சோழர்கள் பல்லவர்கள் ஆட்சி பற்றி
பல்லவ ஆட்சி நடந்த போது தான் பார்பனர்கள் அதிக அளவில் தமிழக மண்ணில் குடியமர்த்தப்படுகின்றனர். கூட்டம் கூட்டமாக இங்கு வந்தனர். வந்த பார்பனர்களுக்கு மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வளம் கொழிக்கும் நிலங்கள் பார்பனர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது.
கம்பலை என்ற விவசாயி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தனது வளமான நிலத்தை பார்பனர்களுக்கு தர முடியாது என்று கூறுகிறார். உடனே அரசன் படையை அனுப்பி அந்த விவசாயியின் தலையை வெட்டி எதிர்ப்பவர்களை மண்டியிட செய்கிறான். உயிருக்கு பயந்து எதிர்ப்பு குறைகிறது. தமிழர்களின் பெரும்பாலான நிலங்கள் பார்பனர் வசமாகிறது. இளையான்குடி செப்பேடு இந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.
சோழர்கள் ஆட்சியிலும் இது தொடர்ந்து பார்பனர்கள் வளமாக வைக்கப்பட்டனர். தமிழகத்தில் பார்பனர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை கேள்வி பட்ட பார்பனர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். தமிழர்களின் வாழ்வு முறை குலங்கள் அழிந்து அது சாதியாக உருவெடுக்கிறது.
No comments:
Post a Comment