"எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்."
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்தவர் சனா கான். இவர் நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞராகத் திரையுலகில் பணியாற்றி வருபவர்.
அதேபோல, கடந்த 2012-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தார்.
சமீபகாலமாக சனா கான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதிலும் பணியாற்றுவதில்லை. கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்து திருமண வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவு செய்த சனா, தனது வாழ்வின் கடுமையாக நாள்கள் குறித்தும் தான் ஹிஜாப் அணிந்ததற்கான காரணம் குறித்தும் பேசியிருந்தார்.
இது பற்றிக் கூறிய அவர், “எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.
அப்போது 2019-ல், ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்தக் கல்லறையில் நான் இருப்பதைப் பார்த்தேன்.
அந்தக் கனவு, இதுதான் என் முடிவு என்று எனக்கு உணர்த்தியது போல் இருந்தது. இது எனக்குக் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன்.
குறிப்பாக அதிலிருந்த 'உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை' என்ற அழகிய வாசகம் ஒன்று என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது.
மறுநாள் காலையில் நான் எழுந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று முதல் ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன். இனி இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.
1 comment:
அம்மணி அரேபியமதத்தை சோ்ந்தகுடும்பத்தில் பிறந்தவா். பணம் சம்பாதிக்க திரைப்படத்துறையில் புகுந்தாா்.அப்போது மதம் தடுக்கவில்லை. பணம் சம்பாதித்தாா். திரைப்படத்துறை கடுமையான சோதனைகளை வைக்கும். கணவனை பெற்றுக்கொண்டாா். நடிகை அறிவுள்ளவா். பணம் வேண்டும் என்று திரைப்படத்துறையில் இருந்தால் குடும்ப வாழ்வை இழக்க நேரிடும். எனவே நாசுக்காக விலகி இல்லற வாழ்வில் ஈடுபட்டு குடும்பத்தை கவனிக்க துவங்கி விட்டாா். நடிகைகளின் வாழக்கையில் இருந்து பாடம் கற்றவா் போலிருக்கிறது. இதில் விசேசம் ஏதும் இல்லை.
Post a Comment