
அலிகர் பல்கலைக்கழகம் நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன் வந்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஜீன் ஏழாம் தேதி டெல்லியில் நடைபெறும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றதற்காக சாதனையாளர் விருதாக இது வழங்கப்படுகிறது. ஏற்கெனவே மோடோரோல்லாவில் கால்பந்தாட்ட வீரரை வீழ்த்தி அவர் இடத்துக்கு ரஹ்மான் வந்துள்ளார். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானமும் ஈட்டுகிறார். இன்று இந்தியாவிலேயே விளம்பரத்தின் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் ரஹ்மான் பெறுகிறார். இன்னும் பல விருதுகள் பெற நாமும் வாழ்த்துவோம்.
திறமையோடு பணிவும் இருந்தால் பெருமைகள் தேடி வரும்: திறமையோடு தலைக்கனமும் இருந்தால் சிறுமைகளே தேடி வரும்: என்பதை கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம்.
ஒரு நேரத்தில் 'மதராஸியா' என்று இளக்காரமாக பார்த்தது போய் இன்று அவரின் இசைக்காக வடக்கு தவம் கிடக்கிறது.
கோடிகளில் புரளும் ரஹ்மான் தெருக் கோடியில் புரளும் சாமான்யன் சிலரையாவது தத்து எடுத்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற முன் வர வேண்டும்.
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
No comments:
Post a Comment