கர்நாடகா!
பசவகல்யாண் ஹல்யால் கிராமம்.
பள்ளிக் கூடத்தில் மதிய உணவு சமைக்க ஒரு தலித்தை அரசு நியமித்துள்ளது. இதனால் பள்ளியின் புனிதம் கெட்டு விட்டதாக மேல் சாதி இந்துக்கள் புகார் அளித்துள்ளனர். தங்கள் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். மேல் அதிகாரிகள் பலரும் பேசிப் பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளுக்கும் சாதி வெறியை ஊட்டி வளர்க்கின்றனர் பெற்றோர். வேதங்களில் சாதி உள்ளவரை இவர்கள் மனதில் இருந்து சாதி வெறியை அகற்ற முடியாது. அதிலும் பிஜேபி ஆட்சி அமைந்தவுடன் சாதி வெறி இந்த மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நபிகள் நாயம் ஆற்றிய உரை...
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
நபிகள் நாயகத்தை நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கிறோம் என்பதற்கு அவர்களின் போதனைதான் முக்கிய காரணம்...
1 comment:
ஆப்கானிஸ்தானத்தில் வாழ்ந்த இந்துக்கள் எங்கே? நேற்று கூட சீக்கியர்களின் ஆலயம் குருத்துவாராவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே. எங்கே நியாயம்.முஹம்மது சொன்னதெல்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும்தான்.பிற மதத்தவர்களுக்கு . .அவரை நபி என்று ஏற்காதவர்களுக்கு அவா் கொடுத்தது வாள்தான்.கற்பழிப்புதான். கொலைதான். வெறுப்புதான்.
இந்துக்களை காபீர்கள் என்றுதானே தாங்கள் கருதுகின்றீர்கள். காபீா் என்பவன் கண்ணியமானவன்.பக்திமான்.ஒழுக்கம் உடையவன்.சீலம் உடையவன்.சிறந்தவன்.மற்றவரகள் போற்ற வேண்யவன் என்று கருத்து அரேபிய மத நுல்களில் இருந்தால எடுத்துக் காட்டுங்கள்.
இது போன்ற சம்பவங்கள் மிகவும பழைய காலத்தில் நடந்தது.இன்று நடக்க வாய்ப்பில்லை.சதா இந்துக்கள் பற்றி தாழ்வான கருத்தை முஸ்லீம்கள் மததில் விதைத்து இந்துக்கள் மீது விரோதம் வெறுப்பு பகை தீயை முஸ்லீம்களமனதில் தூண்ட சுவனப்பிரியன தொடா்ந்து பணியாற்றி வருகின்றாா்.
Post a Comment