Followers

Tuesday, May 12, 2009

மறந்துடாதீங்க...நம்ம சின்னம் சூரியன்,கை!


மறந்துடாதீங்க...நம்ம சின்னம் சூரியன்,கை!

அது என்ன அருளாசி! ஓட்டுக் கேட்க வந்த ஜவாஹிருல்லாவுக்கு 'நான் உங்களுக்கு ஆதரவு, அல்லது எதிர்ப்பு' என்ற இரண்டு நிலைகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனிதனுக்கு இறை சக்தியைக் கொடுப்பது போல் அருளாசி வழங்குதல் எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் தேர்தலில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா? ஜவாஹிருல்லாவா, மணிசங்கர் ஐயரா, மணியனா யார் என்பதை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எங்களது தொகுதியான தஞ்சையில் அனேகமாக சூரியனே பிரகாசிக்கும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் தலைக்கு இருபதாக பிரித்துக் கொள்வார்கள் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

யார் வந்தாலும் வரலேன்னாலும் நாம உழைச்சுதாங்கன்னா சாப்பிடனும். எனவே ரிசல்டைப் பார்த்து இடிஞ்சு உக்காந்துராம எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வோமே!

எது எப்படியோ உங்கள் பொன்னான வாக்குகளை சூரியனுக்கும் கைக்கும் போட்டு மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த ஆவண செய்வோம்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இலங்கை பிரச்னையை சோனியா சிறப்பாக கையாள்வார் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. புலம் பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்தப் படுவது அவசியம். இலங்கை அரசாங்கம் பழைய போக்கிரித்தனங்களை எல்லாம் கைவிட்டு அந்த மக்கள் மீண்டும் ஒரு முறை ஆயுதம் எடுக்காத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். ராஜபக்ஷேயின் கன்னித் தமிழ்ப் பேச்சை சமீபத்தில் கேட்டேன். இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவரது பேச்சிலே தென்பட்டது. பௌத்த, இந்து,இஸ்லாமிய,கிறித்தவ மக்கள் இலங்கையில் அமைதியுடன் வாழவும் எனது நாட்டுக்கு மிகச்சிறந்த தலைமை கிடைக்கவும் இந்நாளில் இறைவனை பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.

7 comments:

பீர் | Peer said...

இவர் வாக்கு சேகரிக்கப் போனார் என்றும், அவர், 'எங்கள் வாக்கு உங்களுக்குத் தான், தைரியமாக செல்லுங்கள்' என்று சொல்வதாகவும் கொள்ளலாமே?

ttpian said...

இத்தாலி உள் ஆடைகலை குறைந்த செலவில் துவைத்து வுளர்த்த....
கைராசியான ச்தாபனம்:
மு.க&கம்பனி
கோபாலபுரம்
சென்னை

ttpian said...

இத்தாலி உள் ஆடைகலை குறைந்த செலவில் துவைத்து வுளர்த்த....
கைராசியான ச்தாபனம்:
மு.க&கம்பனி
கோபாலபுரம்
சென்னை

Anonymous said...

What the fuck?

suvanappiriyan said...

பீர்!

//இவர் வாக்கு சேகரிக்கப் போனார் என்றும், அவர், 'எங்கள் வாக்கு உங்களுக்குத் தான், தைரியமாக செல்லுங்கள்' என்று சொல்வதாகவும் கொள்ளலாமே?//

வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் நண்பரே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ttpian!

//கைராசியான ச்தாபனம்:
மு.க&கம்பனி
கோபாலபுரம்
சென்னை//

அதையேதாங்க நானும் சொல்றேன்.

Anonymous said...

unkalukku vetry ...tauheethai nilai niruthi viteerhal....

maatru matha periyavarhalai santhipathu ondrum haramana kariyam kidayathu...

ungal iyakkam than oorai yeemaatruhireerhal...

politics panna maatom yendru solikondu politics pannuhireerhal....

yesterday ADMK today DMK tommorrow????

gulam
dubai