Followers

Tuesday, August 25, 2026

நம் மதுரையையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த இந்த தம்பதிக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

 ஆஸ்திரேலியாலிருந்து இந்தியாவை சுற்றிப் பார்க்க மதுரை விமான நிலையம் வந்திறங்குகிறார் லொரேனா. நம் மதுரையை சுற்றிப் பார்க்க வாடகை டாக்ஸியை அமர்த்துகிறார். அந்த டாக்ஸியின் ஓட்டுனர் ரஃபீக் மதுரையை சுற்றிக் காண்பிக்கிறார். 


ரஃபீக்கின் நேர்மை நாணயம் பழகும் விதம் அனைத்தும் லொரேனாவுக்கு பிடித்துப் போக இருவருக்கும் காதல் மலர்கிறது. வழக்கம் போல் இரு குடும்பத்தாரும் எதிர்க்கவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்கின்றனர். இவர்களுக்கு 'மர்யம்' என்ற அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. விஷா பிரச்னைகள் இருந்ததால் சில காலம் மனைவியையும் குழந்தையையும் பிரிந்திருந்தார் ரஃபீக். குழந்தை பிறந்து இரண்டு மாதம் கழித்தே ரஃபீக்கால் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள முடிந்தது. 


இதைப் படித்த பலர் அந்த பெண்ணுக்கும் புர்ஹா போட்டாச்சா என்று கலாய்க்கின்றனர். இது அந்தப் பெண்ணின் உரிமை. அவர் எப்படி உடை உடுத்த வேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்க முடியும். மேலும் ஒரு பெண் புர்ஹா அணிந்து சென்றால் நம்மையறியாமல் ஒரு மதிப்பு வந்து விடுவதை பார்க்கிறோம். அந்த பெண்ணுக்கும் இது பாதுகாப்பு. 


நம் மதுரையையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த இந்த தம்பதிக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.








No comments: