Followers

Wednesday, May 06, 2009

பரவாயில்லை! ராகுல் காந்தி தேறிவிடுவார்!



சமீப காலமாக ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப் போல தற்போது மாறி வருகிறார். அல்லது சூழ்நிலை அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது. பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிராமங்களை நோக்கி சென்று அந்த மக்களோடு மக்களாக தங்கியிருந்தது. தனது நண்பரான இங்கிலாந்து மந்திரியையும் கூடவே கூட்டி சென்றது: இதைப்பற்றி கூட்டங்களில் பேசும் போது 'இந்த நாடு கிராமங்களில்தான் வாழ்கிறது' என்பதை மேற்கோள் காட்டியது என்று நாள்தோறும் பட்டை தீட்டப்படுகிறார். ஒருக்கால் நம் எம்,ஜி,ஆரின் வரலாற்றை ப.சிதம்பரம் மூலம் கேள்விப்பட்டிருப்பாரோ என்று கூட எண்ணியதுண்டு :-)

ஆட்சி அமைக்கும் போது அம்மாவின் ஆதரவு தேவைப்பட்டால் என்ன செய்வது என்பதால் 'ஜெயலலிதாவும், சந்திரபாபு நாயுடுவும் எங்களோடு ஒத்த கருத்துடையவர்களே!' என்று ஒரே போடாக போட்டது இவரின் அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கை பிரச்னையைப் பற்றி பேச்சு வரும்போது 'என் தந்தையை கொன்றவர்களை என்னால் எப்படி மறக்க முடியும்? வெறுப்பு விடுதலைப் புலிகள் மீதுதானே யொழிய அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நாங்கள் களைய முற்படுகிறோம். மனிதக் கேடயமாக மக்கள் பயன் படுத்துவதுதான் சண்டை நீடிக்கவும் காரணம்' என்ற ரீதியில் அவர் சகாராவுக்கு கொடுத்த பேட்டியையும் பார்த்தேன்.

பொதுக் கூட்டங்களில் பேசும் போதும் நிதானம் தவறாமல் அடக்கத்தோடு பேசுவதும் இவரின் மதிப்பை எதிரிகளிடத்தும் உயர்த்துகிறது. எப்படியோ இளம் தலைவர் ஒருவர் காங்கிரஸூக்கும் நாட்டுக்கும் கிடைத்துள்ளார். தேறுகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் திமுகவும் காங்கிரஸூம் 25 இடங்கள் குறையாமல் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். சண்டை இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி பொது மக்கள் சரிவர நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம். இன்னும் சில நாட்கள்தானே பொறுத்திருந்து பார்ப்போம்.....

2 comments:

பீர் | Peer said...

இலங்கை பிரச்சனையில் இவரது நிலைப்பாட்டை அனைவரும் புரிந்துகொண்டால் தமிழகத்தில் இதை காட்சிப்பொருளாக்கி நடக்கும் வியாபாரம் படுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பீர்!