Followers

Tuesday, September 13, 2022

மனு ஸ்ம்ரிதி என்பதே நூலே அல்ல. ஸ்ம்ரிதி என்றால் உபதேசம். நீங்கள் குறிப்பிடும் நூல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயனால் திரித்து எழுதப்பட்டது. அதை படித்து ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தையும் வெறுப்பையும் வளர்த்த வெள்ளையர்களின் அடிமையான திராவிட இயக்கம் ஹிந்து விரோத கூட்டமே.

-----------------------------------------


 அது சரி நாராயணா... கீழே தரப்பட்டுள்ள ஆதாரங்கள் யார் எழுதியது? கிருத்தவ மிஷினரியா? பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா நாராணயா?


பிரம்ம சூத்திரம்
சூத்திரற்கு சமீபத்தில் அத்தியயனம் (வேதம் ஓதல்) செய்ய ஒண்ணாது. "வேதத்தை கேட்குங்கால் உருக்கிய ஈயத்தினாலும் மெழுகினாலும் நிறைக்க. வேதங்களை உச்சரிக்குங்கால் நாவை இரண்டாக சேதித்தல் (வெட்ட) வேண்டும். மனசிற்றரித்து (மனப்பாடம் செய்து) வைத்திருந்தால்.. ...சரீரம் பேதிக்கப்படல் (துண்டாக்க) வேண்டும்" என்னும் ஸ்ம்ரிதியானது வேதத்தை சிரவணம் செய்யும் (கேட்கும்) சூத்திரற்கு தண்டம் விதிக்கின்றது.

ஸ்ருதி, ஸ்ம்ரிதிகளினால் சூத்திரர் சமீபத்தில் அத்தியயனம் முதலியன செய்வது நிஷேதிக்க படுகின்றமையின் (தடை செய்யப்பட்டதால்) அவர்க்கு..வேதார்த்த விசாரம் எங்கிருந்தாகும்? (சூத்திரர் வேதம் கேட்பதே தடை செய்யப்பட்டிருக்கும் போது, அவர்கள் எப்படி வேதம் படிக்க முடியும்?). ஆகலின், எப்பிராகாரத்தினாலும் பிராமணனுக்கு எட்டாம் வயசில் செய்யப்படும் உபநயன சம்ஸ்காரமின்றி வேதாத்தியயனம் எவ்விடத்தும் எவனுக்கும் எய்யாதென்பது.. ..சித்தமாயிற்று (பிராமணர்களுக்கு எட்டாம் வயதில் செய்யப்படும் உபநயனம் அதாவது பூணூல் சடங்கு சூத்திரற்கு கிடையாது என்பதால் அவர்களுக்கு வேதம் ஓத அதிகாரம் இல்லை).

ஆகலின் சூத்திரர் பிரம்ம வித்தைக்கு அருகர் அல்லர் (அருகதை இல்லாதவர்) காஞ்சி சங்கர மட வலைத்தளத்தில் இருக்கும் பிரம்ம சூத்திர நூல் இன்னும் ஒரு படி மேலே சென்று "சூத்திரர்கள் நடமாடும் சுடுகாடு" என்றும் அவர்கள் காதுபட வேத ஓத கூடாது என்றும் கூறுகிறது.




No comments: