Followers

Sunday, August 13, 2017

பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!

பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!

கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 அன்று ஆக்சிஜன் பைப் லைன் 'பீப்... பீப்' என்ற அபாய ஒலியை எழுப்பியது. இரண்டு மணி நேரமே வேலை செய்யும் என்பதை அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸூகளும் இதனை அறிந்திருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

அதே நேரம் குழந்தைகள் வார்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத டாக்டர் கஃபில் அஹமது கான் நிலைமையை புரிந்து கொண்டு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ளார். பழைய பாக்கியை கொடுத்தாலே புதிதாக சிலிண்டர் தருவோம் என்று கூறி விட்டனர். நிலைமையை புரிந்து கொண்டு சமயோஜிதமாக தனது காரில் இரண்டு மருத்துவ மனை ஊழியர்களை அழைத்துக் கொண்டு மூன்று சிலிண்டர்களை தனியார் மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்தார். வரும் வழியிலேயே செல் போன் மூலமாக பைப் லைனை தயாராக வைக்கும் படி மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அதன்படி உடன் ஆக்சிஜன் பொருத்தப்பட்டு செயல்பட தொடங்கியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பல குழந்தைகளை அந்த நேரம் உயிர் பிழைத்தன். ஆனால் அவர் கொண்டு வந்தது அரை மணி நேரம் வரையே தாங்கும்.

பிறகு வேகமாக திரும்பி சென்று மேலும் 12 சிலிண்டர்களை தனது வாகனத்தில் சுமந்து வந்து பல குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். ஃபைஸாபாத்திலிருந்தும் பல சிலிண்டர்களை வரவழைத்துள்ளார். அனைத்து செலவுகளையும் தனது சொந்த செலவிலேயே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வழக்கமாக ஆக்சிஜன் அனுப்பும் நிறுவனம் உடனடி பணம் கொடுத்தால் மேலும் சிலிண்டர்களை அனுப்புவதாக கூறியது. உடனே அஹமது கான் தனது ஏடிஎம் கார்ட் மூலமாக 10000 ரூபாய் எடுத்து அந்த நிறுவனத்திடம் அளித்தார். உடன் பல சிலிண்டர்கள் மருத்துவமனை நோக்கி வந்தன. இறந்து கொண்டிருந்த பல குழந்தைகளின் உயிர் இவரது சமயோஜித முயற்சியால் காப்பாற்றப்பட்டது.

'மற்ற மருத்துவர்கள் எல்லாம் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்த போது டாக்டர் அஹமது கான் தனது சொந்த முயற்சியில் பல உயிர்களை காப்பாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது' என்று கவுரவ் திரியாதி என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்துத்வாக்கள்  கூறுவது போல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால் இன்னும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்வை முடித்திருக்கும். 'பாரத் மாதா கீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் வாயளவில் சொல்வதல்ல தேசபக்தி. நாட்டு மக்களை காப்பதில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தேசபக்தி.

15 comments:

Dr.Anburaj said...


1)இந்துத்வாக்கள் கூறுவது போல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால் இன்னும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்வை முடித்திருக்கும். 'பாரத் மாதா கீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் வாயளவில் சொல்வதல்ல தேசபக்தி. நாட்டு மக்களை காப்பதில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தேசபக்தி.
----------------------------------------------------------------------
2) ஒரு மனிதன் - ஒரு மருத்துவா் சமயோசிதமாக செயல்பட்டாா்.ஒரு மருத்துவா் மனிதாபிமானம் பாா்த்து பணியாற்றினாா்.பாராட்டத்தக்கது.அல்லா அவருக்கு எல்லா ஆசீா்வாதங்களை வழங்குவாா்.சொா்க்கத்தில் டிலக்ஸ் அறை அவருக்கு அளிக்கப்படலாம். இன்னும் என்ன என்பது இறைவன் அறிந்த ஒன்று.
--------------------------------------------------------------------------
தங்களது பதிவில் முதல் பத்திக்கு என்ன வேலை ? இந்தியா மேல் கநமது தாய் மண்ணின் மீது முஹம்மது காசீம் என்ற அரேபிய காடையன் படையெடுத்து வரவில்லையெனில் மேற்படி மருத்துவா் கான் ஒரு இந்துவாக இருந்திருப்பாா் என்பது எனது முதல் பதில்.இதற்கு மேல் பல காரமான உண்மையான பதிலைகளை அளிக்க முடியும்.ஆனால் பதிவு செய்ய விரும்பவில்லை.
தாய் நாடடை சக இந்துக்களை மலினப்படுத்த வேண்டாம். முஸ்லீம் சமூகம் பயங்கரவாத செயல்களுக்கு புகழ்படைத்தது.

Dr.Anburaj said...


இந்திய முஸ்லீம்கள் கோாிக்கை

ஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, தாங்கள் "அமைதி நாடாக திகழும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல விதங்களில் பயங்கரவாதத்தை ஏவுகிறது"இது இஸ்லாம் மதத்துக்கு முரணானது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இது அதிசயம் தான். அதே சமயம் பாராட்டத் தக்கது.

உடனே முஸ்லிம்கள் நல்லவர்கள். ஹிந்துக்கள் தான் மத வெறியர்கள் என்று செம்மறியாடுகள் முனகக் கூடும்.இதே முஸ்லிம் குருமார்கள் காங்கிரஸ் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏன் இது போல் வெகுண்டெழவில்லை?

ஏன் காவிகள் காலத்தில் இவர்கள் சிலிர்த்திருக்கிறார்கள்? என்று பார்க்க வேண்டும்.

அது போல் கறுப்பு பூமியிலிருந்து எந்த சாயபுவாவது இந்த வேள்வியில் கலந்து கொண்டிருக்கிறார்களா? பாகிஸ்தானைக் கண்டித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால்,"தாலிபானுக்காக" சவுண்ட் விட்ட பூமி, கறுப்பு பூமி.

பார்க்கலாம்.

சரியான தலைமை இருந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

தலக் , தலக் விஷயத்தில் 50000 முஸ்லிம் பெண்கள் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

குஜராத் வெள்ளத்தில் சேதமடைந்த கோயில்களை சுத்தம் செய்ய சாயபுகள் வருகிறார்கள்.

இப்போது இது.. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானைக் கண்டித்து ஐ.நா வரை கொண்டு சென்றிருக்கிறார்கள், இந்திய முஸ்லிம்கள்.பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
-ஆதாரம் தமிழ் தாமரை இணையம்

Dr.Anburaj said...


பலுசிஸ்தானைப் பற்றி ஏன் பேசினாா் நமது பிரதமா் திரு.நரேந்திர மோடி அவா்கள்

மோடி பலுசிஸ்தானைப்பற்றி பேசியதும்… காஷ்மீர் விடுதலைக்கு காவடிதூக்கும் உள்ளூர் துரோகிகளுக்கு பெரியபதட்டமே வந்துவிட்டது…

அதெப்படி மற்ற நாட்டின் விவகாரத்தில் தலையிடலாம் என அரவிந்த் கேஜ்ரிவால், திக்விஜய்சிங் போன்றோருக்கு தங்கள் வாக்குவங்கி விசுவாசத்தை பொங்க செய்தனர்… ஆனால் அதற்கு பின் பெரிய அரசியலே இருப்பது இந்து மண்டூக மடையன்களுக்கு தெரிய வாய்ப்பில்லை… அதை மோடி நன்றாகவே அறிந்துள்ளார்!
‪#‎இனி_கேம்_ஸ்டார்ட்‬ நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி…

அதை எதிர்பார்த்து காத்திருந்தது அமெரிக்கா… பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது .. எட்டும் தொலைவில் ஈரான் உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்

காஷ்மீர் மாதிரியே மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது.

காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும் இந்தியாவுடனே இணைய விரும்பியது.

பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யா கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங்

மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார். பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின்

சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம், இந்தியாவில் இணைகிறோம் என்று நேருவுக்கு கடிதம்

எழுதினார்

ஆனால் ஆனால் நமது (நேரு) மாமா மறுத்து விடடார். நீங்கள் பாகிஸ்தானுடன் இருப்பது தான் நல்லது என்று சொல்லி உலகில் தான் பெரிய சமாதான புறா என்று காட்டி கொண்டார்.

பலுசிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு உள்ளது ஏன் தெரியுமா ? இதற்கு பின்னால்இருக்கும் அரசியல் மிக தெளிவானது… பலுசிஸ்தான் மாநிலத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு தான் அதிகம்.

பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்கினால் வளைகுடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும். இதனால் சீனா தன் 30% பொருளாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது….

வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டி விட அமெரிக்காவும் நேரம் பார்த்து கொண்டு இருந்தது. இந்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தானும், சீனாவும் மற்ற ஆட்சியாளர்கள் போல் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தது. நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி

இந்நிலையில் பலுசிஸ்தான் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு போவதாக கூறினார். இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது. பாக்கிஸ்தான் அலறியது, அலருகிறது. ஏனென்றால் இந்த மாகாணத்தை வைத்து தான் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறது. இது தனி நாடானால் சீன பொருளாதாரம் மிகவும் பின் தங்கி விடும். பாகிஸ்தானுக்கு கடுகளவும் உதவி கிடைக்காது …

இந்த ராஜ தந்திரத்தை மோடி வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து விட்டார். அமெரிக்கா இதற்கு பின்பலமாக தீவிரமாக செயல் படுகிறது. நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.

அன்று மட்டும் நேரு பலுசிஸ்தானை நம்முடன் இணைத்து இருந்தால் இன்று சீனா அடையும் 30% லாபம் இந்தியா அடைந்திருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விரைவில் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை. அப்போது பலுசிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடாகி விடும். அது ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். மோடி அவர்களை பிரதமராக அடைந்தமைக்கு இந்தியர் ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

Dr.Anburaj said...

இந்திய சீன எல்லையில் போா் அபாயம் ஏன் திடீர் என்று உருவாக காரணம் எல்லை பிரச்சனை அல்ல.

காரணம் :01

மேக் இன் இந்தியா என்று அனைத்து நிறவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூறுகிறார் மோடி.. அதாவது xiaomi நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உற்பத்தி இந்தியாவில் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மோடி அரசு.

இறக்குமதி செய்து இந்தியாவை சந்தையாக மாற்றாமல். இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யுங்கள் என்கிறார் மோடி.சீனா தன்னுடய ஏற்றுமதியில் அதிக வருமானம் பார்ப்பது இந்த எலக்ரானிகள் பொருட்கள் , பிளாஸ்டில் விளையாட்டு பொருட்கள் மற்றும் Machinery.
Electrical machinery, equipment: US$557.1 billion (26.3% of total exports)

Machinery including computers: $344.8 billion (16.3%)

ஆக மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 42.6% இதனை சார்ந்தது. ஆனால் இப்படி இந்தியா உள் நாட்டு உற்பத்தியை உருவாகும் என்றால் இது நேரடியாக சீனாவின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் வெகுவாக சீனாவின் உற்பத்தி பாதிக்கபடுகிறது. அதாவது Made in china என்று இருப்பதை Made in india என்று நிறுவனங்கள் செல்வதை தடுக்கவும் முடியாது.

ஆசியா முழுவதும் Assembled in China என்று இருந்த Apple நிறுவனம் இன்று Made in india என்று இந்தியாவுக்கு வரபோவது என்று இப்படி அனைத்து நிறுவனமும் உற்பத்தியை சீனாவில் செய்வதை விட்டு இந்தியாவில் செய்து இந்தியாவில் வியாபாரம் செய்ய முடிவாவதால் தங்கள் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கபடுகிறது.

அதை விட கொடுமை இது இத்துடன் நிற்காது என்று சீனா பயம் கொள்கிறது. ஏன் என்றால் இந்தியாவிடம் இந்திய பெருங்கடல் இருப்பதால் எளிதில் ஆப்ரிக்க நாடுகள், வலைகுடா நாடுகளுக்கு இந்த உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி ஆகும் என்றால் மிக பெரிய பொருள்தார பின்னடைவு சீனாவுக்கும், அதே நேரம் இந்தியாவின் பலம் கூடும் என்பதால் அது ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை வீழ்த்து.

இதனால் தான் இந்தியாவை தனது CPEC , One Belt One Belt (OBOR) திட்டங்களில் சேர கூறி அழுத்தம் கொடுத்தனர் சீனா. ஆனால் இந்தியா அதில் உள்ள தந்திரத்தை உணர்ந்து மறுத்துவிட்டது. இது தான் முதல் முக்கிய காரணம்.

Dr.Anburaj said...

காரணம் :02

கம்யூனிஸ்ட்களின் இயற்கையான குணம் நாடு பிடிக்கும் ஆசை. அது சீனாவிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இந்தியா மட்டும் அல்ல எல்லா நாடுகளுடன் இந்த நாட்டு பிரச்சனை உண்டு. எல்லையை பகீர்ந்திருப்பது இந்தியா , நேபாள் என்று 18 நாடுகளுடன். ஆனால் பிரச்சனை இருப்பது 20 நாடுகளுக்கு மேல்.

முன்னரே திபத் , தைவான் ஆக்கரமிப்பு வேறு. இப்படி எங்கேடா துண்டு நிலம் இருக்காதா ! அதை எப்டி கைபற்றலாம் என்று அலையும் கீழ்தரமான நாடு சீனா. உலகத்தின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில் எப்போதுமே இருந்து வரும் பூட்டான் மீது இப்போ அதீத ஆசையில் அந்த சின்ன நாட்டை நாக்கை தொங்கவிட்டு சுற்றி சுற்றி வருகிறது சீனா. ஆனால் குட்டி நாடு தான் என்றாலும் அதை கைபற்றிவிடமுடியாத வண்ணம் இந்திய இடைஞ்சலாக பூட்டானுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குகிறது.

அதாவது 1950 களில் திபெத் என்ற நாட்டை எப்படி கைபற்றியபோது நேரு சீனாவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவிலையோ அது போல இப்போவும் இந்தியா இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சீனா. ஆனால் கம்யூனிஸ்ட் துரோகிகள் ஒரு நாளும் நம்பதகுந்தவர்கள் அல்ல என்று உறுதியாக இருக்கிறது சூடுகண்ட பூனையாக இந்தியா. ஏன் என்றால் வரலாறு முழுவதும் துரோகம் மட்டுமே சீனாவும் , அவர்களின் செல்ல பிள்ளைகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் இருந்து வந்தனர் என்ற அனைவரும் நல்ல விழிப்புணர்வுடன் இந்தியாவில் இருப்பதால் இந்த பூட்டானை கைபற்ற முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.இது காரணம் இரண்டு.

காரணம் : 03

இந்தியாவில் உள்ளே உள்ள சீனாவின் நலம் விருமிகளான

1.சில கம்யூனிஸ்ட் பத்திரிக்கைகள்

2.கம்யூனிஸ்ட் தீவிரவாத இயக்கங்களான மாவோஸ்ட், நக்ஸல் அமைப்புகள் – இதன் ஆதரவாளர்கள்.

3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள். இவர்களுக்கு வந்துள்ள சிக்கல்.

இந்தியாவில் சீனா எப்போதுமே தனது ஆதரவாளார்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதற்கு மிக அதிகமாக துணை போவது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் அவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்களும் ஆகும். NDTV, The hindu போன்ற நிறுவங்கள் நல்ல எடுத்துகாட்டு.

இது போதாதென்று மாவோஸ்ட் , நக்ஸல் போன்ற கம்யூனிஸ்ட் தீவிரவாத அமைப்புகள் அதன் ஆதரவாளர்கள் எல்லாம் முழுமையாக கண்காணிப்பு வளையத்தின் உள்ளே வந்துவிட்டனர். இது ஒருபக்கம் இருக்கு இந்தியாவை சிதறடிக்க வேண்டும் என்று மொழி பிரச்சனையை தூண்டிவிட அந்த அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் சீனா – அரபிய நாடுகள் மூலமாக நிதி வழங்கி வந்தது.இன்று அந்த அமைப்புகள் நிதி பெறும் வழியை எல்லாம் மத்திய அரசு இழுத்து மூடிவிட்டது.

இப்படி அனைத்து சீன ஆதரவு ஓநாய்கள் எல்லாம் தனிமைபடுத்தபடுவது சீனாவின் கனவான இந்தியா பல நாடுகளாக சிதற வேண்டும் என்ற ஆசையில் மண்ணை அள்ளி போட்டது போல் ஆகிவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீனாவின் தலைவர்களை சந்தித்த வண்ணம் இருக்கிறார்கள்.


Dr.Anburaj said...

காரணம் : 04

தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அடாவடிதனத்திற்கு எதிராக நிற்கும் பிலிப்பென்ஸ், மலேசியா, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா, ஜப்பான் ஆதரவு தெரிவிக்க சமீபகாலமாக இந்தியாவும் இணைகிறாது.

அமெரிக்கா , ஜப்பான் , இஸ்ரேல் , இந்தியா உறவு தற்காலத்தில் மிக அதிக நெருக்கம் ஆவதால் சீனாவுக்கு இது மிக பெரிய பதட்டத்தை உருவாக்குகிறது. ஆசியாவில் மிகபெரிய வழுவான நாடு என்று தன்னை உருவாக்க விரும்பும் இந்த சீனாவுக்கு இது பெரும் பின்னடைவை உருவாக்கும். இந்த தென் சீன கடல் பகுதியில் பிரச்சனை நாங்காவது முக்கிய காரணம்.

இவை தான் முக்கிய காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

Dr.Anburaj said...


தமிழ்த் தாமரை


எதிரிகளின் கூடாரத்திற்குள் புகுந்து துவம்சம் செய்யக்கூடியவர்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம் – செய்தி செய்தியின் பின்னூட்டத்தில் ஒரு சில முட்டாள்தனமான உளறல்களை கண்டேன் அதற்காக இந்த பதிவு.தோவலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

உளவாளிகள் எதிரிகளின் கூடாரத்திற்குள் புகுந்து துவம்சம் செய்வதை படத்தில் தான் பார்த்திருப்பீர்கள். அதனை நேரில் செயல்படுத்தி காட்டியவர் தோவல். வடகிழக்கு மாநிலங்களில் நடந்தேறிய நக்சல் பயங்கரவாதத்தை முறியடித்து அமைதி நிலைக்கு திருப்பியவர் தோவல் அவர்கள்.

காலிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்த ஆபரேசன் புளூ ஸ்டார் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள் அதன் ஹெட்டே தோவல் தான்.ஆபரேசன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு திடீரென்று 7 வருடம் ஆளை காணவில்லை .எங்கே போனார் என்ன ஆனார் என்று யாருக்கும்தெரியவில்லைஅவரின் அடுத்த குறி தாவூத்தாக இருந்திருக்கிறது .குரானை முழுமையாக கற்றுகொண்டு முஸ்லீமாக. மாறி பாகிஸ்தானில் 7 வருடம் Undercover operation ல் இருந்தார் (எலி படத்தில் வரும் வடிவேலு மாதிரி)தாவூத்தை நெருங்கும் போது இந்தியாவிலிருந்து அழைப்பு காங்கிரஸ் களவாணிகள் வேண்டாம்

இந்தியா திரும்புங்கள் என்று . இந்தியா வந்த இவர் ரிட்டயர்டு ஆகி வீட்டில் அமர்ந்தார். 2014 ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றது. மீண்டும் அஜித் தோவல் அழைக்கப்பட்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் .முதல் வேலையாக இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று இலங்கைக்கு அனுப்பி வைத்தார் மோடி. இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டது மைத்திரிபால சிறிசேனா அதிபராக பொறுப்பேற்றார். ராஜபக்கே வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்தார். என்னுடைய தோல்விக்கு காரணம் இந்தியா தான். இந்தியா என்னை தோற்கடித்து விட்டது என்றார்.


அடுத்த டார்கெட் ஏமனில் மாட்டிய நர்ஸ்களை பத்திரமாக மீட்டது. அடுத்து எல்லை தாண்டி பர்மாவில் தீவிரவாதிகளை கூண்டோடு அழித்தது. சர்ஜிகள் ஸ்டிரைக்கின் சூத்திரதாரி தோவல் தான்.

அமர்நாத் துப்பாக்கி சூட்டிற்கு பதிலடி நந்து வருகிறது. 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.தற்போது சீனா செல்லவிருக்கிறார்.பாகிஸ்தானியர்களிடம் தோவலின் போட்டோவை காட்டி பாருங்கள் பயத்தில் உளற ஆரம்பித்துவிடுவார்கள். தற்போது ஜெர்மனியில் நடந்த மாநாட்டின் பிக்சரை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கள் உண்மை விளங்கும். ராணுவத்திற்கு விகே சிங்கும், உளவாளியாக தோவலை பெற்றுள்ளோம். (விகே சிங் சமீபத்தில் மொசூல் நகரத்திற்கு சென்றிருந்தார் ஏன் என்று பாருங்கள்)

ஒருவரின் உருவத்தை வைத்து அவரின் திறமையை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். இன்னும் இவரை போன்ற முகம் தெரியாத பல சாதனையாளர்களை தன்னுள்ளே கொண்டுள்ளது பாரத தேசம் .

Dr.Anburaj said...


தமிழ்த் தாமரை


இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் சீனா மியாவ் தான்
in / — by — July-4-17

இஸ்ரேல் எப்படிப்பட்ட ஒரு நாடு அமெரிக்காவையே வேவு பார்க்கும் நாடு சுற்றிலும் அரபு நாடுகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழும் உலக வரலாற்றில் மிகவும் அறிவும் திறமையும் ஒன்று சேர்ந்த இனம். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் நடக்கப் போவதாக இருந்தாலும் இஸ்ரேலின் உளவுத்துறை மொசாட்டிற்கு தான் முதலில் தெரியும்

இரட்டை கோபுர தாக்குதலை முன் கூட்டியே சொன்னவர்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி எச்சரிக்கை தகவல் அளித்தவர்கள். உடம்பெல்லாம் மூளையான மனிதர்களை கொண்ட தேசம். சுற்றி நின்று வாலாட்டிய எட்டு அரபு நாடுகளை ரவுண்டு கட்டிய நாடு. தேசபக்தி ஒன்றே தான் அவர்கள் தாரக மந்திரம்.

மியூனிச் ஒலிம்பிக்கில் தனது விளையாட்டு வீரர்களை கொன்ற பாலஸ்தீனியர்களை உலகமெங்கும் தேடி தேடி கொன்ற சாகசம். என்டபி விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட தனது மக்களை அதிரடியாக மீட்டது. எவ்வளவோ சொல்லலாம். 2008 மும்பை தாக்குதலில் யூதர் விடுதியில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக பழி வாங்க துடித்தது

உடனடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க தயாரானது இஸ்ரேல். அப்போது இருந்த பிரதமரும் சோனியாவும் அனுமதி மறுத்து விட்டனர். அனுமதி அளித்திருந்தால் இன்று எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும். ஆனால் இப்போது இருக்கும் பிரதமர் மோடி அதிரடி ஆளாயிற்றே துணிந்து விட்டார்

இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் சீனா மியாவ் தான். இரண்டுமே ரத்தத்தில் முளைத்த தேசங்கள். அதுவும் நடக்கத் தான் போகிறது

ஒரு புதிய விடியல் ஒரு புதிய அத்யாயம் ஒரு புதிய பாரதம்
Related Posts:

JAGANNATHAN R said...

They can't accept modi

Dr.Anburaj said...


பாக்கிஸ்தான் சா்கோடா என்ற இடத்தில் அணுகுண்டு தயாாிக்க பயன்படும் செறியுட்டப்பட்ட யுரேனியம் தயாாிக்கும் தொழிற்சாலையை நிறுவி அணுகுண்டு தயாாிக்க பயன்படும் தனிமத்தை தயாாிக்க முயன்றது. அந்த வேளையில் இஸ்ரவேலின் பாதுகாப்புதுறை அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை தளபதியான மோட்சே தயான் நமது பிரதமா திரு.மொராா்ஜி தேசாய் அவா்களைச் சந்தித்து பாக்கிஸ்தான் அணுகுண்டு செய்தால் இரண்டு நாட்டிற்கும் பேராபத்து.எனவே இந்திய விமானப்படையைக் கொண்டு திடீா் தாக்குதல் நடத்தி அந்த தொழிற்சாலையை அளித்து விடுங்கள். அல்லது இஸ்ரவேல் போா் விமானங்களுக்கு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இறங்கி எாிபொருள் நிரப்பிட அனுமதி தாருங்கள்.நாங்கள் கதையை முடித்து விடுகின்றோம் என்று வேண்டுகோள் வைத்தாா். முன்யோசனைஇல்லாத நமது தலைவா் திரு.தேசாய் அனுமதி அளிக்கவில்லை.

தற்போது பாக்கிஸ்தான் அனுகுண்டு தயாாித்து நம்மை மட்டும் அல்ல உலகையே மிரட்டிக் கொண்டிருக்கின்றது.
இதுபோல் ஈரான் அணுகுண்டு செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது ஒரு நாள் இஸ்ரவேலின் போா் விமானங்கள் அந்த தொழிற்சாலைகளை தவிடு பொடியாக நொறுக்கி அழித்து விட்டு பத்திரமாக இஸ்ரவேலுக்கு திரும்பிச் சென்றது.ஈராக் விமானப்படையால் ஒரு விமானத்தையாவது சுட்டு வீழ்த்தவோ சேதப்படுத்தவோ இயலவில்லை.சதாம் உசேனுக்கு குமுஸ் பெண்களோடு உறவு கொள்ளவே நேரம் போதாது.இந்த நிலையில் இஸ்ரேல் விமானப்படையோடு மோதுவத குறித்து சிந்திக்க அவருக்கு ஏது நேரம்.

இஸ்ரேலுக்கு இருந்த சாணக்கியம், சாணக்கியம் பிறந்த இந்தியாவை ஆளும் தலைவா்களுக்கு இல்லையே.

Dr.Anburaj said...


ஈரானின் அணுகுண்டு தயாாிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரவேல் அவா்களின்

வலைதளத்தில் ஒரு உளவு மென்பொருளை அனுப்பி அந்த நாட்டின் அணுகுண்டு தயாாிக்க

ஈரான் நாடு தயாாித்திருந்த வரைபடத்தையே கைபற்றி உலக நாடுகளுக்கு அளித்து விட்டது.

இஸ்ரேலின் பிறக்கும் மனுசனுக்கு என்ன மூளை அறிவு.ஆற்றல்.வீரம். பாராட்ட வேண்டியதுதான்.

Dr.Anburaj said...


இந்த மருத்துவா் குறித்து வாடஸ்அப்பில் சில தகவல்கள்
01.ஒரு இசுலாமிய மதத்தைச் சோ்ந்த நாஸ் ஒருவாிடம் பாலியில் சீண்டல் செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவா்.
02.ஆக்ஸ்சிஜன் சிலிண்டா் வாங்கியதற்கு 29 லட்சம் பாக்கி இருப்பதை அவா் யாருக்கும் தொிவிக்கவில்லை.10 லட்சத்திற்கு மேல் கடன் சுமை ஏறக் கூடாது என்பது சட்டம்.
03.ஆக்ஸ்சிஜன் சிலிண்டா் நிா்வாகத்திற்கு இவரே முழு பொறுப்பு.
04.குழந்தைகள் வாா்டுக்கு இவா் சம்பந்தமில்லாதவா் என்ற கருத்து முரண்படுகின்றது.
05.இவருக்கு அளிக்க வேண்டிய கமிஷன் முறையாக போய்சேராததால் பில்களை கடனில்வைத்தாா் என்ற குற்றச்சாட்டும் இவா் மேல் வாடஸ்அப் செய்தி இவா் மேல் உள்ளது.
--------------------------------------------------------------------------------
எனக்கு வந்த செய்தி தவறானதாகவும் இருக்கலாம்.விசாரணை அறிக்கை கிடைத்தால் அதை தவறாது பதிவு செய்வீா்கள் என நம்புகிறேன்.


Dr.Anburaj said...


தாய் மண்ணின் பாதுகாப்பு குறித்து கடுகளவாவது அக்கறை ஆா்வம் இருந்தால் இனி கூறுங்கள் இஸ்ரவேலின் நட்பு நமக்கு தேவைதானே ?இஸ்ரேலியா்களின் ஆயுதங்கள் நமக்கு தேவையா தேவையில்லையா ? இஸ்ரேலின் நவீன் தொழில் நுட்பங்கள் இந்தியாவிற்கு தேவையா தேவையில்லையா ? எனக்கு ஒரு பதிலை அளிக்கக் கூடாதா ? மௌனமாகவே இருந்து என்ன சாதிக்கப் போகின்றீா்கள் ?

சுவனப் பிரியன் said...

டாக்டர் அன்பு ராஜ்!

நான் அலுவலகத்தில் வேலையில் உள்ளேன். வேலைக்கு நடுவே இது போன்று பதிவுகளை இடுகிறேன். அனைத்துக்கும் பதிலளிக்க என்னிடம் நேரமில்லை.

தாய் நாட்டின் பாதுகாப்பு அவசியம்தான். அதற்கு உள் நாட்டிலேயே ஆயுதங்களை தயாரித்து நமக்கு வேலை கொடுக்க வேண்டும். இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்குவதால் நமக்குதான் நட்டம். மேலும் வெளி நாட்டில் ஆயுதம் வாங்கினால் பல கோடிகள் கட்சிக்கு கமிஷன் கொல்லைப்புறமாக கிடைக்கும். இதற்கு தான் இந்த ஒப்பந்தமே :-)

Dr.Anburaj said...

தாய் நாட்டின் பாதுகாப்பு அவசியம்தான். அதற்கு உள் நாட்டிலேயே ஆயுதங்களை தயாரித்து நமக்கு வேலை கொடுக்க வேண்டும். இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்குவதால் நமக்குதான் நட்டம். மேலும் வெளி நாட்டில் ஆயுதம் வாங்கினால் பல கோடிகள் கட்சிக்கு கமிஷன் கொல்லைப்புறமாக கிடைக்கும். இதற்கு தான் இந்த ஒப்பந்தமே.
------------------------------------------------------------------------------------
இஸ்ரேலிடம் மட்டும் அல்ல ரஷயா அமொிக்கை பிரான்சு என்று வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கைள வாங்கினால் கூடுதல் விலை தான்.நமக்கு நட்டம் தான். ஆனால் உள்நாட்டில் தயாாிக்க நவீன தொழில் நுட்பம் நம்மிடம் இப்போதுதான் வளா்ந்து வருகின்றது.எல்லையில் தொல்லைகள் வளரும் போது ஆபத்திற்கு வெளிநாட்டில் ஆயுதங்கள் வாங்குவது நியாயமானதுதான்.மிக் -35 என்ற ரஷ்யாவின் போா் விமானம் அல்லது எப்-35 என்ற அமொிக்க போா் விமானங்களை தயாாிக்கும் உயா் தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லை.உள்நாட்டில் தயாாிக்க வேண்டும் என்ற கருத்து தற்போதுதான் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
ராணுவ சாதனங்கள் மூலம் கமிஷன் பெற்று கட்சியை நடத்தும் ஏழை நிலைமை பாரதீய ஜனதாக் கட்சிக்கு இல்லை.கட்சிக்கு போதிய நிதி ஆதாரங்களை கட்சி தொண்டா்களாகிய நாங்கள் அளித்து வருகின்றோம்.பிற கட்சி தொண்டா்கள் போல் பணம் பெற்று கட்சி பணி செய்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சி தொண்டா்கள்.தங்களின் கடிதம் யுத மற்றும் பாரதீய ஜனதா கட்சி மீது தங்களுக்குள்ள தவறான கருத்தையே காட்டுகிறது.