Followers

Thursday, January 25, 2007

ஈராக் விஞ்ஞானிகளைக் கொன்ற இஸ்ரேலியர்!

ஈராக் விஞ்ஞானிகளைக் கொன்ற இஸ்ரேலியர்!

அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்த 530 ஈராக் விஞ்ஞானிகளை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் கொடூரமாகக் கொன்று குவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இவ்வளவு அதிகமாக உயர் விஞ்ஞானிகளை மொசாத் பல்வேறு வழி முறைகளில் கொன்றுள்ளது. இந்தப் படுகொலைகளுக்கு அமெரிக்க ராணுவத் தலைமையின் அனுமதியும் உதவியும் இருந்ததாக 'அல்ஜஜுரா'வார இதழ் கூறியுள்ளது.

கொல்லப் பட்ட விஞ்ஞானிகளின் பெயர்கள் அடங்கிய திடுக்கிடும் தகவல்களை நான்கைந்து மாதங்களுக்கு முன்பு குடியுரிமை இயக்கங்கள் வெளியிட்டன. படுகொலை தொடர்பான தகவல்களை அமெரிக்க ஏஜென்ஸிகள் அதிபர் ஜார்ஜ் புஷஷpடம் தெரிவித்ததாகவும் அல் ஜஜுரா அறிவித்துள்ளது.

ஒத்துழைக்க மறுப்பவர்களைக் கொல்வதே நல்லது என்ற அறிவுரையை மொசாத் முதலில் முன் வைத்தது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இதனை அங்கீகரித்தது என இது குறித்து ஆய்வு நடத்திய இஸ்மாயில் ஜலீலி என்ற ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்லப்பட வேண்டிய விஞ்ஞானிகளின் விரிவான பட்டியலை அமெரிக்காதான் இஸ்ரேலுக்குக் கொடுத்தது. இப்படுகொலைத் தொடர் இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இறந்தவர்களில் 350 பேர் உயர் விஞ்ஞானிகள் ஆவர். மீதியுள்ளவர்கள் பல்கலைக் கழக பேராசியர்கள். உயிர் பிழைக்க நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் நாட்டைத் துறந்து மறைவிடங்களில் வசிக்கின்றனர். மொசாத்தின் பல்வேறு தாக்குதல்களில் இறந்த 230 ஈராக் விஞ்ஞானிகள் பெயர்ப் பட்டியலை பிரஸ்ஸல்ஸ் டிரிப்யுனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவை தவிர பல்கலைக் கழக பேராசியர்கள் ஆய்வாளர்கள் என ஆயிரம் பேர் மூன்று வருடத்துக்குள் ஈராக்கில் கொல்லப்பட்டதாக அல் ஜஜீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஈராக் விஞ்ஞானிகளைக் கொல்லும் முயற்சிகளில் அவர்களது குடும்பத்தினரும் பெரும்பாலும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு முறை கொலை முயற்ச்சியிலிருந்து தப்பியவரை மீண்டும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். பாலஸ்தீனில் சில தலைவர்களை மொசாத் சாக்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக ஒரு ஆய்வாளர் கூறியுள்ளார்.ஈரான் அதிபர் அஹமது நஜாதைக் கொல்ல முன்பு ஒரு முறை முயற்சி நடந்தது. இது இஸ்ரேல் நாளிதழான ஹாரட்ஸ்ஸில் செய்தியாகவும் வெளி வந்தது.

இதன் மூலம் நமக்கு விளங்க வருவது முஸ்லிம் நாடுகளில் ஓரளவு படித்தவர்களும், அமெரிக்க இஸ்ரேலியரின் வஞ்சகங்களை விளங்கிய மக்களும் அதிகம் உள்ள நாடுகள் ஈரானும் ஈராக்கும். இந்த இரண்டு நாடுகளையும் ஒடுக்கி விட்டால் பெட்ரோலுக்கு ஏக போக உரிமையாளராகி விடலாம் என்ற மனப்பால் குடிக்கிறது அமெரிக்கா.

'முஸ்லிம்களாகிய உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது எதிரிகளுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களாகிய உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் வஞ்சகங்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'
3 : 120 - குர்ஆன்

என்ற இறைவனின் வாக்கு மெய்ப்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதுவரை நாமும் பொறுத்திருப்போம்

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

11 comments:

மாசிலா said...

இதுபோன்ற யூத மற்றும் அமெரிக்க பேய்களுடந்தான் இந்திய ஆதிக்க சக்திகள் உறவாடுவதை விரும்புகின்றன. இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என இன்னும் புரிந்துகொள்ளாத ஜடங்கள். இதெற்கெல்லாம் ஈராக் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். உலகத்தின் மிகப்பண்டைய நாகரீக சமுதாயங்களை கொண்ட ஈராக் நம் கண் முன்னே அழிந்து வருகிறது. இது எங்கு போய் முடியுமோ? நினைக்குபோது வேதனைத்தான் மிஞ்சுகிறது!

விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.
மாசிலா.

சீனு said...

//இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என இன்னும் புரிந்துகொள்ளாத ஜடங்கள்.//

:)

suvanappiriyan said...

மாசிலா!

//உலகத்தின் மிகப்பண்டைய நாகரீக சமுதாயங்களை கொண்ட ஈராக் நம் கண் முன்னே அழிந்து வருகிறது. இது எங்கு போய் முடியுமோ? நினைக்குபோது வேதனைத்தான் மிஞ்சுகிறது!//

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு நாட்டுக்கு உதவ வருகிறார்கள் என்றால் உதவியை விட உபத்திரவம்தான் அதிகம் என்பது நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. அனுபவஸ்தரான மன்மோகன்சிங்குக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் நாம் எந்த அனவு நெருங்குகிறோமோ அந்த அளவு நமக்கு பின்னடைவு என்பதை நமது அரசு போகப் போக புரிந்து கொள்ளும்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

அய்யுப் அவர்களுக்கு!

//மாவீரன் சதாம் அவர்களைக் கொன்றதுக்கு கேடுகெட்ட அரபு மன்னாங்கட்டி ஆட்சியாளர்கள் வாயே திறக்கவில்லை. இருக்கும்வரை ஊரை அடித்து உலையில் போட்டாவது சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போகலாம்ன் கனவில் இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களும் அமெரிக்காவினால் தூக்கில் தொங்க விடப்படுவார்கள்.//

சதாமைப் பொறுத்தவரை அவரின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் போது இஸ்லாமிய வாழ்வு முறையை முற்றாக ஒதுக்கியவர்தான் சதாம். அவரின் இரண்டு மகன்களும் பொது மக்களுக்கு செய்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தன்னை எதிர்த்தவர்களை சதாம் செய்த சித்திரவதைகளும் எழுதி மாளாது. தனக்கு சிரமம் வந்தபோது மட்டும் குர்ஆனும் கையுமாக காட்சி தந்தார்.

ஆனால் சதாமுக்கு தண்டனை கொடுப்பதற்கு அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்பதில் எனக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சீனு!

//இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என இன்னும் புரிந்துகொள்ளாத ஜடங்கள்.//

:)//

என்ன சீனு சார்! ஸ்மைலியோடு நிறுத்திக் கொண்டீர்கள். மாசிலாவின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா!

கசி said...
This comment has been removed by a blog administrator.
மாசிலா said...

சுவப்ரியன் : //மன்மோகன்சிங்குக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். //
அவரை சுற்றி உள்ள ஆதிக்க அமெரிக்க-யூத ஜால்ரா அதிகாரிகள், அரசியல்வாதி கும்பல்கள்களால் பிணயக்கைதியைபோல் பிடிபட்டு 'பூம்பூம் மாடு' கதையாக அவர்கள் நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போட்டு வீணாக வம்புகளை விலைகொடுத்து வாங்கி வருகிறார். இந்த வெறியர்கள் தங்கள் காரியங்கள் சாதகமான உடன், பாக்கிஸ்தானைபோல் இந்தியாவையும் எச்சிலைபோல் தூக்கி எறிந்துவிட்டு வேறு எவன் மண்டையையாவது தடவி மூளையை உறிவார்கள்.

suvanappiriyan said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

நண்பர் சுபமுகாவுக்கு!

தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பட்ட சமூகத்தையும் வயது முதிர்ந்த வலைப் பதிவரையும் இழிவாக எழுத வேண்டாமே! அவர்கள் தவறான கொள்கையில் இருந்தால் கருத்துக்களின் மூலம் அவர்களுக்கு உண்மையை எடுத்துரைப்போம்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுபமூகா said...

அன்பு நண்பருக்கு,

சுபமூகா என்கிற என் புனைப்பெயரைப் பயன்படுத்தி உங்கள் பதிவுக்கு பின்னூட்டத்தை
யாரோ அளித்திருக்கிறார்கள். எதேச்சையாக இன்று இதைப் பார்த்தேன். தயவு செய்து
அதை நீக்கி விடவும். இந்தப் பின்னூட்டத்தையும் வெளியிடவும்.

நன்றி,

அன்புடன்,
கணேச மூர்த்தி ['சுபமூகா']

suvanappiriyan said...

சுபமுகா!

உங்கள் விருப்பம் நிறைவேறியது.