Followers

Wednesday, April 05, 2023

போஸ்னியா - சரஜேவோ

 

போஸ்னியா - சரஜேவோ

 

25 - 08 - 1992 அன்று ஐரோப்பாவில் ஒரு இஸ்லாமிய நாடு உருவாகி விடக் கூடாது என்று முடிவெடுத்த பாசிசவாதிகள் கலவரத்தை அரங்கேற்றினர். முஸ்லிம்களை கொத்து கொத்தாக வெட்டி வீழ்த்தினர். அதன் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்பு மிக்க சிட்டி ஹால் நூலகத்தை பாசிஸவாதிகள் தீயிட்டனர்.  துஸான் தகோல்ஜி என்ற முதியவர் தனது நண்பர்களின் துணையோடு உயிரை பணயம் வைத்து தீயினுள் புகுந்து 10000 க்கும் அதிகமான புத்தகங்களை நெருப்பிலிருந்து காத்தார்.

 

பாசிஸவாதிகளின் எண்ணம் நிறைவேறவில்லை. இன்று அதே நூலகம் பல புதிய புத்தகங்களோடு கம்பீரமாக நிற்கிறது. முன்பை விட அதிக ஈடுபாட்டோடு தங்கள் கடமைகளை செய்கின்றனர் போஸ்னிய முஸ்லிம்கள்.

 

இதே போல் கடந்த சில நாட்களில் பாட்னாவில் ராம நவமியை கொண்டாடிய இந்துத்வாக்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த பாட்னா நூலகத்தை தீயிட்டு அழித்துள்ளனர். இதன் மூலம் இஸ்லாமிய வரலாற்றை அழித்து விடலாம் என்ற எண்ணம் பாஜக இந்துத்வாக்களுக்கு.

 

போஸ்னியாவைப்  போல் வரலாறு திரும்பும் இறைவன் நாடினால். அதே போன்று முன்பை விட சிறந்த நூலகத்தை பாட்னாவில் இஸ்லாமியர்கள் நிறுவுவார்கள். இதனை நாம்  கூடிய விரைவில் காணத்தான் போகிறோம்.

 

தகவல் உதவி

போஸ்னிய செய்திகள்

 

மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்





 

 

 

 

No comments: