இந்தியனாகவும் இருந்து சிறந்த இஸ்லாமியனாகவும் இருக்க முடியுமா?
முடியும் என்று நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நிரூபித்து வருகிறார். இஸ்லாம் சொன்ன கட்டாய கடமைகள் அனைத்தையும் தன்னால் முடிந்த வரை கடைபிடித்து வருகிறார். தொழுகைக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காக ரிகார்டிங் அனைத்தையும் இரவிலேயே வைத்துக் கொள்கிறார். தன்னை ஈன்றெடுத்த தாய்க்காக 'மா துஜே சலாம்' தனது இனத்துக்காக 'வெள்ளைப் பூக்கள்', தனது நாட்டுக்காக 'ஜன கன மன' என்று இவர் எந்த துறைக்கு சென்றாலும் அங்கு தனது முத்திரையை பதித்து விடுகிறார். நேரம் கிடைத்தால் அவ்வப்போது இவரது பேட்டிகளை காண்பது உண்டு. அந்த வகையில் ஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியை பார்க்க நேர்ந்தது. தனது தாய்க்காக அவர் பாடிய 'மா துஜே சலாம்' என்ற பாடலை எவ்வளவு உணர்வு பூர்வமாக பாடுவதை பாருங்கள். என் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற பகிர்ந்து கொள்கிறேன்.
தான் கொண்டுள்ள கொள்கையில் இவர் எந்த சமரசமும் பண்ணிக் கொள்வதில்லை. அதே சமயம் இந்துக்கள், கிறித்துவர்களுக்கு மத்தியில் எந்த நேரமும் இருந்தாலும் அதே புன்சிரிப்பு. எவரிடமும் இதுவரை பகை கொண்டதில்லை. இவருடைய தொழில் தவிர்த்து இவரிடம் 'நாங்கள் பரம்பரை முஸ்லிம்கள்' என்று தவறாக விளங்கி சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனது நாட்டை நேசிக்கவும், தனது இனத்தை நேசிக்கவும், தனது குடும்பத்தை நேசிக்கவும் இஸ்லாம் ஒரு தடையே அல்ல என்பதைத்தான் அவரது வாழ்வு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
மெக்காவில் பள்ளியின் உள் ஒருமுறை இவரை பார்த்திருக்கிறேன். தன்னை மறந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தார். தொழுகை முடிந்து அவரிடம் பேசலாம் என்று சென்றால் அதற்குள் கூட்டம் அதிகமாகவே என்னால் அவரிடம் பேச முடியவில்லை. மினாவில் நாங்கள் தங்கியிருந்த கூடாரத்துக்கு அருகில்தான் அவரும் தங்கியிருப்பதாக சொன்னார்கள். ஒரு பேட்டி எடுக்கலாமா என்று கூட அப்பொழுது யோசித்தேன். நாம் வந்தது 'ஹஜ்' செய்ய என்ற எண்ணம் வரவே ஆர்வத்தை அடக்கிக் கொண்டேன். அங்கும் அவரை சந்திக்க முடியவில்லை.
குறிப்பு;
சில நண்பர்கள் தனி மெயிலில் ரஹ்மான் தர்ஹாக்கு செல்வதையும் அவரின் சூஃபி கொள்கையையும் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டிருந்தனர்.
இந்த பதிவின் நோக்கம் மார்க்க கட்டளைகளை கடை பிடிக்கும் ஒரு முஸ்லிம் நாட்டுப்பற்றுடனும், இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும் இருக்க முடியாது:மற்ற மதத்தவர்களோடு ஒருங்கினைந்து வேலை செய்ய முடியாது என்ற போக்கில் சில பின்னூட்டங்கள் வந்தது. அது தவறு. ஒரு முஸ்லிம் தனது மார்க்க கடமைகளை செய்து கொண்டே மாற்று மதத்தவரோடு சகஜமாக பழக முடியும. இதற்கு மார்க்கம் தடையில்லை என்பதை ரஹ்மான் மூலம் சொல்ல வந்தேன். அவர் தர்ஹாவுக்கு போவதும் தவறான வழிகாட்டுதல்: அதே போல்தான் சூஃபி இசமும். இவற்றில் இருந்தெல்லாம் ரஹ்மான் விலகிக் கொள்வார்: விலகிக் கொள்ள வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

16 comments:
திருச்சிக்காரரே!
//நான் கேட்பது மார்க்கம் அடிமை முறையை அங்கீகரிக்கிறதா இல்லையா? அடிமைகளே கூடாது, எல்லோரும் சுதந்திரமான மனிதர்கள் என்று சொல்லுகிறதா? இதெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன?//
அடிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அன்றைய கால அரபு பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு நாடுகளுக்கிடையே போர்நடந்தால் வென்றவர்கள் தோற்றவர்களை சிறை பிடிப்பார்கள். இவ்வாறு சிறை பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைச்சாலைகள் இல்லை. அவர்களுக்கு உணவளித்து பராமரிப்பதும் மிக சிரமம். எனவே கைது செய்யப்பட்டவர்களை போரில் ஈடுபட்டவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பார்கள். அடிமைகளிடம் வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது. வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
முகமது நபி 'அடிமைகள் இனி சுதந்திரப் பறவைகள்' என்று ஒரு உத்தரவின் மூலம் செயல்படுத்தியிருக்க முடியும.
அப்படி செய்தால் அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்கள் நஷ்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்கினால் மேற் கொண்டு அரசை நடத்த முடியாது. அன்று அடிமை வியாபாரம் சட்டமாக்கப்பட்டிருந்தது.
மேலும் முகமது நபி தன்னிச்சையாக இந்த சட்டத்தை எடுத்தால் முஸ்லிம்களிடம் உள்ள கைதிகள் விடுதலையடைவார்கள். மற்ற நாடுகளில் சிக்கி இருக்கும் முஸ்லிம்கள் விடுதலையடைய முடியாது. சுற்றியுள்ள நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வரும் வரை முகமது நபி மட்டும் ஒரு முடிவெடுப்பது நன்மை பயக்காது. ஆனால் யாருக்கும் பாதகம் இல்லாமல் குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்து குறுகிய காலத்திலேயே அடிமைகளே இல்லாத நாடுகளாக அரபுலகை மாற்றியது இஸ்லாம்.
'ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கமும் கற்பித்து,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும்' -முகமது நபி.
நூல்: புகாரி 2547, அறிவிப்பவர்: மூசா அஷ்அரி.
திருச்சிக்காரன்!
//அன்புக்குரிய திரு. சுவனப்பிரியன் அவர்களே,
பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்று இருந்தேன்.
அதிலே 'இந்தியா' என்ற தலைப்பில் பேசிய ஒரு மாணவி "உலகிலே அடிமை முறை இல்லாத சமுதாயமாக இருந்தது, இந்திய சமுதாயம்" என்று ஒரு வாசகத்தை பேசினார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் நான் இது பற்றி விளக்கம் கேட்டேன். அவர் சொன்னதாவது "அங்கிள், அடிமை முறை என்பது வேறு, சாதி முறை என்பது வேறு, சாதி என்பது மக்கள் தனி சாதிகளாக வாழ்வது, அடிமை முறை என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாட்டை விலைக்கு வாங்குவது போல விலைக்கு வாங்கி உபயோகப் படுத்துவது!//
இனி சோழ நாட்டில்(அதாவது தஞ்சை, திருச்சி) இருந்த அடிமை முறையை வினவு தளத்திலிருந்து பார்ப்போம்.
//வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.
போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.//
இவை எல்லாம் ஆதாரபூர்வமான நூல்களில் இருந்து எடுத்தவையாகும். அடிமை முறை அறவே இல்லை என்று எதன் அடிப்படையில் சொன்னீர்கள்?
சூஃபி இசமும். இவற்றில் இருந்தெல்லாம் ரஹ்மான் விலகிக் கொள்வார்: விலகிக் கொள்ள வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.
//
எனக்கு சில சூபி நண்பர்கள் உண்டு, சூபிசத்தை இழந்தால் ரகுமான் இசையும் அமைக்கமாட்டார், மற்றவர்களோடு மதம் பார்க்காமால் பழகவும் மாட்டார்.:)
குடுகுடுப்பை!
//எனக்கு சில சூபி நண்பர்கள் உண்டு, சூபிசத்தை இழந்தால் ரகுமான் இசையும் அமைக்கமாட்டார், மற்றவர்களோடு மதம் பார்க்காமால் பழகவும் மாட்டார்.:)//
சூஃபியிசம் என்பது இறைவனை நெருங்குகிறோம, இறைவனை உள் வாங்குகிறோம் என்ற பெயரில் புதிய வணக்கங்களை உண்டாக்குகின்றனர். முகமது நபி காட்டித் தராத எந்த விளக்கமும் இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. இது போன்ற முயற்சிகள் முகமது நபிக்கு இவர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் ஆகி விடும். உலகம் முழுமைக்கும் ஒரு இறை, ஒரு வழி காட்டுதல் தான் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும். அழகிய மார்க்கம் இஸ்லாம் இருக்க சூஃபி இசத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று உங்கள் நண்பரிடம் கேளுங்கள்.
முகமது நபி அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே முகமது நபி எழுந்து நின்றார். 'இது யூதருடைய பிரேதம்' என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முகமது நபி 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
ஆதாரம் புகாரி:2096

பக்கத்து வீட்டில் வேறு மதத்தவர் இருந்தாலும் சமைத்த உணவை அவர்களுக்கும் கொடுத்து சகோதரத்துவத்தைப் பேண வேண்டும் என்ற முகமது நபியின் கட்டளையை பார்க்கிறோம்.
கட்டாய கடமையான ஜகாத்(ஏழை வரி) பெற தகுதியுடையவர்களில் மாற்று மதத்தினரும் வருகிறார்கள். இது போன்று பல சம்பவங்கள் உள்ளன. மாற்று மதத்தவர்களை கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்தவே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்காக புதிதாக உண்டர்கிய சூஃபியிசத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இஸ்லாத்திலேயே அதற்கு நிறைய வழிகள் உண்டு.
தருமி!
//ஒரு உதாரணம். (கொடுக்கும் உதாரணத்திற்கு மன்னிக்கவும்; ஏற்கெனவே கேட்ட உதாரணம்தான.)
உட்கார்ந்து சிறுநீர் கழி என்று சொன்னாரென்றால் அவங்க ஊருக்கு, அன்னைக்கு அவங்க போட்ட உடைக்கு, அங்க அடிக்கிற காத்துக்கு அது சரி. இன்னைக்கும் அதுதான் சரியா?//
சிறுநீரை உட்கார்ந்தும் கழிக்கலாம். வசதி இல்லாத போது உடைகளிலும் உடம்பிலும் தெரிக்காமல் நின்று கொண்டும் கழிக்கலாம். ஆனால் சிறு நீர் வந்த இடத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். மலமும், சிறுநீரும் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள். இரண்டிலுமே துர் நாற்றம் வீசும். ஒன்றை சுத்தம் செய்து விட்டு மற்றொன்றை விடுவது சரியா? ஆரோக்கியத்துக்கு வழி வகுக்குமா?அதிலும் சுன்னத்(விருத்த சேதனம்) செய்யாதவர்களுக்கு நுனி தோல்களில் சிறு நீர் தேங்கி பல நோய்களுக்கும் வழி வகுக்கிறது. சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தால் நமது உறுப்பும் சுத்தமாகும். கழிவறையிலும் சிறுநீர் தேங்காது. இதை நமது நாட்டில் அனைவரும் கடைபிடித்தால் பஸ் ஸ்டாண்டுகளில் நீங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. பொது கழிப்பிடத்தில் சிறுநீரில் உப்பு ஒன்றாக சேர்ந்து கழிவறையையே நாஸ்தி பண்ணி விடுகிறது. பெரியவர்கள் கூட நம் நாட்டில் எந்த கூச்சமும் இல்லாமல் சுவரோரத்தில் அடித்து விடடு நழுவி விடுகிறார்கள். அங்கு கொசுக்களின் தொல்லை. பிறகு காய்ச்சல் ஆஸ்பத்திரி ....இதெல்லாம் தேவைதானா!இந்த சட்டம் எந்த காலத்துக்கும் தேவை என்பதை நீங்கள் உணரவில்லையா?
தருமி!
//அடிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அன்றைய கால அரபு பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். //
நல்லது. ராச ராசன் எப்படி அன்றைய நடைமுறையைக் கடைப்பிடித்தானோ அதுபோல் முகமதுவும் அன்றைய நடைமுறையைப் பின்பற்றினார் என்கிறீர்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை; காலத்தின் கட்டாயத்திற்கு உடன்சென்றார்கள்.
இதைத்தான் நானும் சொல்கிறேன். முகமதுவும் அந்தக் காலத்திற்கு என்னென்ன சரியோ அவைகளைச் சொன்னார். காலங்காலத்திற்கும் அல்லாவின் வார்த்தைகளைச் சொன்னார் என்பது எப்படி சரியாக இருக்கும்.//
ராஜராஜசோழன் தான் ஆட்சி செய்து வசதியாக இருப்பதற்க்காக இல்லாத அடிமை முறையை நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறார். அடிமை முறையை கொண்டு வருகிறார். அதே கால கட்டத்தில் முன்பு இருந்த அடிமை முறையை மத சட்டங்களின் மூலம் படிப்படியாக குறைத்து சில ஆண்டுகளிலேயே அடிமைகள் இல்லாத ஒரு நிலையை முகமது நபி கொண்டு வருகிறார். ஒருவர் மதத்தின் பெயரால் அடிமை முறையை கொண்டு வருகிறார். மற்றொருவர் மதத்தின் பெயரால் அடிமை முறையை ஒழிக்கிறார். இரண்டையும் எப்படி ஒன்றாக்குகிறீர்கள்?
தருமி!
//நான் கேட்டதென்ன நீங்கள் சொல்வதென்ன?! நடத்திய ‘சிறுநீர் பாடத்திற்கு’ நன்றி.
//சிறுநீரை உட்கார்ந்தும் கழிக்கலாம். வசதி இல்லாத போது உடைகளிலும் உடம்பிலும் தெரிக்காமல் நின்று கொண்டும் கழிக்கலாம். //
இப்படித்தான் உங்கள் நபி சொல்லியிருக்கிறாரா?
அடுத்த கேள்வியிலும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துள்ளீர்கள்.//
'முகமது நபி அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று கொணடு சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் கொண்டு வந்தேன். அதில் முகமது நபி அவர்கள் சுத்தம் செய்து கொண்டார்கள்.'
-அறிவிப்பவர்: ஹீதைபா
நூல்: புகாரி 224
முகமது நபி நின்று கொண்டு சிறுநீர் கழித்திருப்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. இடம் அசுத்தமாக இருந்து நாம் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வசதியும் இல்லாமல் இருந்தால் நின்று கொண்டும் சிறுநீர் கழிக்கலாம் என்பதை அறிகிறோம். இங்கு சுத்தத்தைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். நான் பார்த்த வகையில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை முகமது நபி தடுத்ததாக எங்கும் பார்க்கவில்லை.
தருமி!
///// நான் பார்த்த வகையில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை முகமது நபி தடுத்ததாக எங்கும் பார்க்கவில்லை.//
என்ன இப்படி சொல்லீட்டீங்க? நீங்க கொடுத்த மேற்கோளோடு தொடர்புடைய மற்றைய மேற்கோள்களையும் கொடுத்திருக்கலாமே!
“....குர் ஆன் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை ந்ம்பி விடாதே. பிரித்துக் காட்டக் கூடிய குர் ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததில்லை. “
நூல்: அஹ்மத் 24604///
அந்த ஹதீதை சொன்னது யார்? முகமது நபியின் மனைவி ஆயிஷா. இல்லறம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும், விளக்கங்களையும் நாம் அன்னை ஆயிஷாவிடமிருந்து பெற முடியும். ஆண்களைப் பொறுத்தவரை வெளியூர்களுக்கு செல்வது, போர்களில் கலந்து கொள்வது போன்ற பல இடங்களுக்கும் செல்லும் அவசியம் ஏற்படுகிறது. அங்கெல்லாம் பெண்கள் அதிகம் வருவதற்கு சாத்தியம் இல்லை. எனவே வீட்டுக்கு வெளியில் நடக்கும் அனைத்து விபரங்களும் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிறுநீர் கழித்த சம்பவம் வீட்டுக்கு வெளியில் நடந்த ஒன்று என்பதால் நபித் தோழரின் வாக்கை நாம் நடைமுறைபடுத்தலாம். மேலும் முகமது நபி நேரிடையாக நின்று கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று எங்கும் சொல்லவில்லை. அனைத்தையும் ஒன்றாக்கிப் பார்த்து நாமாகத்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் இந்த விஷயத்தில். எனவே இதில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை.
வால்பையன்!
//முகமதுவின் மனைவியுடமிருந்து வந்த ஹதிஸே பொய்யுன்னு சொல்றிங்க,//
நான் சொல்லாத ஒன்றை இப்படி இட்டுக்கட்டி சொல்லலாமா? 'என் பொழப்பே அதுதான்' ன்னு சொல்றீங்களோ!
இருவருமே உண்மையைத்தான் சொல்கிறார்கள். வீட்டை தவிர்த்து வெளி உலகில் நடக்கும் பல காரியங்கள் மனைவிக்கு தெரிய வாய்ப்பில்லை. இதன் அடிப்படையில் வீட்டுக்கு வெளியில் நடந்த இந்த சம்பவத்தில் தோழரின் கூற்றை ஆதாரமாக எடுக்கிறோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நின்று கொண்டும் சிறுநீர் கழிப்பதற்கு ஆதாரத்திற்க்காகத்தான் அந்த ஹதீதை ஆதாரமாக எடுத்தது.
சரி ...இனி உங்கள் விஷயத்துக்கு வருவோம். உங்கள் தோஸ்த் பகுத்தறிவாதி ராஜனின் கல்யாணம் புரோகிதர் வைத்து, மந்திரம் ஓதி, ஆகம விதிகளின் படி அதுவும் உங்களின் மேற்பார்வையில் :-) நடந்ததாமே!
இனி 'பகுத்தறிவு மிட்டாய் விக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு இணையப் பக்கம் வர வேண்டாம். 'ஜாதிகள் உள்ளதடி பாப்பா' என்று இனி பதிவுகள் போடவும். வால் பையன் என்ற பெயரை மாற்றி அம்பி பையன் என்று வைத்துக் கொள்ளவும். :-)
சார்வானகன்!
//இஸ்லாம் அடிமை முறையை ஏற்படுட்த்த வில்லை சரி.
ஆனால் எதிர்க்கவும் இல்லை,//
ஒத்துக் கொண்டதற்கு நன்றி! உடனே ஏன் தடை செய்யவில்லை என்பதற்கும் முன்பே காரணங்களை சொல்லியிருக்கிறேன்.
தனிப்பட்ட ஒரு சில அரபுகளின் எண்ணங்கள் எல்லாம் இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது.
//அரபியர்கள் அடிமை முறை,ஆக்கிரமிப்பு போர்கள்,பல தார மணம்,தற்காலிக திருமணம் போன்றவற்றை மிக இயல்பான பெருமையான விஷயங்களாக எண்ணுகிறார்கள்.நமது தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களுக்கு இது உறுத்தலான விஷயமாக தெரிவது மண்ணின் கலாச்சாரத்தின் காரணமாகவே.//
உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதித்திருந்தாலும் 95 சதவீத இஸ்லாமியர்கள் ஒரு மனைவியோடு வாழ்வதைத்தான் பார்க்கிறோம்.
திருச்சிக்காரரே!
//குடிக்கவே தண்ணீர் இல்லாத பாலைவனம், தினமும் குளிக்க வாய்ப்பு இல்லை, வெப்பமோ அதிகம், கழுவாமல் இப்படியே இருந்தால் நோய் உண்டாகும் என யூதர்கள் முதலில் விருத்த சேதன முறையை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர்.//
//ஜப்பான், ரஷியா, சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா.... உட்பட பல இடங்களில் யாரும் விருத்த சேதனம் செய்வது இல்லை. அவர்களுக்கு அங்கே ஒரு நோயும் வருவதும் இல்லை.//
ஒரு சிறந்த மருத்துவரை அணுகி விருத்த சேதனம் செய்வது உடல் நலத்துக்கு நல்லதா கெட்டதா என்று கேட்டு விட்டு அதன் பிறகு பின்னூட்டம் இட்டிருக்கலாம். இனிமேலாவது ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு எனக்கு பதில் தாருங்கள். நான் காத்திருக்கிறேன்.
//எனவே ஏற்கெனவே ஆடல் பாடல் கலைகளில் சிறந்த பயிற்சி பெற்ற தேவதாசி எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்களையே கோவிலில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிக்கு இராஜ இராஜன் நியமித்திருக்கவே வாய்ப்பு உள்ளது.//
வரியின் கொடுமையால் கட்ட இயலாதவர்களை கொத்தடிமைகளாக ராஜராஜசோழன் ஆக்கியதை அன்றைய கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துச் சொல்லியும், மறுக்கிறீர்கள். பொட்டுகட்டுதல், தேவதாசி முறை இருந்ததையும் நியாயப்படுத்தப் போகிறீர்களா?
கோவிக் கண்ணன்!
//அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை.//
நீங்கள் கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கும் நண்பர் ஆஷிக் ஒரு தொடரே எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் பல விளக்கங்களும் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
பதிவை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
வால்பையன்!
//ராஜன் கல்யாணம் பண்ணியது அவர் இஷ்டம் அவர் கஷ்டம், இங்கே விவாதித்து கொண்டிருப்பது நான்,//
மற்றவர்கள் ஆகம விதிப்படி திருமணம் புரிந்த போது நக்கலும் கிண்டலும் பண்ணிவிட்டு இப்பொழுது 'ஙே' என்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் வால் பையனைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஒரு ஒரு காமெடி பீஸாக தெரியவில்லையா!
//குரான் பற்றிய கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க!//
நான் பத்து நாட்களுக்கு முன்பு உலகம் உருவானதற்கு அறிவியல் ரீதியான நிரூபணம், காரணம் கேட்டிருந்தேனே! இதுவரை பதில் இல்லையே! குர்ஆன் சம்பந்தமாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் முன்பே பதில் அளித்து விட்டேன். உங்கள் பதில்தான் இன்னும் பாக்கி இருக்கிறது.
உங்களின்பல பின்னூட்டங்களையும் படித்தால் எனக்கு ஒரு குறள் ஞாபகம் வருகிறது.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
//ஒரு முஸ்லிம் தனது மார்க்க கடமைகளை செய்து கொண்டே மாற்று மதத்தவரோடு சங்கோஜமாக பழக முடியும. இதற்கு மார்க்கம் தடையில்லை என்பதை ரஹ்மான் மூலம் சொல்ல வந்தேன்//
இதில் சங்கோஜமாக என்பதை சகஜமாக என மாற்றவும். தவறான வார்த்தை பிரயோகம் அதனால் எதிர்மறை பொருள் தருகிறது.
சுல்தான்!
//இதில் சங்கோஜமாக என்பதை சகஜமாக என மாற்றவும். தவறான வார்த்தை பிரயோகம் அதனால் எதிர்மறை பொருள் தருகிறது.//
மாற்றி விட்டேன்.
நீங்கள் நலமா! தொடர்பு கொண்டு நீண்ட நாட்களாகிறது. உங்களின் பதிவுகளை அதிகம் காண முடிவதில்லையே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஐயா சுவனப்பிரியன் அவர்களே இராஜராஜசோழன் நடத்தையில் சில குறைகள் இருந்திருக்கலாம். அவர் ஒரு சிறந்த சாதனையாளர் என்றுதான் போற்றப்படுகிறார. உலகிற்கு வழிகாட்டு நற்பண்புக்கு உத்தம உதாரணம் இறைவனின் தூதர் என்று யாரும் புகழவில்லை.சிறப்புக்களும் குறைகளம் நிறைந்தவரதாம்.தாங்கள் முகம்மது தவறு செய்தால் இராஜராஜசோழனோடு ஒப்பிட்டு தவறோடு ஒப்பிட்டு நியாயப்படுத்தவது நியாயமா ? முகம்மதுவின் நடத்தையை நியாயப்படுத்த சோழனின் நடத்தையை சுட்டிக்காட்டுவது தவறு. தன்னிலையிலேயே நடத்தைகள் சிறந்தவைகளாக இருக்க வேண்டும்.முகம்மதுவிடம் பலகுறைகள் உள்ளன.
Post a Comment