என்னைக் கவர்ந்த திருமணங்கள்!
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் எனது அத்தை மகள்களுக்கு போன மாதம் திருமணம் நடைபெற்றது. மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பெஷர்வரைச் சேர்ந்த பாகிஸ்தானியர். இளைய பெண்ணுக்கு மணமகன் ஒரு எகிப்தியர். மலேசியா அனைத்து மக்களும் கலந்து வாழும் ஒரு பண்பட்ட நாடு என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுத்து நாட்டின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுகின்றனர் மலேசிய ஆட்சியாளர்கள்.
நமது நாட்டில் சொந்தத்திலும் ஒரே ஊரிலும் திருமணம் முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி நாடு விட்டு, இனம் விட்டு இஸ்லாம் மார்க்கம் ஒன்றினால் மட்டுமே இணைந்திருக்கும் இந்த ஜோடிகளை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.
என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பழமொழிக் கேற்ப வாழ முற்ப்பட்டிருக்கும் இந்த ஜோடிகளை நாமும் வாழ்த்துவோம்.
'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்ப்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.சிந்திக்கின்ற சமுதாயத்திற்க்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
குர்ஆன் 30:21
பாகிஸ்தானில் சொந்தம் ஏற்பட்டாலும் அதிகமான பாகிஸ்தானிகள் இந்தியாவின் மீது ஒரு அதீத வெறுப்பைக் கொட்டுவதை பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகள் அந்த அளவு அந்த மக்களை மாற்றியிருக்கிறார்கள். தினம் ஒரு குண்டு வெடிப்பு. இன்று கூட பஞ்சாப் மாகாணத்தில் குண்டு வெடிப்பில் கவர்னர் இறந்திருக்கிறார். கொடுத்த நாட்டையே நிம்மதியாக வைத்திருக்கத் தெரியாத இவர்களுக்கு மேலும் காஷமீரும் வேண்டும் என்று அடம் பிடிப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. இறைவன்தான் அந்த மக்களையும் அந்த நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.
23 comments:
vazhththukkal!
Keep iy up suvanappiriyan. we are waiting for your more posts.
-Anvar
ksa.
//என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின்//
இதில் ஒரு சின்ன மாற்றம்: என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் மதம், என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் ...
தருமி சார்!
உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இனம், மொழி, நாடு கடந்து இந்த வாழ்க்கை நெறியைக் கடை பிடிக்கும் அனைவரும் முஸ்லிம்களே! நீங்கள் நாத்திகராக இருந்தாலும் உங்களுக்கென்று சில வாழ்க்கை நெறி முறைகளை வகுத்து வைத்திருக்கிறீர்கள். அதே போல் முஸ்லிம்களும் தங்களுக்கென்று சில வழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வித்தியாசம் அந்த சட்ட திட்டங்களெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததாக முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை உலகளாவிய அளவில் பரந்திருப்பதால்தான் ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.
நம் நாட்டிலோ ஒரே மதத்தில் அதன் உட்பிரிவுகளில் பழக்க வழக்கங்களில் ஏக வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. சாதிகளுக்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் உறவுகள் மலர்வதற்கு தடையாக இருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.!
//இந்த வாழ்க்கை நெறியைக் கடை பிடிக்கும் அனைவரும் முஸ்லிம்களே! //
இது நீங்கள் சொல்வது. இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி என்கிறார்கள் அவர்கள்.
//இந்த நம்பிக்கை உலகளாவிய அளவில் பரந்திருப்பதால்தான்...//
இது போல் வேறு சில மதங்களும் அவர்கள் நம்பிக்கைகளும் உலகில் பரந்து கிடக்கின்றனவே!
//இஸ்லாம் ஒரு மதமே அல்ல. //
சுரா: 47.4 - 6... இதில் இறை நிராகரிப்பவர்களை என்ன செய்யச் சொல்லியுள்ளது? (இது ஒரு war cry என்று சொல்ல வேண்டாம்.) கடவுளின் வார்த்தைகள் இடத்திற்கும் காலத்திற்கும் மாறுபட்ட பொருளைத் தரக் கூடாதல்லவா?
அதோடு ... அப்படிக் கொல்பவர்களை ‘சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்’ என்பதுவும்,
முகமதுவின் வார்த்தைகளான, “Two religions shall not remain together in the peninsula of the Arabs' என்பதும் நீங்கள் சொல்லும் வாதத்தை (ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.) எனபதை முறியடிக்கின்றனவே ...
உலக அளவில் மக்கள் நம்மைப் பிரிப்பவைகளே race & மதங்கள்தானே... சாதிகள் நம்ம ஊர் சரக்கு - extra load!!
தருமி என்பதே நல்லா இருக்கே!
//இந்த வாழ்க்கை நெறியைக் கடை பிடிக்கும் அனைவரும் முஸ்லிம்களே! //
இது நீங்கள் சொல்வது. இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி என்கிறார்கள் அவர்கள்.
//இந்த நம்பிக்கை உலகளாவிய அளவில் பரந்திருப்பதால்தான்...//
இது போல் வேறு சில மதங்களும் அவர்கள் நம்பிக்கைகளும் உலகில் பரந்து கிடக்கின்றனவே!
//இஸ்லாம் ஒரு மதமே அல்ல. //
சுரா: 47.4 - 6... இதில் இறை நிராகரிப்பவர்களை என்ன செய்யச் சொல்லியுள்ளது? (இது ஒரு war cry என்று சொல்ல வேண்டாம்.) கடவுளின் வார்த்தைகள் இடத்திற்கும் காலத்திற்கும் மாறுபட்ட பொருளைத் தரக் கூடாதல்லவா?
அதோடு ... அப்படிக் கொல்பவர்களை ‘சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்’ என்பதுவும்,
முகமதுவின் வார்த்தைகளான, “Two religions shall not remain together in the peninsula of the Arabs' என்பதும் நீங்கள் சொல்லும் வாதத்தை (ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.) எனபதை முறியடிக்கின்றனவே ...
உலக அளவில் மக்கள் நம்மைப் பிரிப்பவைகளே race & மதங்கள்தானே... சாதிகள் நம்ம ஊர் சரக்கு - extra load!!
தருமி!
//இது நீங்கள் சொல்வது. இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி என்கிறார்கள் அவர்கள். //
இந்து மதம் வர்ணாசிரமத்தில் கட்டப்பட்டது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையரிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் இஸ்லாத்தோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்.
//இது போல் வேறு சில மதங்களும் அவர்கள் நம்பிக்கைகளும் உலகில் பரந்து கிடக்கின்றனவே!//
அந்த மக்களால் எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அமெரிக்காவிலும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளிலும் கிறித்தவ மதம் பெயரளவுக்குத்தான் உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை. அதிகம் நாத்திகர்களைத்தான் உருவாக்கியிருக்கிறது. உங்களையும் சேர்த்து.
//சுரா: 47.4 - 6... இதில் இறை நிராகரிப்பவர்களை என்ன செய்யச் சொல்லியுள்ளது? (இது ஒரு war cry என்று சொல்ல வேண்டாம்.) கடவுளின் வார்த்தைகள் இடத்திற்கும் காலத்திற்கும் மாறுபட்ட பொருளைத் தரக் கூடாதல்லவா?
அதோடு ... அப்படிக் கொல்பவர்களை ‘சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்’ என்பதுவும்,//
முகமது நபியையும் அவரின் தோழர்களின் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினர். இதன் பிறகும் மக்காவாசிகள முஸ்லிம்களை அழிக்கும் முகமாக படையெடுத்து வந்ததால் போர் செய்ய குர்ஆன் கட்டளை இடுகிறது. தன்னை அழிக்க வருபவர்களிடமிருந்து தற்காத்து கொள்வது தவறா? நம் நாட்டோடு பாகிஸ்தான் போருக்கு வந்தால் நம் நாட்டு வீரர்களுக்கு எதை உபதேசிப்போமோ அதைத்தானே குர்ஆனும் செய்கிறது. இதில் தவறு எங்கிருந்து வருகிறது.
'முகம்மதே! போர்க்களத்தில் எதிரிகள் சமாதானத்தை நோக்கி சாய்ந்தால் நீரும் அதை நோக்கி சாய்வீராக!'- குரஆன் 8:61
முகமது நபியையும் அவரின் தோழர்களின் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினர். இதன் பிறகும் மக்காவாசிகள முஸ்லிம்களை அழிக்கும் முகமாக படையெடுத்து வந்ததால் போர் செய்ய குர்ஆன் கட்டளை இடுகிறது. தன்னை அழிக்க வருபவர்களிடமிருந்து தற்காத்து கொள்வது தவறா? நம் நாட்டோடு பாகிஸ்தான் போருக்கு வந்தால் நம் நாட்டு வீரர்களுக்கு எதை உபதேசிப்போமோ அதைத்தானே குர்ஆனும் செய்கிறது. இதில் தவறு எங்கிருந்து வருகிறது.
'முகம்மதே! போர்க்களத்தில் எதிரிகள் சமாதானத்தை நோக்கி சாய்ந்தால் நீரும் அதை நோக்கி சாய்வீராக!'- குரஆன் 8:61
//முகமதுவின் வார்த்தைகளான, “Two religions shall not remain together in the peninsula of the Arabs' என்பதும் நீங்கள் சொல்லும் வாதத்தை (ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.) எனபதை முறியடிக்கின்றனவே ...//
ஆம். இஸ்லாம் என்ற ஒரே வாழ்க்கை நெறியில் அவர்களை சங்கமிக்க வைத்ததைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
//மதம் ஒரு வாழ்க்கை நெறி// - இப்படி சொல்லுங்கள்; ஒப்புக் கொள்கிறேன். எந்த தத்துவத்தில் பிறந்திருந்தாலும் எந்த மதமும் ஒரு சரியான நெறி முறையைப் பற்றித்தான் பேசும். நல்லவனாக இரு என்பதே எந்த மதத்தின் அடிப்படை நாதமாக இருக்கும். இதில் உன்னுடையது சிறந்ததல்ல என்னுடையதே சிறந்தது என்ற கோஷம் வரும்போதுதான் வருகின்றன பிரச்சனைகள்.
இந்து மதத்தில் வர்ணாசிரமம் ஒரு பகுதி. அதுதான் இந்து மதம் என்பது தவறு.
//தாய் தந்தையரிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் இஸ்லாத்தோடு ..// - மற்ற இரு ஆபிரஹாமிய மதங்கள் என்ன சொல்கின்றன? (அவர்களை நீங்கள் திம்மிகளாகச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.) பொதுவாகவே, கடவுள் மனிதனைப் படைத்தார் என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன. இதில் தனித்துவம் எம்மதமும் கொண்டாட முடியாது. ஆபிரஹாமிய மதம் அவங்களுக்கு பெயரெல்லாம் வைத்திருப்பதாலேயே அது மட்டும் ஒரிஜினல என்று சொல்ல முடியாது.
//எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். // - கட்டாயமாக. அதோடு ஏன் என்றும் யோசிக்க வேண்டும். இஸ்லாமில் உள்ள இறுக்கம் இதற்கான காரணம். )பாக். தஸீர் நிலைமையைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் ஒரு கிறித்துவ நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப் பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில். அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது. (அமினா கதை வாசித்தீர்களா? தமிழில் ஒரு பழமொழி உண்டு: படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில்!
.............. தொடரும்.
நீள் பின்னூட்டத்தை ஏற்க மறுக்கிறது. மூன்று பகுதிகளாக வெளியிடுகிறேன்.
மன்னிக்க
//மதம் ஒரு வாழ்க்கை நெறி// - இப்படி சொல்லுங்கள்; ஒப்புக்
கொள்கிறேன். எந்த தத்துவத்தில் பிறந்திருந்தாலும் எந்த மதமும்
ஒரு சரியான நெறி முறையைப் பற்றித்தான் பேசும். நல்லவனாக
இரு என்பதே எந்த மதத்தின் அடிப்படை நாதமாக இருக்கும். இதில்
உன்னுடையது சிறந்ததல்ல என்னுடையதே சிறந்தது என்ற கோஷம்
வரும்போதுதான் வருகின்றன பிரச்சனைகள்.
இந்து மதத்தில் வர்ணாசிரமம் ஒரு பகுதி. அதுதான் இந்து மதம்
என்பது தவறு.
//தாய் தந்தையரிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் இஸ்லாத்தோடு
..// - மற்ற இரு ஆபிரஹாமிய மதங்கள் என்ன சொல்கின்றன?
(அவர்களை நீங்கள் திம்மிகளாகச் சொல்கிறீர்கள் என்று
நினைக்கிறேன்.) பொதுவாகவே, கடவுள் மனிதனைப் படைத்தார்
என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன. இதில் தனித்துவம்
எம்மதமும் கொண்டாட முடியாது. ஆபிரஹாமிய மதம்
அவங்களுக்கு பெயரெல்லாம் வைத்திருப்பதாலேயே அது மட்டும்
ஒரிஜினல என்று சொல்ல முடியாது.
.................... தொடரும்
//எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம்
பார்க்க வேண்டும். // - கட்டாயமாக. அதோடு ஏன் என்றும்
யோசிக்க வேண்டும். இஸ்லாமில் உள்ள இறுக்கம் இதற்கான
காரணம். )பாக். தஸீர்
நிலைமையைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் ஒரு கிறித்துவ
நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க
முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த
இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப்
பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில்.
அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த
மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது. (அமினா கதை
வாசித்தீர்களா? தமிழில் ஒரு பழமொழி உண்டு: படிக்கிறது
ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில்!
//முஸ்லிம்களை அழிக்கும் முகமாக படையெடுத்து வந்ததால் போர்
செய்ய குர்ஆன் கட்டளை இடுகிறது.// -- ஏதோ எதிரிகள்
முகமதைyum, இஸ்லாமியரைyum விரட்டி விரட்டி அடித்தது போன்ற
ஒரு ‘பாவ்னையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இருவரும் ஒருவரை
ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.
அதோடு, எதிரிகளைக் கொன்று குவித்து விடு - இப்படி ஒரு கடவுள்
போதித்து ”உக்கிரசாமி”யாவதை விடவும், ’அன்பே சிவம்’ என்பதுவும், ‘உன் வாளை
உறையில் போடு; வாளை எடுத்தவன் வாளாலேயே சாவான்’ என்பதும்
‘நல்ல’ சாமிகளின் நல்ல வார்த்தைகளாக எனக்குத் தோன்றுகிறது.
எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே
அது எனக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது.
.................... தொடரும்
//எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம்
பார்க்க வேண்டும். // - கட்டாயமாக. அதோடு ஏன் என்றும்
யோசிக்க வேண்டும். இஸ்லாமில் உள்ள இறுக்கம் இதற்கான
காரணம். )பாக். தஸீர்
நிலைமையைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் ஒரு கிறித்துவ
நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க
முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த
இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப்
பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில்.
அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த
மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது. (அமினா கதை
வாசித்தீர்களா? தமிழில் ஒரு பழமொழி உண்டு: படிக்கிறது
ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில்!
//முஸ்லிம்களை அழிக்கும் முகமாக படையெடுத்து வந்ததால் போர்
செய்ய குர்ஆன் கட்டளை இடுகிறது.// -- ஏதோ எதிரிகள்
முகமதைyum, இஸ்லாமியரைyum விரட்டி விரட்டி அடித்தது போன்ற
ஒரு ‘பாவ்னையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இருவரும் ஒருவரை
ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.
அதோடு, எதிரிகளைக் கொன்று குவித்து விடு - இப்படி ஒரு கடவுள்
போதித்து ”உக்கிரசாமி”யாவதை விடவும், ’அன்பே சிவம்’ என்பதுவும், ‘உன் வாளை
உறையில் போடு; வாளை எடுத்தவன் வாளாலேயே சாவான்’ என்பதும்
‘நல்ல’ சாமிகளின் நல்ல வார்த்தைகளாக எனக்குத் தோன்றுகிறது.
எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே
அது எனக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது.
.................... தொடரும்
பின்னூட்டமிட முடியவில்லை.ஆகவே தனிப்பதிவாக இட்டு விடுகிறேன்.
நானிட்டிருக்கும் பதிவு இங்கே.
பதிவாகவே இட்டு விட்டீர்கள். என் பதிவிலும் உங்கள் பின்னூட்ங்கள் இரண்டு முறை ஏறி விட்டது. பிறகு அதனை சரிபடுத்தியுள்ளேன்.
எந்த மதத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அனைத்து மதங்களுமே இறைவனால் கொடுக்கப்பட்டவையே
'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆபரஹாம், இஸ்மவேல்,யாகூப், மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோஸேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுங்கள்.- குரஆன் 2:136
என்று குர்ஆன் எனக்கு கட்டளையிட்டுருக்க நான் எப்படி மற்ற மதங்களை குறைத்து மதிப்பிட முடியும்? இறைவன் அளித்த அநத மதங்கள் அந்த மக்களால் மாற்றப்பட்டதைத்தான் சுட்டிக் காட்டினேன். நீங்கள் கூட வருடா வருடம் 'திருத்திய பைபிள்' என்று தானே வெளியிட்டு வருகிறீர்கள்! இறைவன் அளித்த அந்த வார்த்தைகளை மனிதர்கள் எப்படி மாற்றலாம் என்று ஏன் ஒரு கிறித்தவரும் குரல் எழுப்புவதில்லை? இப்படி நிறை கேட்கலாம். நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.
தருமி!
//நான் ஒரு கிறித்துவ நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப் பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில். அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது.//
சவுதியில் இலட்சக்கணக்கில் இந்து நண்பர்கள் உள்ளனர். பல வருடங்களாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை யாரும் இது வரை கட்டாயப்படுத்தியதில்லையே! சிறு வயதில் ஒருக்கால் பயத்தினால் நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் விளங்கியவுடன் நான் ஏன் இஸ்லாத்தை விட்டு இது வரை வெளி வரவில்லை. உண்மையான காரணம் நான் குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை எந்த சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவதால்தான். அது இறைவனால் அருளப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.
//ஏதோ எதிரிகள்
முகமதைyum, இஸ்லாமியரைyum விரட்டி விரட்டி அடித்தது போன்ற
ஒரு ‘பாவ்னையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இருவரும் ஒருவரை
ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.//
இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்னால் மிகச் சிறந்த செல்வந்தராக இருந்தவர் முகமது நபி. அனைத்தையும் அபகரித்துக் கொண்டு மக்காவிலிருந்து மதினாவுக்கு எதிரிகள் விரட்டி அடிக்கின்றனர். மதினாவில் முகமது நபியின் கொள்கையை ஏற்று ஒரு கணிசமான ஆட்கள் சேர்ந்து விட்டனர் என்று கேள்விப்பட்டு அங்கும் அவரையும் அவரது தோழர்களையும் கொலை செய்ய படை திரட்டி வந்ததாலேயே போர் அவசியமாகிறது. ஆதாரமான இந்த வரலாறை பிறகு நான் தனிப் பதிவாகவே போடுகிறேன்.
குர்ஆனில் 'கொல்லுங்கள்' என்று ஒரு வசனம் வந்தால் அதற்கு முந்திய வசனத்தையும் சேர்த்து படித்தால் தான் அது போர்க் களத்தில் சொல்லப்பட்ட வசனம் என்பதை விளங்க முடியும். அந்த வசனம் எப்பொழுது இறங்கியது, அதற்கான காரணம் அனைத்தையும் அவரின் தோழர்கள் சொல்ல அனைத்தும் வரலாறாக பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்த எந்த வசனம் உங்களை குழப்புகிறது என்று வசன எண்னோடு தாருங்கள். அதற்குரிய விளக்கத்தைத் தருகிறேன்.
தருமி!
//எப்போதும் சொல்லப்படும் பொருள் - அதுவும் அல்லாவால் அருளப்பட்டு ஜிப்ரேலால் சொல்லப்பட்டவை - சர்வ நிச்சயமாக ஒரு தொடராக, ஏதாவது ஒரு தொடர்போடு (continuity) இருக்க வேண்டும். ஆனால் அப்படியா இருந்தது.//
நீங்கள் உங்கள் மகனுக்கு 10 வருடமாக அறிவுரைகளைக் கூறி வருகிறீர்கள். அந்த அறிவுரைகளை எல்லாம் ஒரு புத்தகமாக தொகுத்தால் அதில் ஒரு தொடர் கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்காது.
அதே போல் குழந்தை 7 வயதாக இருக்கும்போது வீட்டை விட்டு அதிகம் வெளியில் அனுப்ப மாட்டோம். அதே குழந்தை 18 வயது வாலிபனாகும் போது 'வீட்டிலேயே ஏன் அடைந்து கிடக்கிறாய்? நாலு பேரோடு சேர்ந்து பழகு' என்று வீட்டை விட்டு வெளியே நாமாக அனுப்புவோம். ஒரே தந்தை சில வருடங்களுக்குள்ளாகவே தனது அறிவுரையை மாற்றிக் கொள்கிறார். இதே அளவு கோளை அன்றைய அரபு மக்களோடு பொருத்திப் பாருங்கள். குர்ஆனின் தொடர்பின்மையும், அறிவுரைகள் மாறுவதும், ஒரே அறிவுரை பலமுறை வருவதும் அந்த மக்களுக்கு முகமது நபி 23 ஆண்டுகள் போதித்தவைகளே! 23 ஆண்டுகள் ஒருவரின் போதனைகளை தொகுத்தால் எப்படி இருக்குமோ அதைத்தான் குர்ஆனாகவும், முகமது நபியின் வாழ்க்கை வரலாறாகவும் பார்க்கிறோம்.
//குரானின் வசனங்களைத் தொகுத்தவர் யார்? மனிதர்கள்தானே?
முன்னதைப் பின்னதாகவும், பின்னதை முன்னதாகவும் மாற்றியது யார்? மனிதக் கரங்கள்தானே? வெறும் நீளங்களை வைத்து முறைப்படுத்தியது யார்? மனிதர்கள் தானே? இப்படி தொடர்பின்மையை ஏற்படுத்தியது யார்? மனிதர்கள்தானே!//
இதனால் குரஆனின் வசனங்கள் எதுவும் மாற்றப்படவில்லையே! குர்ஆன் முழுவதையும் மனனமாக்கிய பல தோழர்களின் முன்னிலையில்தான் தொகுக்கப்பட்டதாக வரலாறு.
சீனு!
//ஆனால் ஆங்கிலத்தில் : When you meet the unbelievers, strike off their heads;... என்று உள்ளது. (”நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்//- இது ஏன் ஆங்கில நூலில் இல்லை? தமிழில் யார், ஏன் சேர்த்தது ??!!)//
நான் முன்பே சொன்னதுபோல் ஒரு வசனம் எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள அதன் முதல் வசனத்தை பார்த்தால் எளிதில் விளங்கும். சில தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க அடைப்புக் குறிக்குள் முதல் வசனத்தின் இடத்தை எழுதுவார்கள். சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் மக்கள் விளங்கிக் கொள்வார்வகள் என்ற ரீதியில் விட்டிருக்கலாம். ஆனால் மூலப்பிரதியில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. சீனுவுக்கு இன்னும் சந்தேகம் ஏற்ப்பட்டால் ரஷயாவுக்கும் துருக்கிக்கும் சென்று மூலப்பிரதியை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
கும்மி!
//குர் ஆனில் கூட வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று முன்னர் உரையாடியுள்ளோம். அதற்கு பதிலில்லை.//
நமது நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அறுபதுக்கு மேல் சட்ட திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டோம். நமது மேல் உள்ள அக்கறையினால் நமது ஆட்சியாளர்க்ள செய்யும் இந்த திருத்தங்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதே போல் சட்டத்தை சொன்ன இறைவன் மகனுக்கு தந்தை கூறும் அறிவுரை போல் நமது நன்மையை கருதி சட்டத்தை மாற்றுகிறான். ஆனால் இந்து, கிறித்தவ,யூத மார்க்கங்களில் மனிதர்களே இறைவனின் சட்டத்தை மாற்றி விட்டனர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' தான் நம் முன்னோர்களின் மார்க்கம். ஆனால் இன்று தெருவுக்கு ஒரு கடவுள் நம் நாட்டில் வந்ததும், முக்கடவுள் கொள்கை கிறித்தவத்தில் புகுந்ததும் இறை வேதத்தில் மனிதக் கரங்கள் புகுந்ததால்தான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏன் துறக்க வேண்டும்? ஐயா! ஒரு இசமோ, ஒரு மார்க்கமோ தவறாக இருக்கும் பட்ஷத்தில் தான் மற்றதைப் பற்றி யோசிக்க வேண்டும். என் பூர்வீக மதம் என்னை சிறுமைபடுத்தியதால்தான் என் முன்னோர்கள் மதம் மாறினர். திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வர வேண்டும் என்றால் அதற்குரிய காரணம் வேண்டும் அல்லவா? ஒரு மக்களை நேர் வழிப் படுத்தும் பொறுப்பு கண்டிப்பாக ஒரு அரசுக்கு உண்டு. தவறான வழி காட்டுதல் அந்த மக்களை திசை திருப்பி விடக் கூடாதல்லவா!
மதங்களையே வெறுத்த பெரியாரே 'அனைவரும் இஸ்லாத்தை நோக்கி செல்லுங்கள்' என்று சொன்னாரே!
'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடையது அரசு.-குறள்
ஒரு சீன இனத்தவரையோ ஜப்பானியரையோ அவர்கள் திருமணம் செய்திருந்தால் கணியன் பூங்குன்றனாரின் கூற்று உண்மையாகும்,
அதைவிடுத்து அவர்கள் இசு லாமியர்களையே திருமணம் செய்ததை பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஒப்பாகுமா?
உங்கள் மதத்தில் யாராவது தமிழில் பெயர் வைக்கின்றீர்களா? பெயரைக்கூட தமிழில் வைக்காதவர்கள் கணியனை இழுக்கவேண்டாம்.
தமிழில் எழுதினாலும் பேசினாலும் யாரும் தமிழர்கள் ஆகமுடியாது.
அது யாராயிருந்தாலும் சரி.......
தமிழர்களாக வாழவேண்டும்.
ராவணன்!
//"ஒரு சீன இனத்தவரையோ ஜப்பானியரையோ அவர்கள் திருமணம் செய்திருந்தால் கணியன் பூங்குன்றனாரின் கூற்று உண்மையாகும்,
அதைவிடுத்து அவர்கள் இசு லாமியர்களையே திருமணம் செய்ததை பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஒப்பாகுமா?//
சீனாவிலும் ஜப்பானிலும் கூட முஸ்லிம்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா? அதுவும் தவறு என்பீர்களோ!
//உங்கள் மதத்தில் யாராவது தமிழில் பெயர் வைக்கின்றீர்களா? பெயரைக்கூட தமிழில் வைக்காதவர்கள் கணியனை இழுக்கவேண்டாம்.//
ராமன், முருகன்,சரஸ்வதி போன்ற இந்து மக்களின் கடவுள் பெயர்களைத் தவிர்த்து அன்பழகன்,அன்பரசன், சுவனப்பிரியன் , போன்ற பெயர்களை தாராளமாக வைக்கலாம். அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இஸ்லாமில் இல்லை. பழைய இந்து பெயரிலேயே ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் எந்த சாதி என்ற அடுத்த கேள்வி வரும். ஒரு திலிப்குமார் ரஹ்மானாக மாறும்போது அவரது முந்தய சாதி மறக்கப்படுகிறது. இதுதான் குறிப்பாக முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைக்கக் காரணம்.
//தமிழில் எழுதினாலும் பேசினாலும் யாரும் தமிழர்கள் ஆகமுடியாது.
அது யாராயிருந்தாலும் சரி.......
தமிழர்களாக வாழவேண்டும்."//
தமிழன் என்பது என்ன ஐநா சபை பதவியா? இவ்வளவு டிமாண்ட் பண்றீங்க! முதலில் தமிழன் என்றால் யார்? அவனுக்குரிய இலக்கணம் என்ன? யாரை எல்லாம் தமிழர்களின் லிஸ்டில் சேர்க்கப் போகிறீர்கள் என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.:-)
ஏதோ சீமானும், வைகோவும், நெடுமாறனும் காமெடி பண்ணிக்கிட்ருக்காங்க! நம்ம பொழப்பை பார்ப்போம் அப்பு! :-)
உங்கள் சேவைப்பனி மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள் -நண்பன் - அன்வர்பாஷா
Post a Comment