Followers

Saturday, May 23, 2009

தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்!

தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்!

தாலிப் என்ற அரபு சொல்லுக்கு மாணவன் என்ற பொருள் வரும். கம்யூனிஷத்தை ஆப்கானிஸ்தானத்திலிருந்து விரட்டுவதற்காக மாணவர்களாக சேர்ந்து உருவாக்கிய அமைப்பே 'தாலிபான்கள்'. ரஷ்யர்களை அன்று விரட்டுவதற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு ஒன்றினைந்தவர்களே தாலிபான்கள். இதற்கு அமெரிக்காவும் அரபுநாடுகளும் பணத்தை வாரி இறைத்து தாலிபான்களை உரம் போட்டு வளர்த்தன. ஒருவாறாக ரஷ்யர்களை விரட்டி விட்டு ஆட்சியையும் பிடித்தனர். நாட்டில் ஷரியத் சட்டத்தையும் அமுல்படுத்தினர். இது வரை ஓ.கே. இதன் பிறகுதான் பிடிக்கிறது சனியன்.

ஷரியத் சட்டத்தை அமுல்படுத்துவதை விரும்பாத அமெரிக்கா தாலிபான்களை ஆட்சியை விட்டு இறக்க தருணம் பார்த்து காத்திருந்தது. 'இரட்டை கோபுரம்' இடிக்கப்பட்ட நிகழ்வை வைத்து தாலிபான்களின் மேல் போர் தொடுக்கிறது அமெரிக்கா! 'செப்டம்பர்-11' தாக்குதலே தாலிபான்களை ஒழிக்க அமெரிக்காவின் சிஐஏயும் மொஸாத்தும் சேர்ந்து நடத்திய சதி என்கின்றனர் நோக்கர்கள்.

ஆட்சியை இழந்த தாலிபான்கள் கொரில்லா யுத்தத்தை திரும்பவும் தொடங்கி இன்று பாகிஸ்தானின் ஒரு மாகாணத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர். இன்று பாகிஸ்தானிலும் ஷரியாவை கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கமாம். நோக்கம் சரியாக இருந்தாலும் வழி நடத்தி செல்லும் தலைவர்களின் தவறான வழி காட்டுதலால் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் தாலிபான்கள்.

சவூதி அரேபியா இஸ்லாமிய சட்டத்தையும் அமுல்படுத்தி அதே நேரம் பல மதத்தவரையும் பல நாட்டவரையும் தன் நாட்டு முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்வதையும் பார்க்கிறோம். அறிவியல் முன்னேற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் மக்களை கல்வியில் சமீபகாலமாக மேம்பட வைத்திருக்கிறது சவூதி. சட்டத்தை கடுமையாக்கி அனைத்து மக்களின் உயிருக்கும் உத்தரவாதம் கொடுக்கிறது சவூதி.

தன் மக்களின் கல்வி நிலையைப் பற்றியும் கவலை இல்லை. சுற்றி உள்ள நாடுகள் எல்லாம் அசுர வேகத்தில் முன்னேறிச் செல்கின்றன. அதைப்பற்றியும் எந்த கவலையும் இல்லை. 'இஸ்லாம்' என்ற அழகிய வழி முறையை தவறாக விளங்கி இன்று துப்பாக்கியும் கையுமாக வெறி பிடித்து அலைகின்றனர் தாலிபான்கள்.

'அபு மன்சூர் அல் அமெரிக்கி' என்ற அமெரிக்கர். தாலிபான்களை அடக்க அமெரிக்கா அனுப்பிய போர் வீரர். இன்று தாலிபான்களோடும் அல்காய்தாவோடும் சேர்ந்து கொண்டு 'அமெரிக்காவை அழிப்பதே என் லட்சியம்' என்று அமெரிக்கர்களை போட்டுத் தள்ளிக் கொண்டு இருக்கிறார்.

இதே போல் நம் நாட்டிலும் சிங்களவர்களின் கொடுமையை தட்டிக் கேட்க இலங்கையில் உருவாக்கப்பட்ட விடுதலை அமைப்பு எங்கெங்கோ சுற்றி கடைசியில் தமிழர்களையே போட்டுத் தள்ளும் இயக்கமாக பரிணமித்து இன்று அழிவின் விளிம்பில் நிற்கும் நிலையை சோகத்தோடு பார்க்கிறோம். இங்கும் நோக்கம் சரியாக இருந்தாலும் தலைவர்களின் பிடிவாதப் போக்கினாலேயே பல தவறுகள் நிகழ காரணமாகி விட்டது.

'நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும் இறைவனுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள். வாதியோ பிரதிவாதியோ செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே இறைவனே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தைப் புரட்டினாலோ புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவனாக இருக்கிறான்.'
-குர்ஆன் 4:135

8 comments:

மு. மயூரன் said...

//நாட்டில் ஷரியத் சட்டத்தையும் அமுல்படுத்தினர். இது வரை ஓ.கே. இதன் பிறகுதான் பிடிக்கிறது சனியன். //

சோவியத் செல்வாக்கை வீழ்த்தியதை அடுத்து தலிபான்கள் பெண் கல்வியை தடை செய்திருந்தது, வானொலி தொலைக்காட்சிகளை தடை செய்திருந்தது போன்ற தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றனவே? உண்மையா?

Unknown said...

in the world all the muslims die after only peaceful coming.

suvanappiriyan said...

//in the world all the muslims die after only peaceful coming.//

முஸ்லிம்களின் மேல் ஏன் இந்த கொலை வெறி! இஸ்லாம் என்றாலே சாந்தி என்று பொருள் வரும். இன்று உலகெங்கும் சாந்தி கிடைக்காததால்தான் ஒவ்வொரு நாட்டிலும் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக நாடுகள் அனைத்தையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்ற மக்களை விட முஸ்லிம்களிடத்தில் தற்கொலை சதவீதம் மிக மிக குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் அந்த மக்களுக்கு இஸ்லாம் வழங்கிய அமைதியான வாழ்வு முறை.

ஒரு சில நாடுகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் மேலோங்கியிருக்கக் காரணம் வறுமை,சரியான தலைமைத்துவம் இல்லாதது, இஸ்லாத்தை உங்களைப்போல் தவறாக புரிந்து கொண்டமை.

suvanappiriyan said...

வாங்க மயூரன்!

பெண்களை கல்விச்சாலைக்கு செல்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.முகத்தை பெண்கள் முழுவதுமாக மறைக்க வேண்டும் என்றும் குர்ஆன் கட்டளை இடவில்லை. இஸ்லாத்தை தாலிபான்கள் தவறாக விளங்கிக் கொண்டதால் வந்த குளறுபடிகளே இவைகள்.

இது அல்லாமல் அமெரிக்கர்கள் தாலிபான்களை பற்றி பரப்பும் அவதூறுகளும் எண்ணிலடங்காதவை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

bala said...

//முகத்தை பெண்கள் முழுவதுமாக மறைக்க வேண்டும் என்றும் குர்ஆன் கட்டளை இடவில்லை. இஸ்லாத்தை தாலிபான்கள் தவறாக விளங்கிக் கொண்டதால் வந்த குளறுபடிகளே இவைகள்.//


சுவனப்பிரியன் அய்யா,

ஆண்கள் தங்கள் முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொள்ளவேண்டும் என்று கூட குர் ஆன் கட்டளயிடவில்லை.பிறகு ஏன் இஸ்லாமிய ஆண்கள்,இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு தங்கள் மூஞ்சிகளை பர்தாவால் மூடுவதில்லை என்பதை விளக்குவீர்களா?

பாலா

மு. மயூரன் said...

பதிலுக்கு நன்றி சுவனப்பிரியன்.
தலிபான்களைக் குருட்டுத்தனமாக ஆதரிக்கும் போக்கு எனக்கு எரிச்சலூட்டியவண்ணம் இருந்தது. நீங்கள் மிகச்சிறந்த முறையில் தலிபான்களை இஸ்லாம் நிலை நின்று எதிர்த்து விமர்சிக்க முயல்கிறீர்கள்.

//இது அல்லாமல் அமெரிக்கர்கள் தாலிபான்களை பற்றி பரப்பும் அவதூறுகளும் எண்ணிலடங்காதவை.//

இது வலுவான உண்மை.


சோவியத் செல்வாக்குடனான தராக்கியின் ஆட்சிகூட ஆப்கானிஸ்தான் மீதான மேற்குலகின் கழுகுக்கண்களுக்கு எதிரானதாகவும், ஆப்கானிஸ்தானில் நிலவிவந்த முல்லாக்கள் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்குவாத நடைமுறைகளுக்கு எதிராக பெண்கல்வி, அனைவருக்கும் எழுத்தறிவு, நவீனவாக்கம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வந்தது.

கூடவே இஸ்லாம் விரும்பும்படியான, எல்லாமும் எல்லாருக்கும் கிடைப்பதற்கான வழிமுறைகளை பொதுவுடமைச்சிந்தாத்தின் நிலை நின்று அமுல்ப்படுத்தி வந்தது.

தராக்கியின் ஆட்சி தொடர்பாக ஆப்கான் மக்கள் எடுத்திருக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு எது?

பிற்போக்கான, உலகோடு ஒட்டியோடுவதை மறுதலிக்கும் முல்லாக்களின் அதிகாரத்துக்கு ஆதரவளிப்பதா; உலகை தனது கழுகுப்பிடிக்குள் கொண்டுவந்து பேரரசமைக்க விரும்பும் அமெரிக்காவை ஆதரித்து ஆப்கானை அமெரிக்கா வரையறையின்றி சுரண்டுவதற்கு வழிசெய்து கொடுப்பதா; அன்றி இஸ்லாத்தோடு சில முரண்பாடுகள் கொண்டிருந்தாலும், இஸ்லாத்தின் உயரிய சிந்தனைகளான அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வளமும் வாய்ப்பும், மற்றவருக்கு அடிப்பணியாத்தன்மை, சுயமரியாதை போன்றவற்றை நடைமுறைப்படுத்த நினைக்கும் சோசலிச தராக்கி ஆட்சியினை ஆதரிப்பதா?

தலிபானை ஆதரிப்பவர்கள் ஆப்கான் மக்களின் நலனுக்கு எதிராக உலகைச்சுரண்டித்தின்ன நிற்கும் அமெரிக்காவிடம் கையேந்தி, முல்லாக்களின் பிற்போக்கு ஆட்சியினை நிறுவுவதைத்தானே எதிர்பார்த்தார்கள்?

அதுதானே கடைசியில் நடந்தது?

தராக்கிக்கு வலுவான ஆதரவினை முஸ்லிம் உலகம் வழங்கியிருந்தால் இன்று இறைமை கொண்ட சுயமரியாதை மிக்க ஆப்கானை நாம் கண்டிருக்கலாம் அல்லவா?

இன்று இந்த சின்னாபின்னத்துக்குள் வந்து நிற்பதற்குக்காரணம் பிற்போக்குத் தலிபான்களல்லவா?

இஸ்லாம் பற்றியும் அவர்தம் போராளிகள் பற்றியும் அமெரிக்க செய்யும் பரப்புரைகள் கீழ்த்தரமானவை, படு பொய்யானவை. அதே போன்ற கீழ்த்தரமான பரப்புரையையும் பொய்யையுமே சோசலிச ஆட்சிகள் மீதும், தராக்கிமீதும், சோவியத் ஒன்றியம் மீதும் அமெரிக்காவும் மேற்குலகும் வாரியிறைத்தன.

அந்த அமெரிக்கப்பொய்களை அடிப்படையாகக்கொண்டல்லவா தலிபான்களை ஆதரிப்பதற்கான நியாயம் கட்டபட்டிருக்கிறது?

தாம் நேசிக்கும் மக்களின் உண்மையான நட்புசக்திகள் யார் எதிரிகள் யார் என்பதை இஸ்லாம் சிந்தனையாளர்கள் எடைபோடுவதில் ஆப்கானிஸ்தான் விசயத்தில் தவறிழைத்தார்களா?

suvanappiriyan said...

பாலா அய்யா!

//ஆண்கள் தங்கள் முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொள்ளவேண்டும் என்று கூட குர் ஆன் கட்டளயிடவில்லை.பிறகு ஏன் இஸ்லாமிய ஆண்கள்,இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு தங்கள் மூஞ்சிகளை பர்தாவால் மூடுவதில்லை என்பதை விளக்குவீர்களா?//

என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகனுக்கு மாமனார்-அப்படின்னா எனக்கும் அவருக்கும் என்ன உறவு?

கொஞ்சம் சொல்லுங்கய்யா!

suvanappiriyan said...

மயூரன்!

//தாம் நேசிக்கும் மக்களின் உண்மையான நட்புசக்திகள் யார் எதிரிகள் யார் என்பதை இஸ்லாம் சிந்தனையாளர்கள் எடைபோடுவதில் ஆப்கானிஸ்தான் விசயத்தில் தவறிழைத்தார்களா?//

இருக்கலாம். தாலிபான்கள் விஷயத்தில் தாங்களும் தவறிழைத்து விட்டோமோ என்று சவூதி அரேபியாவும் யோசிக்க ஆரம்பித்து இருக்கிறது. முல்லாக்கள் அதாவது புரோகிதம் என்ற ஒரு அமைப்பே இஸ்லாத்தில் கிடையாது. இந்த முல்லாக்களால் இஸ்லாம் அடைந்த பின்னடைவும் கொஞ்சநஞ்சமல்ல.

மதத்தலைவருக்கு சேவகம் செய்பவர்களை சிஷ்யர்கள் என்று அழைத்துதான் உலகம் முழுவதும் பார்த்திருக்கிறோம். ஆனால் முகமது நபியோடு இஸ்லாம் வளர பாடுபட்ட அந்த அரபிகளை 'தோழர்கள்' என்றே கடைசிவரை முகமது நபி அழைத்தார். இதே வார்த்தைப் பிரயோகத்தைத்தான் தற்போது கம்யூனிஷ்டுகளும் பயன்படுத்துகிறார்கள். இதை இங்கு குறிப்பிட காரணம் புரோகிதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை விளக்குவதற்கே!

மற்றபடி ஆப்கானிஸ்தான் விஷயத்தில் நீங்கள் வைக்கும் வாதங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். புஷ்து மொழி பேசக்கூடிய தாவுத் என்ற ஆப்கான் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். தற்போது குடும்பம் சகிதம் சவூதியிலேயே 10 வருடமாக இருக்கிறார். 'உன் பிறந்த இடம்: உனது நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லையா?' என்று கேட்டேன். 'எப்படி வரும? உருக்குலைந்த நகரங்கள். இடிந்த வீடுகள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மக்கள். இத்தனையும் தன்னகத்தே கொண்ட நாட்டுக்கு எப்படி என் குடும்பத்தை கொண்டு செல்வேன்?' என்று விரக்தியோடு பேசினார்.