Followers

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, November 25, 2015

மலேசியாவில் ரஜினிக்கு தமிழ் குர்ஆன் பரிசளிப்பு!



மாற்று கொள்கையுடைய பல பேரை தன் பக்கம் ஈர்த்த இந்த குர்ஆன் மன நிம்மதி தேடி அலையும் ரஜினியையும் ஒரு நாள் ஈர்க்கும்.

Saturday, October 10, 2015

நடிகை ஆச்சி மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்!



ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்!

Sunday, July 12, 2015

'சலீம்' திரைப்படம் மூலம் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்!





முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் எண்ணத்தை சலீம் திரைப்படம் மாற்றியது! இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் !

திருச்சியை சேர்ந்த நண்பர் வீடியோ சிராஜின் மகன் ஜாவித் தஃவாவில் ஆர்வமுள்ள சகோதரர்! அவர் நேற்று போன் செய்து எனது நண்பருக்கு தஃவா செய்து வருகிறேன் ! நீங்கள் கொஞ்சம் அவரோடு பேசினால் நன்றாக இருக்கும் என்றார் !

சரி இப்தாருக்கு அழைத்து வாருங்கள் என்றேன் ! வரமுடியவில்லை கொஞ்சம் லேட்டாகும் என்றார்! பரவாயில்லை இரவுத் தொழுகைக்கு முன் அழைத்து வாருங்கள் என்றேன் ! சுமார் 8.30 மணியளவில் வந்தார்கள்!

வந்தவரிடம் ஊர்.பெயர் . தொழில் எல்லாம் விசாரித்து விட்டு அவருக்கு ஏகத்துவம் , தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் ஐந்து கடமைகளில் கட்டமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்து விட்டு, இணை வைப்பைக் குறித்து எச்சரித்து விட்டு இஸ்லாத்தை பின்பற்றினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினேன் !

விரிவாக விளக்கி விட்டுஇதுதான் இறைவனால் அருளப்பட்ட சரியான வழி என்பதை ஒப்பக் கொள்கிறீர்களா ? என்று கேட்டதும் ஆம் இதுதான் உண்மை என்றார் ! இதை ஏற்றுக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம் எந்த நஷ்டமும் எனும் போது என்ன தயக்கம் ?

மனிதன் மனிதனாக வாழ இதுதான் வழி எனில் இதுதான் நீங்கள் செல்லவிருக்கும் இலக்குக்கான இறுதி வாகனம்! இதைத் தவற விட்டால் உங்களின் இலக்கை அடைய முடியாது ! இந்த வாகனத்தில் என் தந்தை ஏறவில்லையே நான் எப்படி ஏறுவது ? என் தாத்தா இந்த வாகனத்தை பார்த்ததே இல்லையே ? இந்த வாகனத்தில் ஏறி பயணித்தால் என் ஊர் என்ன சொல்லும் ? என்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் என்ன சொல்லும் ? என்று பார்த்துக் கொண்டிருந்தால் வண்டி போய் விடுவது போல் வாழக்கை முடிந்து போய் விடும் ! நிச்சயமில்லாத இந்த உலகில் எதற்காக அதைத் தள்ளிப் போட வேண்டும்?

இல்லை ! நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன் என்று கலிமாவை மொழிந்து சுமார் பத்து மணியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ! அல்ஹம்து லில்லாஹ் !

பின்னர் இஸ்லாத்தின் பக்கம் முதல் ஈர்ப்பு எப்படி வந்தது ? என்று கேட்ட போது சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டிர்களே ? என்றார் !

இல்லை சொல்லுங்கள் என்றதும் சலீம் படம் பார்க்கும் வரைக்கும் பத்திரிகைகள், தொலைகாட்சிகள் சொல்வது போல் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றுதான் எண்ணி இருந்தேன் !

ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பின் என் கருத்தை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலும் ஏற்பட்டது ! அப்போது தான் நண்பர் ஜாவித் முலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன் ! இன்று தங்களால் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டேன் என்றார் ! அல்ஹம்து லில்லாஹ் !

இது அவனுடைய நேர்வழி அதை தான் நாடியோருக்கு வழங்குகிறான் ! இது இறைவனின் ஒளி ! அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றி விட்டான் ! இனி அது பிரகாசிக்கும் ! உங்களின் செயல்கள் இனி ஒளிமயமாகும் ! அந்த ஒளி உங்களை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஈர்க்கும் என்று கூறிய போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அல்ஹம்து லில்லாஹ் !

[குறிப்பு: சினிமா நம் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து அதை தஃவாவுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் கருத்துக்கு இச்சம்பவம் வலுச்சேர்க்கிறது!]

-செங்கிஸ் கான்

Tuesday, May 05, 2015

கூத்தாடி சல்மான் கானுக்கு இன்று தீர்ப்பு!




10 ஆண்டுகளுக்கு முன்பு குடி போதையில் கார் ஓட்டி நடை பாதையில் உற்ங்கிக் கொண்டிருந்த ஒருவரை கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு வரவிருக்கிறது. கோர்ட்டில் 'உங்களின் இனம் என்ன?' என்று நீதியதி கேட்டதற்கு 'இந்தியன்' என்று பதிலளித்துள்ளார். மீண்டும் நீதிபதி கேட்கவே 'இந்து முஸ்லிம்' என்று பதிலளித்தள்ளார். தனது தந்தை சலீம்கான் எனவும் தாயார் சுசீலா எனவும் தெரிவித்துள்ளார்.

காரை தான் ஓட்டவில்லை தனது டிரைவர்தான் ஓட்டினார் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் இவரே காரை ஓட்டிச் சென்றதாக சொல்கின்றனர். போலீஸாரும் இதனை உறுதிப் படுத்துகின்றனர். கோர்ட் தண்டனையிலிருந்து தப்பிக்க பல முறை மோடி புராணமும் பாடிக் கொண்டிருந்தார். எதுவும் கை கூடவில்லை. இன்றைய தீர்ப்பில் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒரு இஸ்லாமியனுக்கு உள்ள எந்த இலக்கணத்தையும் நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது. பல பெண்களோடு தகாத உறவு, தினமும் குடியில் புரள்தல், சக நடிகர்களோடு பல முறை சண்டை, என்று பல உதாரணங்களை கூறலாம். பெயர் ஒன்று மட்டுமே இஸ்லாமிய பெயராக உள்ளது. பெயரை வைத்து ஒருவன் இஸ்லாமியனாக முடியாது. அவனது சீரிய நடவடிக்கையை வைத்துதான் அவனை இஸ்லாமியனாக பார்க்க முடியும்.

இந்த பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதே மும்பை கோர்டின் தீர்பும் வந்து விட்டது. குடி போதையில் கார் ஓட்டி ஒருவரை கொன்றது நிரூபணமானதால் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லியுள்ளது மும்பை நீதி மன்றம்.

10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அந்த சிறை வாழ்க்கையாவது இவரை மனிதனாக மாற்றுகிறதா என்று பார்போம்.

Monday, January 26, 2015

பாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு



இந்து மகா சபையின் வார இதழான ‘இந்து சபா வார்தா’ தலையங்கத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர்கான், சயீப் அலிகான், ஃபர்தீன் கான், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பது உண்மை யானால், அவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றவேண்டும்.

முஸ்லிம் நடிகர்களுக்கு ஜோடியாக இந்து நடிகைகளை நடிக்கச் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிர்பந்தம் அளிக்கப்படுகிறது. முஸ்லிம் நடிகர்கள், இந்து கதாபாத்திரங்களில் இந்து நடிகைகளுடன் நடிப்பதை பார்க்கும் இந்துப் பெண்கள், முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துகொள்வதை ஒழுக்கக் கேடாக கருதுவதில்லை. இவர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞனை தங்கள் ஆதர்ச நாயகனாக பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் காரணமாகவே இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்வதை இயல்பானதாக கருதுகின்றனர். லவ் ஜிகாத்துக்கு இந்த முஸ்லிம் நடிகர்கள் தூண்டுகோலாக இருக்கின்றனர். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வார இதழின் ஆசிரியர் முன்னா குமார் சிங்கை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த முஸ்லிம் நடிகர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள் என்றால், பிறகு ஏன் தங்கள் மனைவிகளை முஸ்லிம்களாக மாறச் செய்து இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றச் செய்தனர்?இந்தப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் முஸ்லிம் குடும்பப் பெயர்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இப்பெண்கள் தங்கள் (இந்து) குடும்பப் பெயர் களையே வைத்துக்கொள்ள ஏன் அனுமதிக்க கூடாது?” என்றார்.

தமிழ் இந்து நாளிதழ்
25-01-2015

இந்து பெண்களை இதை விட அசிங்கமாக வேறு எவரும் கேவலப்படுத்த முடியாது. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது இவர்களைப் பொறுத்த வரை சரியாக பொருந்தி போகிறது. அமீர் கானோ, ஷாருக் கானோ அல்லது சய்யீஃப் அலி கானோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டி கிடையாது. இவர்கள் அனைவரும் கூத்தாடிகள். பணம் கொடுத்தால் எந்த வேஷமும் கட்ட தயங்க மாட்டார்கள். இஸ்லாத்தை பின் பற்றும் ஒருவன் நாளொரு பெண்ணோடு அரை குறை ஆடையுடன் ஆடி சமூகத்தை சீரழிப்பானா? எனவே பெயரைத் தவிர்த்து இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு கூத்தாடியை திரையில் பார்த்து, அவனது பெயரை பார்த்து மயங்கி இந்து பெண்கள் முஸ்லிம் இளைஞர்களிடம் மயங்கி விடுகின்றனர் என்ற வாதமானது இந்திய பெண்களை எவ்வளவு கேவலமாக இந்த இந்துத்வாவினர் நினைக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மக்கள் இந்த வாதத்தை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முன் வர வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை கவர்கிறார்கள் என்று முன்பு சொன்ன குற்றசாட்டு பொய் என்பதை இதன் மூலம் அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் திரைப்படத் துறையில் அனைவரும் ஹிந்து மத ஹீரோக்களே! இவர்கள் யாரையாவது பார்த்து முஸ்லிம் பெண்கள் இந்து மதத்துக்கு மாறுகின்றார்கள் என்று சொன்னால் பலரும் சிரிக்க மாட்டார்களா?

கூத்தாடிகளான சல்மான் கானையும், ஷாருக்கானையும், அமீர்கானையும் காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள மாட்டான். இவர்கள் குர்ஆனின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்தான் முஸ்லிம்களுக்கு பெருமை இருக்கிறது. இஸ்லாம் பிறப்பினால் ஒருவனுக்கு வருவதில்லை. அவன் வாழ்வதின் மூலமாகத்தான் இஸ்லாமியனாக பார்க்கப்படுகிறான்.

இந்து மதத்தை பூரணமாக பின் பற்றும் ஒருவன் எவ்வாறு தந்தை பெரியாரை காட்டி பெருமைபட்டுக் கொள்ள முடியாதோ அது போல்தான் இந்த சினிமா கூத்தாடிகளான கான்களை காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது.

இந்து மதத்திலுள்ள வர்ணாசிர கொள்கைகளையும், மூடப் பழக்கங்களையும் முதலில் ஒழிக்க முற்படுங்கள். மத மாற்றங்கள் தானாக குறைய ஆரம்பிக்கும்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.


Thursday, January 15, 2015

இஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்!





ஃப்ரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியீட்டாளர் இஸாபெல் மேடிக் (ISABEL MATIC) தனது மன மாற்றத்தைப் பற்றி தனது தளத்தில் கூறியுள்ளார். இனி அதனை பார்போம்.

'எனக்கு இஸ்லாத்தைப் பற்றி முன்பு எதுவும் தெரியாமல் இருந்தது. முகமது என்பவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ள முன்பு எனக்கு அவசியம் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு 'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு மனிதருக்கு இவ்வளவு ஆதரவா? அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன்? அவர் யார்? அவரது வரலாறு என்ன? என்று தேட ஆரம்பித்தேன். முடிவில் இஸ்லாம் என்னை ஈர்த்து விட்டது. இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.'

'எனது இந்த மன மாற்றத்தை ஜோர்டான் பத்திரிக்கையிலும் பிரசுரித்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவிய எனது நண்பர் ஹிஸாமுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது தோழி லைலா அருமையான உணவு பரிமாறி என்னை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பலரும் பள்ளி வாசலினுள் என்னை கவுரவித்தனர். இஸ்லாத்தின் முதல் தூணான 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' 'இறைவன் ஒருவனே! அந்த இறைவனின் தூதராக முகமது நபி அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்' என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனது பெயரையும் ஜொஹரா என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்' என்று மிக மகிழ்வோடு தனது தளத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் சகோதரி இஸாபெல் மேதிக்.

முகமது நபியின் கார்டூனை காரணமாக வைத்து கொலைகளை நடத்தி இஸ்லாத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த யூதர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களின் அந்த நிகழ்வே இஸ்லாம் மேலும் ஃப்ரான்ஸில் வலுவடைய காரணமாகியுள்ளது.

யூதர்களும் சூழ்ச்சி செய்தார்கள்: இறைவனும் சூழ்ச்சி செய்தான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
இஸாபெல் மேதிக்கின்(ISABEL MATIC) முக நூல் பக்கம்.

Sunday, January 11, 2015

சகோதரி ரஹீமாவின் திருமணம் இன்று இனிதே நடந்தேறியது!





தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக உயர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் அழகி, சண்டைக்கோழி, பகவதி, சிலந்தி, நதிகள் நனைவதில்லை உள்பட பல படங்களில் நடித்தவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய மோனிகா, தனது பெயரைக் கூட எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். மேலும் மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை.

தகவல் உதவி
தினமணி
11-01-2013

சினிமா என்ற நரக படுகுழியில் வீழ்ந்து கிடந்த இந்த சகோதரி உண்மை மார்க்கத்தை உணர்ந்து இன்று இல்லறம் என்ற மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளார். அழகிய வாழ்வு முறையை தேர்ந்தெடுத்த சகோதரியை கரம் பிடித்துள்ள சகோதரர் மாலிக்கையும் பாராட்டுவோம்.

குர்ஆனும் நபிகளும் காட்டித் தந்த வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டு இல்லறம் நல்லறமாய் அமைய நாமும் வாழ்த்துவோம்.


"பாரகல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்"

பொருள்: "இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: அஹ்மத்.

http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y

பத்திரிக்கைக்கு முன்பு அவர் அளித்த பேட்டி...

http://suvanappiriyan.blogspot.com/2014/05/blog-post_30.html

இஸ்லாம் மதத்துக்கு இவர் மாறியது சம்பந்தமாக முன்பு நான் இட்ட பதிவு!

'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3


உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார்.

Saturday, January 10, 2015

பாலிவுட்டைத் துறந்து இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்!



23 வயதான முர்ஸிலின் பிர்ஸாதா இஸ்லாமிய குடும்பத்தில்தான் பிறந்தார். ஆனால் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இவரிடத்தில் இருந்ததில்லை. தந்தை ஃபெரோஸ் பிர்ஸாதா காஷ்மீரில் பெரும் தொழிலதிபர். இவ்வளவு வசதிகள் இருந்தும் சினிமா மோகத்தால் மும்பையில் செட்டில் ஆகி 'ஏக் தா டைகர்' என்ற சல்மான் கான் படத்துக்கு துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். யாஷ் சோப்ரா இவரது சினிமா ஆர்வத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தார். ஆடம்பர வாழ்வு, ஃபேஷன் ஷோக்கள் என்று மிக சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. திடீரென யாஷ் சோப்ரா இறந்துவிட வாழ்வில் மிகப் பெரிய அதிர்ச்சியை உணர்ந்தார் முர்ஸிலின். வாழ்க்கையே வெறுமையானது.

'யாஷ் சோப்ராவுடன் நெருங்கி இருந்தேன். பொருளாதார முன்னேற்றம் தான் வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நம்பியிருந்தேன். 'ஏக் தா டைகர்' படத்தின் துணை இயக்குனராக வெற்றிகரமாக பணி புரிந்தேன். சினிமாவில் நடிக்கவும் ஆசை இருந்தது. 'சுத் தேஷி ரொமான்ஸ்' என்ற படத்தில் புது முகங்களுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்தது. என்னை கேமரா முன்னால் குறைந்த ஆடைகளோடு பல ஷாட்கள் எடுத்தனர். எல்லோரது கண் பார்வையும் என் மேல் படுவதை உணர்ந்தேன். முள் குத்துவது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இந்த துறை நமக்கு சரிப்பட்டு வராது என்று டைரக்ஷனில் கவனம் செலுத்தினேன். யாஷ் சோப்ராவின் மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையே எனக்கு இருண்டு விட்டது. ஒரு வெறுமை எனக்குள் ஏற்பட்டது.

நிம்மதியை தேடி இணையத்தில் உலா வந்தேன். எதேச்சையாக நுஃமான் அலி கான், யாஸ்மின் மொகாஹேத் போன்ற அறிஞர்களின் காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. எனக்காகவே அவர்கள் பேசுவது போல் எனக்குத் தோன்றியது. பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்த என்னை இந்த காணொளிகள் வாழ்வின் அவசியத்தை உணர வைத்தது. டாக்டர் ஜாகிர் நாயக்கின் உரைகளையும் தொடர்ந்து கேட்டேன். 'இஸ்லாத்தில் பெண்களின் நிலை' என்ற வீடியோ உரையை கேட்டது முதல் எனது இஸ்லாமிய ஈர்ப்பு மேலும் அதிகமானது. ஜாகிர் நாயக்கின் மனைவி ஃபரா நாயக் மூலமாக இன்று ஐஆர்எஃப் ல் இணைந்து இஸ்லாமிய வாழ்வை தேர்ந்தெடுத்துள்ளேன்.

இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு மிக கஷ்டம் என்று சிலர் எண்ணுகின்றனர். எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஆரம்பத்தில் ஐஆர்எஃபில் நுழைந்த போது நான் தலையை மறைத்து முக்காடு போடவில்லை. இதற்கு யாரும் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சினிமா துறையிலிருந்து வந்தவள் என்பதால் என்னை யாரும் நிர்பந்திக்க வில்லை. சில காலம் கழித்து அந்த முக்காடு எனக்கு ஒரு அழகை தந்தது. இன்று அதனை யாரும் நிர்பந்திக்காமல் விரும்பி நானே அணிகிறேன். ஆன்லைன் மூலமான கத்தார் நாட்டு கல்விச் சாலை ஒன்றில் இஸ்லாமிய மேல் படிப்பு படித்து வருகிறேன். வருங்காலத்தில் காஷ்மீரில் பெண்களுக்கான பல கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளேன்" என்று கூறுகிறார் முர்ஸிலின்.

சினிமா என்ற படுகுழியில் வீழ்ந்து வாழ்வை தொலைக்க இருந்த இந்த சகோதரி தற்போது அழைப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்க செயலாகும். இதே போல் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த கூத்தாடி சல்மான் கானும் தனது தவறுகளை உணர்ந்து இஸ்லாமிய வழி முறைக்கு வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
09-01-2015

Thursday, January 08, 2015

பிகே போன்ற படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெற்றிகரமாக ஏன் ஓடுவதில்லை?

சகோதரர் நாம் மனிதர்கள்!

//எனக்கு ஒரு சந்தேகம்...இந்துக்கள் அதிகம் இருக்கும் இந்த நாட்டில் இந்து மதத்தை கிண்டல் செய்யும் பீ.கே போன்ற படங்கள் சக்கை போடு போடுகின்றன.....கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாட்டில் வெளி வந்த ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் படமும் சக்கை போடு போட்டது.......இதே போன்று இஸ்லாமை அல்லது நபியை விமர்சித்தோ இஸ்லாமியர்கல் அதிகம் வாழும் நாட்டில் ஒரு படம் வெளிவந்து நன்றாக ஒடுமா?// - நாம் மனிதர்கள்!

இந்து மத வேதங்கள் என்ன சொல்கிறதோ அதன் படி இந்துக்கள் நடப்பதில்லை. மாறாக பெரும்பான்மையோர் அதற்கு எதிராகவே நடக்கின்றனர்.

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

-------------------------------

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

------------------------------

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

-------------------------------

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

-------------------------------

யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)- கீதை

தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்.

--------------------------

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18

--------------------------

மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

-------------------------

ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

------------------------

இந்து மதமும் கிருத்தவ மதமும் ஏக இறைவனையே வணங்கச் சொல்ல தெருவுக்கு ஒரு கடவுளை உங்கள் இஷ்டத்துக்கு உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? முக்கடவுள் கொள்கையை கிருத்தவத்தில் நுழைத்தது யார்? பைபிள் ஏக இறைவனையே வணங்கச் சொல்ல இறைத் தூதரான ஏசுவை ஏன் வணங்குகிறீர்கள்? இது பற்றி என்றாவது சிந்தித்துள்ளீர்களா?

“நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.”
-குர்ஆன் 2 : 186

புரோகிதர்களிடம் செல்லாதீர்கள்: உண்டியலில் எனக்காக சாசு போடாதீர்கள். உங்களின் தேவை எதுவோ அதனை என்னிடமே கேளுங்கள். உங்கள் அருகிலேயே இருக்கிறேன். என்று நம்மை படைத்த இறைவன் கூறும் போது அதற்கு மாற்றமாக நடப்பது யார் குற்றம்? இவ்வாறு புரோகிதர்களால் ஏமாற்றப் படுவதைத்தான் பிகே படமும் கண்டிக்கிறது.

இந்து கிருத்துவத்தில் வேதக் கருத்துக்கள் திரிக்கப் பட்டதால் அதன் உண்மைத் தன்மையை சிறிது சிறிதாக இழந்ததால் மக்களுக்கு மதங்களின் மேல் உள்ள பிடிப்பு போய் அந்த மதத்துக்கு எதிரான கருத்து கொண்ட படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

இஸ்லாமியர்கள் இன்று வரை தங்கள்து வேதத்தில் கை வைக்காமல் எந்த மாற்றமும் செய்யாமல் அதன் தனித் தன்மையைப் பாதுகாக்கின்றனர். அந்த வேத வசனங்களையும் அதனைக் கொண்டு வந்த தூதரையும் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கின்றனர். இந்த இஸ்லாத்தால் அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டதே இந்த பிடிப்புக்கு காரணம். எனவே தான் இஸ்லாத்தையோ, நபிகளையோ கிண்டலடிக்கும் சினிமாக்களை நஞ்சாக வெறுக்கின்றனர் முஸ்லிம்கள்.

இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் வேதங்கள் கூறும் ஏக இறைக் கொள்கையை கடை பிடிக்கத் தொடங்கி விட்டால் இஸ்லாமியர்களைப் போல அவர்களுக்கும் தங்கள் மதங்களின் மேல் பிடிப்பு ஏற்பட தொடங்கி விடும். அதன் பிறகு பிகே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மதிப்பிருக்காது. அவ்வாறு நீங்கள் ஏக இறைக் கொள்கைக்கு மாறி விட்டால் இந்து கிருத்தவத்தை கிண்டலடிக்கும் படங்களை எடுக்கவும் சினிமாக் காரர்கள் முன் வர மாட்டார்கள்.

முயற்சித்துத்தான் பாருங்களேன்.!

Monday, December 29, 2014

"பிகே" திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் தள் தாக்குதல்!



பிகே' திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் தள் தாக்குதல்!

அகமதாபாத்: இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் அமீர்கானின் 'பிகே' படத்தில் இருப்பதாகக் கூறி அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து கடந்த 19 ஆம் தேதி வெளியான பிகே திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தில் உள்ள காட்சிகள் சில இந்து மதக் கடவுள்களையும், இந்துமத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக பிகே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக பேசிய பஜ்ரங் தள் அமைப்பின் பிரதிநிதி தர்மேந்திரா அசோலியா கூறுகையில், அமீர்கா னுக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் பாடல் காட்சிகள் லவ் ஜிகாத் அமைப்பை முன் நிறுத்துவதாக உள்ளன என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிகே படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு கூடிய பஜ்ரங்தள் அமைப்பினர், பிகே படத்தில் இந்து மத நம்பிக்கை இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தியேட்டர்கள் மீது தாக்குதலிலுன் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எந்த காட்சிகளும் நீக்கப்படாது: சென்சார் போர்டு திட்டவட்டம்

இதனிடையே இந்து அமைப்புகளின் கோரிக்கையின்படி பிகே திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும் நீக்கப்படாது என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு படமும் யாரோ சிலரின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும். அதே சமயம் தேவை இல்லாமல் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது. பிகே படத்திற்கு ஏற்கனவே நாங்கள் தணிக்கை சான்று வழங்கிவிட்டோம். பொதுமக்களும் பலர் அதனை கண்டு களித்துவிட்டனர்,எனவே அதில் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது" என மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி
விகடன்
30-12-2014

விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது பொங்கி எழுந்த அதி மேதாவிகள் தற்போது வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கின்றனர். இது தான் இந்தியா! இது தான் தமிழகம். :-(

Friday, December 26, 2014

அமீர்கானின் "பிகே" பார்தேன்! அதன் விமர்சனம்!



வேறு ஒரு கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே(அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

டைரக்டர் மிக நகைச்சுவையாக இந்த கதையை நகர்த்திச் சென்றுள்ளார். பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை என்கின்றனர் எல்லோரும்.

ஒரு கடைக்கு செல்கிறார். 'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே.

கடவுளை எந்த அளவு கீழ்த்தரமாக சித்தரிக்கின்றனர் என்பதை இந்த காட்சி அழகாக சொல்கிறது.

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான ஒரு இந்துத்வா மத துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். அவர் செய்தியை கேள்விப்பட்டு

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த இந்துத்வா துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். இந்த பேச்சுக்கள் ஸ்கைபில் (மடிக்கணிணியில்) நடக்கிறது. 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த இந்துத்வா துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்'

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் ஒரு சிறுவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார்.

அங்குதான் நமது கதாநாயகன் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை. அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது. தவறாக நமது கததாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை நமது பிகே விளக்கி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை உலகுக்கு விளக்குகிறார்.

இந்து, கிறித்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் டைரக்டர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது தாலிபான்களைப் பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைத்தால் இடையில் இந்த இடைத் தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' என்று புரோகிதர்களைப் பார்த்து பிகே கேட்கிறார்.

மூன்று மதங்களையும் பொதுவாக சொன்னாலும் பல இடங்களில் இந்துத்வாவாதியினர் செய்யும் அட்டூழியங்களை இந்த படம் மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறது. பல இடங்களில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்கள் திட்டத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டார்களே என்ற கோபத்தில் நாடெங்கும் இந்துத்வாவாதியினர் இந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டமானது இந்த படத்துக்கு மேலும் விளம்பரத்தை கொடுத்து அமோக வசூலைக் கொண்டிக் கொண்டிருக்கிறது. :-)

நேரமிருப்பின் படத்தை பாருங்கள்....


Wednesday, December 24, 2014

இயக்குனர் கே.பாலசந்தர் மறைந்தார்!



திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி பாணியை கைக்கொண்டு அதனை வெற்றியாக்கியும் காட்டியவர் பாலசந்தர். நான் சிறுவனாக இருக்கும் போதே இவரது படங்களின் மேல் ஒரு அலாதி பிரியம் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு செய்தியை சொல்லுவார். ஒரு டைரக்கடருக்காக படம் ஓடியது என்றால் அது இவருக்காகத்தான் இருக்கும்.

தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி, வறுமையின் நிறம் சிகப்பு, அரங்கேற்றம், சிந்து பைலவி போன்ற படங்கள் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டவைகளில் ஒன்றிரண்டு. தான் பார்பன சமூகமாக இருந்தாலும் அந்த இனத்தில் எந்த பொருளாதார முன்னேற்பாடும் இல்லாமல் வரிசையாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு அதனால் அந்த குடும்பம் எந்த அளவு சீரழிகிறது என்பதை 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் சமூகத்துக்கு சொன்னவர். தான் டாக்டராக வேண்டும் என்பதற்காக தனது மானத்தையே இழந்த தனது அக்காவை வீட்டை விட்டு கமலஹாசன் வெளியே துறத்துவதாகட்டும், கெட்டுப் பொன அந்த பெண்ணுக்கு வாழ்வு தருவதாக ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தங்க முத்து முன் வருவதாக காட்டியதாகட்டும் என்று பல இடங்களில் தனது முத்திரையை பதித்து விடுவார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு குடும்பத் தலைவன் சந்நியாசம் பெற்று செல்வதும் அதனால் மூத்த மகள் வேலைக்கு செல்வதையும் அவள் ஒரு தொடர்கதையில் அழகாக காட்டியிருப்பார். அதே போல் சிந்து பைரவியில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதை 'தலையை ஆட்டும் புரியாத கூட்டம்' என்று பார்பனர்களை சாடி தமிழ் மொழியில் பாடினால் என்ன தவறு? என்று கேட்டு அங்கும் தனது முத்திரையை பதிப்பார். மொழிப் பற்று இருக்கலாம் அதுவே மொழி வெறியாக மாறிவிடக் கூடாது என்பதை 'புன்னகை மன்னனில்' அழகாக சொல்லியிருப்பார். நெற்றியில் திரு நீறு பூசிக் கொண்டு அராஜக செயல்களை செய்யும் போலி ஆத்மீக வாதிகளையும் இந்த படத்தில் அவர் சாட மறந்ததில்லை.

தனது படங்கள் அனைத்திலும் நாகேஷ் என்ற ஒரு உன்னத கலைஞனை கடைசி வரை உபயோகப்படுத்தி நகைச்சுவைக்கு ஒரு புது அத்தியாயத்தையே உருவாக்கியவர். புரட்சி இயக்குனர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் இன்று நம்மிடையே இல்லை.

கூத்தாடி குழுமத்தில் ஓரளவு அறிவு சார்ந்த படங்களை எடுத்த கேபியின் மறைவு உண்மையில் இழப்பே! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, December 09, 2014

நடிகர் ரஜினி காந்தின் உலக மகா வருத்தம்!



'நான் என் முதல் படத்தில் கூட கேமராவுக்கு முன்னால் இந்த அளவு வெட்கப்பட்டதில்லை. என் மகள் வயதை யொத்த சோனாக்ஷி சின்ஹா, அனுஸ்கா ஷெட்டி போன்ற இளம் வயது ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிப்பது எனக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. கடவுள் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை இது' என்று அங்கலாய்த்திருக்கிறார் ரஜினி காந்த்..

இன்னும் சில நாட்களில் ரிலீஸாகவிருக்கும் லிங்கா படத்தில் இள வயது ஹீரோயின்களோடு நடிப்பதைப் பற்றியே நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா
09-12-2014

தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். கதை இவர் கேட்டுத்தான் ஓகே ஆகிறது. இசை யார் என்பதற்கு இவரது அனுமதி வேண்டும். கூட நடிக்கும் ஹீரோயின்கள் யார் என்பதையும் இவர்தான் முடிவு செய்ய வேண்டும். இவர் படத்தைப் பொருத்த வரை டைரக்டர் தயாரிப்பாளர் எல்லாம் அடுத்த இடத்தில்தான் வருவார்கள்.

எனவே இந்த கிழ வயதிலும் இளம் நடிகைகளோடு உல்லாசமாக டூயட் பாடுவதற்கு ஆசைபட்டு விட்டு 'இது எனக்கு கடவுள் தந்த தண்டனை' என்று சொல்வதற்கும் அசாத்திய மனத் துணிச்சல் வேண்டும். அது ரஜினியிடம் நிறையவே இருக்கிறது. 'தலைவா... நீயில்லாமல் நானில்லை' என்று தமிழன் இவர் படத்துக்கு கற்பூரம் ஊற்றி ஆராத்தி எடுக்கும் காலமெல்லாம் இது போன்ற தமாஷ்களை நாம் தினமும் பத்திரிக்கையில் பார்க்கலாம்.

நடிகை தேவயானி இன்று பள்ளியில் டீச்சராக!



சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையில் பிரபலமாக வலம் வந்த நடிகை தேவயானி. ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும் ஆனார். திருமணத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது அதை எல்லாம் ஓரங்கட்டி விட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் ஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியர் தொழிலானது தனக்கு மிகவும் நிம்மதியைத் தருவதாக பேட்டியில் கூறியுள்ளார்.

சினிமா உலகைப் பொருத்த வரை ஆண் நடிகர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. அறுபது வயதையும் தாண்டி அவர்களால் ஹீரோவாக நடிக்க முடியும். கமல், ரஜினி இதற்கு சிறந்த உதாரணம். பெண் நடிகைகள் சில ஆண்டுகள் மிக பிரபலமாக பேசப்படுவர். அவர்களின் இளமை முடிந்தவுடன் எவராலும் கண்டு கொள்ளப்படாமல் கழட்டி விடப்படுவர். மார்க்கெட் இழந்த எத்தனையோ நடிகைகள் பாலியல் தொழிலில் வீழ்ந்து தாங்களும் தங்களின் சுற்றத்தாரையும் படு குழியில் தள்ளி வரும் காட்சியைத்தான் பார்க்கிறோம். அந்த வகையில் இல்லாமல் இந்த நடிகை திருமணமும் முடித்து கவுரமான வேலையிலும் சேர்ந்துள்ளார். இவரை பாராட்டுவோம்.

சினிமாவில் சேர்ந்து பேரும் புகழும் அடையலாம் என்று தினமும் வீட்டை விட்டு ஓடி வரும் பல பெண்களின் கதை கடைசியில் கண்ணீரில்தான் பரிதாபமாக முடிகிறது. இது ஒரு மாய உலகம். இதை நம்பி குடும்பத்தை உதறி சென்னையை நோக்கி ஓடி வரும் பல பெண்கள் ஒளியை தேடி வேகமாக வந்து தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் விட்டில் பூச்சியை ஒத்தவர்கள் என்றால் மிகையாகாது.

தகவல் உதவி
என்டிடிவி
05-12-2014

Wednesday, September 03, 2014

மஜீத் மஜீதியும் ஏஆர் ரஹ்மானும் இணையும் புதிய படம்!



படைப்பாளுமை மிகுந்த சர்வதேசத் திரைப்படங்களில் ஒன்று ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைப் பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியிருந்தார். ஒரு ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலகத்தையே கலங்க அடித்தவர்.

உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் தரமான சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படைப்புடன் உறவுகளின் உன்னதம் பேசும் பல திரைப்படங்களைக் கொடையாக அளித்தவர். அப்படிப்பட்ட இயக்குநரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் எப்படியிருக்கும்? அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் அந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக அங்கேயே தங்கிவிட்டாராம் இசைப்புயல்.

இசையமைக்கும் படங்கள் எந்த மொழியில் உருவானாலும் எத்தனை பெரிய படவுலகாக இருந்தாலும் இடம்பொருள் ஏவல் என்ற பாரபட்சம் காட்டாமல் முழு அர்ப்பணிப்பைச் செலுத்திவிடும் கலைநேர்மை கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மஜித் மஜிதி படத்துக்கு இசையமைத்துவிட்டுத் திரும்பியதிலிருந்தே மிகவும் ஆத்ம திருப்தியோடு காணப்படுகிறாராம் அவர்.

அது மட்டுமல்ல, அந்தப் படத்தின் வெளியீட்டையும் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். மஜித் மஜீதி ஈரானிய முஸ்லிம். ஏற்கெனவே இந்திய கலாசாரத்தை திரைப்படங்களாக ஏன் எடுப்பதில்லை என்று ரஹ்மானிடம் கேட்டவர் இவர்தான். மஜீதி மேல் அதிக பற்றுக் கொண்ட ரஹ்மான் ஷியாயிசத்தில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நமது இந்தியாவிலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்திலும் தர்ஹா வணக்கத்தை அறிமுகப்படுத்தி ஏக தெய்வ கொள்கையை பலரிடமிருந்து பறித்ததே முந்தய ஷியா ஆட்சியாளர்கள். ஏற்கெனவே ஒவ்வொரு தர்ஹாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஹ்மான். குர்ஆனின் உளப்பூர்வமான பல வசனங்கள் இன்னும் இவரது உள்ளத்தை தொடவில்லை என்றே நினைக்கிறேன். அந்த நிலைக்கு சென்றவுடன் தர்ஹாவின் மேல் உள்ள பற்று தானாக சென்று விடும்.

மேலும் மஜீத் மஜீதி முகமது நபியின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருப்பதாகவும் இந்த வருடமே அதன் வெளியீடு இருக்கும் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படம் வெளியானால் இஸ்லாத்தை பற்றிய மேற்குலக மதிப்பீடு முற்றிலுமாக மாறும் சூழல் ஏற்படும் என்று வேறு கூறியிருந்தார். ரஹ்மான் இசையமைத்த படம் முகமது நபியைப் பற்றியதா அல்லது அது வேறு படமா என்று தெரியவில்லை. ஒரு ஈரானியர் இந்த படத்தை எடுப்பதால் குர்ஆனின் வசனங்களோடு மோதாமலும் முகமது நபியின் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து நிகழ்வுகள் எடுக்கப்பட்டதாகவும் அது இருக்க வேண்டும். இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுப்பார் மஜீதி என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்கார் விருதுக்கே கூட செல்லலாம். ஆனால் பொய் கலக்காமல் உண்மை வரலாறை எடுக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பு. படத்தைப் பற்றிய முழு விபரங்களும் இனிமேல்தான் வெளியாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, August 19, 2014

இந்திய கலாசாரத்தைப் பற்றி ஏ ஆர் ரஹ்மான்!



சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள். அவரது பேச்சு: "நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."

(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).

-பத்திரிக்கை செய்தி




இந்திய கலாசாரம் என்பது என்ன? மனிதனை நான்கு பிரிவுகளாக பிரித்து அவனது தொழிலுக்கு ஏற்ப அவனது தகுதியை நிர்ணயித்து மேல் சாதி கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ள மனு நீதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்று வரை இயக்கப்படுவதற்கு பெயர்தான் இந்திய கலாசாரம். ஆதி தமிழர்கள் ஏக இறைவனை வணங்கி வந்துள்ளதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாக போர் செய்து விவசாய நிலங்கள் கழனிகளையும் வெற்றிக் களிப்பால் அழித்தது நமது கலாசாரம்.

பெண்கள் தங்களின் மார்பை மறைத்துக் கொள்வதற்கு போராட்டம் நடத்தில் பார்பனர்களின் விடாப்பிடியால் முடிவில் கிறித்தவ மதத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டது நமது கலாசாரம். கன்யாகுமரி சுற்று வட்டாரத்தில் நாடார்களிடம் இதனைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். 'முலை வரி' என்ற ஒன்றை போட்டு பெண்களின் மார்புக்கும் வரி வசூல் செய்தது நமது கலாசாரம்.

இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிரட்டையில் தேனீர் கொடுக்கும் பழக்கமும் தனிக் குவளை முறையும் உள்ளது. ஆதிக்க சாதியினர் உள்ள ஊர்களில் பள்ளிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட சிறுவர் சிறுமியர் தங்கள் காலணிகளை கைகளில் எடுத்துச் செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதுவும் கூட நமது கலாசாரம்தான்.

அடுத்து சாதி மாறி காதலித்த ஒரே குற்றத்திற்காக தருமபுரியில் இரண்டு கிராமங்களை முற்றாக அழித்து அதனை இன்று வரை நியாயம்தான் என்று பேசிக் கொண்டும் இருக்கிறோம். முடிவில் தாழ்த்தப்பட்ட அந்த இளைஞனை கொன்று அதனை தற்கொலையாக மாற்றியதும் நமது கலாசாரம்தான்.

காஞ்சிபுரம் கோவிலில் நடந்த பாலியல் அநியாயங்களை தட்டிக் கேட்ட கடவுள் பக்தர் சங்கரராமனை பட்டப் பகலில் கொலை செய்து, அதற்கு காரணமானவர்கள் இன்றும் மக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதும் நமது கலாசாரம்தான்.

கந்து வட்டி, ரியல் எஸ்டேட், பெண் பிரச்னை, மாமூல் வசூலிப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு அதனால் கொலையுண்ட பல இந்துத்வா நபர்களை நாம் அறிவோம். அவர்கள் இந்துத்வாவில் தொடர்பு உள்ளவர்கள் என்ற ஒரே காரணத்தினால் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வழக்கை முடித்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கு மத சாயம் பூசி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் நமது கலாசாரம்தான்.

கணவன் இறந்தால் எரியுட்டப்படும் அந்த சிதையிலேயே இளம் பெண்களை 'சதி' என்ற பெயரில் சதி செய்து நெருப்பில் தள்ளுவதும் நமது கலசாரம்தான். அவ்வாறு தங்கள் உயிரை விட துணியாத பெண்களை கோரஷாக சப்தமிட்டு அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி கொன்றதும் நமது கலாசாரம்தான்.

உலகிலேயே கற்பழிப்புகள் நடைபெற்று அந்த பெண்களை மரத்தில் தொங்க விடுவதும் நடப்பது நமது நாட்டில்தான். பெண் கொடுமைகள் நடப்பதில் உலகிலேயே முதலிடத்தை பெற்றவர்களும் நமது நாட்டவர்தான்.

இப்படியாக நமது கலாசாரத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஜீத் மஜீதி அவர்கள் ஈரானில் அமர்ந்துள்ளதால் இந்த கலாசார புரட்சிகளெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் சிறு வயது முதலே இந்து கலாசாரத்தில் வளர்ந்து பழக்கப்பட்ட ரஹ்மானுக்கு இவை எல்லாம் தெரியாதா? நமது நாட்டோடு சென்று விட்ட இந்த கலாசார புரட்சியை உலகுக்கும் திரைப்படமாக எடுத்துப் போட்டு நமது மானத்தைக் கப்பலேற்ற வேண்டுமா? இந்திய கலாசாரங்களை ஒவ்வொன்றாக திரைப்படங்களாக எடுத்து அதனை மஜீது டைரக்ட் செய்து ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்தால் கண்டிப்பாக அது வெற்றி பெறும். பல ஆஸ்கார் விருதுகளையும் குவிக்கும். ஆனால் இந்தியர்களாகிய நாம் வெளி நாட்டுக்கு சென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். இந்த நிலை நமக்குத் தேவைதானா? என்பதை ரஹ்மான் சற்று யோசிப்பாராக!

Sunday, August 17, 2014

'அஞ்சான்' படத்தில் பணத்தை தொலைத்தவர்களுக்காக..... :-)



48 வயதேயான ஹமூத் இன்று நடக்க முடியாமல், தனது அத்தியாவசியத் தேவைகளைக் கூட செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளார். இவரது வீட்டிலிருந்து கடந்த மூன்று வருடங்களாக உடல் பருமனால் வெளியேற முடியாமல் உள்ளார். அந்த அளவு உடல் பெருத்து விட்டது. இவரை பரிசோதிக்க வரும் ஒரு சில டாக்டர்களும் இவரது நோயை குணப்படுத்த முடியாது என்று கை விரித்து விட்டனர்.

"கடந்த மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியேறாமல் சிரமப்படுகிறேன். எனது எடை 300 கிலோவை நெருங்கி விட்டது. எனக்கு குழந்தைகளோ மனைவியோ கிடையாது. ரியாத்தின் கிழக்குப் பகுதியில் வாடகை வீட்டில் தற்போது தங்கியுள்ளேன். வருடத்திற்கு 20000 ரியால் வாடகை கொடுக்க வேண்டும். சவுதி அரசு எனக்கு மாதம் 1700 ரியால் மான்யமாக தருகிறது. இதை வைத்து எனது காலத்தை மிகக் கஷ்டத்தோடு ஓட்டி வருகிறேன்" என்று வருத்தத்தோடு தனது சிரமங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ மனையின் மருத்துவ குழு வந்து இவரை பார்வையிட்டது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னைகள் என்று பல நோய்கள் இவரை தாக்கியுள்ளது. இதோடு சேர்ந்து யானைக்கால் வியாதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எனவே மருத்துவ குழு இவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாது என்று கை விரித்து விட்டது. இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார் என்றும் மருத்துவக் குழுவினர் சொல்லியுள்ளார்களாம்.

'சமூக அமச்சகத்தை தொடர்பு கொண்டு எனக்கு ஒரு உதவியாளரை தரும்படி கேட்டுக் கொண்டேன். வீல் சேரில் என்னை வைத்து வெளியில் அழைத்துச் செல்ல இது உதவியாக இருக்கும். ஆனால் என்னுடைய இந்த கோரிக்கைக்கு அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை வரவில்லை. சவுதியிலோ அல்லது வெளி நாட்டிலோ எனக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு முன் வர வேண்டும்.' என்று சோகத்தோடு பத்திரிக்கையாளரிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் தற்போது அவருக்கு சில உதவிகளை செய்து வருகின்றனர். இருந்தும் உறவினர்கள் யாரும் இல்லாததால் பல சிரமங்களை அனுபவித்துக் கொண்டள்ளார்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
16-08-2014

நான் பல சவுதிகளின் திருமண விருந்துகளில் கலந்து கொண்டுள்ளேன். நாம் மூன்று பேர் சாப்பிடும் சாப்பாட்டை அவர்கள் ஒருவராக அமர்ந்து வெளுத்து வாங்குவதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். ஆட்டின் கொழுப்பை மட்டுமே சாப்பிடுபவர்களும் உள்ளனர். இவ்வளவு சாப்பிடும் இவர்களுக்கு அதனை கரைக்கும் அளவுக்கு உடல் உழைப்பு கிடையாது. இதுதான் பிரச்னையே. அதிகமாக செல்வந்தர்களாக இருப்பதால் உடல் உழைப்பு இல்லாததனால் உடல் பெருத்து விடுகிறது.



நபித் தோழர் ஜாபிர்அறிவிக்கின்றார்கள்:

''ஒருவரின் உணவு இரண்டு நபர்களுக்குப் போதும். இரண்டு பேர் உணவு நான்கு நபர்களுக்குப் போதும். நான்கு நபர் உணவு, எட்டு நபர்களுக்குப் போதுமாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்

மற்றொரு அறிவிப்பில் 'வயிற்றை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதி உணவு: ஒரு பகுதி தண்ணீர்: ஒரு பகுதி காற்று' என்றும் நபி அவர்கள் கூறியுள்ளனர்.

நபி அவர்கள் சொன்னது மிகச் சிறந்த மருத்துவம். நபி காட்டித் தந்த வழிமுறையை கடைபிடிக்காததனால் இன்று இந்த இளைஞர் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். மேலும் இவர் இருப்பது வறுமையான ஆப்ரிக்காவில் அல்ல. செல்வம் பூத்துக் குலுங்கும் சவுதி நாட்டில். கண்டிப்பாக இதற்கு மருத்துவம் இருக்கிறது. நான்கு சவுதி செல்வந்தர்கள் சேர்ந்தாலே இந்த இளைஞனின் சிரமத்தைப் போக்கி விடலாம். சவுதி அரசு மனது வைத்தாலும் சில மாதங்களிலேயே இவரது சிரமத்துக்கு விடிவு கிட்டி விடும்.

இவரது சிரமம் நீங்க நாமும் பிரார்த்திப்போம். இதனை படிக்கும் நாமும் உணவு விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். 'உடுத்திக் கெட்டான் பாப்பான்: திண்டு கெட்டான் துலுக்கன்' என்ற பழமொழியை நம் அளவிலாவது மாற்ற முயற்சிப்போம், :-)

400, 500 என்று பணத்தை அழுது அஞ்சான் படம் பார்த்தவர்கள் அது ஊத்திக் கொண்டதால் தமிழகத்திலும் உலகமெங்கிலும் ஒரு வித வெறியில் அலைந்து கொண்டுள்ளார்களாம். :-) சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் அனைத்துப் படங்களும் ஊத்திக் கொள்ளட்டும். அடுத்த தலைமுறையாவது சினிமா சம்பந்தமில்லாத ஒரு முதல்வரை தமிழகம் காணட்டும். படம் பார்த்து பணத்தை இழந்த அனைவரும் 'கொழுப்பு நோய் இறப்பில் கொண்டு விடும்' என்ற இந்த அருமையான டாக்குமெண்டரி படத்தை இலவசமாகப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வார்களாக!



Friday, May 30, 2014

நடிகை மோனிகா எம்ஜி ரஹிமாவாக மாறியது ஏன்?



http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சுஹாசினி டைரக்ஷனில் வெளி வந்த இந்திரா படத்தில் நடித்துள்ள நடிகை மோனிகா தற்போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியமாகி உள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே! சொந்த வீடு இருக்கிறது: தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பேரும் புகழும் பணமும் இருக்கிறது. ஆனால்....

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.........

நோ பீஸ் ஆஃப் மைன்ட்! (no peace of mind) ஞான ஒளி சிவாஜி பாணியில் சொல்லிக் கொள்ளவும் :-)

ஆம். மனதில் அமைதியில்லாததுதான் இது போன்ற பிரபலங்கள் இஸ்லாத்தை தாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கான காரணம். அவரது பேட்டியிலும் அதனைத்தான் பிரதானமாக கூறுகிறார்.

கோடிகள் புரளும் இந்த சினிமா துறையை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடப் போவதாக சொல்கிறார். சமூகத்தை ஆபாசத்தால் சீரழிக்கும் இந்த சினிமா தொழிலை விட்டது மிக நன்று. மற்ற தொழில்களில் இதை விட இறைவன் அதிக அபிவிருத்தியை தரலாம்.

பணத்துக்காக மாறி விட்டார்: அரபு ஷேக்கை கல்யாணம் செய்யப் போகிறார்: பைத்தியம் பிடித்து விட்டது: இந்து மதத்தில் இல்லாத தத்துவங்களா: என்றெல்லாம் பலவாறாக அவர் எள்ளி நகையாடப்படுவார். அதனை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு சிறந்த ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற நாமும் இந்த சகோதரியை வாழ்த்துவோம்.

'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3


உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17


ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார்.

இந்து நண்பர்கள் கோபப்படாமல் எதனால் இவ்வாறு தாய் மதம் விட்டு மாறுகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். நேற்றைய பதிவில் கூட 14-15 வயது தலித் சிறுமிகளை கற்பழித்து கொன்று அந்த பெண்களை தூக்கிலும் ஏற்றியுள்ளார்கள். தமிழகத்திலும் தலித் வன்னியர் நாடார் தேவர் மோதல்களை தினமும் பார்த்து வருகிறோம். நரேந்திர மோடி வந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை. சாதி வெறியை அவர் மேலோங்கவே செய்வார். அல்லது இஸ்லாமியர்களை வம்புக்கிழுப்பார். இதைத் தவிர வேறு மாற்றங்கள் எதுவும் நிகழப் போவதில்லை. மாற்றங்கள் வேதங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.