அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நலமுடன் மன்னர் அப்துல்லாஹ் நாடு திரும்பியுள்ளார். குடிமக்கள் அனைவரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 'தான் நலமுடன் இருப்பதாகவும் நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் முன்பு போல் உற்சாகமாக பணியாற்றுவேன்' என்றும் மக்களுக்கு செய்தி கொடுத்திருக்கிறார் மன்னர். மன்னரின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுவோம். இறைவன் அவருக்கு உடல் நலத்தையும் இறைத் தூதரின் வழிகாட்டுதலையும் முன்புபோல் என்றும் வழங்குவானாக!
அரப் நியூஸில் வந்த ஒரு வாசகர் கடிதம்:
Feb 23, 2011 22:31
My dear Saudis, I watched the arrival of King Abdullah on TV and have to say I never saw something like it. This was so great and touching. Such a reception and such a warm, warm welcome - just beautiful. All his people on the street cheering and it was just beautiful to watch. See, in the West (I am from Germany) you do not see something like that. Nowadays the people rather run from the politican we have. Since today, I envy you for your King Abdullah. He is a great King and thanks to Allah/God that he recovered so fast from his operation. Long live the KING,.
---------------------------------------------------------------------------------
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு உலகக் கல்வியை கொடுத்தது இந்தியாவாக இருந்தாலும், மார்க்க கல்வியை சவூதி அரேபியா வந்துதான் கற்றுக் கொண்டேன். இதற்கு முன்னால் இஸ்லாம் என்றால் தமிழகத்திலுள்ள தர்ஹாக்களும், அங்கு நடக்கும் சந்தனக் கூடு வைபவங்களும் அதை யொட்டி நடக்கும் கச்சேரிகளும்தான் இஸ்லாம் என்று எண்ணியிருந்தேன். இறந்து போனவர்களுக்கு மார்க்க அறிஞரை கூட்டி வந்து பாத்திஹா ஓதுவதும் ஏழாம் நாள், நாற்பதாம்நாள், இறந்தவர் பெயரில் சாப்பாடு ஆக்குவதும் முகமது நபி பெயரில் பாடல்களை பாடுவதும், மீலாது நபி கொண்டாடுவதும்தான் இஸ்லாம் என்று நம்பியிருந்தேன். ஒருமுறை முத்துப் பேட்டை சென்றபோது 60 அடியில் ஒருவரை புதைத்து தர்ஹா என்ற பெயரில் கட்டிடத்தையும் எழுப்பியிருந்தார்கள். தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்து 1000 வருடங்கள்தான் ஆகிறது. இந்த கால கட்டத்தில் இவ்வளவு உயரமாக எந்த மனிதனும் இருந்திருக்க முடியாது. பிறகு எவ்வாறு இந்த சமாதியை உண்டாக்கினார்கள் என்ற கேள்வி என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கேள்வி கேட்டால் இறைவன் கோபித்துக் கொள்வானோ என்று நினைத்து யாரிடமும் கேட்பது கூட இல்லை.
ஆனால் சவுதி வந்தவுடன் நான் தமிழகத்தில் பார்த்த அத்தனை காட்சிகளுக்கும் நேர்மாறாக சவுதிகளின் நடவடிக்கையை பார்த்தேன். இங்கு எந்த இடத்திலும் தர்ஹாவின் சுவடு கூட தெரியவில்லை. முகமது நபியைக் கூட மண்ணைக் கொண்டுதான் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். யாரும் முகமது நபியின் அடக்கத்தலத்தைப் பார்த்து பிரார்த்தனையில் ஈடுபட்டால் அருகில் இருக்கும் காவலர் வந்து பள்ளியில் சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அவர்களை பணிப்பதை பார்த்தேன். முகமது நபி பிறந்த இந்த நாட்டில் மீலாது நபி கொண்டாடப்படுவதில்லை. அவரை வாழ்த்தி குறிப்பிட்ட நாட்களில் புகழ்பாக்களும் பாடப்படுவதில்லை. ஆனால் அவர் எதை எல்லாம் இஸ்லாம் என்று சொன்னாரோ அதை நடை முறை படுத்தி வருகின்றனர் சௌதிகள். ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் அனைத்து பள்ளிகளிலும் கார்கள் அணிவகுத்து நிற்கும். சில நேரங்களில் பள்ளியின் அருகில் பார்கிங் கிடைக்காமல் பலரும் திண்டாடுவதை பார்க்க முடியும். தொழுகை நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. ஒரு ஜிஎம்ஸி வண்டியில் 'தொழுகை நேரம் வந்து விட்டது. தொழுகைக்கு வாருங்கள்' என்று சொல்லிச் செல்லும் முத்தவாக்களை(அழைப்புப் பணியில் ஈடுபடுவோர்)பார்க்க முடியும்.
இது எல்லாம் அன்று எனக்கு புது அனுபவங்கள். இஸ்லாத்தின் மேல் பிடிப்பு இல்லாமல் இருந்த எனக்கு பிறகு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலிட தொடங்கியது. அரசு நடத்தும் 'அழைப்பு வழிகாட்டல் மையத்தில்' சேர ஆரம்பித்தேன். ஆசிரியர்களாக நிறைய இலங்கை தமிழ் முஸ்லிம்கள். பல சந்தேகங்களும் தெளிவடைந்தது. சில சந்தேகங்களை திரு பி.ஜெய்னுல்லாபுதீனுடன் தொலை பேசியிலும், புத்தகங்கள் ஒலி,ஒளிநடாக்கள், இணையம் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்.
இந்த மையத்துக்கு ஒருமுறை ம்ன்னரின் உறவினர் அமைச்சர் வலித் பின்தலாலின் தம்பி வருகை புரிந்தார். உலகிலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவரின் தம்பி எங்களோடு மிகவும சந்தோஷமாக ஐந்து மணி நேரத்தைக் கழித்தார். எங்கள் அனைவரிடமும் கைகுலுக்கி நலமும் விசாரித்தார். 'அழைப்புப் பணியின் அவசியம்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 20 நிமிடம் உரையாற்றினார். சாப்பாட்டு நேரமும் வந்தது. பாதுகாப்பு காரணம் கருதி அவருக்கு சாப்பாடு தனியாக ஒரு இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 'இது அரசு விழா அல்ல....மார்க்கம் சம்பந்தப் பட்ட விழா' என்று கூறி நாங்கள் ஐந்து ஐந்து பேராக உட்கார்ந்த இடத்தில் அவரும் வந்து உட்கார்ந்து கொண்டார். நாங்கள் கை வைத்த சாப்பாட்டின் கறியின் சில பகுதிகளை அவரும் கை வைத்து மிகவும் ருசித்து சாப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற ஒரு நிலை மக்களாட்சி நடக்கும் நம் நாட்டில் கூட காண்பது அரிது. இங்கு மன்னராட்சி நடந்தாலும் ஒரு மக்களாட்சியில் என்ன ஒரு குடிமகனுக்கு கிடைக்க வேண்டுமோ அது அனைத்தும் தாராளமாக கிடைக்கிறது. எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மைபயக்கக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்.
பஹ்ரைனில் கூட மன்னருக்கு ஆதரவாக இந்தியர்களும்,பாகிஸ்தானிகளும், பங்களாதேஷிகளும் களத்தில் நேற்று இறங்கி இருப்பதாக செய்திகள் வருகிறது. நம் தூதரகம் தடுத்தும் நம் மக்கள் மன்னருக்கு ஆதரவாக அணி திரளுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை வருடம் குடும்பத்தோடு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதி வாழ்க்கை வாழும் இந்தியர்கள் இங்கு ஜனநாயகம் மலர்வதை விரும்பவில்லை என்பதை கவனிக்கவும்.
துனீஷியா,எகிப்து,லிபியா போல் சவுதியிலும் புரட்சி வராதா என்று இஸ்லாமிய எதிரிகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். துனீஷியா,எகிப்து,லிபியா,ஏமன் போன்ற நாடுகளையும் சவுதி போன்ற நாடுகளையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க முடியாது. அங்கு மக்கள் அரசை எதிர்த்தார்கள். சவுதி அரேபிய மக்களோ மன்ரையும் அரசையும் மதிக்கிறார்கள். எனவே இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட இந்த மன்னராட்சி அவசியம் இந்த நாட்டுக்கு தேவை. மன்னர் அப்துல்லாவுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் இஸ்லாமிய வழியில் என்றும் நிலைத்து நின்று சிறந்த ஆட்சியை குழப்ப மற்ற ஆட்சியை இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
'இறைவா! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.' - குர்ஆன் 3:26
7 comments:
ஹ்ம்ம்... யோசிக்க வைக்கும் பதிவு. இந்த கண்ணோட்டத்தில் சவுதியாவை நான் பார்த்ததில்லை. அங்கே இருந்து இங்கே(USA) வந்து இஸ்லாத்தை ஓரம் கட்டிவிட்டு திரியும் சவுதிகளை பார்த்து அதிகம் கோபப்பட்டதுதேன் மிச்சம்!!
சகோ. அன்னு!
//அங்கே இருந்து இங்கே(USA) வந்து இஸ்லாத்தை ஓரம் கட்டிவிட்டு திரியும் சவுதிகளை பார்த்து அதிகம் கோபப்பட்டதுதேன் மிச்சம்!!//
வருந்த வேண்டிய விஷயமே! அதே போல் வியாழன் வெள்ளியில் கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத பஹ்ரைனுக்கு சென்று சந்தோஷமாக இருந்து விட்டு வரும் சவுதிகளும் உண்டு. இஸ்லாத்தின் மதிப்பை உணராத இளைஞர்கள் இவர்கள். இவர்கள் திருந்த நாம் பிரார்த்தனைதான் செய்ய முடியும்.
சில இளைஞர்கள் மார்க்கம் சொன்ன அனைத்தையும் ஒனறுவிடாமல் கடைபிடித்து சிறந்த முஸ்லிம்களாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//இறைவன் அவருக்கு உடல் நலத்தையும் இறைத் தூதரின் வழிகாட்டுதலையும் முன்புபோல் என்றும் வழங்குவானாக!//--ஆமீன்...
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்லதொரு பதிவு,
சகோ.சுவனப்பிரியன்.
பொதுவாய் சவூதியில் ஏராளமாய் உள்ள நல்ல விஷயங்கள் மறைக்கப்படும். அல்லது கெட்ட விஷயங்கள் மட்டுமே பூதாகரப்படுத்தப்படும்.
மன்னர் அப்துல்லாவும்
அவரது அமைச்சர்களும்
இஸ்லாமிய வழியில் என்றும் நிலைத்து நின்று
சிறந்த குழப்ப மற்ற ஆட்சியை
மக்களுக்கு வழங்க வேண்டும்
என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இஸ்லாம் மார்க்கம் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவே உங்க பக்கம் முதல்முறையாக வந்தேன்.
சகோ. ஆஷிக்!
நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
//பொதுவாய் சவூதியில் ஏராளமாய் உள்ள நல்ல விஷயங்கள் மறைக்கப்படும். அல்லது கெட்ட விஷயங்கள் மட்டுமே பூதாகரப்படுத்தப்படும்.//
உண்மைதான்! பாகிஸ்தானில் திருந்தாத சில கைதிகளை அரசு செலவில் சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்று எனது பாகிஸ்தானிய நண்பர் சொன்னார. காரணம் இங்குள்ள கட்டுப்பாடுகள். மனிதன் தவறு செய்வதற்கு அதிகம் சந்தர்ப்பங்கள்தான் காரணமாகின்றன. இங்குள்ள கட்டுப்பாடுகள் அவர்களை தானாகவே திருந்த வைத்து விடும். முஸ்லிம்களில் பலர் சவுதி வந்தவுடன் தொழுகை நோன்பு போன்ற விஷயங்களில் மிகவும் பேணுதலாக இருப்பதை பார்க்கிறோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாங்க லட்சுமி அவர்களே!
//இஸ்லாம் மார்க்கம் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவே உங்க பக்கம் முதல்முறையாக வந்தேன்.//
நான் இணைய தளத்தில் எழுதுவதே உங்களைப் போன்ற மாற்றுமத சகோதர சகோதரிகளுக்காகத்தான். ஏனெனில் அந்த அளவு ஊடகத்துறையால் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நான் எழுதும் போது கூட அரபி வார்த்தைகளை அதிகம் தவிர்த்துக் கொள்வது உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்க்காகத்தான். அடிக்கடி வாருங்கள். நான் ஏதும் தவறுதலாக எழுதியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்
இஸ்லாம் குறித்த தங்களது ஐயங்களை எனக்கும் அனுப்பலாம் (aashiq.ahamed.14@gmail.com). உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடிய கல்வி ஞானத்தை இறைவன் எனக்கு அளித்திருந்தால் பதில் எழுதி அனுப்புகின்றேன். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Post a Comment