'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, February 05, 2015
மெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்!
எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அப்துல் சமது என்ற மாணவன் தனது சொந்த முயற்சியில் மெட்ரோ ரயிலின் மாடலை புதுமையாக உருவாக்கியுள்ளார். உத்தர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காய்தி என்ற கிராமத்தை சேர்ந்தவன் இந்த மாணவன்.
மரம் மற்றும் இரும்பின் துணை கொண்டு பேட்டரியில் இயங்கும் மெட்ரோ ரயில் மாடலை புதுமையான முறையில் உண்டாக்கியுள்ளான் அப்துல் சமது. 40 அடி தூரத்தை எட்டு வினாடியில் இந்த ரயில் கடக்கிறது. மாணவனின் திறமையை பாராட்டி முதல்வர் அகிலேஷ் யாதவ் 03-02-2015 அன்று 5 லட்சம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். காய்தி கிராமத்தில் தொழிற் கல்விக் கூடம் ஒன்றையும் உருவாக்க ஆணை இட்டுள்ளார்.
ஷாம்லி மாவட்ட நீதிபதி என்.பி.சிங் சொல்கிறார் 'மாணவன் அப்துல் சமதின் திறமையை பாராட்ட அவனை சென்று சந்தித்தேன். அப்போது அவன் தான் ஒரு இன்ஜினீயர் மாணவனாக மாற வேண்டும் என்ற ஆசையை கூறினான். அவனது குடும்பம் வறுமையானது. எனவே இன்ஜினீயரிங் படிப்பு முடியும் வரை ஆகும் செலவுகளை நான் எடுத்துக் கொண்டுள்ளேன்' என்று பெருமை பட சொல்கிறார்.
மாணவன் அப்துல் சமது 'எனது அப்பா டெல்லியில் ஒரு கூலி தொழிலாளி. வறுமையான குடும்ப சூழல். டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆய்வுகள் என்னை வெகுவாக ஈர்த்தன. அவரைப் பொல நாமும் வர வேண்டும் என்று உறுதி பூண்டேன். அதன் தொடர்ச்சியே இந்த மெட்ரோ ரயில். டெல்லி சஹாதாரா ரெயில்வே ஸ்டேஷன்தான் இந்த மாடலை உருவாக்க உதவியது.' என்கிறார்.
குடும்ப சூழலை பார்த்து பின் வாங்காமல் இந்த வறுமையிலும் சாதித்துக் காட்டியிருக்கும் அப்துல் சமதுக்கு நமது பாராட்டுதல்களை தெரிவிப்போம். இவரைப் போன்ற திறமைமிக்க ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்பு செலவுகளை வசதி படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வோம்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
04-02-2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment