Followers

Wednesday, April 12, 2023

ராஜாராம் மோகன்ராய்

 

1823 இல் ராஜாராம் மோகன்ராய் ‘‘கவர்னர் ஜெனரலுக்கு எழுதிய கடிதம்'' கவர்னர் ஜெனரலாகப் பணி புரிந்த ஹாம் ஹெர்ஸ்ட் பிரபுவிற்குஅவர் 1823 ஆம் ஆண்டு, திசம்பர் 11ஆம் நாள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்....

 

"இந்தியாவில் நெடுங்காலமாக வழக் கத்தில் இருந்து வருகின்ற கல்வி அறி வைப் பரப்புவதற்கு, இந்துப் பண்டிதர் களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளி களை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக்கூடம் (பேகன் பிரபு வின் காலத்திற்கு முன்பு அய்ரோப்பாவில் இத்தகைய கல்விக் கூடங்கள் இருந்தன)....

 

இலக்கண நுட்பங்களையும், அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர் களின் மனத்தில் பெருஞ்மையாக ஏற்றி வைக்குமே ஒழிய, சமுதாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ, அவற்றை அறிவதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய, பயனற்ற வெறும் சொற்சிலம்ப வாதங்களையும் தெரிந்து கொள்ளுவர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வரு கின்றது...

 

உண்மை அறிவின் ஒளியைப் பெறவொட்டாமல், அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்குமாறு..... பிரிட்டிஷ் இனத்தைச் செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருந்திருக்குமானால், பள்ளிப்பயிற்சி முறையைப் பேகனின் தத்துவ விளக்கத்தினால் மாற்றியமைத் திருக்க வேண்டியது இல்லை. ஏனெனில், பழைய முறையே, அறியாமையை மிகச்சிறந்த முறையில் நிலைபேறுடையதாகச் செய்ய முடியும்.

 

இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச்செய்வது பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால் சமஸ்கிருதக் கல்வி முறையே அதற்குப் போதியதாகும். ஆனால், பிரிட்டனின் குடிமக்களினுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால் அது உடனடியாக மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும் கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக் கியல், இயற்கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு, மற்றும் பயன்தரும் அறிவியல் கலை களைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

 

இவற்றை நடை முறையில் சாதிப்பதற்கு இப்பொழுது வகுத்துள்ள திட்டத்தில் ஒதுக்கப் பட்டுள்ள நிதி வசதி போதியதாகும். அய்ரோப்பாவில் கல்வி பயின்றவர் களுள் நுண்மாண் நுழைபுலமும், பரந்து பட்ட கல்வியறிவும் உடைய பண்பாளர் சிலரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 

அதற்குத் தேவையான புத்தகங்களையும், கருவிகளையும் வேறு பல சாதனங் களையும் கொண்ட கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும்." இந்திய நாட்டின் தலைமைக் குரு வான பிஷப் ஹீபர் (Heber) இக் கடிதத்தை ஹாம்ஹெர்ஸ்ட் பிரபுவிடம் கொண்டு சேர்த்தார்.

- "ராஜாராம் மோகன்ராய்" நூலில் (பக்கம் 40-42)




No comments: