'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, May 29, 2009
இசைப்புயல் இனி டாக்டர் ரஹ்மான் ஆகலாம்!
அலிகர் பல்கலைக்கழகம் நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன் வந்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஜீன் ஏழாம் தேதி டெல்லியில் நடைபெறும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றதற்காக சாதனையாளர் விருதாக இது வழங்கப்படுகிறது. ஏற்கெனவே மோடோரோல்லாவில் கால்பந்தாட்ட வீரரை வீழ்த்தி அவர் இடத்துக்கு ரஹ்மான் வந்துள்ளார். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானமும் ஈட்டுகிறார். இன்று இந்தியாவிலேயே விளம்பரத்தின் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் ரஹ்மான் பெறுகிறார். இன்னும் பல விருதுகள் பெற நாமும் வாழ்த்துவோம்.
திறமையோடு பணிவும் இருந்தால் பெருமைகள் தேடி வரும்: திறமையோடு தலைக்கனமும் இருந்தால் சிறுமைகளே தேடி வரும்: என்பதை கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம்.
ஒரு நேரத்தில் 'மதராஸியா' என்று இளக்காரமாக பார்த்தது போய் இன்று அவரின் இசைக்காக வடக்கு தவம் கிடக்கிறது.
கோடிகளில் புரளும் ரஹ்மான் தெருக் கோடியில் புரளும் சாமான்யன் சிலரையாவது தத்து எடுத்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற முன் வர வேண்டும்.
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
Thursday, May 28, 2009
மீனாட்சிபுரம் - ஒரு மீள் பார்வை!
மீனாட்சிபுரம் - ஒரு மீள் பார்வை!
இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வலம் வரும் இந்துத்வாவாதிகள் இந்த பதிவை ஒரு தரம் நன்கு படிக்க வேண்டும். எங்கு தவறு இருக்கிறது என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும். 'நோய் முதல் நாடி' என்ற வள்ளுவரின் வாக்குக்கொப்ப பி.ஜே.பியும் ஆர்.எஸ்.எஸ் ஸூம் இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை ஒழித்து விட்டாலே இந்து மதத்தைக் காப்பாற்றி விடலாம். இந்த தேர்தலில் கிடைத்த தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லை என்றால் வெறும் லெட்டர்பேடு இயக்கமாக பி.ஜே.பி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.
முன்னுரை - கி.வீரமணி.
1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.
அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் - பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.
இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!
அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.
இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள "Vishwa Hindu Parishad and Indian Politics" என்ற ஓர் ஆங்கில நூல் - இதன் ஆசிரியர் "மஞ்சேரி காட்ஜு" என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.
அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், "Translation to Mass Activism" தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.
In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were "Untouchables", became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but "a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan," financed by petrodollars.
It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.
The incident was communally interpreted by the RSS and VHP as 'an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.' It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP's socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.
It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People's Awakening) to "warn" the HINDUS about "the international conspiracy to devour Hinduism". During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.
The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for "national integration". The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.
இதன் தமிழாக்கம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.
விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.
சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.
மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.
இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.
இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)
வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)
இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.
பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.
மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.
அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).
பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.
மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.
நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.
இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-
உமர்செரீப்:
இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்!
ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?
உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.
ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?
20 வருடம் முன்பே
உமர்செரீப்:
20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.
ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.
ஆசிரியர்: எந்தக் காலேஜில்?
உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.
ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!
உமர்செரீப்: ஆமா கிடைச்சது.
ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?
உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.
இப்போது ஏன் இந்த முடிவு?
ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?
உமர்:
நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
ஏது மரியாதை?
ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?
உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!
ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?
உமர்:
எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.
ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?
உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.
ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?
உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.
துவேஷமே காரணம்
ஆசிரியர்:
மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?
உமர்:
துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.
ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?
உமர்: ஆமா!
ஆசிரியர்:
இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?
உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.
ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?
உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.
ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?
உமர்: சராசரி 5 பேரு.
ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.
உமர்: ஆமாம்!
முக்கியமானவரை மறப்பதா?
ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை – இது மாதிரி தொந்தரவு இருக்குது.
இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?
உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.
ஏன்னா, அவங்க ‘சாதி இந்து’ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர ‘அரிஜன்’ என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.
அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு ‘அரிஜனை’ இந்துவா ஏத்துகிறதில்ல.
ஆக முடியாது
இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி ‘இந்து’க்களுக்கும் ‘அரிஜனனு’க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி ‘அரிஜன்’ இந்து ஆக முடியும்?
ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.
இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?
உமர்: சந்திக்கலிங்க.
ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?
உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.
'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!
'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'
அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.
ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?
உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.
ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?
உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.
இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?
ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?
உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.
கிறிஸ்தவ மதம் மாறினால்....
ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?
உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.
'ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!'

Saturday, May 23, 2009
தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்!
தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்!
தாலிப் என்ற அரபு சொல்லுக்கு மாணவன் என்ற பொருள் வரும். கம்யூனிஷத்தை ஆப்கானிஸ்தானத்திலிருந்து விரட்டுவதற்காக மாணவர்களாக சேர்ந்து உருவாக்கிய அமைப்பே 'தாலிபான்கள்'. ரஷ்யர்களை அன்று விரட்டுவதற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு ஒன்றினைந்தவர்களே தாலிபான்கள். இதற்கு அமெரிக்காவும் அரபுநாடுகளும் பணத்தை வாரி இறைத்து தாலிபான்களை உரம் போட்டு வளர்த்தன. ஒருவாறாக ரஷ்யர்களை விரட்டி விட்டு ஆட்சியையும் பிடித்தனர். நாட்டில் ஷரியத் சட்டத்தையும் அமுல்படுத்தினர். இது வரை ஓ.கே. இதன் பிறகுதான் பிடிக்கிறது சனியன்.
ஷரியத் சட்டத்தை அமுல்படுத்துவதை விரும்பாத அமெரிக்கா தாலிபான்களை ஆட்சியை விட்டு இறக்க தருணம் பார்த்து காத்திருந்தது. 'இரட்டை கோபுரம்' இடிக்கப்பட்ட நிகழ்வை வைத்து தாலிபான்களின் மேல் போர் தொடுக்கிறது அமெரிக்கா! 'செப்டம்பர்-11' தாக்குதலே தாலிபான்களை ஒழிக்க அமெரிக்காவின் சிஐஏயும் மொஸாத்தும் சேர்ந்து நடத்திய சதி என்கின்றனர் நோக்கர்கள்.
ஆட்சியை இழந்த தாலிபான்கள் கொரில்லா யுத்தத்தை திரும்பவும் தொடங்கி இன்று பாகிஸ்தானின் ஒரு மாகாணத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர். இன்று பாகிஸ்தானிலும் ஷரியாவை கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கமாம். நோக்கம் சரியாக இருந்தாலும் வழி நடத்தி செல்லும் தலைவர்களின் தவறான வழி காட்டுதலால் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் தாலிபான்கள்.
சவூதி அரேபியா இஸ்லாமிய சட்டத்தையும் அமுல்படுத்தி அதே நேரம் பல மதத்தவரையும் பல நாட்டவரையும் தன் நாட்டு முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்வதையும் பார்க்கிறோம். அறிவியல் முன்னேற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் மக்களை கல்வியில் சமீபகாலமாக மேம்பட வைத்திருக்கிறது சவூதி. சட்டத்தை கடுமையாக்கி அனைத்து மக்களின் உயிருக்கும் உத்தரவாதம் கொடுக்கிறது சவூதி.
தன் மக்களின் கல்வி நிலையைப் பற்றியும் கவலை இல்லை. சுற்றி உள்ள நாடுகள் எல்லாம் அசுர வேகத்தில் முன்னேறிச் செல்கின்றன. அதைப்பற்றியும் எந்த கவலையும் இல்லை. 'இஸ்லாம்' என்ற அழகிய வழி முறையை தவறாக விளங்கி இன்று துப்பாக்கியும் கையுமாக வெறி பிடித்து அலைகின்றனர் தாலிபான்கள்.
'அபு மன்சூர் அல் அமெரிக்கி' என்ற அமெரிக்கர். தாலிபான்களை அடக்க அமெரிக்கா அனுப்பிய போர் வீரர். இன்று தாலிபான்களோடும் அல்காய்தாவோடும் சேர்ந்து கொண்டு 'அமெரிக்காவை அழிப்பதே என் லட்சியம்' என்று அமெரிக்கர்களை போட்டுத் தள்ளிக் கொண்டு இருக்கிறார்.
இதே போல் நம் நாட்டிலும் சிங்களவர்களின் கொடுமையை தட்டிக் கேட்க இலங்கையில் உருவாக்கப்பட்ட விடுதலை அமைப்பு எங்கெங்கோ சுற்றி கடைசியில் தமிழர்களையே போட்டுத் தள்ளும் இயக்கமாக பரிணமித்து இன்று அழிவின் விளிம்பில் நிற்கும் நிலையை சோகத்தோடு பார்க்கிறோம். இங்கும் நோக்கம் சரியாக இருந்தாலும் தலைவர்களின் பிடிவாதப் போக்கினாலேயே பல தவறுகள் நிகழ காரணமாகி விட்டது.
'நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும் இறைவனுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள். வாதியோ பிரதிவாதியோ செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே இறைவனே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தைப் புரட்டினாலோ புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவனாக இருக்கிறான்.'
-குர்ஆன் 4:135

Wednesday, May 20, 2009
வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்
வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்
வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.
ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.
அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.
இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)
பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.
அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.
அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71
இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
P.N.Pande
“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”
P.N.Pande, Islam And Indian Culture, Page 55
உண்மை இவ்வாறு இருக்க நம் நாட்டு பாட நூல்களில் ஒளரங்கஜேப் 'இந்து கோவில்களை மத வெறியினால் இடித்தார்' என்று பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கிறோம் என்பதை சமூக ஆர்வலர்கள் உணர்ந்து பொய்யாக புனைந்த வரலாறுகளை திருத்த முன் வர வேண்டும்.

கொலையாளியைக் கொல்லலாமா!
கொலையாளியைக் கொல்லலாமா!
'நம்பிக்கைக் கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன், அடிமைக்காக கொலை செய்த அடிமை, பெண்ணுக்காக கொலை செய்த பெண் என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது கொள்கைச் சகோதரன் மூலம் ஏதெனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது'
'அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்வீர்கள்.'
குர்ஆன்: 2:178,179
ஒருவன் மற்றொருவனைக் கொண்டு விட்டால் அவனை மன்னித்து விடாமல் பழிக்குப் பழி வாங்குவதால் போன உயிர் திரும்ப வருமா? கற்பழிப்புக்காக தண்டிக்கப்படுவதால் போன கற்பு திரும்ப வருமா? என்பது பலரது கேள்வி.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல. குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை மூலம் சமூகம் ஒரு பாதுகாப்பைப் பெறகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கத்தை நாம் சற்று பார்ப்போம்.
1.குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2.ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3.குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.
இது போன்ற பயன்களை நோக்காது குற்றவாளியின் நலனில் அக்கறைக் கொண்டு சட்டம் இயற்றியதால்தான் குற்றவாளிகள் நமது நாட்டில் பெருகியதற்கு காரணம். சிறைச்சாலையும் சகல வசதிகளோடு உள்ளதால் 'மாமியார் வீட்டுக்கு போய் வருகிறேன்' என்று தெனாவெட்டாக குற்றவாளி சொல்லிக் கொண்டு செல்வதையும் நாம் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவனின் வரிப்பணத்திலிருந்தே அந்த குற்றவாளிக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கும் கொடுமையை என்னவென்பது?
'53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது' என்ற தமாஷ்களெல்லாம் அரங்கேறாமல் இருக்க நாட்டின் சட்டம் இன்னும் கடுமையாக்கப் பட வேண்டும். புதிய அரசு எப்படி செயல்படுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, May 17, 2009
புலிகள் தோல்வியடைந்தனரா? செய்தி உண்மையா?
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல் கடுமையாக இருப்பதால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும் உயிர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசிடம் சரண் அடையவும் புலிகள் முடிவு செய்துள்ளதாக புலிகளின் செய்தி தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்தள்ளார்.
இதற்கிடையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் ராணுவ முகாமில் இருப்பதாக உறதி செய்யப்படாத தகவல் கூறுகிறது. முல்லை தீவில் 150 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? அவரது நிலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காணப்பட்ட பிறகு தான் பிரபாகரன் இறந்துவிட்டது குறித்து உறுதி செய்யப்படும் என ராணுவ தரப்பு கூறுகிறது. அவற்றில் பிரபாகரன் உடல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய டி.என.ஏ., சோதனை நடத்தப்படுவதாக மற்றொரு தகவல் கூறுகிறது. புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான முத்தப்பன், பிரதீப் ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே அறிவித்துள்ளார். ஜோர்டான் நாட்டில் ஜி-11 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது உரையாற்றிய ராஜபக்ஷே, விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்து விட்டதாக கூறினார். . இலங்கையில் பல ஆண்டு காலத்துக்கு பிறகு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலி தலைவர் பிரபாகரன் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை . ராஜபக்ஷே ஜோர்டான் பயணத்தை பாதியில் முடித்துக்கு கொண்டு இலங்கை திரும்பினார். ராணுவ வெற்றியை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க அரசியல் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு திரும்பிய அதிபர் ராஜபக்ஷே , தாய் மண்ணுக்கு தலை வணங்கி, இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன் என கூறினார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை வரவேற்க சர்வ சமய தலைவர்களும் வந்திருந்தனர்.ராணுவ அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் பால் சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை கொண்டாடினர்.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த தகவல் துறை அமைச்சர் அணுரா பிரியதர்சன் கூறியதாவது : இலங்கையில் விடுதலைப்புலிகள் மிக குறுகிய பரப்பளவில் உள்ள இடத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் பிரபாகரன் நிலை என்பது குறித்து ராணுவ கேம்பில் இருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதி செய்ய முடியும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
இலங்கையில் தமிழ் இனம் சந்தித்த வலி அங்கிருந்து உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.-தமிழன்
by M. tamilan@,India
Posted on மே 17,2009,19:00 IST
Oh my dear brothers war is physically over in Sri Lanka. Now Viko and Ramadash what you all are going to do? what is your next political song? I think your time is not good you both lost the election too.
by A.A.M Rahman,Sri Lanka
Posted on மே 17,2009,18:55 IST
பிரபாகரனால் வாழ் ததூ எல் டி டி தான் பிரபாகரனால் தமிழர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல இனி தமிழர்கள் நிம்மதியா இருப்பார்கள்
by Mr Abdulla,Sri Lanka
Posted on மே 17,2009,18:54 IST
Well done Mr. Raja bakshe !!!. Congratulation -- Your brave action will be appreciated by the world. Don''t leave atleast one LTTE in alive.
by S Thamizhanban,United Arab Emirates
Posted on மே 17,2009,17:57 IST
Good news for INdia and Sirlanka. Congrats to Givrnment
by P jeeva,India
Posted on மே 17,2009,17:21 IST
So now Vaikoo and Ramadoss under the leadership of Jaya can go and get thani tamil eelam.
by k murali,India
Posted on மே 17,2009,17:16 IST
Dear All
Armed revolution is not the way to achieve
your goal. The could have achieved Tamil Ealam if they followed the Great ideology of Gandhiji .
by K.M Jiyavudin,India
Posted on மே 17,2009,17:13 IST
DEAR THALAIVA..NOBODY CAN KILL YOU..YOU ARE A GOD..UNAKKU SAAVE ILLAI EN VEERA MARAVANE..
by M SARAN THEVAR,India
Posted on மே 17,2009,16:57 IST
Good to hear now everyone will be happy
by sa ibrahim,India
Posted on மே 17,2009,16:39 IST
Appadi.........
by R Govindarajan,India
Posted on மே 17,2009,16:27 IST
What a bad news for Mr. VAIKO and Maruthuvar. Both lost elections, Prabakaran lost Jaffna. What about kalaignar. Whether kalaignar will share this sarrow or share his victory in Parliament elections
by GSG KRISHNAN,India
Posted on மே 17,2009,16:19 IST
அப்போ இனிமே ராணுவ குண்டு வீச்சு... எறிகணை தாக்குதல்னு வந்து மக்கள் சாக மாட்டாங்களா??? எல்லோரும் யாழ், திரிகோணமலை மக்கள் மாதிரி சந்தோசமா அமைதியான வாழ்க்கை அடைய போறாங்களா? என்ன கொடுமை இது!!!! அப்போ உலகத்தமிழ் ரட்சகர் & LTTE இந்தியன் chief மேதகு வைகோ & LTTE சட்ட ஆலோசகர மற்றும் குடும்ப மருத்துவர் டாக்டர் ராமதாஸ் அய்யா எப்படி பொழப்பு நடத்துவாங்கப்பா??
by K Ayyo Poche Poche,India
Posted on மே 17,2009,16:03 IST
india one day think,same situaion will come for indian people.prapagaran is a great.it is not a end of tamil elam ,it is the starting of tamil elam
by K RAMASUBBIAH,India
Posted on மே 17,2009,15:59 IST
Rajabaksey is a very semibarbaricman
by jai jaikumar,India
Posted on மே 17,2009,15:59 IST
india one day think,same situaion will come for indian people.prapagaran is a great.it is not a end of tamil elam ,it is the starting of tamil elam
by K RAMASUBBIAH,India
Posted on மே 17,2009,15:59 IST
TERROR NEVER WIN..CONGRATS...SRILANKA ARMY ALL THE BEST DO SOME GOOD THINGS TO TAMILS.
by GB RIZWAN,Saudi Arabia
Posted on மே 17,2009,15:53 IST
Is is possible the Tamil leader Prabhakaran Velupillai killed by Sinhale army. Brave salutes to the Tamil Tiger martyrs.
by S Karmughil,India
Posted on மே 17,2009,15:45 IST
Hey Blood Suckers.... Don't celebrate too much... It'll not extend for long time... It's not the permanent solution too....
by S Marshall,India
Posted on மே 17,2009,15:36 IST
யோவ் கொன்னு கின்னு பொட்ரதிங்கய்யா.. எங்க தலிவரு இத பிரபாகரன வச்சு இன்னும் அஞ்சு வருசம் ஆச்சில இருக்கலாம்னு நெனிக்கிராரு....
by M Arunkumar,India
Posted on மே 17,2009,15:36 IST
Appadinna, ennoda nanbar poyittara? Sari, oru kavithai ezhuthi vaippom!
by v sundaram,Saudi Arabia
Posted on மே 17,2009,15:22 IST
welldone srilanka
by k rajan,Kuwait
Posted on மே 17,2009,15:19 IST
This is very Sad News for us.
by MR. VETRIYURAAN,Kuwait
Posted on மே 17,2009,14:41 IST
ஆளு இருக்காரா, இல்ல அங்கனயே வச்சி போட்டுத்தள்ளீட்டீங்களாய்யா. தமிழ்நாட்டுல ஒரு இருபத்தஞ்சி வருசமா சிலோன் மேட்டர வச்சி பிலிம் காட்டிக்கினு ஒரு கூட்டம் பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கிராய்ங்கய்யா. அவிங்கெ கதி என்னாவரது.
by S SHAHUL HAMMED,India
Posted on மே 17,2009,14:37 IST
Best joke of the year!!!!
by p Jeanine,France
Posted on மே 17,2009,14:12 IST
Hot news : Prabakaran was captured by srilankan army on 16.05.09 (Yesterday) & news will be expected today night
by A Oliver ,India
Posted on மே 17,2009,14:12 IST
Dear rajapakse, if you have won, where is Mr. Prabhakaran. first announce that.
by k seekayvee,United Arab Emirates
Posted on மே 17,2009,13:57 IST
Everything is Because of Rajni Kanth. All this years both LTTE and the SriLankan Government were fighting with each other. When Rajni Kanth attacked the Sri Lankan Government 'NEENGALLAM THOLVIYA ACCEPT PANNIKKITTU LTTE KKU FREEDOM KODUNGADA' Now Sri Lankan fought really and proved they are MEN. I pray atleast hereafter the lives of Tamil people will be peaceful and normal in Sri Lanka.
by S SLN,Bahrain
Posted on மே 17,2009,13:43 IST
Congratulation.....
We are proud to be Sri lankan....
by Mr. Aslam,Sri Lanka
Posted on மே 17,2009,13:42 IST
Since you killed 6000 tamil people last 4 month, They will teach you about the life soon
by C Murugavel,India
Posted on மே 17,2009,13:26 IST
உலகில் பயங்கரவாதம் என்றுமே வென்றதில்லை, வெல்லப்போவதுமில்லை என்று நிருபிக்கப்பட்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் இலங்கை அதிபரே!
by J Jayaram,India
Posted on மே 17,2009,13:20 IST
Terrorism never triumph.
by D. ALAGURAJ,India
-நன்றி தினமலர்
பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் நமக்கெல்லாம் பிடித்தமில்லாததாக இருக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தை எதிர்த்து போட்டி அரசாங்கம் ஒன்றையும் நடத்தி இது நாள்வரை தாக்கு பிடித்ததை ஒரு சாதாரண காரியமாக எண்ண முடியவில்லை. போர் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். பொது மக்கள் இனி நிம்மதியாக தங்களின் வாழ்க்கையை கழிக்க வேண்டும்.
தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துள்ள கலைஞர் சோனியா காந்தியோடு கலந்தாலோசித்து இலங்கையில் நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். கலைஞர் முதலில் செய்ய வேண்டிய பணியும் இதுவே!
இலங்கையில் சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேள்.
Tuesday, May 12, 2009
மறந்துடாதீங்க...நம்ம சின்னம் சூரியன்,கை!

அது என்ன அருளாசி! ஓட்டுக் கேட்க வந்த ஜவாஹிருல்லாவுக்கு 'நான் உங்களுக்கு ஆதரவு, அல்லது எதிர்ப்பு' என்ற இரண்டு நிலைகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனிதனுக்கு இறை சக்தியைக் கொடுப்பது போல் அருளாசி வழங்குதல் எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் தேர்தலில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா? ஜவாஹிருல்லாவா, மணிசங்கர் ஐயரா, மணியனா யார் என்பதை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எங்களது தொகுதியான தஞ்சையில் அனேகமாக சூரியனே பிரகாசிக்கும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் தலைக்கு இருபதாக பிரித்துக் கொள்வார்கள் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
யார் வந்தாலும் வரலேன்னாலும் நாம உழைச்சுதாங்கன்னா சாப்பிடனும். எனவே ரிசல்டைப் பார்த்து இடிஞ்சு உக்காந்துராம எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வோமே!
எது எப்படியோ உங்கள் பொன்னான வாக்குகளை சூரியனுக்கும் கைக்கும் போட்டு மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த ஆவண செய்வோம்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இலங்கை பிரச்னையை சோனியா சிறப்பாக கையாள்வார் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. புலம் பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்தப் படுவது அவசியம். இலங்கை அரசாங்கம் பழைய போக்கிரித்தனங்களை எல்லாம் கைவிட்டு அந்த மக்கள் மீண்டும் ஒரு முறை ஆயுதம் எடுக்காத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். ராஜபக்ஷேயின் கன்னித் தமிழ்ப் பேச்சை சமீபத்தில் கேட்டேன். இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவரது பேச்சிலே தென்பட்டது. பௌத்த, இந்து,இஸ்லாமிய,கிறித்தவ மக்கள் இலங்கையில் அமைதியுடன் வாழவும் எனது நாட்டுக்கு மிகச்சிறந்த தலைமை கிடைக்கவும் இந்நாளில் இறைவனை பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.
Wednesday, May 06, 2009
பரவாயில்லை! ராகுல் காந்தி தேறிவிடுவார்!
சமீப காலமாக ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப் போல தற்போது மாறி வருகிறார். அல்லது சூழ்நிலை அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது. பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிராமங்களை நோக்கி சென்று அந்த மக்களோடு மக்களாக தங்கியிருந்தது. தனது நண்பரான இங்கிலாந்து மந்திரியையும் கூடவே கூட்டி சென்றது: இதைப்பற்றி கூட்டங்களில் பேசும் போது 'இந்த நாடு கிராமங்களில்தான் வாழ்கிறது' என்பதை மேற்கோள் காட்டியது என்று நாள்தோறும் பட்டை தீட்டப்படுகிறார். ஒருக்கால் நம் எம்,ஜி,ஆரின் வரலாற்றை ப.சிதம்பரம் மூலம் கேள்விப்பட்டிருப்பாரோ என்று கூட எண்ணியதுண்டு :-)
ஆட்சி அமைக்கும் போது அம்மாவின் ஆதரவு தேவைப்பட்டால் என்ன செய்வது என்பதால் 'ஜெயலலிதாவும், சந்திரபாபு நாயுடுவும் எங்களோடு ஒத்த கருத்துடையவர்களே!' என்று ஒரே போடாக போட்டது இவரின் அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கை பிரச்னையைப் பற்றி பேச்சு வரும்போது 'என் தந்தையை கொன்றவர்களை என்னால் எப்படி மறக்க முடியும்? வெறுப்பு விடுதலைப் புலிகள் மீதுதானே யொழிய அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நாங்கள் களைய முற்படுகிறோம். மனிதக் கேடயமாக மக்கள் பயன் படுத்துவதுதான் சண்டை நீடிக்கவும் காரணம்' என்ற ரீதியில் அவர் சகாராவுக்கு கொடுத்த பேட்டியையும் பார்த்தேன்.
பொதுக் கூட்டங்களில் பேசும் போதும் நிதானம் தவறாமல் அடக்கத்தோடு பேசுவதும் இவரின் மதிப்பை எதிரிகளிடத்தும் உயர்த்துகிறது. எப்படியோ இளம் தலைவர் ஒருவர் காங்கிரஸூக்கும் நாட்டுக்கும் கிடைத்துள்ளார். தேறுகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் திமுகவும் காங்கிரஸூம் 25 இடங்கள் குறையாமல் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். சண்டை இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி பொது மக்கள் சரிவர நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம். இன்னும் சில நாட்கள்தானே பொறுத்திருந்து பார்ப்போம்.....
Sunday, May 03, 2009
ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்
“தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் அளித்துள்ள பதில்கள் இவை:
பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?
அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.
ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?
பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை வைக்க வேண்டியதாயிற்று. பாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது. மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்பதில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.
எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்?
எப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் “உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா - சாரே ஜஹான் சே அச்சா” எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.
அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா?
அவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.
யார் ராமர்கோவிலை நிர்வகிக்கின்றனர்?
பைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி “குழந்தை ராமனின்” பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.
அயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே?
அவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே! ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை; இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.
இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை. இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2009
Friday, May 01, 2009
இறைவன் கேட்கிறான்!
குடம் குடமாக பாலை கொட்டுகிறாயே!
இதை நான் கேட்டேனா? பக்தா!
குடல் வற்றி சாலையோரம் ஒடுங்கி கிடக்கும்
வறியவன் தினமும் கேட்கிறானே!
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'
என்று சொன்னால் மட்டும் போதுமா?
இங்கு கொட்டும் பாலை இனி
ஏழைகளின் வீட்டில் கொட்டுவாயா!
Subscribe to:
Posts (Atom)