பல குழந்தைகளின் உயிரை
காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!
கோரக்பூரில் உள்ள
மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 அன்று ஆக்சிஜன் பைப்
லைன் 'பீப்... பீப்' என்ற அபாய ஒலியை எழுப்பியது. இரண்டு மணி நேரமே வேலை
செய்யும் என்பதை அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸூகளும் இதனை அறிந்திருந்தனர். என்ன செய்வதென்று
தெரியாமல் திகைத்து நின்றனர்.
அதே நேரம் குழந்தைகள்
வார்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத டாக்டர் கஃபில் அஹமது கான் நிலைமையை புரிந்து
கொண்டு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ளார். பழைய பாக்கியை
கொடுத்தாலே புதிதாக சிலிண்டர் தருவோம் என்று கூறி விட்டனர். நிலைமையை புரிந்து கொண்டு
சமயோஜிதமாக தனது காரில் இரண்டு மருத்துவ மனை ஊழியர்களை அழைத்துக் கொண்டு மூன்று சிலிண்டர்களை
தனியார் மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்தார். வரும் வழியிலேயே செல் போன் மூலமாக பைப்
லைனை தயாராக வைக்கும் படி மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அதன்படி உடன் ஆக்சிஜன்
பொருத்தப்பட்டு செயல்பட தொடங்கியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பல குழந்தைகளை
அந்த நேரம் உயிர் பிழைத்தன். ஆனால் அவர் கொண்டு வந்தது அரை மணி நேரம் வரையே தாங்கும்.
பிறகு வேகமாக திரும்பி
சென்று மேலும் 12 சிலிண்டர்களை தனது வாகனத்தில் சுமந்து வந்து பல குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.
ஃபைஸாபாத்திலிருந்தும் பல சிலிண்டர்களை வரவழைத்துள்ளார். அனைத்து செலவுகளையும் தனது
சொந்த செலவிலேயே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வழக்கமாக ஆக்சிஜன்
அனுப்பும் நிறுவனம் உடனடி பணம் கொடுத்தால் மேலும் சிலிண்டர்களை அனுப்புவதாக கூறியது.
உடனே அஹமது கான் தனது ஏடிஎம் கார்ட் மூலமாக 10000 ரூபாய் எடுத்து அந்த நிறுவனத்திடம்
அளித்தார். உடன் பல சிலிண்டர்கள் மருத்துவமனை நோக்கி வந்தன. இறந்து கொண்டிருந்த பல
குழந்தைகளின் உயிர் இவரது சமயோஜித முயற்சியால் காப்பாற்றப்பட்டது.
'மற்ற மருத்துவர்கள்
எல்லாம் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்த போது டாக்டர் அஹமது கான் தனது சொந்த
முயற்சியில் பல உயிர்களை காப்பாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது' என்று கவுரவ் திரியாதி என்பவர் செய்தியாளர்களிடம்
கூறினார்.
இந்துத்வாக்கள் கூறுவது போல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்
இன்னும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்வை முடித்திருக்கும். 'பாரத் மாதா கீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் வாயளவில் சொல்வதல்ல தேசபக்தி. நாட்டு மக்களை காப்பதில் இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான தேசபக்தி.

