பெரியார் 1931 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கின்றார். மறுநாள் தந்தை பெரியார் அவர்களிடம் சிலர் கேள்வி கேட்டனர்.
இஸ்லாமியர்கள் மக்காவுக்குச் செல்கிறார்களே அது மூடநம்பிக்கை இல்லையா? காசி, ராமேஸ்வரம் போவதை மட்டும் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறீர்களே என்று கேட்டார்கள். பெரியார் அவர்களிடம் மூடநம்பிக்கைகளைப் பற்றிக் கூறினார்.
பிறகு ஒருமுறை ஈரோடு வந்த அப்துல் சமது அவர்களுடைய தகப்பனார் மவுல்வி அப்துல் ஹாஜி அவர்களிடம் பெரியார் இது பற்றி என்ன கருத்து சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது மவுல்வி அப்துல் சாகிப் சொன்னார். மக்கா என்பது புனிதத் தலம் அல்ல. மகம்மது நபி பிறந்த இடம். அது ஒரு வரலாற்றுச் சின்னம். அந்த வரலாற்றுச் சின்னத்தைப் பார்க்கவும், நடை, உடை, நாகரிகம் இவைகளைப் பார்த்து வரத்தான் செல்கிறார்கள். இதைத்தாண்டி யாராவது புனிதத்தலம் என்று சென்றால் அது அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டும் என்று பதில் சொன்னார்.
-மீலாது மாநாட்டில் திரு கி. வீரமணி அவர்களின் உரை. 14-02-2011
தமிழ் ஓவியா வின் பதிவில் இந்த செய்தி வந்ததும் நான் முன்பு செய்த ஹஜ் கடமைகள் எனக்கு ஞாபகம் வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நாங்கள் அனைவரும் சவூதி அரசாங்கம் நடத்தும் 'இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டுதல் மையம்' சார்பாக ஹஜ் பயணத்தை தொடங்கினோம். எங்கள் குரூப்பில் சரவணன்(அப்துல்லா), பிரசாத்(சாத்) மற்றும் 20 சவூதிகள்,40 பிலிப்பைனிகள், மற்றும் பாகிஸ்தான் இந்தியர்கள் என்று ஐந்து வேன்களில் புறப்பட்டோம். இதில் சரவணன் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். மீசை கூட இன்னும் சரியாக முளைக்கவில்லை. சவூதி வந்தவுடன் இங்குள்ள வாழ்க்கை முறையைப் பார்த்து விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். வழியில் அவர் தாய் தனக்கு எழுதிய கடிதத்தைக் காண்பித்தார். அதில்'சரவணா! என்னடா இப்படி பண்ணிட்டே! நான் உன்னை பெற்ற அம்மாடா! எங்களை எல்லாம் விட்டுட்டு போய்டுவியாடா? தீவிரவாதியாகவெல்லாம் மாறிடாதேப்பா!.........' என்று எழுதிய கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்கும் அந்த தாயின் மன நிலையைப் பார்த்து சங்கடமாக இருந்தது. பத்திரிக்கைகளும் சினிமாக்களும் இஸ்லாம் என்றால் 'தீவிரவாதம்' என்ற கருத்தை எந்த அளவு விதைத்திருக்கிறார்கள் என்பதை அந்த தாயின் கருத்திலிருந்து தெரிந்து கொண்டேன். 'சரவணா! நீ இஸ்லாத்துக்கு வந்தாலும் உன் தாயின் அன்பை இழக்கக் கூடாது. அவர்கள் உன்னை ஆளாக்கியவர்கள். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நீ கண்டிப்பாக செய்ய வேண்டும். முகமது நபியும் அதைத்தான் வலியுறுத்துகிறார்' என்றேன். 'கண்டிப்பாக! நான் என் பெற்றோரை விட்டு விட மாட்டேன்' என்றார் சரவணன்.
இனி ஹஜ்ஜில் உள்ள சில செய்கைகளையும் அது எவ்வாறு மனிதனின் எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தகிறது என்பதையும் பார்க்கலாம்.
1.ஆபிரஹாமின் மகன் இஸ்மாயிலுக்கு தண்ணீர் தேடி இரண்டு மலைகளுக்கு இடையே ஓடுகிறார் அன்னை ஹாஜர். அதை நினைவு படுத்தும் முகமாக இரண்டு மலைகளுக்கு இடையில் உலக மக்கள் அனைவரும் ஓட வேண்டும்.
ஒரு தாய் அன்று தண்ணீர் இல்லாமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை உலக மக்கள் உணருவதற்காக நீங்களும் ஓடுங்கள் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் 24 மணி நேரமும் இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடி அதை இன்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
2.முஜ்தலிஃபா என்ற இடத்தில் ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டும். அதுவும் திறந்த வெளியில் தங்குவது சிறப்பு.
இங்கு எங்களோடு வந்த சவூதி கோடீஸ்வரர்களும் எங்களோடு ஒன்றாக திறந்த வெளியில் பனியில் தூங்கியது புதிதாக வந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. பிலிப்பைனிகள் இந்த செய்கைகளை எல்லாம் பார்த்து ஆச்சரியமடைந்தனர். ஏஸி,பஞ்சு மெத்தைகள்,பணிவிடைக்கு பல ஆட்களும் வைத்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழும் இவர்களை நாங்கள் தூங்குவது போல் காலி மைதானத்தில் தூங்க வைத்து அதன் சிரமங்களை உணர வைத்தது இந்த கடமை.
3.அரஃபா மைதானத்தில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுதல்.
ஹஜ்ஜூக் கடமைகளில் மிக முக்கிய இடத்தை வகிப்பது அரஃபாவில் பெரும் மைதானததில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுவது. இங்கு வெயிலில் மலைகளின் மேல் நின்று பலரும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இறைவன் இங்கு கேட்கும் பிரார்த்தனைகளை உடன் அங்கீகரிக்கிறான் என்பதால் பலரும் பலமணி நேரம் நின்று அழுது பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அவர்களில் வயதானவர்கள் பலரும் களைப்புற்று விடுவார்கள் என்பதால் தண்ணீர்,மோர்,ஜூஸ் போன்ற பானங்களை இலவசமாக மக்களுக்கு அங்கு அரசும் வினியோகிக்கும். எங்கள் குரூப்பில் பல செல்வந்தர்கள் நன்கொடையாக 7000 ரியால்(80000 ரூபாய்) இதற்காக தநதனர். அந்த பணத்தில் பானங்களை வாங்கிக் கொண்டு எங்களில் 10 பேர் இலவசமாக வினியோகிக்க கிளம்பினோம். சரவணனும் கூட வந்தார். சிறு வயது என்பதால் மலைகளின் மேல் அங்கும் இங்கும் ஓடி அவர் பல வெளிநாட்டவருக்கும் பானங்களை வினியோகித்தக் காட்சி சிறப்பாக இருந்தது. 'முகமது நபி நின்று பிரார்த்தித்த இடத்தில் நானும் நின்று பிரார்த்திப்பதை நினைத்து பெருமையடைகிறேன்' என்றார் சரவணன்.
4.கஃபாவை ஏழு முறை வலம் வர வேண்டும்.
வாகனம் இல்லாமல் நடந்து செல்வது எந்த அளவு சிரமத்தை கொடுக்கும் என்பதை உணரும் முகமாக இறைவனின் பெருமையை உரத்த குரலில் கூறி அனைவரும் ஏழு முறை கஃபாவை சுற்றி வர வேண்டும். இது போல் இரண்டு மூன்று தடவைகள் ஒவ்வொரு ஹாஜிகளும் செய்ய வேண்டும். மொத்தத்தில் அனைவரும் தங்களின் உடல் உழைப்பை ஒரு வித சந்தோஷத்தோடு செய்வதைப் பார்க்கலாம். மிகவும் வயதானவர்கள் இவ்வளவு தூரம் நடக்க சிரமிருந்தால் அதற்காக பணம் கொடுத்து ஆட்களையும் நியமித்துக் கொள்ளலாம்.
5.கைகளால் நெய்யப்பட்ட வெள்ளை துண்டுகள் இரண்டை ஆண்கள் மேலும் கீழும் உடுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் சாதாரண உடையிலேயே இருக்கலாம்.
வெள்ளையன்,கறுப்பன்,ஆசியன்,ஆப்ரிக்கன்,ஐரோப்பியன் என்று அனைவரும் நெய்யப்படாத இரண்டு ஆடைகளை மேலும் கீழும் உடுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம். எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இங்கு கிடையாது என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. தொழும் போது ஆப்ரிக்கனின் காலடியில் ஐரோப்பியனின் தலை இருக்கும். ஒருநாள் ஐந்து வேளையும் ஒருவன் தொழுதால் தான் என்ற கர்வம் அவன் மனதிலே எழுமா? இந்த தொழுகைதான் முஸ்லிம்களை வர்ண பேதம் பார்க்காமல் தடுத்து வைக்கிறது.
6.மினாவில் மூன்று நாள் தங்க வேண்டும்.
கூடாரம் அடித்து மூன்று நாட்கள் இங்கு தங்க வேண்டும். தொழுகைக்கு பிறகு ஒரு பிலிப்பைனியை பேச சொன்னார்கள். 'நான் போதையிலும நைட் கிளப்புகளிலும் எனது நேரத்தை பிலிப்பைனில் செலவிட்டேன். எனது அம்மாவை சில நேரங்களில் அடித்தும் இருக்கிறேன். இன்று நான் ஒரு புது மனிதன். நான் ஒரு புது மனிதன் என் தாயே என்னை நீ மன்னிப்பாயா...' என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே அழ ஆரம்பித்து விட்டார். ஆயிரக்கணக்கான நபர்களிடமிருந்தும் எந்த சப்தமும் இல்லாமல் நிசப்தமே நிலவியது.
இந்த செய்கைகளை எல்லாம் பிரசாத்(சாத்) உன்னிப்பாக கவனித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ஒரு சாஃப்ட் வேர் இன்ஜினியர். இவருடைய தாய் ஹார்ட் பேசண்ட் என்பதால் இதுவரை தான் முஸ்லிமாக மாறியதை வீட்டுக்கு தெரிவிக்கவில்லை. இரண்டு முறை ஊருக்கு சென்று வந்து விட்டாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஊருக்கு சென்றால் ரூமை தாளிட்டுக் கொண்டுதான் தொழுது கொள்வார். அம்மாவோடு கோவிலுக்கு சென்று விட்டு அந்த நேரத்தில் ஏதாவது சாக்கு சொல்லி விட்டு விக்கிரகங்களை வணங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்வார். ஒரு அண்ணன் டாக்டர்.தங்கை டீச்சர். மிகவும் ஆச்சாரமான குடும்பம். தங்கையின் கல்யாணம் முடிந்து அம்மாவையும் சரி செய்தவுடன்தான் தனது கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன் என்று என்னிடம் சொன்னார். கம்பெனி மாற்றலாகி மலேசியா சென்று விட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று தெரியவில்லை. சிலருக்கு இந்த இஸ்லாம் பரம்பரையில் இலகுவாக கிடைத்து விடுகிறது. சாதைப் போன்றவர்கள் இந்த மார்க்கத்துக்குள் நுழைவதற்காக எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன். ஒரு தலைமுறை மட்டும் இவரைப் போன்றவர்களுக்கு மிகுந்த சோதனைக் காலம். இவருடைய வாழ்வும் சரவணன்(அப்துல்லா) உடைய வாழ்வும் பெற்றோரையும் அனுசரித்து தனது மார்க்கத்திலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும். நாமும் பிரார்த்திப்பொம்.
நம் நாட்டில் வீடற்ற ஏழைகள் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டு உடல் உழைப்பையும் கொடுத்து ரோட்டோரத்தில் சுருண்டு படுத்து கிடப்பார்கள். இது போன்ற ஏழைகளின் உழைப்பும், அசதியும், சுகாதாரக் குறைவும்,தூக்கமும்,பசியும் எப்படி இருக்கும் என்பதை செல்வந்தர்களும் உணர வேண்டும், உலக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதையும் உணர வேண்டும், ஆபிரஹாமின் வழித் தோன்றல்கள் பட்ட கஷ்டங்களை உணர வேண்டும் என்பதற்காகவுமே இத்தகைய வணக்கங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அத்தகைய நன்மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!
அகிலத்தின் நேர் வழிக்காகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமெ இப்றாஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.
-குர்ஆன் 3:96,97
51 comments:
அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு. அந்த பிளிபினி சகோதரர் அவரது தாயிடம் நேரிலோ அல்லது
தொலைபேசிஎளோ மன்னிப்பு கோருவது நலம்.
LABBAIK ALLAHUMMA LABBAIK
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் கிருபையும் உண்டாவதாக..
உங்கள் பதிவு என்னை உணர்ச்சி வயப்பட வைத்து விட்டது. எவ்வளவு மகத்தான ஒரு வாழ்க்கை நெறி. எவ்வளவோ எழுத நினைக்கிறேன், ஆனால் இப்போது ஏலாது போலிருக்கிறது. நான் அனானி அல்ல; நானும் ஒரு பதிவரே. ஸாரி இப்போது விரிவாக எழுத நேரமில்லை.
சகோ.சுவனப்பிரியன்,
மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு. மனதை என்னமோ பண்ணி விட்டது.
என்னுடன் பணிபுரிந்த இபுராஹீம்(ஆச்சார சவுராஷ்டிராவிலிருந்து முஸ்லிம் ஆகியவர்) நியாபகம் வருகிறது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார்.
இளம் வயதில் நாங்கள் எல்லாம் 'பெப்சி உங்கள் சாய்ஸ்'-ற்காக சன் செய்தியில் உட்கார்ந்திருக்க, அவர் தலைப்புச்செய்தி முடிந்ததுமே டிவி ஹாலை விட்டு இஷா தொழுக பள்ளிக்கு ஓடிவிடுவார்.
புதிதாக மனம் கவர்ந்து முஸ்லிம் ஆவோர்களின் இஸ்லாமிய ஈடுபாடு பரம்பரையாய் முஸ்லிமாக இருபோரைவிட சற்று அதிகமாய்த்தான் இருக்கிறது.
இதனால் விளைந்த குடும்பபிரச்சினையினால் ரொம்ப கஷ்டப்பட்டார் தன் வாழ்க்கையில். பலத்த எதிர்ப்புக்குப்பின் கடைசியில் தம்மைப்போன்றே கிருத்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய ஒரு சகோதரியை மணந்து கொண்டார்.
இவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விலகி ஓடினாலும் இவர்களாக வலிந்து சென்று அவர்களை எல்லாவிதத்திலும் இன்முகத்துடன் கவனித்துக்கொள்கின்றனர்.
'இன்ஷாஅல்லாஹ், எங்கள் அன்பின்மூலம், கோபமடைந்திருக்கும் எங்கள் பெற்றோரிடமும் மனமாற்றம் வர வைத்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் அழைப்பதே எங்கள் லட்சியம்' என்று இருவருமே சொல்லி அதன்படி வாழ்வது மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஹஜ், ரமலான் மாதங்கள் அல்லாத வியாழன் வெள்ளி அல்லாத சாதாரண ஒரு நாளில் எடுக்கப்பட்ட கஃபா தொழுகை (லுஹர்/அசர்) புகைப்படம் இதுவரை நான் எங்குமே பார்க்காதது. அருமை.
நூருல் ஹஸன்!
//அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு. அந்த பிளிபினி சகோதரர் அவரது தாயிடம் நேரிலோ அல்லது
தொலைபேசிஎளோ மன்னிப்பு கோருவது நலம்.//
கண்டிப்பாக கேட்டிருப்பார். இவரைப் போல் இன்னும் பல பேர் தங்கள் அனுபவத்தை சொன்னார்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாறாகவே இருந்தது. சாப்பாட்டு நேரம் வந்தும் பேச்சைக் கேட்கும் ஆவலில் அனைவரும் எழும்பவே இல்லை.
அனானி!
//உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் கிருபையும் உண்டாவதாக..
உங்கள் பதிவு என்னை உணர்ச்சி வயப்பட வைத்து விட்டது. எவ்வளவு மகத்தான ஒரு வாழ்க்கை நெறி. எவ்வளவோ எழுத நினைக்கிறேன்,//
உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். பல விதத்திலும் நடைமுறையில் சிரமங்களை அனுபவிக்கும் அவர்களின் வாழ்வு சிறப்புற பிரார்த்திப்போம்.
நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுங்கள்.
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி ஆதம்.
சகோதரர் ஆஷிக்!
//புதிதாக மனம் கவர்ந்து முஸ்லிம் ஆவோர்களின் இஸ்லாமிய ஈடுபாடு பரம்பரையாய் முஸ்லிமாக இருபோரைவிட சற்று அதிகமாய்த்தான் இருக்கிறது.//
இதை பல இடங்களில் நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். நாங்கள் அசதியில் சில நேரம் எழும்ப நேரமானால் எங்களை தொழுகைக்கு எழுப்புவதே சரவணன்(அப்துல்லா)தான். தொழுவதில் அவருக்கு அவ்வளவு ஆனந்தம். பழைய முஸ்லிம்கள் புதிய முஸ்லிம்களோடு திருமண உறவு வைத்துக் கொள்வதில் இன்னும் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். முன்புக்கு இப்பொழுது நிலைமை நிறைய மாறி இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சகோதரர் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்ஹம்துலில்லாஹ்...
------
தொழுகைக்கு பிறகு ஒரு பிலிப்பைனியை பேச சொன்னார்கள். 'நான் போதையிலும நைட் கிளப்புகளிலும் எனது நேரத்தை பிலிப்பைனில் செலவிட்டேன். எனது அம்மாவை சில நேரங்களில் அடித்தும் இருக்கிறேன். இன்று நான் ஒரு புது மனிதன். நான் ஒரு புது மனிதன் என் தாயே என்னை நீ மன்னிப்பாயா...' என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே அழ ஆரம்பித்து விட்டார். ஆயிரக்கணக்கான நபர்களிடமிருந்தும் எந்த சப்தமும் இல்லாமல் நிசப்தமே நிலவியது.
--------
படித்ததும் கண் கலங்கி விட்டேன்.
என்னுடைய நண்பன் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை தழுவினான். இன்று வரை அவனது குடும்பத்தினர் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை.
என்னுடைய தெரு முனையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ராஜா என்ற சகோதரர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாத்தை தழுவியவர். அவருடைய தாவாஹ்வால் அல்ஹம்துலில்லாஹ் சில மாதங்களுக்கு முன்பு ராஜாவும் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார்.
எனது வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடையில் பணி புரிந்து வந்த சகோதரியை அன்று ஹிஜாபில் கண்ட பொழுது எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஸலாம் சொன்னார். நான் தடுமாறிக்கொண்டே திரும்ப ஸலாம் சொன்னேன். "எப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுகொண்டீர்கள்" என்று கேட்டேன். சில தினங்களுக்கு முன்பு தான் என்று கூறினார். இப்பொழுது மார்க்க கல்வி கற்க மதரசா சென்று கொண்டிருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
என் அருகில் உள்ள இந்த சகோதர/சகோதரிகளுக்காக துவா செய்யுங்கள்.
இதிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு உண்மை என்னவென்றால், குரான் சுன்னாஹ் படி ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்தாலே அது பலரையும் இஸ்லாம் என்றால் என்னவென்று அறிய தூண்டும் என்பதுதான்.
இந்த காரணத்தினாலேயே, பித்அத்களில் ஈடுபட்டு மூட நம்பிக்கைகளில் புரண்டு கடக்கும் முஸ்லிம்களை நினைத்தால் வருத்தம் வருகின்றது. அவர்கள் மட்டும் இஸ்லாம் கூறியப்படி வாழ்ந்தால் இஸ்லாம் இன்னும் வேகமாக பலரையும் சென்றடையும்.
இன்ஷா அல்லாஹ் நம்முடைய அழைப்பு பணியை இதே வீரியத்தோடு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்...
அருமையான ஒரு பகிர்வுக்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஆஷிக் அஹமத்!
உங்கள் மீதும் உங்கள் நண்பரின் குடும்பத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். உங்கள் நண்பரின் வாழ்வில் வசந்தம் வீச நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//என்னுடன் பணிபுரிந்த இபுராஹீம்(ஆச்சார சவுராஷ்டிராவிலிருந்து முஸ்லிம் ஆகியவர்) நியாபகம் வருகிறது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். //
அஸ் ஸலாமு அலைக்கும் சகோ முஹம்மது ஆஷிக்,
அவருக்கு ஒரு பெண் குழந்தையோ?? அவர் கிருத்துவத்திலிருந்து அல்ல, இந்துத்துவத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறிய சகோ.நூருன் சுல்தானாவை திருமணம் முடித்திருக்கிறாரோ?? என் கணிப்பு சரி என்றால் சகோ. நூர்’ஐ நான் நன்றாக அறிவேன். அவர்கள் இருவரின் இஸ்லாத்தின் மீதான ஈடுபாட்டையும் அறிவேன். எங்களின் ஸலாமை அவர்களுக்கு தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ்.
வ ஸலாம்.
வஅலைக்கும் சலாம்!
சகோ..அன்னு
உங்களின் சந்தேகங்களுக்கு ஆஷிக் வந்து பதிலளிப்பார் என்று நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பானாக
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்...
சகோ.அன்னு...
இன்று சகோ.விற்கு தொலைபேசியபின் அறிந்துகொண்டேன்.
//கிருத்துவத்திலிருந்து//--இது தவறுதான்.
மன்னிக்கவும்.
//என் கணிப்பு சரி என்றால்//--அனைத்தும் மிகச்சரியே.
சகோதரர் ஹைதர் அலி!
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு//
வஅலைக்கும் சலாம்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
குடுகுடுப்பை!
//ராஜராஜன் ஒரு அரசன், முகம்மது கடவுளின் தூதன் இருவரும் ஒன்றாகமுடியுமா? அடிமை முறை பற்றி கடவுள் முகம்மது மூலம் என்ன சொன்னார்?.//
ராஜராஜன் அடிமை முறையை நம் நாட்டுக்கு கொண்டு வருகிறான். பெரிய கோவிலை கட்டியதே அடிமைகளின் உழைப்பை வைத்துதான் என்று வரலாறு கூறுகிறது. முகமது நபி இருந்த அடிமைகளின் வாழ்க்கையை மேம்படுத்தி அவருடைய காலத்திலேயே அடிமைகள் அற்ற சமூகத்தை உருவாக்கி விட்டு செல்கிறார். இரண்டும் ஒன்று என்கிறீர்களா?
'நன்மை தீமை என இரு வழிகளை நாம் மனிதனுக்கு காட்டவில்லையா? அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்று நபியே உமக்கு எப்படி தெரியும்? அடிமையை விடுதலை செய்தலும் நெருங்கிய உறவுடைய அனாதைக்கும் அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தலும்...போன்றவைகளே கணவாய்'
-குர்ஆன்: 90:10,11,12
தீமை என்ற கணவாயைக் கடப்பதில் ஒன்று அடிமையை விடுதலை செய்வது. இது போன்று பல வசனங்கள் உள்ளன.
நோ!
//சமூக நீதி மற்றும் மைனாரிட்டி உரிமை பேசும் அதே கும்பல்கள் அதே மற்ற மைனாரிடிகளின் மேல் இஸ்லாமிய நாடுகள் அவிழ்த்துவிடும் வன்முறையை எப்போதாவது கண்டித்தார்களா என்பதுதான் அது! //
சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் விரும்பும் பர்தாவை தடுப்பதை எதிர்ப்பதற்க்கும் இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்தும் ஒரு இஸ்லாமிய நாடு தனது சட்டத்தை செயல்படுத்துவதற்க்கும் பெருத்த வேறுபாடு உண்டு நண்பரே!
இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்களை திட்டம் போட்டு கொன்று குவித்த நரேந்திர மோடியை எதிர்த்து இதுவரை நீங்கள்(இந்துத்துவா வாதிகள்)ஏன் ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை என்று நானும் எதிர்க் கேள்வி கேட்க முடியும்.
//சும்மா பக்கம் பக்கமாக கிறுக்குவதால் மட்டும் நீங்கள் சொல்லும் "உண்மை" உண்மையாகாது!!!//
அதாவது அந்த உண்மை உங்களை குஷிப்படுத்துவது போல் இருக்க வேண்டும். எப்படியோ உண்மை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
//For the life is so short and the truths are so obvious, the last thing the Human mind wants is an explanation of this wonderfull universe through the rantings of a few medieval men and their meaningless writings.//
நீங்கள் சொல்லும் அதே கருத்தைத்தான் குர்ஆனும் சொல்கிறது.
'நம்பிக்கைக் கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் தமது பிரார்த்தனையில் பணிவைப் பேணுவார்கள். வீணாண பேச்சுக்களைப் புறக்கணிப்பார்கள்'-குர்ஆன் 23:1,2,3
'இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப்பூச்சியைப் போன்றது. அது ஒரு வீடை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலவீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?' -குர்ஆன் 29:41
மனிதர்கள் கிறுக்கி வைத்ததை எல்லாம் விடுத்து குர்ஆன், பைபிள்,தோரா, ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் கூறும் அந்த ஏக இறைவனை வணங்கி மனிதர்களில் பேதங்களை கற்ப்பிக்க வேண்டாம் என்கிறோம்.
///நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக வீற்றிருக்கும் போது ..//
ஏசு தான் பலியிடப்படப் போகும் நேரத்தில் ‘என் ராஜ்யம் இந்த உலகத்தைச் சார்ந்ததல்ல’ என்று கூறியதாக கிறித்துவர்கள் சொல்கிறார்கள்.. நல்ல வசனம் தான்.. இல்லீங்களா? ஏன்னா கடவுளின் / அல்லாவின் வழியைச் சொல்ல வந்தவர் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் முகம்து ஒரு வியாபாரி --> கடவுளின் தூதர் என்ற ‘சுய அறிவிப்பு --> இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்காக பல போர்கள் --> இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவி, “ராஜா” ஆகி விடுகிறார்... இல்லை , சக்கரவர்த்தி!!
முதல் கதை கேட்க நல்லா இருக்கு; இரண்டாவது நிச்சயமாக நன்றாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை!///
நீங்களே அதை கதை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். ஏசுவின் உண்மையான வரலாறை படித்தீர்களென்றால் இன்றுள்ள கிறித்தவ மதமே ஆட்டம் கண்டு விடும். அதற்க்கான ஆராய்ச்சிகள் பல கிறித்தவர்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது. சீக்கிரமே நல்ல செய்திகளை எதிர்பாருங்கள்.
அல்ஹம்துலில்லாஹ் முஹம்மது ஆஷிக் பாய்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மதுல்லாஹ்.
நன்றி. சகோ. நூர்’ஐ நான் பெங்களூரில் peace conventionல் சந்தித்தேன். அவரின் அறிமுகமே என்னை உண்மையான இஸ்லாத்தை சரி வர பேணவும், என் கணவர்(அப்போதைய colleague) இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறவும் காரணமாய் அமைந்தது. அவரின் கல்யாணம் முதற்கொண்டு அதன் பின் இருவரும் எதிர் கொண்ட பல சோதனைகளையும் அறிந்தவள். அல்ஹம்துலில்லாஹ்... தங்களின் மூலம் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ளும் அவகாசம் கிட்டியுள்ளது. நன்றி சகோ.முஹம்மது ஆஷிக், மற்றும் இந்த பதிவின் மூலம் இந்த வாய்ப்பளித்த சகோ.சுவனப்பிரியன். உலகம் எத்தனை சிறியது என்பதை மீண்டும் எனக்கு காட்டியுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
வ ஸலாம்.
நோ!
//Based on what we see today and what we see in people like Mr. Suvanapiriyan, I am starting to think that the likes of Taliban, Osama and Al Qaida are not just aberrations in an otherwise calm environment. Whereas it looks like they are all continuous product of a mind bending machine which has now attained such legitimacy even among so called moderates.
Mr. Suvanapiriyan and others are no blind people. They have not been programmed to rant as they perfectly know what they are doing. Looks like they have taken it to themselves to be a part of such venomous and supremacist critical mass, that rejoices in the claiming such superiority over all others.//
தவறான புரிதல். இதை ஒரு சுவனப்பிரியனை மட்டுமே வைத்து மதிப்பிட வேண்டாம். உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரோ இருவரோ நீங்கள் சொல்வது போல் மூளை சலவை செய்வதாக வைத்துக் கொள்வோம். எத்தனை நாளைக்கு தாங்கும்? எத்தனை நாடுகளை அது சென்றடையும்? சில மாதங்களிலேயே சில நாட்களிலேயே முகமது நபி காலத்திலேயே இஸ்லாம் சரிந்து விழுந்திருக்கும்.
நான் முன்பே சொன்னது போல் முகமது நபி யாரும் சொல்லாத ஒரு புது கருத்தையோ கொள்கையையோ இந்த உலகுக்கு கொண்டு வரவில்லை.நம்நாட்டு இந்து மதம், சிறித்தவ மதம், யூத மதம், போன்றவைகளின் வேதங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அனைத்தின் சாயலுக்கும் கருத்துக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் உணர முடியும். ஒரு சில வேதங்களில் மனிதர்களின் கரம் புகுந்தாலும் இறைவனின் வார்த்தைகளும் ஆங்காங்கே சேர்ந்திருப்பதுதான் இந்த ஒற்றுமைக்கு காரணம்.
அடுத்து இஸ்லாத்தில் தீவிர பற்றுடன் இருந்தால் அவர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை பலரிடமும் தவறாக விதைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை ஒருவன் விளங்க வேண்டிய முறையில் விளங்கி தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த ஆரம்பித்தால் உலகிலேயே சிறந்த மனிதனாக வாழ முடியும். மனதை பக்குவப்படுத்துவதில் இஸ்லாமைப் போன்று வேறு எந்த மார்க்கமும் இந்த அளவு வெற்றியடையவில்லை என்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.
தாலிபான்கள் இஸ்லாத்தை விட்டு என்றோ சென்று விட்டனர் என்று ஆரம்பத்தில் சொல்லியும் இருக்கிறேன். இஸ்லாத்தை சரியான முறையில் விளங்கி செயல்படுத்துவதில் சவுதி அரேபியா முன்னணியில் நின்று வெற்றியும் பெற்றுள்ளதை உதாரணத்திற்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கணேசன்!
//உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரோ இருவரோ நீங்கள் சொல்வது போல் மூளை சலவை செய்வதாக வைத்துக் கொள்வோம். எத்தனை நாளைக்கு தாங்கும்? எத்தனை நாடுகளை அது சென்றடையும்? சில மாதங்களிலேயே சில நாட்களிலேயே முகமது நபி காலத்திலேயே இஸ்லாம் சரிந்து விழுந்திருக்கும்.//-suvanappiriyan
//ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். //
-suvanappiriyan
மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்களும் உங்களுடையதே. இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. பவுலால் 1600 ஆண்டுகள் கிறிஸ்துவர்களை ஏமாற்ற முடியும் என்றால், முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)//
//செம லாஜிக்!//- -தருமி//
இதுல லாஜிக் எங்கே இருக்கிறது? பவுல் கட்டிய கற்பனைக் கோட்டைகள் காலப் போக்கில் சிதைந்ததால்தான் நாத்திகத்திற்கு சென்று கடவுளை மறுத்து பதிவுகளாக எழுதி வருகிறார் தருமி! இந்து மதத்தைப் போலவே கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.
அதே நேரம் இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கு முகமது நபியால் அஸ்திவாரம் பலமாக போடப்பட்டு சென்றதால் சுவனப்பிரியனான நானும் மற்றவர்களும் இறைவனின் பெருமையை பதிவுலகில் பதித்து வருகிறோம். இதில் மட்டும் உண்மை இல்லாமல் இருந்திருந்தால் தருமி, நேசகுமார், ஐக்,நீலகண்டன் போன்றோரின் சாதுர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் இணையத்தை விட்டு என்றோ நான் ஓடியிருப்பேன். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே நேரத்தில் தக்க பதிலை குர்ஆன் வழங்கி வருவதை அனைத்து பின்னூட்டங்களிலும் பார்க்கிறீர்கள்தானே!
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பெயரளவில்தான் உள்ளது. அதற்கு காரணம் ஏசு நாதர் சொன்ன உண்மை மார்க்கத்தை விட்டு பவுலின் மார்க்கத்தை கையில் எடுத்ததன் விளைவை இன்று அனுபவிக்கிறது கிறித்தவ உலகம்.
அதே நேரம் முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட துனீஷியாவிலும் எகிப்திலும் மாற்றங்கள் வந்து விட்டன. இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டு உண்மை முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி வந்திருக்கிறது. மக்களும் அதை விரும்புகிறார்கள். ஏமனிலும், பஹ்ரைனிலும்,ஜோர்டானிலும்,லிபியாவிலும் இஸ்லாத்தின் தாக்கம் ஆடசியாளர்களையே கதிகலங்க வைத்திருக்கிறது. சவூதியைப் போல் அந்த ஆட்சியாளர்களும் குர்ஆனை முதன்மைபடுத்தி ஆட்சி செய்திருந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டிருக்காது.
என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைதி சவூதி ஆட்சியாளர்களின் திறமையினால் வந்தது அல்ல. முற்றிலும் அவர்கள் ஆட்சிக்கு அஸ்திவாரமாக கொண்டிருக்கும் முகமது நபியின் வழிகாட்டுதனால் வந்தது.
Hi Suvanappiriyan sir,
Peace be upon you.
i need your email id. i need to send you some links and emails.
Thanks,
Mohamed
Mr Mohamed!
Peace be upon you.
Nazeer65@gmail.com. This is my ID. Thanks for your comments.
திருச்சிக்காரன்!
//please read as-எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் என்று வாழ்வதையே விரும்புவான். விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!//
ஏதோ பெரிய தத்துவத்தை சொன்னதுபோல் இரண்டாவது முறையாக வேறு குறிப்பிடுகிறீர்கள்? ஐயா...நீங்கள் கடவுளாக வணங்கும் முருகனுக்கு வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவி இல்லையா? பதி விரதன்(?) ராமனின் தந்தைக்கு 6000 மனைவிகளாம். இன்னும் உங்களின் கடவுள் கண்ணபிரான் செய்த லீலைகளை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடவுளுக்கே இந்த கதி என்றால் மன்னர்களையும் மக்களையும் பற்றி சொல்லவே வேண்டாம். ராஜராஜசோழனுக்கு வைப்பாக இருந்தவர்களின் வாரிசுகளுக்கென்றே தஞ்சையில் ஒரு தெருவே இருக்கிறது. நமது முதலமைச்சருக்கு மூன்று மனைவிகள். அதற்கு முன்னால் எம்.ஜி.ஆருக்கு இரண்டு மனைவிகள்.(கணக்கில் வராதது எத்தனையோ...:-)) எனவே இந்த ஆண் பெண் உடலுறவு என்பது எல்லா நாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நானும் தமிழன்தான். எனவே என் இனத்தைப் பற்றி நான் நன்றாகவே அறிவேன். இஸ்லாத்துக்கு மாறியும் கூட தமிழகத்தில் எத்தனை முஸ்லிம்கள் பலதார மணத்தை கடைபிடிக்கிறார்கள்? கணக்கெடுத்தால் நூற்றில் ஒன்று கூட தேறாது. ஆனால் மற்ற சமூகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சின்ன வீட்டு பிரச்னை நீக்கமற நிறைந்திருப்பதை பார்க்கிறோம்.
காரணம் என்ன? இந்து மதம் அனுமதிக்காததால் அவர்கள் சின்ன வீடு என்ற தவறான வழிக்கு செல்கிறார்கள். இதை வைத்து பாக்யராஜ் ஒரு படமும் எடுத்திருக்கிறார். அந்த பெண்ணும், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்த குடும்பம் எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கும் என்பதை ஒரு படத்தில் மணிரத்னம்(அக்னி நட்சத்திரம்) கார்த்திக் மூலமாக சொல்லியிருப்பார். எந்த ஒரு கொள்கையும் காலாகாலத்துக்கும் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அடுத்து விவாகரத்து பிரச்னைக்கு வருவோம்.
ஒருவன் மூன்று முறை ஒரு பெண்ணை பல்வேறு காலகட்டங்களில் தலாக்(விவாகரத்து) சொல்லி விட்டால் மனைவியோடு நிரந்தரமாக பிரிகிறான். இரண்டு முறை மடடுமே அவன் தலாக் சொல்லியிருந்தால் பழையபடி மனைவியோடு சேர்ந்தே வாழலாம். விவாகரத்தை ஆண்கள் விளையாட்டாக செய்து விடக் கூடாது. அதில் இப்படி ஒரு கண்டிஷன் இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற கருத்திலேயே சொல்லப்பட்டது. விவாகரத்தை சிரமமாக்கியதால்தான் இந்து குடும்பங்களில் 'ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு' என்ற செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம்.
//நீங்களே அதை கதை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். ஏசுவின் உண்மையான வரலாறை படித்தீர்களென்றால் இன்றுள்ள கிறித்தவ மதமே ஆட்டம் கண்டு விடும்.// கிறிஸ்தவர்கள் எல்லாரும் முட்டாள்கள். நீங்கள்தான் புத்திசாலிகள். இயேசுநாதரைப் பற்றிய 'உண்மையான' வரலாற்றையும் அவருடைய 'உண்மையான' போதனைகளையும் ஆதாரத்துடன் எழுதுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.
Tiruchchikkaran!
"கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர்கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.” - (சங்கீதம் 19:7,8)
"முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.” - (எபிரேயர் 7:18)
பவுலுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?
ராபின்!
ஒரு வேதம் காப்பற்றப்பட வேண்டுமானால் அதன் மூல மொழி இருந்தாக வேண்டும். ஏசு நாதர் பேசியது அராமிக் மொழி. அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. தற்போது உள்ள பைபிள் கிரேக்க மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதே! தற்போது உள்ள பைபிளில் உள்ள கருத்தக்கள் அனைத்தும் பவுல் அவர்களால் அவருக்கு தோதுவாக சொல்லப்பட்டதே! இது ஒரு பின்னூட்டத்தில் விளக்க முடியாது. இது பற்றி தனியாக பதிவே எழுதியிருக்கிறேன். மேலும் விபரங்களுக்கு admin@jesusinvites.com என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள். நிறைய தெரிந்து கொள்வீர்கள்.
//ஒரு வேதம் காப்பற்றப்பட வேண்டுமானால் அதன் மூல மொழி இருந்தாக வேண்டும். ஏசு நாதர் பேசியது அராமிக் மொழி. அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. தற்போது உள்ள பைபிள் கிரேக்க மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதே! தற்போது உள்ள பைபிளில் உள்ள கருத்தக்கள் அனைத்தும் பவுல் அவர்களால் அவருக்கு தோதுவாக சொல்லப்பட்டதே! //
ஏசு நாதர் பைபிளை எழுதவில்லை. அதுபோல முகமதுவும் குரானை எழுதவில்லை. பைபிளின் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதிதான் பவுலால் எழுதப்பட்டது. நற்செய்தி (gospel) எனப்படும் இயேசு நாதரின் போதனைகள் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களில் உள்ளது. இவை எதுவும் பவுலால் எழுதப்பட்டதல்ல.
ஒரு வேதம் காப்பாற்றப்படவில்லை என்றால் ஒரிஜினல் வேதத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த ஒரிஜினல் வேதமோ அல்லது பிரதிகளோ உள்ளதா? அப்படி இல்லை என்றால் முகமதுவை தீர்க்கதரிசி என்று காண்பிப்பதற்காக நீங்கள் சொல்லும் பொய் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். பவுல் அவருக்கு தோதாக எழுதினர் என்றால் முகமது தனக்கு தோதாக அல்லாவை பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லலாமே.
நீங்கள் குறிப்பிட தளத்தில் வெறும் அவதூறுகள்தான் உள்ளது.
ஜாகிர் நாயக் உள்ளிட்ட இஸ்லாமிய அறிஞர்கள் வாய் கூசாமல் பொய் பேசுவதை பார்த்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வசனங்களை எடுத்து சொல்லி யார் வேண்டுமென்றாலும் தங்களுக்கு வசதியாக தவறான விளக்கத்தை கொடுக்க முடியும். உங்களுக்கு உண்மை என்னவென்று அறியவேண்டுமென்றால் இயேசு நாதரின் போதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும், முகமதுவின் போதனைகளையும் வாழ்க்கை வராலாற்றையும் படித்து ஒப்பிட்டு பாருங்கள். தமிழ் பைபிள் இணையத்திலேயே இலவசமாக கிடைக்கிறது. பவுலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏசுநாதரின் நேரடி சீடர்கள் எழுதிய நற்செய்தி நூல்களை படித்துப் பாருங்கள். திறந்த மனதுடன் பரிசோதித்துப் பார்த்தால் உண்மை புலப்படலாம். அதை விடுத்து நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல குருட்டு நம்பிக்கையுடன் இருப்பீர்கள் என்றால் உங்கள் மதக் கருத்துகளை மட்டும் எழுதுங்கள் மற்ற மதங்களை விமர்சிக்கவேண்டாம்.
“The image of Islam is being tarnished by a small group of people and that Muslims must come forward to present before the world the correct picture of their divine faith.”
“The enormity of their ignorance of the Islamic history and its code of conduct is mind-boggling. We should be united in fighting these elements for the cause of Islam”
“Muslims should go to lengths to follow the basics, which say ‘be kind to your neighbors, keep smiling when you meet others, pray and do charity.’ We should serve humanity, we should not show hostility toward others, even to the followers of other faiths. This is what Islam stand for. We should present before the world a model through our behavior, nature and presentation.”
“The Prophet Mohamed (peace be upon him) never used his sword to spread Islam: rather he spread the religion through his virtues, behavior, tolerance, and righteousness. And this is what is needed to change todays destroyed image of islam”
ஏ.ஆர்.ரஹ்மான் மெக்காவில் வைத்து 'அரப் நியூஸ' க்கு அளித்த பேட்டி.
//அவரங்கஜேபுக்கு இருந்த அதிகாரம் இவர்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.//-Tiruhchikkaran
//அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//- அருமையான பதில் ராபின்!
//அடுத்து திரு விஜயன் இராஜபக்சே ஒரு சிறந்த நிர்வாகி என்ற கட்டுரை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.//- நன்றி சார்வாகன்.
//ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.//- குடுகுடுப்பை! தருமியை நன்றாகவே புரிந்து கொண்டீர்கள்.
ராபின்!
இஸ்லாத்தின் மேல் மற்றவர்கள் அபாண்டமாக பழி சுமத்தும் போது அதை மறுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன். நீங்கள் ஏசு நாதரிடம் வைத்திருக்கும் பிரியத்தை விட அதிக அளவு பிரியமும் அன்பும் அவர் மேல் நான் வைத்திருக்கிறேன். ஏசு நாதர் தன்னை வணங்கச் சொல்லி எங்குமே சொல்லாத போது கிறித்தவர்கள் அவரை எப்படி கடவுளாக்கினார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புவது தவறா? முகமது நபி காலத்தில் எழுதப்பட்ட குர்ஆனின் இரண்டு பிரதிகள் இன்றும் ரஷ்யாவிலும், துருக்கியிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது அல்லாமல் முகமது நபி காலத்திலேயே குர்ஆன் அனைத்து அத்தியாயங்களையும் மனனம் செய்தவர்கள் நிறைய பேர் இருந்தனர். ரஷ்யாவில் உள்ள பரதியையும் உங்கள் கையில் உள்ள தற்போதய குர்ஆன் பிரதியையும் ஒப்பிட்டு பார்த்தால் எந்த மாற்றமும் இல்லாதிருப்பதை காணலாம்.
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் பைபிளும் பாதுகாக்கப்பட்டிருந்தால் பல குழப்பங்கள் கிறித்தவத்தில் வந்திருக்காது.
சுவனப்பிரியன்
தயவுசெய்து அந்தந்த பதிவுக்குரிய பின்னூட்டங்களை அந்தந்த பதிவிலேயே போடுங்கள். இல்லையெனில் என்னைப் பற்றி எழுதியதை நான் கவனிக்காமல் போகலாம். பெரியாரின் சந்தேகத்திற்கும் என் சந்தேகத்திற்கும் ஒரே ‘முடிச்சு’ போடாதீர்கள்.
//கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.//
இஸ்லாமியர்களிடம் - அதாவது பிறப்பினால் இஸ்லாமியர்களானவர்களிடம் - நாத்திகம் இல்லையா?
தருமி, நேசகுமார், ஐக்,நீலகண்டன் போன்றோரின் சாதுர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் இணையத்தை விட்டு என்றோ நான் ஓடியிருப்பேன்.
நன்றி.
சரியான, முழுமையான பதிலளித்து விட்டதாகவும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.
தருமி!
//இஸ்லாமியர்களிடம் - அதாவது பிறப்பினால் இஸ்லாமியர்களானவர்களிடம் - நாத்திகம் இல்லையா?//
இருக்கலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு இஸ்லாம் சொல்லப்படாததால். என் கம்பெனியில் ஒரு துருக்கி நாட்டவர் நாத்திக கொள்கை கொண்டவர். துருக்கியில் இருக்கும் வரை இறை மறுப்பில் வாழ்ந்தவர். சவுதி வந்து ஒரே வருடத்தில் உண்மையை விளங்கி முழு நேர இஸ்லாமிய ஊழியராகி விட்டார்.
நம் ஊர் கருத்தம்மா புகழ் 'பெரியார்தாசன்' முன்பு நாத்திகர். இன்று அவர் அப்துல்லாவாக மாறி இஸ்லாமிய பிரசாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.
நீங்கள் அதிகம் கிறித்தவ நூல்களை படித்து விளங்கியதால்தான் நாத்திகத்தின் கதவையே தடடினீர்கள். இங்கு இணையத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு படித்த முஸ்லிம்களையும், இந்துக்களையும்,கிறித்தவர்களையும் கணக்கெடுத்து மத நம்பிக்கையை விகிதாச்சார அடிப்படையில் கணக்கெடுங்கள். மத நம்பிக்கை உடையவர்களாக 99 சதவீதம் முஸ்லிம்களை உங்களால் காண முடியும். இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் 'நான் ஒரு நாத்திகன்' என்று சொல்லிக் கொள்வதில் பெருமையிருக்கும். இதை நீங்கள் இஸ்லாத்தில் காண முடியாது. நமக்கெல்லாம் தெரிந்து இஸ்லாத்துக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை படித்தீர்கள்தானே! கடந்த ஒரு இருபது வருடத்தில் எந்த அளவு அவர் தனது உள்ளத்தில் இஸ்லாத்தை பதிய வைத்திருக்கிறார் என்பதை நினைத்து வியந்து போகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை படித்தீர்கள்தானே! கடந்த ஒரு இருபது வருடத்தில் எந்த அளவு அவர் தனது உள்ளத்தில் இஸ்லாத்தை பதிய வைத்திருக்கிறார் என்பதை நினைத்து வியந்து போகிறோம்.
//
ரகுமான் நல்ல மனிதர்.அவர் ஏற்றிருக்கிற சூபிசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லை நீங்கள் சொல்லும் இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? சூபிகளுக்கு சுவனம் உண்டா?
//இஸ்லாத்தின் மேல் மற்றவர்கள் அபாண்டமாக பழி சுமத்தும் போது அதை மறுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன். //
தவறில்லை. ஆனால் நீங்களும் மற்றவர்களின் நம்பிக்கைகளை பழிக்கிரீர்களே, அது ஏன்?
//அதிக அளவு பிரியமும் அன்பும் அவர் மேல் நான் வைத்திருக்கிறேன். // அந்த பிரியம்தான் உண்மைகளை அறிந்து கொள்ளாதபடி உங்களை தடுக்கிறது. கண்களை மூடிக்கொண்டு உலகமே இருட்டாக இருக்கிறது என்றால் சரியாக இருக்குமா?
//குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் பைபிளும் பாதுகாக்கப்பட்டிருந்தால் பல குழப்பங்கள் கிறித்தவத்தில் வந்திருக்காது.// திரும்பவும் ஆதாரமில்லாமலே குற்றஞ்சாட்டுக்கிறீர்கள்.
//ஏசு நாதர் தன்னை வணங்கச் சொல்லி எங்குமே சொல்லாத போது கிறித்தவர்கள் அவரை எப்படி கடவுளாக்கினார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புவது தவறா? // கிறிஸ்தவர்கள் ஏசு நாதரை ஏன் கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் அவர் தேவனுடைய குமாரன். இதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்களுக்கு நீங்கள் போட்டிருக்கும் சங்கிலியை உடைத்துவிட்டு திறந்த மனதுடன் பைபிளை படித்துப் பாருங்கள். அதை விடுத்து தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்.
//ரஷ்யாவில் உள்ள பரதியையும் உங்கள் கையில் உள்ள தற்போதய குர்ஆன் பிரதியையும் ஒப்பிட்டு பார்த்தால் எந்த மாற்றமும் இல்லாதிருப்பதை காணலாம்.// குர்ஆனில் பல பிரதிகள் இருந்தன என்றும் அவற்றில் பல தீயிட்டு கொழுத்தப்பட்டது என்றும் தகவல் உண்டு. மேலும் இஸ்லாத்தில் குரான் மட்டும் அல்ல ஹதீசுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. முக்கியமாக முகமதுவைப் பற்றிய உண்மைகள் ஹதீசுகளில்தான் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
////அதற்கு காரணம் அவர்களுக்கு இஸ்லாம் சொல்லப்படாததால். // இஸ்லாத்தைப் பற்றி நன்கு கற்று நாத்திகர்கள் ஆனவர்களையும் நான் அறிவேன்.
//நம் ஊர் கருத்தம்மா புகழ் 'பெரியார்தாசன்' முன்பு நாத்திகர். இன்று அவர் அப்துல்லாவாக மாறி இஸ்லாமிய பிரசாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.// இதைப் போல முஸ்லிமாக இருந்து மற்ற மதங்களுக்கு மாறியவர்களும் உண்டு.
//மத நம்பிக்கை உடையவர்களாக 99 சதவீதம் முஸ்லிம்களை உங்களால் காண முடியும். // பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி சரியாக தெரியாது.
//இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் 'நான் ஒரு நாத்திகன்' என்று சொல்லிக் கொள்வதில் பெருமையிருக்கும். // கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் நாத்திகர் என்று சொன்னால் அவர் பரிதாபமாகத்தான் பார்க்கப்படுவார்.
குடுகுடுப்பை!
//ரகுமான் நல்ல மனிதர்.அவர் ஏற்றிருக்கிற சூபிசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லை நீங்கள் சொல்லும் இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? சூபிகளுக்கு சுவனம் உண்டா?//
சூஃபியிசத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் குர்ஆன்தான் இறை வேதம். முகமது நபிதான் அவர்களுக்கும் இறைத்தூதர். இஸ்லாம் கூறிய தொழுகை நோன்பு ஈகை ஹஜ்ஜூ போன்ற கடமைகள் அனைத்தையும் செய்து விட்டு மேலதிகமாக சில புதிய வணக்கங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். உலக விஷயங்கள் தவிர்த்து மார்க்க விஷயங்களில் முகமது நபியை தவிர்த்து வேறு யாருக்கும் புதிய வணக்க வழிபாடுகளை புகுத்த அனுமதியில்லை.
'இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் புதிது புதிதாக உருவாக்கக் கூடியவைகளை உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) எச்சரிக்கை செய்கிறேன். அனைத்து புதிய வணக்கங்களும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்'-முகமது நபி, ஆதாரம் : அபூதாவுத்,திர்மதி
புதிய வணக்கங்களை உருவாக்குவதை முகமது நபி தடுத்திருக்கிறார். ஒரு முஸ்லிம் உலக நாடுகளில் உள்ள எந்த பள்ளியிலும் சென்று சர்வ சாதாரணமாக தொழலாம். ஏனெனில் உலகம் முழுவதும் தொழுகையில் ஒரே நடைமுறை பின்பற்றப்படுவதால்தான். சூஃபிகளைப் போல் ஒவ்வொருவரும் புதிது புதிதாக வணக்கங்களை உண்டாக்கினால் குழப்பங்கள்தான் உண்டாகும். இதை எல்லாம் விளக்கி அவர்களுக்கு பிரச்சாரம் பண்ணி வருகிறோம்.
சூஃபிகளுக்கு சொர்க்கமா நரகமா என்பதை நான் எப்படி அறிவேன்? அது இறைவன் கையில் அல்லவா இருக்கிறது!
நல்லதொரு பதிவு... முதலில் //பத்திரிக்கைகளும் சினிமாக்களும் இஸ்லாம் என்றால் 'தீவிரவாதம்' என்ற கருத்தை எந்த அளவு விதைத்திருக்கிறார்கள் // எனக் கூறினீர்கள்...
இதற்கு சினிமாவும், பத்திரிக்கைகளும் மட்டுமில்லை, சில முஸ்லிம்களும் காரணமே ! இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு முழு உரிமை வேண்டி போராட நினைத்தவர்களில் சிலர், தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டதன் விளைவு முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்றாகி விட்டது. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள், அவர்களை நேரேப் பகைக்காமல் அன்பு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.... அல்லவா !
மற்றொன்று ஹஜ் போவதற்கு அரசு மானியம் தருவதை இஸ்லாமியர் எதிர்த்து இருக்க வேண்டாமா? ஹஜ் செல்வது கட்டாயம் இல்லை, அதாவது ஏழைகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. தம் சம்பாத்தியத்தில் தானே போக வேண்டும் அல்லவா? இப்போது அரசு உதவியோடு ஹஜ் போவதால் அது யாத்திரிக்கைப் போலவும், அது மூட நம்பிக்கை என்பதாகவும் மாற்றியது யார்? இஸ்லாமியர்கள் தானே !!!
இக்பால் செல்வன்!
//இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள், அவர்களை நேரேப் பகைக்காமல் அன்பு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.... அல்லவா !//
அதைத்தான் தற்போது பிரச்சாரத்தின் போது செய்து கொண்டிருக்கிறோம். அரசு நியாயம் தவறி நடக்கும்போது சில இளைஞர்கள் உணர்ச்சி வசப் படுவது எல்லா சமூகங்களிலும் நிறைந்திருக்கிறது. மற்றவர்கள் செய்யும் போது மதத்தை தொடர்பு படுத்தாத பத்திரிக்கைகள் இஸ்லாமிய பெயரில் யாரும் குற்றம் செய்தால் 'இஸ்லாமிய தீவிரவாதி' என்ற பெயருடன் முதல்பக்கத்திலேயே செய்தியை கொண்டு வருகிறார்கள். பல குண்டுவெடிப்புகளிலும் ஈடுபட்டது இந்துத்துவவாதிகள். ஆனால் சிறையில் அரசு அடைத்ததோ அப்பாவி முஸ்லிம்களை. மாலேகானிலிருந்து மக்கா மஸ்ஜித் வரை முஸ்லிம்களை கொன்று விட்டு அதே கிராமத்திலிருந்தே எஞ்சியவர்களை 'நீதான் குண்டு வைத்தாய்' என்று கைது செய்து சிறையில் அடைப்பது எந்த நாட்டிலும் நடக்காத ஒரு கொடுமை. இதை எல்லாம் பார்த்து முஸ்லிம் இளைஞர்கள் வன்முறையின் மூலம் சென்று விடக் கூடாது என்பதற்க்காகத்தான் தற்போது பிரச்சாரத்தின் மூலமும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலமும் ரத்ததானத்தின் மூலமாகவும் பெரும்பான்மை மக்களை நோக்கி நேசக்கரத்தை முஸ்லிம்கள் நீட்டுகின்றனர்.
//மற்றொன்று ஹஜ் போவதற்கு அரசு மானியம் தருவதை இஸ்லாமியர் எதிர்த்து இருக்க வேண்டாமா? ஹஜ் செல்வது கட்டாயம் இல்லை, அதாவது ஏழைகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. தம் சம்பாத்தியத்தில் தானே போக வேண்டும் அல்லவா? இப்போது அரசு உதவியோடு ஹஜ் போவதால் அது யாத்திரிக்கைப் போலவும், அது மூட நம்பிக்கை என்பதாகவும் மாற்றியது யார்? இஸ்லாமியர்கள் தானே !!!//
முஸ்லிம்கள் யாரும் அரசிடம் சென்று ஹஜ்ஜூக்கு செல்ல மானியம் கொடுங்கள் என்று கேட்கவில்லை. ஏனெனில் நீங்கள் சொல்வது போல் அது பண வசதி உடையவர்களுக்கு உள்ள கடமை. அரசிடம் முஸ்லிம்கள் கேட்பது படிப்பும், அரசு வேலைகளும் தான். அதை முறையாக கொடுக்காமல் ஹஜ் மானியம்,உலமாக்களுக்கு இலவச சைக்கிள், மீலாது நபி விடுமுறை என்று முஸ்லிம்களை ஏமாற்றுகிறது மத்திய அரசும் மாநில அரசுகளும்.
உங்களின் பின்னூட்டங்களும, பதிவுகளும் வினவு தளத்தில் பல விபரங்களை தாங்கி வருகிறது. நீங்கள் 'இஸ்லாமியர்' என்றும் 'இல்லை....இல்லை..அவர் இந்து மதத்தை சார்ந்தவர்' என்றும் சில நேரங்களில் வாக்குவாதமே நடக்கிறது. வாழ்த்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ராபின்!
//குர்ஆனில் பல பிரதிகள் இருந்தன என்றும் அவற்றில் பல தீயிட்டு கொழுத்தப்பட்டது என்றும் தகவல் உண்டு. மேலும் இஸ்லாத்தில் குரான் மட்டும் அல்ல ஹதீசுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. முக்கியமாக முகமதுவைப் பற்றிய உண்மைகள் ஹதீசுகளில்தான் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.//
குர்ஆன் ஒரே நேரத்தில் தொகுக்கப்படவில்லை. பல ஆண்டுகள் சிறிய சிறிய அத்தியாயமாக முகமது நபிக்கு அருளப்பட்டது. பத்து அதிகாரம் சிலரிடமும், ஒரு சில அதிகாரம் சிலரிடமும் தோல்களிலும், எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இருந்தது. இதை ஒருமுகப்படுத்துவதற்காக மன்னர் உஸ்மான் மக்களிடம் இருந்த அனைத்து பிரதிகளையும் கொண்டு வரச் சொல்லுகிறார். குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர்களை கொண்டு அந்த பிரதிகளையும் ஒத்துப் பார்க்கிறார். அனைத்தையும் ஒன்றாக்கி முழு குர்ஆனாக்கப்படுகிறது. பல பிரதிகள் எடுக்கப்படுகிறது. பல நாடுகளுக்கும் அனுப்பப்படகிறது. சிறு சிறு அத்தியாயங்களாக மக்களிடம் சேகரித்த குர்ஆன் அத்தியாயங்கள் இனி தேவையில்லை என்பதனால் உஸ்மான் அவர்கள் அனைத்தையும் கொளுத்தி விட்டார். இதுதான் நடந்த வரலாறு. எனவேதான் உலகில் எங்கு சென்றாலும் நீங்கள் ஒரே மாதிரியான குர்ஆனையே பார்க்க முடியும். குர்ஆனில் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அரசர் உஸ்மான் அந்த காரியத்தை செய்தார்.
//கிறிஸ்தவர்கள் ஏசு நாதரை ஏன் கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் அவர் தேவனுடைய குமாரன். //
எந்த ஆதாரத்தை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா? பைபிளிலிருந்து விளக்கம் கொடுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்.
இயேசு தவனுடைய குமாரன் என்பதற்கான ஆதாரங்கள்:
யோவான் 17 அதிகாரம்
வசனம் 1. இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்,
24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
யோவான் 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
யோவான்
3 அதிகாரம்
12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
மாற்கு 3:11 அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
மாற்கு 15:39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
லூக்கா 22:69 இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
யோவான் 1:34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.
யோவான் 1:49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
எபிரெயர் 1:5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
எபிரெயர் 5:5 அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.
I யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
ராபின்!
ஏசு இறை மகன் என்பதற்கு நீங்கள் காட்டும் பைபிள் வசனங்கள் தான் ஆதாரம் என்றால் அதே பைபிளில் மற்ற தீர்க்க தரிசிகளையும் பின்பற்றுபவர்களையும் கர்த்தர் மகனாக பல இடங்களில் அழைப்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள். கடவுளின் வார்த்தைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு மற்றொன்றை விடுவது எந்த வகையில் நியாயயம்?
'அப்போது நீ பார்வோனேடே சொல்ல வேண்டியது என்னவென்றால் 'இஸ்ரவேல் என்னுடைய குமாரன்: என் சேஷ்ட புத்திரன்: எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபத்திரனை சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்' என்று சொன்னார். -யாத்திராகமம் 4:22,23
'இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன். எப்பிராயிம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்'.- எரேமியா 31:9
'நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்'-உபாகமம் 14:1 இங்கு மக்களை பார்த்து பிள்ளைகள் என்று கர்த்தர் அழைக்கிறார்.
'அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தை கட்டுவான். அவன் எனக்கு குமாரனாய் இருப்பான். நான் அவனுக்கு பிதாவாய் இருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனது ராஜாங்கத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்' -முதலாம் நாலாகமம்: 22:10
'நீ என்னுடைய குமாரன்: இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்':- சங்கீதம் 2:7
'நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன்: அவன் எனக்கு குமாரனாய் இருப்பான்'-முதலாம் நாலாகமம்: 17:13
என்று தாவீதை நோக்கி கர்த்தர் கூறுகிறார்.
அனைத்து தீர்க்க தரிசிகளையுமே கர்த்தர் தனது குழந்தைகளாக பாவித்து அழைப்பதை பார்க்கிறோம். சில இடங்களில் ஏசு இந்த வார்த்தையை பிரயோகிப்பதை இனி பார்ப்போம.
'சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்:' -மத்தேயு 5:9
இதிலிருந்து குமாரர் எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே எடுத்தாளப் பட்டுள்ளது என்று அறியலாம்.
அதே போல் பிதா என்ற பதத்திற்கு கடவுள், தந்தை என்ற இரண்டு பொருள் உண்டு. இரண்டு பொருளையும் போட்டு குழப்பிக் கொண்டதனால் இத்தகைய சிக்கல்கள் வருகிறது. இதை மறுத்தால் இதற்கான பதிலை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
//'அப்போது நீ பார்வோனேடே சொல்ல வேண்டியது என்னவென்றால் 'இஸ்ரவேல் என்னுடைய குமாரன்: என் சேஷ்ட புத்திரன்: எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபத்திரனை சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்' என்று சொன்னார். -யாத்திராகமம் 4:22,23//
இங்கே இஸ்ரவேல் என்பது ஒரு தனி மனிதனை குறிப்பிடவில்லை, ஒரு ஜனக் கூட்டத்தை குறிப்பிடுவது. இங்கு குமாரன் என்பது உருவகப்படுத்தி சொல்லப்பட்டது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் தன் மாணவர்களை பிள்ளைகள் என்று அழைப்பது உண்டு. கடவுள் மனிதர்களை படித்ததால் தன்னுடைய குழந்தைகளாக உருவகப்படுத்துகிறார்.
//'இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன். எப்பிராயிம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்'.- எரேமியா 31:9// எப்பிராயீம் என்பது ஒரு கோத்திரம்.
//'நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்'-உபாகமம் 14:1 இங்கு மக்களை பார்த்து பிள்ளைகள் என்று கர்த்தர் அழைக்கிறார்.
'அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தை கட்டுவான். அவன் எனக்கு குமாரனாய் இருப்பான். நான் அவனுக்கு பிதாவாய் இருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனது ராஜாங்கத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்' -முதலாம் நாலாகமம்: 22:10
'நீ என்னுடைய குமாரன்: இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்':- சங்கீதம் 2:7
'நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன்: அவன் எனக்கு குமாரனாய் இருப்பான்'-முதலாம் நாலாகமம்: 17:13
என்று தாவீதை நோக்கி கர்த்தர் கூறுகிறார்.// இதுவும் உருவகம்தான் (metaphor).
ஆனால் ஏசுநாதர் தன்னை தேவகுமாரன் என்று சொல்வதற்கும் மற்றவர்களை குமாரர்கள் என்று அழைப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
ஏசுநாதரின் பிறப்பு அதிசயமானது. இதை குரானும் ஒப்புக்கொள்கிறது. அவர் பரிசுத்த ஆவியானவராலே பிறந்தார்.
மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மாற்கு 3:11 அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
இங்கே ஏசுநாதர் தேவகுமாரன் என்பதற்காக அவரைப் பணிந்து கொண்டார்கள்.
//யோவான் 17 அதிகாரம்
வசனம் 1. இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்,// இங்கே ஏசுநாதர் தேவகுமாரன் என்பதற்காக மகிமைப்படுகிறார்.
நான் கொடுத்த வசனங்கள் அனைத்தையும் மறுபடியும் படித்துப் பாருங்கள், மற்றவர்களுக்கும் எசுனாதருக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
//அதே போல் பிதா என்ற பதத்திற்கு கடவுள், தந்தை என்ற இரண்டு பொருள் உண்டு//
பிதா என்றால் தந்தை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாத, பிதா, குரு, தெய்வம் - கேள்விப்பட்டதில்லையா?
//இரண்டு பொருளையும் போட்டு குழப்பிக் கொண்டதனால் இத்தகைய சிக்கல்கள் வருகிறது.// இதில் எந்த சிக்கலும் இல்லை, குழப்பமும் இல்லை.
ராபின்!
மற்றவர்களை அழைக்கும் போது வேறு பொருளையும் ஏசுவை அழைக்கும் போது மட்டும் சொந்த மகனாகவும் எப்படி உங்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது?
//ஏசுநாதரின் பிறப்பு அதிசயமானது. இதை குரானும் ஒப்புக்கொள்கிறது. அவர் பரிசுத்த ஆவியானவராலே பிறந்தார். //
தந்தை யில்லாமல் பிறந்த ஏசு மகிமைவாய்ந்தவர் என்றால் தாயும் தந்தையும் இல்லாமல் பிறந்த ஆதாமை ஏசுவைவிட மேன்மைபடுத்த வேண்டுமே! ஏன் நீங்கள் அவ்வாறு செய்வதில்லை.
//பிதா என்றால் தந்தை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாத, பிதா, குரு, தெய்வம் - கேள்விப்பட்டதில்லையா?//
பழமொழிகளை பார்க்காமல் தமிழ் டிக்னரியை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு விளங்கியிருக்கும். இணையத்தில் கூட தேடிப்பார்க்கலாம். தகப்பன், தந்தை, பிதா என்ற மூன்று சொல்லுக்கும் ஆங்கிலத்தில் ஃபாதர் என்ற சொல்லே இணையத்தில் கிடைக்கிறது. இதற்கு உங்களின் பதில் என்ன?
www.tamildict.com/tamilsearch.php
என்ற இணையதளத்தில் சென்று பிதா என்ற சொல்லுக்கு அர்த்தத்தைக் கேளுங்கள். விபரமாக சொல்வார்கள்.
//இதில் எந்த சிக்கலும் இல்லை, குழப்பமும் இல்லை. //
நீங்களாக ஒரு சமாதானத்தை சொல்லிக் கொண்டால் அதில் நான் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் நான் கேட்ட கேள்விகள் மட்டும் அப்படியே நிற்கும்.
//மற்றவர்களை அழைக்கும் போது வேறு பொருளையும் ஏசுவை அழைக்கும் போது மட்டும் சொந்த மகனாகவும் எப்படி உங்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது?// commonsense ஐ பயன்படுத்துவதால்.
//தந்தை யில்லாமல் பிறந்த ஏசு மகிமைவாய்ந்தவர் என்றால் தாயும் தந்தையும் இல்லாமல் பிறந்த ஆதாமை ஏசுவைவிட மேன்மைபடுத்த வேண்டுமே! ஏன் நீங்கள் அவ்வாறு செய்வதில்லை.// இரண்டு பேர் பிறப்பிற்கும் வித்தியாசம் உண்டு. ஆதாம் மேசியா அல்ல.
//பழமொழிகளை பார்க்காமல் தமிழ் டிக்னரியை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு விளங்கியிருக்கும். இணையத்தில் கூட தேடிப்பார்க்கலாம். தகப்பன், தந்தை, பிதா என்ற மூன்று சொல்லுக்கும் ஆங்கிலத்தில் ஃபாதர் என்ற சொல்லே இணையத்தில் கிடைக்கிறது. இதற்கு உங்களின் பதில் என்ன?// இதைத் தானே நானும் சொல்கிறேன். ஏன் சேம் சைட் கோல் போடுகிறீர்கள்?
Post a Comment