இந்திய முஸ்லிம்கள் சவுதிகளை மணக்க வேண்டுமாம்!
//அந்த பெண்ணை கணவனிடமிருந்து விவாகரத்து என்று பிரித்ததும் ஏன் அந்த பெண் இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாமே? அப்படி தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொண்டால் யார் என்ன சொல்ல முடியும்?//
-Ezhil
சமீபத்தில் நம்ம எழில் அண்ணாச்சி 'இதுதான் இஸ்லாமிய ஷரீயாவா?' என்ற ஒரு பதிவு போட்டுள்ளார். ஒரு பெண் மண விலக்கு பெற்றவுடன் அந்த கணவனோடு சேர்ந்து வாழ்ந்தால் அதற்கு ஷரீயா கொடுக்கும் தண்டனை என்ன? என்பதை முதலில் விளங்க வேண்டும். அதேபோல் ஒரு கணவன் முறைப்படி தலாக் கொடுத்து அது நடைமுறைக்கும் வந்து விட்டால் அதே கணவன் அப்பெண்ணை நேரிடையாக திருமணம் செய்து கொள்ள முடியாது. அந்த பெண்ணுக்கு வேறொரு திருமணம் செய்வித்து அந்த திருமணம் ரத்தாகி பிறகுதான் பழைய கணவனோடு திருமண உறவை வைக்க முடியும். தலாக்கை விளையாட்டாக யாரும் கையாளக் கூடாது என்ற நோக்கிலேயே இத்தகைய சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.
'பெண்களை விவாகரத்துச் செய்தபின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தமக்குப் பிடித்த கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்.'
-குர்ஆன் 2 : 232
இந்த வசனத்தின் மூலம் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை ஊக்குவிக்கிறது இஸ்லாம். ஆனால் நம் நாட்டிலோ இன்றுவரை வெள்ளை உடை உடுத்தி பொட்டுவைக்கக் கூடாது நகைகள் அணியக் கூடாது சுபகாரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று பெண்களை கொடுமை படுத்தும் நிலை நீடிக்கிறது. முதலில் இதற்கல்லவா நம்ம அண்ணாச்சி குரல் கொடுக்கணும். முதலில் இஸ்லாமிய சட்டங்களை நன்றாக விளங்கிக் கொண்டு பிறகு விமர்சனத்தை வைத்தால் நாமும் பதில் அளிக்கலாம்.
//நான் எளிமையான ஒரு கேள்வியை இங்குள்ள இணைய இஸ்லாமிஸ்டுகளிடம் முன்வைத்தேன். அரபி அஜமி வித்தியாசத்தை ஒழித்தார் முகமது. இங்கே எங்களுக்குள் வித்தியாசம் இல்லையே என்கிறீர்களே - இத்தனை வகாபிக்கள் சவுதியில் மாங்கு மாங்கென்று வேலை செய்கின்றீர்கள். உங்களில் எத்துனை பேர் அரபிப் பெண்களை மணந்திருக்கின்றீர்கள் என்பதே அக்கேள்வி. இது வரை ஒருவரும் அதற்கு பதில் சொல்ல முன்வரவில்லை.//
-Nesakumar
அதே பதிவில் நம்ம நேசகுமார் அண்ணாச்சியின் பின்னூட்டம் இது. திருமணம் என்பதற்கு முதலில் இஸ்லாம் சொல்லும் வரையறையைப் பார்ப்போம்.
'இணை கற்ப்பிக்கும் பெண்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்.இணை கற்ப்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கைக் கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள்.'
-குர்ஆன் 2:221
இதன் மூலம் திருமணம் செய்வதற்கு இருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் இடுகிறது.
'நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் தகுதியானோர்'
-குர்ஆன் 24:26
இதன் மூலம் ஒழுக்கமுள்ள ஆண்களையும் பெண்களையும் திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. மற்றபடி பெண்களையும் ஆண்களையும் தீர்மானிக்கும் உரிமையை அவரரவர்களிடத்திலேயே இஸ்லாம் விட்டுவிடுகிறது. இப்பொழுது நான் சவுதி பெண்ணை மண முடிக்க நினைத்தால் அந்த பெண் கேட்கும் ஒரு லட்சம் ரியால் (12 லட்சம் ரூபாய்), வீடு போன்றவற்றை நான் சரி செய்து கொடுக்க வேண்டும். அடுத்து மொழி பிரச்னை. அந்த பெண்ணை நான் இந்தியா கொண்டு வந்தால் என் குடும்பத்தவர் பேசும் தமிழ் மொழி அந்த பெண்ணுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். நானும் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். அடுத்து குழந்தை எந்த நாட்டில் வளருவது என்ற பிரச்னை. இவ்வளவு சிரமத்தையும் தாங்கிக் கொண்டு நான் எதற்கு சவுதி பெண்ணை மணக்க வேண்டும். வெளிநாட்டவரை மணப்பதற்கு முன்பு இருந்த தடையையும் தற்போது சவுதி அரசு நீக்கி விட்டது. எனவே சவுதி பெண்களை மணப்பதற்கு இஸ்லாமோ, சவுதி அரசாங்கமோ தடை இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மொழிப் பிரச்னைகளுமே பிரதான காரணங்களாகும். அடுத்து இந்தியாவில் அனைத்து செலவுகளையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டு (இந்துமத உபயம்) பெண் தர தயாராய் இருக்கும் போது யார் சார் சவுதி பெண்களை திருமணம் செய்து கொள்வார்?
//அதனால்தான், கவுரவக் கொலைகள் அதிகமாக நிகழும் சமுதாயமாக இஸ்லாமிய சமூகம் விளங்குகிறது. கவுரவக் கொலைகளை நியாயப்படுத்தும் சட்டங்களும் இஸ்லாமிய நாடுகளால் இயற்றப்பட்டு அமலில் உள்ளன.//
-Nesakumar
ஆமாம! அதனால்தான் ஸ்டவ் வெடித்து இறக்கும் இளம்பெண்கள் நம் இந்தியாவில் அனைவருமே இந்துக்களாக இருக்கிறார்கள்.(வரதட்சணைக் கொடுமையாலும், மறுமணம் செய்து கொள்ளும் ஆசையாலும்)
//சட்டத்தினைப் பற்றிய ஒரு பதிவு என்ற அளவில், ஆர்வத்துடன் நான் எழுதிய எதிர்வினை, இவ்வாறு எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாறும் என்று நான் நினைக்கவில்லை...அதுவும் நான் இணையத்தில் பெரிதும் மதித்த திரு.திருமலைராஜன் அவர்களிடம் இருந்து.//
-Prabhu Rajadhurai
வக்கீல் பிரபு ராஜதுரை அவர்களே!
உண்மையை எடுத்துச் சொன்னால் இது போன்ற எதிர்ப்புக்கள் வரத்தான் செய்யும். காலகாலமாக கட்டி வைத்த வர்ணாசிரம தர்மம் இஸ்லாத்தினால் தகர்க்கப்படும்போது இது போன்று சேற்றை வாரி இறைப்பது எழிலுக்கும் நேசகுமாருக்கும் சிவாவுக்கும் கட்டாயமே. ஆனால் இஸ்லாத்துக்காக குரல்கொடுக்கும் எழில் தன் மதத்தில் கோவிலுக்குள் இருக்கும் வழிபடும் தெய்வங்களை தொட்டு வணங்குவதற்கு முதலில் அனுமதியைப் பெறட்டும். மேல்சாதிக்காரரரான நேசகுமாரை அனுமதிக்கும் கோவில் குருக்கள் எழிலை ஏன் அனுமதிப்பதில்லை என்பதை எனக்கு கொஞ்சம் விளக்குவாரா?
//முதலியார், கவுண்டர், தேவர், ஐயர் என்பதெல்லாம் அர்த்தமில்லாத பெயர்களா? ஐயர் என்றால் சய்யத் என்பதன் அதே மறு உருவாக்கம் தான். அதனால், ஐயர் என்பது ஜாதி இல்லை என்றாகிவிடுமா//
-Nesakumar
சாதி என்பதற்கும் குழு குலம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏமனிலிருந்து சவுதி வந்தவர்கள் அந்நாட்டிலேயே தங்கி அந்நாட்டு பிரஜையானவர்கள். அதுபோல் ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் பல கோடி பேர் சவுதி பிரஜைகளாக மாறி உள்ளனர்.அதே போல் சிரியா பாலஸ்தீன் லெபனான் நாட்டவரும் இங்கு பிரஜா உரிமை பெற்றுள்ளனர். அதேபோல் பாகிஸ்தான், இந்திய ஹைதராபாத் வாசிகளும் சவுதி பிரஜா உரிமை பெற்று வாழ்கின்றனர். இந்த வெளிசாட்டவர் அனைவரின் மொழி, கலாசாரம், உணவு, உடை அனைத்தும் வித்தியாசப்படுபவை. ஆனால் அனைவரும் மதத்தால் முஸ்லிம்கள். தொழும் இடத்துக்கு வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்களையும் மறந்து விடுவர். பள்ளிக்கு யார் முதலில் வருகிறாரோ அவரே முன் வரிசையில் நிற்பார். இந்த நிலை நம் தமிழக கோயில்களில் பார்க்க முடிகிறதா என்பதே என் கேள்வி!
8 comments:
தெளிவான விளக்கங்கள். நன்றி சுவனப்பிரியன்.
//அந்த பெண்ணை கணவனிடமிருந்து விவாகரத்து என்று பிரித்ததும் ஏன் அந்த பெண் இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாமே? அப்படி தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொண்டால் யார் என்ன சொல்ல முடியும்?//
-Ezhil
// தலாக்கை விளையாட்டாக யாரும் கையாளக் கூடாது என்ற நோக்கிலேயே இத்தகைய சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.//
-சுவனப்பிரியன்
நல்ல விளக்கம் சகோ. சுவனப்பிரியன் அவர்களே.
இந்த மாதிரி விவாகரத்து செய்து விட்டு மீண்டும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தால் அதே பெண்ணை அவர் மீண்டும் விவாகரத்து செய்யமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது.
இந்த மாதிரி நடைமுறையில் இருந்தால் கணவன், மனைவி இருவருமே ஒருவர் மற்றவர்க்கு எதிராக பயன்படுத்தும் துருப்பாகவே விவாகரத்தை பயன்படுத்துவர். அப்புறம் குடும்பத்தில் விவாகரத்து செய்வதும், திருமணம் செய்வதும் மட்டும் தான் நடைபெறும்.
அதுமட்டுமல்ல முதல் தலாக்கிலிருந்து மூன்றாம் தலாக் சொல்வது வரையிலும் தேவையான இடைவெளி விடலாம் என்பதையும், இடையில் மனமாறுதல் ஏற்பட்டால் இறுதி தலாக் சொல்லாமல் மீண்டும் சேர்ந்துவாழலாம் என்பதை இவர்கள் அறிந்துள்ளார்களா? என்று தெரியவில்லை. கோபத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்தவர்கள் கூட இங்கு இறுதி தலாக் சொல்லாமல் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளது.
வளர்பிறை!
நான் கொடுத்த விளக்கத்தை விட மிகத் தெளிவாக வினக்கியிருக்கிறீர்கள். நன்றி.
உங்களின் முதல் இரண்டு பின்னூட்டம் பிளாக்கரின் பிரச்னையினால் காணாமல் போய்விட்டது. முடிந்தால் அதனை திரும்பவும் அனுப்பி வைக்கவும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மரைக்காயர்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
// இதன் மூலம் ஒழுக்கமுள்ள ஆண்களையும் பெண்களையும் திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. மற்றபடி பெண்களையும் ஆண்களையும் தீர்மானிக்கும் உரிமையை அவரரவர்களிடத்திலேயே இஸ்லாம் விட்டுவிடுகிறது.//
நல்ல விளக்கங்கள்.
நேசகுமார், சிவா போன்றோர்களுக்கு நீங்கள் எத்தனை முறை பதிலலித்தாலும் அவர்கள் மீண்டும், மீண்டும் கேள்விகேட்டு கொண்டு ழூக்குடைப்பட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். ஏனேன்றால் அவர்களுடைய நோக்கம் நியாயமாக விவாதம் பண்ணுவதல்ல. உடைந்த ரிக்கார்ட்டு மாதிரி சொன்னதையே மீண்டும், மீண்டும் சொல்வது மட்டும் தான். அப்புறம் பொறுத்தமான பதில் கிடைத்தால் காணாமல் போவது இதைத்தானே இவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
--
Posted by வளர்பிறை to - சுவனப்பிரியன் at 1/30/2007 11:08:36 PM
//அந்த பெண்ணை கணவனிடமிருந்து விவாகரத்து என்று பிரித்ததும் ஏன் அந்த பெண் இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாமே? அப்படி தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொண்டால் யார் என்ன சொல்ல முடியும்?//
-Ezhil
// தலாக்கை விளையாட்டாக யாரும் கையாளக் கூடாது என்ற நோக்கிலேயே இத்தகைய சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.//
சுவனப்பிரியன்
அருமையான விளக்கங்கள். சகோ. சுவனப்பிரியன் அவர்களே.
அறிவுள்ள எவருமே நண்பர் எழில் பேசும் குதர்க்கத்தை எளிதில் புரிந்து கொள்வர்.
இந்த மாதிரி விவாகரத்து செய்து விட்டு மீண்டும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தால் அதே பெண்ணை அவர் மீண்டும் விவாகரத்து செய்யமாட்டார் என்பதற்கு என்ன நிச்சியம் உள்ளது.
இந்த மாதிரி நடைமுறையில் இருந்தால் கணவன், மனைவி இருவருமே ஒருவர் மற்றவர்க்கு எதிராக பயன்படுத்தும் துருப்பாகவே விவாகரத்தை பயன்படுத்துவர். அப்புறம் குடும்பத்தில் விவாகரத்து செய்வதும், திருமணம் செய்வதும் மட்டும் தான் நடைபெறும்.
அதுமட்டுமல்ல முதல் தலாக்கிலிருந்து மூன்றாம் தலாக் சொல்வது வரையிலும் தேவையான இடைவெளி ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பதையும், இடையில் மனமாறுதல் ஏற்பட்டால் இறுதி தலாக் சொல்லாமல் மீண்டும் சேர்ந்துவாழலாம் என்பதை இவர்கள் அறிந்துள்ளார்களா? என்று தெரியவில்லை. கோபத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்தவர்கள் கூட இங்கு இறுதி தலாக் சொல்லாமல் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளது. ஆக என்ன ஒரு அருமையான சட்டம். பிரிந்து தான் வாழவேண்டும் என்பவர்களுக்கும், விவாகரத்தை விளையாட்டாக பயன்படுத்தக் கூடாது என்பவர்களுக்கும் இடையில் இதை விட பொருத்தமான சட்டத்தை இதை விட அற்புதமாக வரையறுக்கவே முடியாது.
--
Posted by வளர்பிறை to - சுவனப்பிரியன் at 1/30/2007 11:03:15 PM
Post a Comment