இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்
இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதை அறிவதற்கு,
மனித செல்களின் செயல் பாடுகள் எவ்வாறு அமைந்து
இருக்கிறது என்பதை அறிவது அவசியமாகும். செல்களின்
செயல்பாடுகளை ஒருவன் அறிந்து கொண்டால்
இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அவசியமானது என்பதை
அவன் அறிந்து கொள்ள முடியும்.
ஒருவன் அறிவு மிகுந்தவனா கவும், வலிமை
உள்ளவனாகவும்
இருப்பதற்கு அடிப்படையான காரணம் அவர்களுடைய
மூதாதையர்களின் கல்வி, தொழில், பண்பாடு ஆகியவைகள்
அவர் களின் செல்களில் பதிவாகி உள்ளதே காரணமாகும்.
இந்திய நாட்டில் கி.பி. 1500ஆம் ஆண்டு முதல் கி.பி. 1900ஆம்
ஆண்டு வரை வாழ்ந்த மக்கள் தொகை சுமார் 20
கோடியை விட குறைவாகவே இருந்து வந்துள்ளது.
கிராமங் களிலோ, பெரிய ஊர்களிலோ போதிய கல்விக்
கூடங்கள் இல்லை. ஆங்காங்கே திண் ணைப் பள்ளிக்
கூடங்களில் ஒரு சிலரே கல்வி கற்றனர். தொழில்
கல்வி என்பது எங்கோ அரிதாகக் காணப்பட்டன.
அந்தக் காலத் தில் தந்தை தொழிலை மகன் கற்றான்.
தொழிலின் பெயரே சாதியின் பெயராக அமைந் திருந்தன.
ஒவ்வொரு சாதியி னரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட
தொழிலை செய்து வந்தனர். ஆகவே, சில குறிப்பிட்ட
சாதி யினர், தொடர்ந்து பொருளா தாரத்திலும்
சத்துக் குறைவு நோய்களாலும் பாதிக்கப்பட்டு,
அந்த சாதியினரின் செல்களில் விஞ்ஞானப்பூர்வமான
பதிவுகள் ஏற்பட்டு அந்த சாதியினர்
தாழ்த்தப்பட்டவர்களாகவும்,
பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டு
உள்ளதை எந்த மருத்துவர்களும் மறுக்க முடியாது.
மனித செல்களில் ஏற்பட்ட பழங்கால பதிவுகளை
அகற்றாவிட்டால் சமத்துவ சமுதாயத்தை
ஏற்படுத்துவது எந்தக் காலத்திலும்
இயலாத ஒன்றாகவே அமைந்துவிடும்.
செல்களின் செயல்பாடு அல்லது கருவமைப்பு என்றால்
என்ன? நமது உடலானது எலும்பு, சதை,
ரத்தம், தோல் ஆகிய வற்றால் உருவானது
போல தோன்றினாலும் கோடிக்கணக் கான
செல்களின் தொகுப்பே நமது தோற்றத்திற்குக்
கார ணமாகும்.�மைக்ரோ�கோப்� கருவி மூலமாக
மட்டுமே பார்க்கக் கூடிய ஒவ்வொரு
செல்லிலும் �உட்கரு� உள்ளது.
உட்கருவில் 23 ஜோடி �குரோமோசோம்�
எனப்படு பவை
இருக்கின்றன. ஒவ்வொரு குரோமோசோமிலும்
மிகவும் நுட்பமான 5 அடி நீளம்
கொண்ட ரிப்பன் போன்ற அமைப்பு
உள்ளது. அதுவே �டிஎன்ஏ�
(னுசூஹ) என்று கூறப் படுகிறது.
இந்த �டிஎன்ஏ� என்பதில்
தான் நமது உடலின்
ரகசியங்கள் அடங்கிய
ஜீன் என்பது உள்ளது.
ஒவ்வொரு டிஎன்ஏ சுருளிலும் 320
கோடி ரகசிய குறியீடுகள்
இருப்பதாகவும் விஞ்ஞானிகள்
தெரிவிக்கிறார்கள்.டிஎன்ஏ-ல்
உள்ள ஜீன் என்ற படி
போன்ற அமைப்பில் �ஏ-டி� மற்றும்
�சி-ஜி� என்று ஜோடி சேர்ந்துள்ள
4 வித ரசாயன குறியீடுகள் மாறி, மாறி
இடம் பெறுவதால் அதற்குத்
தக்கபடி ஒருவரது உடல்
அமைப்பு, குணநலன், செயல்
பாடுகள் மற்றும் அனைத்தும்
நிர்ணயிக்கப்படுவதாக விஞ்
ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
சிலர் குண்டாகவும், சிலர் ஒல்
லியாகவும், சிலர் சாந்தமாகவும்,
சிலர் சிடுமூஞ்சிகளாகவும்,
சிலர் மேதைகளாகவும், சிலர் முட்
டாள்களாகவும் இருப்பதற்குக்
காரணம் டிஎன்ஏ-ல் உள்ள
பதிவுகளே என்று விஞ்ஞானம்
தெரிவிக்கிறது. ஜீன்களில்
உள்ள ரகசிய குறியீடுகளில்
85 சதவீதம் துல்லியமாக
கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாகவும்
மீதி குறியீடுகளையும்
விரைவில் கண்டுபிடித்து
விடுவதாகவும் விஞ்ஞானிகள்
நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பை
அமெரிக்கா, இங்கிலாந்து,
பிரான்�, ஜப்பான், சீனா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
�ஹியூமன் ஜினோம் புராஜக்ட்�
என்ற திட்டத்தின் கீழ் 10
ஆண்டுகள் திறமையாக செயல்பட்டு
இந்த அரிய கண்டுபிடிப்பை
கி.பி. 2000ஆம் ஆண்டில்
வெளியிட் டுள்ளார்கள்.
சாதி செல்களின் செயல்பாடு
களை மாற்றி விட்டன!
மனித செல்களின் செயல்
பாடுகளிலிருந்து மனிதனின்
உருவம், குணங்கள், செயல்
பாடுகள் தோன்றுகின்றன
என்ப தும், குணம், செயல்,
தொழில் காரணமாக செல்கள்
மாற்றம் பெறுகிறது என்பதும்
உண்மை யாகும். பல ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட
சாதியினர் ஒரு குறிப்பிட்ட
தொழிலை செய்த காரணத்தா
லும், அந்த தொழிலின் அடிப்
படையில் சில தனிப்பட்ட
பழக்க வழக்கங்களை கடைப்பிடித்
ததாலும் அவர்களின் குறைந்த
பொருளாதாரத்தில் அவர்களின்
உணவும், சுகாதா ரமும்
முறையாக இல்லாததாலும் அவர்களின்
செல்களில் சிறிது சிறிதாக
குறைவு பெற்று அவர் களின்
உருவம், குணம், நிறம்,
செயல்பாடுகள் அனைத்தும்
மாற்றம் பெற்றிருப்பதை
அல்லது குறைவுபட்டிருப்பதை
நாம் உணர முடியும். ஆகவே,
தாழ்த்தப்பட்ட மற்றும்
பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு
இன்னமும் இட ஒதுக்கீடு என்பது
மிகவும் அவசியமானதாகும். அதன்
மூலமாகவே ஒரு சமத்துவ சமுதாயத்தை
நாம் உருவாக்க முடியும்.
இது ஒரு சமூக நீதியும்
தர்மமுமாகும்.
- அன்பரசன் (எ)
மு.நாராயணசாமி
3 comments:
இந்திய முஸ்லிம்களின் கணக்கெடுப்பை சிறிது பார்ப்போம்.
இந்திய ராணுவத்தில் பத்து இலட்சம் வீரர்கள் உள்ளனர். அவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் வெறும் 4.9 சதவீதம்தான் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த 4.9 சதவீதத்திலும் அதிகமானது கடை நிலைப் பணிகளே!
இற்தியா முழுவதும் 4790 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 108 மட்டும் தான். 3209 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 109 பேர் தான் முஸ்லிம்கள்.
ரயில்வே துறையில் 4 சதவீதமே முஸ்லிம்கள்.சுகாதாரத் துறையிலும் 4 சதவீதம். பொதுப்பணித் துறையில் 7 சதவீதம்.
83 பேர் கொண்ட மத்திய அரசுத் துறை செயலாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. உளவுத் துறையிலும் இதே நிலை.
இதே நிலை நீடித்தால் சமூக நீதி என்று வாயளவில் சொல்லிக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.
இணைய நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
-Suvanappiriyan
சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்த பின் முஸ்லிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் பா.ஜ.க தவிர அனைத்து தரப்பிலிருந்து ஒழிக்க ஆரபித்து கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டது. உ.பி மாநில தேர்தல் நேரத்தில் ஓய்ந்த குரல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்தில் ஓர் மின் அஞ்சல் இனையத்தில் உலா வந்தது, சிலர் படித்திருக்கலாம், பலர் ஓரங்கட்டியிருக்கலாம். அவர்களுக்காக இதோ, அம்மின் அஞ்சலின் சாரம்சம், இளைஞர் குழுவினர், கர்நாடக மாநிலத்தில், பல கிராமங்களில் உள்ள பள்ளிகூடங்களுக்கு சென்று கல்வியின் அவசியம் மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. எவ்வாறு பாடங்களை மனணம் செய்வது, பாடங்களை எவ்வாறு தெரிவு செய்து படிப்பது, பரீட்சை காலங்களில் எவ்வாறு பாடங்களை திட்டமிடுவது போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறது. இந்த ஒருவார நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 3000 மேற்ப்பட்ட 10-ம் மற்றும் 12-ம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டு பயன் அடைந்து இருக்கின்றனர். இன்று நமக்கு தேவை இது போன்ற கல்வி சம்பந்தமான ஊக்குவிப்புதான். இன்ஷா அல்லாஹ், நம் சமுதாயத் தலைவர்கள், ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தால், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்காக போராட வேண்டும். எந்த சமுதாயம் கல்வியில் முன்னேறி இருக்கிறதோ, அச் சமுதாயம், என்றும் சமூகத்தில் பின் தங்காது. என்னதான் இட ஒதுக்கீடு செய்தாலும், படித்தவர்கள் இல்லையென்றால், என்ன் பயன்?. நம் சமுதாயம், யாரயும் நம்பி இருக்கத் தேவையில்லை, இட ஒதுக்கீடு தேவை இருக்காது, யாருக்கும் அடிமைப்பட்டு இருக்க வேண்டியதில்லை.
நாம் எங்கிருந்தலும் சரி, அவரவர்கள் ஊரிலேயே, ஆரம்பிக்கலாம், இதனால், வருங்கால மாணவ சமுதாயம் பயன்பெறும், அவர்கள் சிறந்த குடிமக்களாக, நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்வார்கள்.
இன்று, அப்துல் கலாம், நாட்டின் உயர் பதவியை அடைந்தன் காரணம், அவரின் கல்வி தகுதிதான பிரதானமாக அமைந்தது என்று எல்லோருக்கும் தெரியும். யூதர்கள், இன்று உலகையே ஆன்று கொண்டிருப்பதன் காரணம், அவர்களுடைய கல்வி தானே தவிர வேரொன்ருமில்லை என்பதை எல்லோரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்வோம்.
-Thanks Mr Haroon Bilal
Post a Comment