Followers

Friday, May 01, 2009

இறைவன் கேட்கிறான்!



குடம் குடமாக பாலை கொட்டுகிறாயே!

இதை நான் கேட்டேனா? பக்தா!

குடல் வற்றி சாலையோரம் ஒடுங்கி கிடக்கும்

வறியவன் தினமும் கேட்கிறானே!

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'

என்று சொன்னால் மட்டும் போதுமா?

இங்கு கொட்டும் பாலை இனி

ஏழைகளின் வீட்டில் கொட்டுவாயா!

12 comments:

ரங்குடு said...

பாலை இப்படி வீணாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், அவர்கள் ஊற்றும் பால் ஏழைகளிடமிருந்து பிடுங்கி ஊற்றுவதில்லையே?
இப்படி இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதால் இல்லாதவர்கள் நிறைய பேர் உருவாக வாய்ப்பு உண்டாகிறது.

பணம் இருப்பவர்கள் கடவுளுக்கு தங்கள் நன்றியை இப்படி வெளிக்காட்டுகிறார்கள். அது அவரவருடைய சொந்த விருப்பம். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இதற்காக கடவுளின் அருளால் தாங்கள் பெற்ற பொருளை ஏழைகளுக்கு செலவிட வேண்டுமென்பது நடக்க இயலாத காரியம்.

அது சரி, இறைவன் தனக்கு பாலாபிசேகம் செய்ய வேண்டாமென்று தங்களிடம் வந்து சொன்னானா?

Anonymous said...

நல்ல கருத்து.

இதேபோல் ஹஜ்ஜு போகிறேன் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாயை கரியாக்கி மெக்காவுக்கு போகிறீர்களே, அதற்கு பதில் அந்த காசை ஏழை எளியவர்களுக்கு கொடுத்தால் என்ன?

suvanappiriyan said...

திரு ரங்குடு!

//பாலை இப்படி வீணாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.//

ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

//ஆனாலும், அவர்கள் ஊற்றும் பால் ஏழைகளிடமிருந்து பிடுங்கி ஊற்றுவதில்லையே?
இப்படி இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதால் இல்லாதவர்கள் நிறைய பேர் உருவாக வாய்ப்பு உண்டாகிறது.//

நாள்தோறும் கோடிக் கணக்கில் விரயமாக்கப்படும் இந்த பால் ஏழைகளின் வயிற்றுக்குச் சென்றால் அந்த இறைவன் கோபமுறுவானா! என்ற ரீதியில் சிந்தியுங்களேன்.

//இதற்காக கடவுளின் அருளால் தாங்கள் பெற்ற பொருளை ஏழைகளுக்கு செலவிட வேண்டுமென்பது நடக்க இயலாத காரியம்.//

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

//அது சரி, இறைவன் தனக்கு பாலாபிசேகம் செய்ய வேண்டாமென்று தங்களிடம் வந்து சொன்னானா?//

'உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் வழயம் செய்து விடாதீர்'

-குர்ஆன் 17:26

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

அனானி!

//நல்ல கருத்து.

இதேபோல் ஹஜ்ஜு போகிறேன் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாயை கரியாக்கி மெக்காவுக்கு போகிறீர்களே, அதற்கு பதில் அந்த காசை ஏழை எளியவர்களுக்கு கொடுத்தால் என்ன?//

ஹஜ்ஜூக்கடமை என்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய ஒன்றல்ல. செல்வந்தர்கள், கடன் சுமை அற்றவர்கள், உடல் பலம் உடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும்.

'இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை' -குர்ஆன் 3:97

மேலும் இதிலிருந்து நாம் பெறும் படிப்பினையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன், ஆசியன், ஆஸ்திரேலியன் என்று அனைத்து மக்களோடும் தோளோடு தோள் உரசி நின்று இறைவணக்கத்தில் ஈடுபடும் போது அங்கு நிற வெறி, மொழி வெறி, பிராந்திய வெறி அனைத்தும் அற்றுப் போகிறதல்லவா? அங்கு மனிதன் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துக்கு வந்து விடுகிறான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற உயரிய எண்ணத்துக்கு மனிதனை மாற்றுகிறது இந்த பயணம். இது போன்ற படிப்பினையைப் பெற சில ஆயிரம் செலவு செய்வது அதுவும் செல்வந்தர்க்கு சிரமமில்லையே!

Anonymous said...

சில நாடுகளுக்கு மட்டும் பெட்ரோல் கொடுத்து பங்களாதேஷ் போன்ற நாடுகளை வறுமையில் வாட விட்ட இறைவன் ஓரவஞ்சகன்.

அரேபியா மற்றும் சுற்றுவட்டாரம் பற்றி மாத்திரம் கவலைப் பட்டு அங்கு மாத்திரம் தூதுவர்களை அனுப்பியவன். அமெரிக்கா ஆஸ்ரேலியா போன்ற தொலைதூர பகுதி மக்கள் பலர் அவனைப் பற்றி தெரியாமலே செத்துப் போனார்கள். அவர்களுக்காக தனது ஏஜண்டை அனுப்பாதவன்.


அவனை 5 முறை தொழுவதை விட அந்த நேரத்தை ஏழைகளுக்கு உதவுவதில் செலவிடுபவன் மனிதன்.

பீர் | Peer said...

:)

suvanappiriyan said...

அனானி!

//அரேபியா மற்றும் சுற்றுவட்டாரம் பற்றி மாத்திரம் கவலைப் பட்டு அங்கு மாத்திரம் தூதுவர்களை அனுப்பியவன். அமெரிக்கா ஆஸ்ரேலியா போன்ற தொலைதூர பகுதி மக்கள் பலர் அவனைப் பற்றி தெரியாமலே செத்துப் போனார்கள். அவர்களுக்காக தனது ஏஜண்டை அனுப்பாதவன். //


'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14:4

இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் நம் தமிழ் மொழி உட்பட தூதர்கள் வந்திருப்பதை அறிய முடிகிறது. திருவள்ளுவர் கூட ஒரு தூதராக இருந்திருக்கலாம்.

'மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்க்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர்(முகமது நபி) கொண்டு செல்வதற்க்காக உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.'
-குர்ஆன் 14:1

எனவே இந்த குர்ஆனும் முகமது நபியும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவர்கள் அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.

Anonymous said...

//ஹஜ்ஜூக்கடமை என்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய ஒன்றல்ல. செல்வந்தர்கள், கடன் சுமை அற்றவர்கள், உடல் பலம் உடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும்.//

சிவலிங்கத்துக்கு பால் ஊற்றுவதும் இந்துக்கள் அனைவருக்கும் உரிய ஒன்றல்ல.செல்வந்தர்களுக்கு மட்டும்தான் இது கடமையாகும்.

//மேலும் இதிலிருந்து நாம் பெறும் படிப்பினையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன், ஆசியன், ஆஸ்திரேலியன் என்று அனைத்து மக்களோடும் தோளோடு தோள் உரசி நின்று இறைவணக்கத்தில் ஈடுபடும் போது அங்கு நிற வெறி, மொழி வெறி, பிராந்திய வெறி அனைத்தும் அற்றுப் போகிறதல்லவா? அங்கு மனிதன் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துக்கு வந்து விடுகிறான்.//

இறைவனுக்கு பால் ஊற்றும்போதும் அனைத்து மக்களும் தோளோடு தோள் உரசிநின்று இறைவணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.அங்கேயும் நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி எதுவும் வருவதில்லை.

முடிவாக....உங்கள் மதத்தில் காசை விரயம் செய்வதற்கு ஆயிரம் நொண்டிச்சாக்கு வைத்திருப்பீர்கள். எல்லா மதத்திலும் அப்படித்தான் வைத்திருப்பார்கள்.தன் மதம் செய்ய சொல்லும் தண்ட செலவு தேனாகவும் அடுத்த மதம் சொல்லும் தண்டசெலவு பாகற்காயாகவும் தெரிவது மனித மனத்தின் இயல்புதான்.இதில் அதிசயம் எதுவுமில்லையே?

suvanappiriyan said...

//தன் மதம் செய்ய சொல்லும் தண்ட செலவு தேனாகவும் அடுத்த மதம் சொல்லும் தண்டசெலவு பாகற்காயாகவும் தெரிவது மனித மனத்தின் இயல்புதான்.இதில் அதிசயம் எதுவுமில்லையே?//

பாலாபிசேகத்தைப் பார்த்து காப்பி அடித்து உண்டானதுதான் முஸ்லிம்களிடத்தில் உள்ள சந்தனக் கூடு வைபவம். தர்ஹாக்களில் சந்தனம் பூசி பணத்தை விரயமாக்குவதையும் பார்த்திருப்போம். இந்துக்களிலிருந்து முஸ்லிமானவர்கள்தானே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும். அங்கிருந்து வரும் போது இந்த பழக்கத்தையும் கொண்டு வந்து விட்டார்கள். இவை எல்லாம் இஸ்லாத்தில் இல்லாத நூதன பழக்கங்கள் என்று ஊர் ஊராக சொல்லி வருகிறோம். தற்போது நிறைய மாற்றங்களும் ஏற்ப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம்களிடம் உள்ள குறைகளை நான் மறைப்பதாக எண்ண வேண்டாம்.

Anonymous said...

Indian Government is subsiding the cost for Haj
Pilgrimage! What do think of this?

Anonymous said...

//The Bench is also hearing a petition filed by Prafull Goradia, a former BJP Rajya Sabha member, who alleged that the estimated Rs. 280 crore annually incurred by the government for funding the Haj was not only unconstitutional but also a drain on the taxpayers’ money.

Financial assistance to pilgrims under the Haj Act was violative of Articles 14 (equality before law), 15 (prohibition of discrimination on grounds of religion, race and caste) and 27 (freedom as to payment of taxes for promotion of any particular religion) of the Constitution. The Centre and the State Governments were allotting a substantial amount to the Haj Fund created specifically to defray the expenses incurred by Muslims to undertake a pilgrimage to their hold lands abroad; whereas there was no such provision for Hindus, Christians, Buddhists and Sikhs visiting holy places of their religions outside India.//

suvanappiriyan said...

அனானி!

//Indian Government is subsiding the cost for Haj
Pilgrimage! What do think of this?//

ஹஜ் கடமை என்பது வசதி உள்ளவர்களுக்கு மட்டும் கடமையான ஒன்று. அரசு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாக கொடுப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பயனை அடையப் போவதுமில்லை. கஞ்சி சாப்பிடுவது, தொப்பி போட்டுக் கொள்வது, ஹஜ்ஜூக்கு மான்யம் வழங்குவது போன்ற மத்தாப்பு திட்டங்களை எல்லாம் முஸ்லிம்கள் கேட்கவில்லை. கல்வி வேலை வாய்ப்புகளில் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்து பின் தங்கியுள்ள முஸ்லிம்களை முன்னுக்கு கொண்டு வருவதைத்தான் முஸ்லிம்களும் விரும்புகிறார்கள்.