".... குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராமணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ' எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்' என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள். கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக்கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம். . நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... "
----- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. ஷ்வேதாம்பரி ஷர்மாஅவர்களின்பேட்டி
1 comment:
நன்று.இப்படி அனைத்து வழக்குகளும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது விருப்பமும்.
முஸ்லீம்களால் சொல்லப்படும் முஹம்மதின் வாழ்க்கை சம்பவத்தை திருமதி.நுபுா் சா்மா சொன்னதால் இந்தியாவிற்கு தலை குனிவு ஏற்பட்டு விட்டது என்று உச்ச நீதிமன்றதம் தெரிவித்திருப்பது போலியான வாதம்.மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய வாதம்.
Post a Comment