நமது நாடு பல ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி விட்டது. செலுத்திக் கொண்டும் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியப்படுகிறது? பல வருடங்களாக அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தனர். பிறகு பல கோள்களையும் கண்டு பிடித்தனர். அதன்பிறகு மனிதன் ராக்கெட்டுகளை கோள்களுக்கு அனுப்ப முயற்ச்சிக்கிறான். எப்படி முயற்ச்சிக்கிறான? பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக சக்தியை ராக்கெட்டுக்கு செலுத்தி விண்ணில் ஏவுகிறான். அப்பொழுது ராக்கெட்டின் வேகம் வினாடிக்கு ஏழு மைல்களாக இருக்க வேண்டும். இந்த வேகத்தில் சற்றே குறைந்தால் கூட புவியீர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப் பட்டு ராக்கெட் பூமியின் மீது விழுந்து சிதறி விடும். இப்படி ஒரு திட்டமிட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்க்கு நமது விஞ்ஞானிகள் எவ்வளவு உழைத்திருப்பார்கள்?
முழு உலகோடு ஒப்பிடும் போது கடுகை விட சிறிய அளவுதான் நமது பூமி. இந்த பூமியின் ஈர்ப்பு சக்தியை வென்று மேலேற நமக்கு பல ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. சரி. இப்பொழுது பெரு வெடிப்பு கொள்கைக்கு வருவோம். பெரு வெடிப்பு நிகழ வேண்டும் என்றால் அதற்கு முன்னால் நாம் ராக்கெட்டுகளுக்கு செய்த ஆராய்ச்சிகளைப் போல் பல மடங்கு ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். மேலும் பெரு வெடிப்புக்கான தொடக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈர்ப்பு விசையை கணித்து பேரண்டத்தின் தொடக்க வேகத்தை நிர்ணயித்தது யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
கடவுள் மறுப்பாளர்கள் பெரு வெடிப்பு தான் உலகின் ஆரம்பம். அதற்கு முன் எதுவுமே இல்லை என்கிறார்கள். இதை சாதாரண அறிவுள்ள எந்த மனிதனுமே ஒத்துக் கொள்ள மாட்டான். ஏனெனில் பெரு வெடிப்புக்கு முன்பே அதன் ஈர்ப்பு விசையைக் கணித்த ஒருவரால்தான் இப்படிப்பட்ட ஒரு வெடிப்பை நிகழ்த்த முடியும்.
'பெரு வெடிப்பு' என்பது இயற்கையாக நடந்தது என்பார்கள் நாத்திகர்கள்.
இயற்கை என்றால் என்ன? பெரு வெடிப்புக்கு முன்பு ஏது இயற்கை?
இயற்கை என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். பொருள் இல்லையேல் இயற்க்கையும் இல்லை.பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை என்றால் அங்கு இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? நாத்திகர்கள் அதை இயற்கை என்கிறார்கள். ஆத்திகர்கள் அந்த சக்தியை இறைவன் என்கிறார்கள். இதில் எவருடைய நம்பிக்கை சிக்கல் இல்லாமல் சிந்தனை ஓட்டத்துடன் இருக்கிறது என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.
'பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு வினாடிககுப் பிறகு பேரண்டத்தின் விரிவாற்றல் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் பாகங்களில் ஒரு பாகம் அளவு சிறியதாக இருந்திருந்தால் கூட பேரண்டம் இன்றைய நிலையை அடையாமல் தொலைந்து போயிருக்கும்.' அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.
-A BRIEF HISTORY OF TIME (PAGE 128)
இவ்வளவு பெரிய வேலையை நுணுக்கமாக யார் செய்திருக்க முடியும் என்று வியந்து போகிறோம். எதற்காக செய்ய வேண்டும்?
“It would be very difficult to explain why the universe should have begun in just this way, exepts as the act of a God who intented to create beings like us.” (Page 134)
'நம்மைப் போன்ற உயிரினங்களைப் படைக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள ஒரு இறைவனின் செயலைத் தவிர பேரண்டம் ஏன் இந்த விதத்தில் துவங்க வேண்டும் என விளக்குவது மிகக் கடினமாகும்.'
இந்த ஆய்வில் நாம் பார்த்த அனைத்தையும் தெளிவாக ஹாக்கிங் விளக்குகிறார். நாத்திகர்கள் அனைத்தும் இயற்கை என்று சொல்லும் போது அறிவியல் அறிஞர் ஹாக்கிங் இது இறைவனின் செயல்தான் என்ற முடிவுக்கு வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயமாக அதை நாம் விரிவாக்கம் செய்வோம்' - குர்ஆன் (51:47)
தகவல் உதவி
'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்'
6 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
//பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை என்றால் அங்கு இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? புவி ஈர்ப்பு விசையை கணித்து பேரண்டத்தின் தொடக்க வேகத்தை நிர்ணயித்தது யார்?//
--நாத்திகர்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு சிந்திக்க வைக்கும் கேள்விகளை வைத்துள்ளீர்கள்.
ஆனால், அவர்கள், பதில் என்ற பெயரில் எதையாவது கூறாமல் ஆழ்ந்து சிந்தித்து விடை காண வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
//வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை (திருக்குர்ஆன் 21:16-ன் கருத்து).//
//அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா...(திருக்குர்ஆன் 21:16-ன் கருத்து)//
//நிச்சயமாக, இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.(திருக்குர்ஆன் 15:75-ன் கருத்து)//
வஅலைக்கும் ஸலாம்(உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!)
சகோ... முஹமது ஆசிக்!
//ஆனால், அவர்கள், பதில் என்ற பெயரில் எதையாவது கூறாமல் ஆழ்ந்து சிந்தித்து விடை காண வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.//
ஆனால் இது போன்ற சிந்திக்க வைக்கக் கூடிய பதிவுகளுக்கு மட்டும் கழுவிய மீனில் நழுவிய மீன் போல் பின்னூட்டம் அளிக்காமல் 'எஸ்கேப்' ஆகி விடுவார்கள். அவர்கள் நேர்வழி பெற நாம் பிரார்த்திப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சார்வாகன்!
//1. ஜிஸ்யா வரி வசூலித்தல் அப்போது மட்டும் சரியா இல்லை எபோதும் எங்கேயும் சரியா?//
ஜசியா வரி ஏன் எதற்கு என்று என் பதிவில் விளக்கமாக கொடுத்திருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறை சட்டம் என்பது எக்காலத்துக்கும் பொருந்தி வர வேண்டும். எனவே உலக முடிவு நாள் வரை இந்த சட்டம் மாற்றப் படாது.
//2.ஒரு மத ஆட்சி நடக்கும் நாடுகளில் பிற மதத்தினர் மீது மட்டும் ஜிஸ்யா வரி இப்போதும் நடைமுறையில் உள்ளதா?.//
இல்லை.
//முகலாயர்கள் அகண்ட பாரதம் ஏற்படுத்தவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் இந்தியாவுக்கு வந்தனர். அதோடு சமண சமயத்தை காப்பாற்றவேண்டும் என்ற இலட்சியமும் இருந்திருக்கு. பிரிட்டிசார்தான் வியாபாரத்திற்காக வந்தனர். முகலாயர்கள் நல்லவர்கள்.//
அவர்கள் வந்த நோக்கம் வேறாக இருந்தாலும், அதனால் நமது நாட்டுக்கு நன்மைதானே கிடைத்திருக்கிறது. அவர்களை பாராட்ட வேண்டாம். தூற்றாமலாவது இருக்க வேண்டும். வரலாற்றில் பொய்களை ஏற்ற வேண்டாம் என்றுதான் நான் சொல்ல வந்தது. மதத்தின் பெயரால் மனிதர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதப்படுத்தலை எதிர்த்து வர்ணாசிரமத்திற்கு சரியான பதிலடி கொடுத்தவர்களும் மொகலாயர்கள்: இதனாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மது மாதில் திளைத்த மொகலாயர்களையும் நான் கண்டிக்கிறேன். இது போன்ற பாவமான காரியங்களிலிருந்து விலகியிருந்தவர்தான் ஒளரங்கசீப். மக்களின் வரிப் பணத்தில் தனது மனைவிக்கு தாஜ்மஹால் கட்டியதை எதிர்த்துதான் தனது தந்தையையே சிறையில் அடைத்தார் ஒளரங்கசீப்.
சலாம்:
அருமையான, சிந்திக்க வைக்கும் பதிவு
வ அலைக்கும் சலாம்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சாகுல்.
Post a Comment