கொலையாளியைக் கொல்லலாமா!
'நம்பிக்கைக் கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன், அடிமைக்காக கொலை செய்த அடிமை, பெண்ணுக்காக கொலை செய்த பெண் என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது கொள்கைச் சகோதரன் மூலம் ஏதெனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது'
'அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்வீர்கள்.'
குர்ஆன்: 2:178,179
ஒருவன் மற்றொருவனைக் கொண்டு விட்டால் அவனை மன்னித்து விடாமல் பழிக்குப் பழி வாங்குவதால் போன உயிர் திரும்ப வருமா? கற்பழிப்புக்காக தண்டிக்கப்படுவதால் போன கற்பு திரும்ப வருமா? என்பது பலரது கேள்வி.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல. குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை மூலம் சமூகம் ஒரு பாதுகாப்பைப் பெறகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கத்தை நாம் சற்று பார்ப்போம்.
1.குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2.ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3.குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.
இது போன்ற பயன்களை நோக்காது குற்றவாளியின் நலனில் அக்கறைக் கொண்டு சட்டம் இயற்றியதால்தான் குற்றவாளிகள் நமது நாட்டில் பெருகியதற்கு காரணம். சிறைச்சாலையும் சகல வசதிகளோடு உள்ளதால் 'மாமியார் வீட்டுக்கு போய் வருகிறேன்' என்று தெனாவெட்டாக குற்றவாளி சொல்லிக் கொண்டு செல்வதையும் நாம் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவனின் வரிப்பணத்திலிருந்தே அந்த குற்றவாளிக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கும் கொடுமையை என்னவென்பது?
'53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது' என்ற தமாஷ்களெல்லாம் அரங்கேறாமல் இருக்க நாட்டின் சட்டம் இன்னும் கடுமையாக்கப் பட வேண்டும். புதிய அரசு எப்படி செயல்படுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
1 comment:
குற்றவாளிகளை மன்னிப்பதால் அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு ஏற்படுகிறதல்லவா?
Post a Comment