிதா நான் பெரிதா என்று போட்டியிட்டு உயிர் பலி வரை சென்றதை தனது வாழ்நாளில் பார்க்கிறார் திரு மூலர். இந்த கொடுமையை கடவுளின் பெயரால் நிகழ்த்திய மாபாதகர்கள் அசையாத மலையைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றவர்கள் என்கிறார் திரு மூலர். குரைத்து குரைத்தே ஒரு பெரிய மலையை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் என்பதே இந்த நான்காவது வரியின் பொருளாகும்.
பல வழிகள் இருந்தாலும் சென்றடையும் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சைவ வைணவ கடவுள் கொள்கையாகட்டும், மனு ஸ்ருமிதியாகட்டும், நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாகட்டும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களாகட்டும் ஒவ்வொன்றும் தனித் தனி ஊருக்கு வழி காட்டுகின்றன. இதை நீங்களும் மறுக்க முடியாது.
இரு சமயங்களோடுதான் விட்டு தொலைத்தீர்களா? அந்த சமயத்திலும் சாதிகளை உண்டாக்கி அந்த சாதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளையும் உண்டாக்கி 'நீ சூத்திரன்: நீ ஷத்திரியன், நீ பஞ்சமன், நான் பிராமணன்' என்று மக்களை பிளவு படுத்தி கடவுளை வணங்கக் கூட தலித்களை அனுமதிக்காத மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்து குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர். கடவுளின் பெயரால் சமணத்தையும் பவுத்தத்தையும் இருந்த சுவடே தெரியாமல் தமிழகத்தில் அழித்து எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்களே அந்த மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள்' என்கிறார் திருமூலர்.
திரு மூலர் வாழ்ந்த காலத்தில் அராபியாவும் பல தெய்வ வழிபாட்டில்தான் இருந்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் நபிகள் நாயகம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு போதிக்கிறார். நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பே திரு மூலர் திரு மந்திரத்தை சொல்லி விட்டு சென்றுள்ளார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் திருமூலர் இஸ்லாமியர்களை சொல்லவில்லை. மனிதனை வர்ணாசிரமத்தால் நான்கு வர்ணங்களாக பிரித்து அதனை இன்று வரை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கித்தான் 'நாய்கள்' என்கிறார் திருமூலர். அன்பு ராஜ் என்று புனை பெயரை வைத்திருக்கும் நீங்கள் இந்துத்வாவை தூக்கிப் பிடிப்பதால் கண்டிப்பாக வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்குவீர்கள். இவ்வாறு கடவுளை பல கூறுகளாக பிரித்து மனிதர்களின் தொழிலை வைத்து ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் நல்கிக் கொண்டிருக்கும் அன்பு ராஜ் போன்றவர்களைப் பார்த்தே 'குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர்.
இனி இஸ்லாமிய கருத்தை எவ்வாறு திரு மூலர் தனது பாடலில் கொண்டு வருகிறார் என்பதையும் பார்போம்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே" (திருமந்திரம் - 2104)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பொருந்தாத விளக்கம்.வா்ணாச்சிரமத்தை நான் ஆதாிக்கவும் இல்லை.போற்றவும் இல்லை. ஏன் இப்படி உளறிக் கொட்டியிருக்கின்றீா்கள்.திருமந்திரப்பாடல் தெளிவாக உள்ளது. வீரசைவம் வீரவைணவம் என்று சமய சண்டையில் தங்களது பொழுதை கழித்த கழிசடைகளுக்கும் இது பொருந்தும். எண்ணாயிரம் சமணமா்கள் என்றால் 8000 போ்களை கழுவில் ஏற்றவில்லை. 8000 என்று அழைக்கப்பட்ட சிறு கூட்டத்தைச் சோ்ந்தவர்களே தாங்கள் தோற்று்ப்போனதால் தற்கொலை செய்து கொண்டாா்கள்.
னி இஸ்லாமிய கருத்தை எவ்வாறு திரு மூலர் தனது பாடலில் கொண்டு வருகிறார் என்பதையும் பார்போம்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே" (திருமந்திரம் - 2104)
இதை இசுலாமியக் கருத்து என்று சொல்லும் அளவிற்கு தாங்கள் ஒரு முட்டாளாக இருப்பது கண்டு வருத்தம் அடைந்தேன்.திருமூலா் ஒரு அரேபியன் அல்ல.மாடு மேய்ககும் யாதவா்-கோனாா். இந்து - இந்தியன் .சைவ உணவு உண்ணு வாழ்ந்தவா். குரானையோ அரேபியனையோ அறியாதவா். அரேபியாவையும் அறியாா். ஒன்றே குலம ஒருவனே தேவன் என்ற கருத்துக்கு ஏக போக உாிமை பெற்றவா் அரேபிய மத ஸ்தாபகா் அல்ல. அதற்குமுகம்மது பிறக்கும் முன்பே பல பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இக்கருத்து இந்துஸ்தானத்தில் உள்ளது.
திருமூலாின் அறிவின் முதிா்ச்சியில் இருந்து தோன்றிய கருத்து.
Post a Comment