இஸ்ரேலியர்களின் வேதமும் இறைத்தூதர்களின் நிலையும்!
இறைத்தூதர் மோஸே அவர்களின் போதனைகளும் அவர்களுக்குப் பின் வந்த நபிமார்களின் போதனைகளும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகின்றன. வரலாற்றுக் கண் கொண்டு விவிலியத்தை சற்று பார்ப்போம். உண்மையான தௌராத் (தோரா)இறைத்தூதர் மோஸே அவர்களுக்கு இறக்கப்பட்டது கி.மு. ஆறாம் நூற்றாண்டில். ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் சேதப்படுத்தப்பட்டபோது அந்த உண்மை வேதமான தோரா அழிக்கப்பட்டுவிட்டது. அக்காலத்துக்கு முந்திய இறைத்தூதர்களுக்கு அருளப்பட்ட ஆகமங்களும்(ஏடுகள்) அழிக்கப்பட்டு விட்டன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்ரவேலர்கள் பாபிலோனியாவிலிருந்து விடுதலைப் பெற்று பாலஸ்தீனுக்குச் சென்றார்கள். அப்பொழுது மார்க்கப் பெரியார் உஜைர் (எஸ்ரா) அவர்கள் மற்ற பெரியோர்களின் துணை கொண்டு இறைத் தூதர் மோஸே அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் இஸ்ரவேலர்களின் வரலாற்றையும் தொகுத்தார்கள். அபபோது அந்த துணையாளர்களின் மூலம் 'தோராவின் வசனங்கள்' என்று கிடைத்தவற்றை எல்லாம் அத்தொகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.
இதன்பிறகு கி.மு.2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 4-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அறிஞர்கள் தங்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிமார்களுக்கு அருளப்பட்டதாகச் சொல்லப்படும் ஆகமங்களைத் தொகுத்தார்கள். அந்த அறிஞர்கள் யார்? எவர் என்று யாருக்குமே தெரியாது. மேலும் எந்த மூலாதாரத்தைக் கொண்டு அவர்கள் அதைத் தொகுத்தார்கள் என்றும் தெரியாது. உதாரணமாக கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இறைத்தூதர் யுனுஸ் அவர்களின் பெயரைக் கொண்டு ஒரு நூலை எழுதி அதை விவிலியத்துடன் ஒருவர் இணைத்து விட்டார். இறைத்தூதர் யுனுஸ் அவர்களோ கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.
சபுர் (psalms) வேதம் இறைத்தூதர் தாவுத் அவர்கள் காலமான பின்பு 500 ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டது. அதில் தாவுத் அவர்கள் அளித்த போதனைகளுடன் மேலும் 100 கவிஞர்களின் கவிதைகளும் இணைக்கப்பட்டன.ஜபுர் வேதத்தைத் தொகுத்தவர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அதைத் தொகுத்தார் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் எதுவும் இல்லை. இறைத் தூதர் சுலைமான் அவர்களின் நீதிமொழிகள் (Proverbs) கி.மு.250-ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது. அதிலும் பிற அறிஞர்களின், ஞானிகளின் வாக்குகளும், கருத்துகளும் இணைக்கப்பட்டன.
ஆகவே விவிலியத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் எந்த இறைத் தூதரின் பெயரால் அது தொகுக்கப்பட்டுள்ளதோ அந்த தொகுப்புக் காலத்துக்கும் அந்த தூதர்கள் வாழ்ந்த காலத்துக்கும் இடையே பல நூற்றாண்டு கால இடைவெளி இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். மேலும் மற்றொரு கோணத்திலிருந்து கவனியுங்கள். ஹுப்ரூ மொழியில் உள்ள விவிலியத்தின் இந்த கிரந்தங்கள் கி.பி 70-ஆம் ஆண்டில் ஜெருசலம் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டபோது முழுமையாக அழிந்து விட்டன. அவற்றின் கிரேக்க லத்தீன் மொழிப் பெயர்ப்புகள் எஞ்சி நின்றன. அவையும் கி.மு. 258-ஆம் ஆண்டு முதல் கி.பி.முதல் நூற்றாண்டு வரையில் தொகுக்கப்பட்டவையாகும். கி.மு.2-ஆம் நூற்றாண்டில் யுத அறிஞர்கள் அன்று எஞ்சியிருந்த பலகைப் பிரதிகளின் துணைக் கொண்டு விவிலியத்தை மீண்டும் ஹீப்ரூ மொழியில் தொகுத்தார்கள். அதனுடைய இப்பொழுதுள்ள மிகப் பழைய பிரதி கி.பி.916-ல் எழுதப்பட்டதாகும். அதைத் தவிர விவிலியத்தின் பழைய ஹீப்ரு மொழியின் வேறு எந்தப் பிரதியும் இன்று நம்மிடம் இல்லை. ஜோர்டானில் சாக்கடலுக்கு அண்மையில் உள்ள கம்ரான் குகையில் கிடைத்திருக்கிற ஹுப்ரூ மொழியின் சுவடிகளும் அதிகபட்சம் கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றிலும் விவிலியத்தின் தாறுமாறான ஒரு சில பகுதிகள் தான் கிடைத்துள்ளன.
விவிலியத்தின் முதல் ஐந்து ஏடுகளின் தொகுப்பு சுமேரியர்களிடம் இருந்தது. அதனுடைய மிக பண்டைக்கால பிரதி கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். கி.மு.இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப் பட்ட கிரேக்க மொழி விவிலியத்தில் எண்ணற்ற பிழைகள் இருந்தன. பிறகு அதன் லத்தீன் மொழி பெயர்ப்பு கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. தூதர் மோசே அவர்கள் மற்றும் அவர்களுக்குப்பின் இஸ்ரவேலர்களில் தோன்றிய இறைத் தூதர்கள் ஆகியோரின் வாழ்வும், வாக்கும் பற்றி இத்தகைய விவிலியங்களிலிருந்து கிடைக்கும் அறிவிப்புகளை எந்த அளவுக்கு ஆதாரப்புர்வமானவை என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும்?
இவையல்லாது யுதர்களின் வாய் மொழியாக வந்த பல அறிவிப்புகளும் உள்ளன. அவற்றை வாய் மொழியாக வந்த சட்டம் ( Oral-Law ) என்று கூறுவார்கள். இவையோ சுமார் 13, 14 நூற்றாண்டுகள் வரை எழுதப்படாத நிலையில் இருந்தன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் கடைசியிலும், 3-ஆம் நுஸற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த எஹுதா இப்னு ஸம்ஊன் என்ற யுத பாதிரியார் மிஷனா ( MISHNAH ) என்ற பெயரில் இதற்கு எழுத்து வடிவம் கொடுத்தார். பாலஸ்தீன யுத அறிஞர்கள் 'மிஷனாவுக்கு' விரிவுரைகள் எழுதினார்கள். அதற்கு ஹலகா ( HALAKAH ) என்று பெயர் வைத்தார்கள். பாபிலோனியாவிலிருந்து வந்த யுத அறிஞர்களும், ஹகாதா ( HAGGADAH ) என்ற பெயரில் அதற்கு விரிவுரைகள் கி.பி 5-ஆம் நூற்றாண்டு வரை எழுதினார்கள். இந்த மூன்றுத் தொகுப்புகளும் சேர்ந்த நூலுக்கு தல்மூது என்று பெயர். இதில் கிடைக்கும் எந்த அறிவிப்புகள் எவரிடமிருந்து யார் மூலமாக நம் வரை வந்தள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை.
இவை யுத வேதம் சம்பந்தமானவை. அடுத்த பதிவில் இறைத்தூதர் ஏசுவைப் பற்றியும் அவருக்கு அருளப்பட்ட வேதத்தைப் பற்றியும் சொற்பொழிவாளர் சொல்வதைப் பார்ப்போம்.
-சையித் அபுல் அஃலா மௌதூதி
-வரலாற்று ஒளியில் இஸ்லாம்.
-பஞ்சாப் பல்கலைக் கழகம்-1975
4 comments:
suvanappiriyan sir,
இந்த விஷயங்களின் நோக்கில் பார்க்கையில், முகம்மதுக்குப் பிறகு கூட இறைத்தூதர்கள் தோன்றலாம் என்றே சொல்லலாமே.
என்ன ஒரு வித்தியாசம் என்றால், மோசஸ், தாவீது போன்றவர்கள் தங்களை இறைத்தூதர்கள் என்றும் தாமே இறுதி இறைத்தூதர் என்றும் சொல்லிக்கொள்ளவில்லை.
அப்படி அவர்கள் ஒவ்வொறுவரும் சொல்லியிருந்தால், மூஸ மதம், தாவீது மதம் என்று பலப்பல மதங்கள் வந்திருக்கும் இன்த உலகத்தில்.!! சரியா ?
வஜ்ரா!
//இந்த விஷயங்களின் நோக்கில் பார்க்கையில், முகம்மதுக்குப் பிறகு கூட இறைத்தூதர்கள் தோன்றலாம் என்றே சொல்லலாமே.//
'முகம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்.'
-குர்ஆன் 4 : 79
'முகம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை தூதராக அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன்
இந்த வசனங்களின் மூலம் தூதுத்துவ பணி நிறைவடைந்ததை குர்ஆனும, முகமது நபியின் போதனைகளும் விளக்குவதாவ் இனி நபி வருவதற்கு வாய்ப்பில்லை.
//என்ன ஒரு வித்தியாசம் என்றால், மோசஸ், தாவீது போன்றவர்கள் தங்களை இறைத்தூதர்கள் என்றும் தாமே இறுதி இறைத்தூதர் என்றும் சொல்லிக்கொள்ளவில்லை.//
'மோசேயும், அவர் சகோதரர் ஹாரூனும் பிர்அவுனிடம் சென்று 'நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு.....'
-குர்ஆன் 20 : 47
'தாவுதுக்கு ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் தெளிவான விளக்கத்தையும் கொடுத்தோம்.'
-குர்ஆன் 38 : 20
மேற்கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் இந்த இரு தூதர்களுக்கும் வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நபியென்று மக்களிடம் பிரச்சாரமும் செய்திருப்பது தெரிய வருகிறது. அவர்களின் வேதம் பாதுகாக்கப் பட்டிருந்தால் இந்த உண்மைகள் அந்த வேதங்களிலும் தெளிவாக்கப் பட்டிருப்பது நமக்கு தெரிய வரும்.
//அப்படி அவர்கள் ஒவ்வொறுவரும் சொல்லியிருந்தால், மூஸ மதம், தாவீது மதம் என்று பலப்பல மதங்கள் வந்திருக்கும் இன்த உலகத்தில்.!! சரியா ?//
அனைத்து தூதர்களும் போதித்தது ஒரே இறைவனைத்தான். ஒரு சில சட்டங்களின் மாறுதல்களுடன் அனைத்து தூதர்களுக்கும் ஒரே மாதிரியான போதனைகளே அருளப்பட்டன. மோசே காலத்திலேயே காளை மாட்டை தெய்வமாக்கினர் அம்மக்கள். மோசே வழி வந்தவர்களே நம் நாட்டு ஆரியர்கள் என்ற வரலாறும் நாம் காணக் கிடைக்கிறது. அவர்கள் காளை மாட்டை வணங்கியது போலவே இன்றும் நம் நாட்டில் அவற்றை தெய்வமாக வழிபடுவதை நாம் பார்க்கிறோம். பழக்க வழக்கங்களும் அவர்களோடு ஒத்திருப்பதைப் பார்க்கிறோம்.
நல்ல அரிதான செய்திகள். சகோ. சுவப்பிரியனுக்கு வாழ்த்துக்கள்.
எல்லா இறைதூதர்களும் தங்களிடம் இறைவனிடத்திடமிருந்து என்ன அறிவிக்கப்பட்டாதோ அதைத்தான் மக்களிடம் வெளிப்படத்தினார்கள். இத்தனை இறைத்தூதர்கள் தோன்றியும் எந்த இறைத்தூதர்களும் சொல்லாத தான் இறைவனின் இறுதி தூதர் என்ற கருத்து முஹம்மது நபி ஸல்() அவர்களிடமிருந்து வெளிப்பட்டதால், அதுவே அவர்கள்
தான் இறுதித்தூதர் என்பதற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.
வளர் பிறை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment