Followers

Tuesday, February 15, 2011

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?


பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.


-நன்றி தினமலர்

:-))))))))))))))

தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பரவலாக படிக்கப்படும் ஒரு பத்திரிக்கையின் செய்திதான் இது. இருந்தாலும் தமிழன் இவ்வளவு சோதனைகளையும் தாங்கிக் கொண்டு முன்னேறுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றுதானே!


எந்த ஒரு கொள்கையும் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். புலால் உண்ணாமை என்பது ஏதோ மிகப் பெரிய அறம் போன்று செய்தி பரப்பப்படுகிறது. துருவப்பிரதேசங்களில் வாழக் கூடியவர்கள் கய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது.

அடுத்து மனிதர்கள் உணவாக சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,ஒட்டகம்,மீன் போன்ற உயிரினங்கள் உலக அளவில் எண்ணிக்கையில் குறையக் காணோம். அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இவை எல்லாம் புலால் உண்ணுபவர்களால் உபயோகப்படுத்தாமல் விட்டால் இவைகளின் எண்ணிக்கை அதிகரித்து சுற்று சூழலுக்கு பிரச்னையாகி விடும். முடிவில் ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் எண்ணிக்கை அதிகரித்து அவைகளை சுட்டுக் கொல்ல் அரசு ஆணையிட்டது போல்தான் எங்கும் நடக்கும். பாதிபேர் புலால் உண்ணுவதால்தான் காய்கற்களின் விலை ஒரு மட்டுக்குள் இருக்கிறது.

அனைவரும் சைவத்துக்கு மாறி விட்டால் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும்.

விலங்குகளின் உடம்பிலிருந்து பெறப்படும் பால் சைவம்தான் என்பதற்க்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆராய்ச்சியையும் தினமலர் வெளியிடவில்லை.

எனவே காய்கறிகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தாராளமாக சாப்பிட்டுக் கொள்ளட்டும். புலால் உணவை விரும்புபவர்கள் மாமிசம் சாப்பிட்டுக் கொள்ளட்டும். இதில் வந்து தினமலர் தனது மூக்கை நுழைக்க வேண்டாம்.


அற்பமான இந்த விலங்கிடும் காட்டும் பரிவில் நூற்றில் ஒரு பங்கு சக மனிதர்களிடம் காட்டலாமே!

44 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.சுவனப்பிரியன்,

///ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.///---இதன் அடிப்படையில் கோழி இடும் முட்டை சைவமா, அசைவமா? என்ன சொல்லும் தினமலர்..?

இங்கே என் சைவ நண்பர் ஒருவர் கூறினார்... "நல்லவேளை சவூதியில் அசைவப்பிரியர்களுக்கு என்று full fat milk-ம் சைவப்பிரியர்களுக்கு skimmed milk-ம் கிடைக்கிறது. இதுபோல நம் நாட்டிலும் பிரபலப்படுத்த வேண்டும்" என்று பிரட்டுக்கு cheese(?) தொட்டு சாப்பிட்டுக்கொண்டே சொல்லிக்கொண்டு இருந்தார்..! அவரிடம் நான் கேட்டேன்... "அப்போ தாய்ப்பாலை எப்படி skim பண்ணுவது? அது உங்கள் வாதப்படி 'full fat milk is non-veg' --அது அசைவம் என்றால் பிறந்தவுடனேயே நீங்கள் அசைவப்பிரியன் தானோ?" என்றேன்... ஈயாடவில்லை..!

suvanappiriyan said...

வஅலைக்கும் ஸலாம்!
சகோ ஆஷிக்!

//"அப்போ தாய்ப்பாலை எப்படி skim பண்ணுவது? அது உங்கள் வாதப்படி 'full fat milk is non-veg' --அது அசைவம் என்றால் பிறந்தவுடனேயே நீங்கள் அசைவப்பிரியன் தானோ?" என்றேன்... ஈயாடவில்லை..!//

அடடே.... இது கூட நல்ல பாய்ண்டா இருக்கே! தகவலுக்கு நன்றி!

எனக்கு வரும் ஆச்சரியம் எல்லாம் சாதிகளை பிரித்து மனிதர்களை வகைபடுத்தி அதில் கோர்ட் வரை சென்று வெற்றியும் பெற்றவர்கள் ஒரு மிருகத்துக்கு இத்தனை புனிதத்துவத்தை எவ்வாறு கொடுக்க முடிகிறது? என்பதே!

suvanappiriyan said...

திரு நோ!

//நண்பர் திரு சுவன்னப்பிரியன் போன்ற பகுத்தறிவு உள்ள வகாபி மத விரும்பிகள் சந்தோஷம் படும்படியான விடயங்கள் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்து வருகின்றது.//

நல்ல விஷயங்கள் வந்து மாற்றங்கள் வந்தால் நல்லதுதானே மிஸ்டர் நோ!

//பிரான்சில் படுதா போட தடை வந்த பொழுது அதை எதிர்த்து இங்கு சென்னையில் மீட்டிங் போட்ட வகாபிகள்,//

நான் சொல்வதை விட தினமலர் சொன்னால் உங்களுக்கு உடனே விளங்கும். இதற்குதான் இஸ்லாம் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்புக்காக மேலதிகமாக சில உடைகளை கொடுக்கிறது. விரும்பி முஸ்லிம் பெண்கள் அணியும் போது அதை தடுப்பது நியாயமா? உயிர் போன அந்த பள்ளி சிறுமியின் நிலைக்கு உடை குறைப்புதானே காரணம்.

“வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை”.- தின மலர்

இப்படி நிறைய பேசலாம். நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

suvanappiriyan said...

திரு நோ!

//சௌதியில் உட்கார்ந்திருக்கும் இந்தியாவை சேர்ந்த பல பல இஸ்லாமிய நண்பர்கள், அங்கே இருக்கும், பிழைக்க வந்த சக நாட்டு இந்து மற்றும் கிருத்துவர்களின் மத சுதந்திரத்திற்க்காக ஒரு முறையானாலும் குரல் கொடுத்துர்ப்பார்களா???//

முதலில் நம்ம நாட்டில் இந்து மக்கள் அனைவரையும் ஆலய பிரவேசம் செய்ய வைத்து விட்டு என்னிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.

முதலில் சவுதி ஒரு இஸ்லாமிய நாடு. இஸ்லாத்துக்கு எதிராகவோ வேறு மதங்களை பரப்புவதற்கோ இங்கு அனுமதியில்லை. இதை ஒத்துக் கொண்டுதான் நாம் இங்கு சவுதிக்கு பணம் சம்பாரிக்க வருகிறோம். இந்து நண்பர்கள் மனைவி மக்களோடு சந்தோஷமாக 10 வருடம் 20 வருடங்கள் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் இம்சைபடுத்தப் பட்டிருந்தால் என்றோ நம் நாடு திரும்பியிருப்பார்கள்.

சவுதியில் மக்கா மதினா தவிர ஏனைய பள்ளிகளில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் கொள்கையை கடைபிடிக்கும் இந்து அன்பர்களை வழிபட அழைத்துச் செல்கிறேன். அதிலும் முதல் வரிசையிலே அவர்களை நிறுத்துகிறேன். அதே அன்பர்களை நமது குடிமகனை நமது நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களின் உள்ளே உங்களால் அனுமதிக்க் முடியுமா? அவர் ஒரு தாழ்த்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் கூட. தீண்டாமை என்ற வர்ணாசிரமக் கொடுமையிலிருந்து விடுபட்டு சர்வ சுதந்திரமாக சவுதியில் வலம் வரும் என் இந்து சகோதரர்களின் மீது உங்களுக்கு அப்படி என்ன சார் வெறுப்பு?

வீட்டுக்கு உள்ளே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். வெளியில் வந்தால் அது அமெரிக்கராக இருந்தாலும், இந்தியராக இருந்தாலும் கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு அவர்கள் செல்லும் போது நமக்கே ஒரு மரியாதை வரும். இங்கு பெண்மை மதிக்கப்படுகிறது. போற்றப்படுகிறது.

//இஸ்லாமிய நாடுகளில் கிருத்துவர்களை வேட்டையாடும்பொழுது அது தவறு நாங்கள் கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னார்களா?//

பல முஸ்லிம் நாடுகளும் கண்டனம் தெரிவித்ததை நீங்கள் படிக்கவில்லை. சிறுபான்மை மதத்தவரை பாதுகாக்க சட்டமே உள்ளது இஸ்லாத்தில். முகமது நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக வீற்றிருக்கும் போது ஒரு யூதரிடம் தனது கவசத்தை அடமானம் வைத்திருந்தார் என்றால் அங்கு சிறுபான்மையினர் எந்த அளவு சுதந்திரமாக இருந்தனர் என்பது தெரிய வருகிறது.

'மலேசிய இந்துக்களுக்கு இங்கு எந்த குறைவும் இல்லை. நலமுடனே இருக்கிறார்கள்' என்று அந்நாட்டு அமைச்சர் டத்தோ சாமிவேலு கொடுத்த அறிக்கையை நீங்கள் பார்க்கவில்லையா? ஒரு சிலர் நம் நாட்டு இந்துத்வா வாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு மலேசியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்ச்சித்தனர். அது தவறு என்று இப்பொழுது பிரச்னை பண்ணியவர்களே உணர்ந்து கொண்டனர்.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//என்னுடைய நெருங்கிய தோழர்கள் விருத்தத் சேதனம் செய்யாவிட்டால் உடல் நலம் கெட்டு விடும் என்ற கருத்து உடையவர்கள். இந்த பேச்சை எடுத்தாலே பயந்து நடுங்குவார்கள், அழுக்கு இருக்கும்பா, நல்லா கழுவுங்கப்பா என்று புலம்பித் தள்ளி விடுவார்கள்.//

நல்ல விஷயம் யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே சார். எனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு(பகுத்தறிவாதி) தனது மகன் பாவலனுக்கு சுன்னத் செய்திருக்கிறார். விருத்த சேதனத்தின் பலனை உணர்ந்தவர்கள் தானாக முன் வருவார்கள். இன்னும் மருத்துவரை நீங்கள் அணுகவில்லை என்று நினைக்கிறேன்.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமையான எதிவினை பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

suvanappiriyan said...

வஅலைக்கும் ஸலாம்!

//அருமையான எதிவினை பதிவு வாழ்த்துக்கள் நண்பரே//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஹைதர் அலி!

suvanappiriyan said...

திரு நோ!

//சௌதி மசூதிகளில், கிருத்துவத்தை பற்றியும், யூதம் பற்றியும் மிக கேவலமான சொற்பொழிவு ஆற்றுவார்கள். நம்ம ஊரு சலாபிகளை கேட்டால், நாங்கள் இயேசுவை மதிக்கிறோம் என்பார்கள். ஆனால் சத்தம் போட்டு கும்பல் கூட்டி சௌதியில் திட்டுவார்கள். இந்து மதத்தை பற்றி ஒரு நாள் மிக கேவலமாக பேசியதை அங்கே இருந்த நண்பர் ஒருவர் சொன்னார். மிக தரமிழந்த கிண்டல் மற்றும் கேலி.//

இங்கு நம் நாட்டில் பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை காய்ச்சி எடுப்பது போல் உலகில் வேறு யாரும் அதிகமாக செய்து விடவில்லை. ஏன் தன் மதத்தையே இவர்கள் இந்த அளவு விமரிசிக்க வேண்டும்? ஏனெனில் அந்த அளவு குறை பாடு உடையதாக இந்து மதம் இருக்கிறது. நான் பகுத்தறிவாதி என்று ஒருவன் இந்து மதத்திலிருந்து ஒதுங்கினாலும் 'பகுத்தறிவாதி என்று நீ சொன்னாலும் நீயும் இந்துதான்' என்று ஆக்டோபஸைப்போல் அவனையும் இறுக்கிக் கொள்கிறது இந்து மதம். சங்கடமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. என்னுடைய நாட்டில் உருவான ஒரு மதத்தை விடுத்து அரபு நாட்டில் ஆரம்பித்த முகமது நபியின் போதனையை ஏற்றுக் கொள்ள் என் முன்னோர்களுக்கு என்ன அவசியம் வந்தது?

மேலும் இஸ்லாம் சவுதிக்கு வருவதற்க்கு முன்பு இங்கும் நம் நாட்டைப் போன்ற சிலை வணக்கம்தான் கொடி கட்டி பறந்தது. அதை அவர்கள் விமரிசித்தால் அது நம் நாட்டைக் குறிப்பதாக யாரும் தவறாக விளங்கியிருக்கலாம்.

தருமி!

மற்றவர்களின் பின்னூட்டங்களை அனுமதித்து என் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதின் மூலம் உங்களிடம் பதில் இல்லை என்று தெளிவாகிறது. நீங்கள் வெளியிடா விட்டாலும் அவை அனைத்திற்க்கும் பதில் என் தளத்தில் வெளியாகும்.

வாழ்க பகுத்தறிவு! :-(

suvanappiriyan said...

வாங்க அருள்!

உங்களுக்கு ரசிகர் மன்றங்களெல்லாம் கூட இருக்கிறதாமே! வாழ்த்துக்கள்.

அடிக்கடி வந்து கருத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள். உங்கள் பதிவுக்கும் நான் வருகிறேன்.

குடுகுடுப்பை said...

சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.//

உளறல். உணவுப்பழக்கவழக்கம் மனிதன் உள்ளிட்ட விலங்கின் அடிப்படை புத்தி, அவனவனுக்கு பிடித்ததை சாப்பிடவேண்டியதுதான்.மனிதனை அடித்துக்கொள்ளாமல் இருந்தால் சரி.இன்றைக்கு இறைச்சிக்கு வளர்க்கப்படும் கோழி, மாடுகள் வளர்ப்பதை பார்த்தால் சைவம் ஆகிவிடுவோம்,நேரடி அனுபவம்.:(

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

வெளியூர்களில் அதுவும் நம் ஊர் ஹோட்டல்களில் மறந்தும் அசைவம் சாப்பிட மாட்டேன். எவ்வாறு அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் ஹோட்டலுக்கு அனுப்புகிறார்கள் என்பதை சஹாரா சேனல் ஒரு முறை நேரிடையாக ஒளிபரப்பியது.

ஆனால் முஸ்லிம் கிராமங்களில் இதை கண்காணிப்பதற்க்கென்றே ஒருவர் இருப்பார். ஆட்டுக் கறியை மாட்டுக் கறியை கலப்பது. இறந்த ஆடுகளை இதில் கலந்து விடுவது. அறுக்கப்படுவது பெண் ஆடா. ஆண் ஆடா! அறுக்கும் இடங்களில் சுகாதாரம் எப்படி? இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படுகிறதா? என்பதை தினமும் கண்காணிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் இதை நானே நேரிடையாக சென்று பார்த்திருக்கிறேன்.

suvanappiriyan said...

//கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணத்தை, சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணத்தை தர இயலுமா என்று கேட்டு இருக்கிறோமே!//

//அத்தகைய கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக இருப்பதன் மூலம் சமத்துவத்தை , சமரசத்தை,மக்கள் இணைப்பை உறுதி செய்கிறோம்.//

ரொம்பவும் குழப்புறீங்க திருச்சிக்காரன். குழம்பியும் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா?

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தினமலரின் நகைச்சுவை படு டாப்பு.

---------
ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத்துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம்.
-----------

ஒ அப்படியா!!!!!!!!!. அப்படின்னா, தானாக அமைதியான முறையில் இறந்து போன ஆட்டையோ மாட்டையோ சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அது சைவம் ஆகிடுமா? யாரும் அவைகளை துடிக்க துடிக்க வெட்டவில்லையல்லவா, அதனால் அந்த கறி சைவம்தானே?

அப்புறம் முட்டை... அதை என்ன கோழிக்குள்ளே இருந்து பிடுங்கி அதனை காயப்படித்தியா உண்ணுறோம்? கோழி என்னும் ஜீவனை இம்சை செய்தா முட்டையை பெறுகின்றோம்? So, கோழியே துன்புறுத்தாம கிடைப்பதால் அது சைவமாகி விடுமா?

தினமலர் லாஜிக் சூப்பர்....இது தான் சைவம்/அசைவத்தோட அளவுகோல்னா உங்களை நீங்களே ஏமாத்திக்குரீங்கன்னு அர்த்தம்.

பசுவின் பாலில் விலங்கு கொழுப்பான வைட்டமின் D3 (cholecalciferol) உள்ளது. இதனை உட்கொள்வது எப்படி சைவமாகும்?

வேகன்ஸ் எனப்படும் சைவர்கள் இதனை உணர்ந்தே உள்ளனர். அவர்கள் பால், முட்டை முதற்கொண்டு விலங்கு சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை நெருங்குவதே இல்லை.

ஆனால் அவர்களும் குழப்பத்தில் தான் இருக்கின்றனர். ஏன் தெரியுமா? சகோதரர் முஹம்மது ஆஷிக் கூறிய கருத்து தான் காரணம்................ தாய்ப்பால் எந்த ரகம்? என்ற குழப்பம் தான்.

தினமலர் அடிச்ச காமெடியை வெளிச்சம் போட்டு காட்டி மனதை இலேசாக்கியதற்கு நன்றி...

நம் அனைவரையும் இறைவன் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக....ஆமீன்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ..ஆஷிக்!

பல புதிய தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

//அடுத்து மனிதர்கள் உணவாக சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,ஒட்டகம்,மீன் போன்ற உயிரினங்கள் உலக அளவில் எண்ணிக்கையில் குறையக் காணோம்.//

சீனர்கள், ஐரோப்பியர்கள் மிகுதியாக உணவாக உட்கொள்ளும் பன்றியை விட்டுவிட்டீர்களே. கொள்கைகாரணமோ.

ஹலல் என்னும் ஒருவித உணவுக் கொள்ளையை உடைய நீங்கள் அதற்கான காரணம் போல் ஆயிரம் சொல்லுவீர்கள், அதே போன்று சைவ உணவிற்குக்காரணம் சொல்ல சைவ பிரியர்களுக்கும் உரிமை உள்ளது, இதில் பழிக்க என்ன இருக்கிறது ?

பன்றி சாப்பிடுபவர்கள் பக்கத்தில் உட்கார்த்து சாப்பிட்டாலே ஆகாது என்னும் நிலையைத்தான் முஸ்லிம் கொண்டுள்ளனர், இதை வெளிப்படையாக சொன்ன லிக்வான்யூ மலேசியர்களால் விமர்சிக்கப்பட்டார்.

எவருக்குமே தனது கொள்கை உயர்ந்தது என்று சொல்லிக்காட்ட உரிமை உண்டு, அதே சமயத்தில் அடுத்த கொள்கையாளர்களை விமர்சித்தால் அதற்கான மறுவிமர்சனத்தையும் ஏற்கவேண்டும்.

கோவி.கண்ணன் said...

//"அப்போ தாய்ப்பாலை எப்படி skim பண்ணுவது? அது உங்கள் வாதப்படி 'full fat milk is non-veg' --அது அசைவம் என்றால் பிறந்தவுடனேயே நீங்கள் அசைவப்பிரியன் தானோ?" என்றேன்... ஈயாடவில்லை..!
7:53 AM//

முனியாண்டி விலாசில் போடப்படும் மட்டன் பிரியாணிக்கு வெட்டப்படும் இறைச்சி ஹலல் கிடையாது, முனியாண்டி விலாஸ் இறைச்சி ஹலல் இல்லையே எப்படி முஸ்லிம்கள் உண்ணுகிறீர்கள் என்று கேட்டால் உங்கள் முகத்தில் என்ன ஆடும் என்று சொல்லவும் ?

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//சீனர்கள், ஐரோப்பியர்கள் மிகுதியாக உணவாக உட்கொள்ளும் பன்றியை விட்டுவிட்டீர்களே. கொள்கைகாரணமோ.//

மறந்து விட்டேன். சீனர்களாலும் ஐரேர்பியர்களாலும் அதிகம் உண்ண்படும் பன்றியும் எண்ணிக்கையில் குறைவதில்லை.

//ஹலல் என்னும் ஒருவித உணவுக் கொள்ளையை உடைய நீங்கள் அதற்கான காரணம் போல் ஆயிரம் சொல்லுவீர்கள், அதே போன்று சைவ உணவிற்குக்காரணம் சொல்ல சைவ பிரியர்களுக்கும் உரிமை உள்ளது, இதில் பழிக்க என்ன இருக்கிறது ?//

நான் பழிக்கவில்லையே! தினமலர்தான் கிண்டல் செய்திருந்தது. அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். உணவு உட்கொல்லுதல் அவரவர் விருப்பம் என்பதுதான் என் கொள்ளையும். வெளியூர்களுக்கோ ஹோட்டல்களுக்கோ சென்றால் நான் சுத்த சைவம்.

//பன்றி சாப்பிடுபவர்கள் பக்கத்தில் உட்கார்த்து சாப்பிட்டாலே ஆகாது என்னும் நிலையைத்தான் முஸ்லிம் கொண்டுள்ளனர், இதை வெளிப்படையாக சொன்ன லிக்வான்யூ மலேசியர்களால் விமர்சிக்கப்பட்டார்.//

தவறான கருத்து. பன்றி கறியை சாப்பிடுவதைத்தான் இஸ்லாம் தடுத்துள்ளது. மற்றவர் சாப்பிடும்போது சேர்ந்து அருகில் அமருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. இஸ்லாத்தில் வர்ண பேதம் கிடையாது.

//எவருக்குமே தனது கொள்கை உயர்ந்தது என்று சொல்லிக்காட்ட உரிமை உண்டு, அதே சமயத்தில் அடுத்த கொள்கையாளர்களை விமர்சித்தால் அதற்கான மறுவிமர்சனத்தையும் ஏற்கவேண்டும்.//

கண்டிப்பாக! அதே போல் மிருகங்களிடம் இத்தனை பரிவு காட்டும் தின மலர் அதில் 100ல் ஒரு பங்கை சக மனிதர்களிடம் காட்டலாமே என்பதுதான் நமது ஆதங்கம்.

சீனு said...

//துருவப்பிரதேசங்களில் வாழக் கூடியவர்கள் கய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது.//

அப்ப இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்களால் காய்கறிகளை மட்டுமே உண்டு உயிர் வாழ முடியும் அல்லவா?

http://jeeno.blogspot.com/2004/07/blog-post.html

//அனைவரும் சைவத்துக்கு மாறி விட்டால் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும்.//

ஸ்...யப்பா...அனைவரும் அசைவத்து மாறினால் தான் உணவு தட்டுப்பாடு ஏற்படும்.

ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூருவது "பணக்கார நாடுகளின் அசைவ (இரைச்சி) உணவுதான் உலகின் பசிக்கும் பசி சம்பந்தமான இறப்புகளுக்கு காரணம்" என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? இதை பாருங்கள். 7.5 கிலோ தாணியங்கள் 20 பேருடைய பசியை போக்கும். ஆனால் அசைவ உலகில் இந்த 7.5 கிலோ தாணியத்தை ஒரு மாடு சாப்பிடும். அந்த ஒரு மாட்டை 2 பேர் மட்டுமே உட்கொள்கின்றனர். ஆக மேலும் 14 பேருக்கு தேவையான உணவுக்கு பல கிலோ அதிக தாணியங்கள் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஒரு கிலோ அளவுள்ள மாட்டிரைச்சியை தயாரிக்க 16 கிலோ தாணியங்கள் தேவைப்படுகின்றன (John Robbins' book "Diet for a New America"). இந்த 16 கிலோ தாணியங்கள் மற்றவரின் பசியை போக்கலாம் அல்லவா?



மற்றும் அமெரிக்கர்கள் தங்கள் அசைவ உணவில் 10 சதவிகிதம் குறைத்தாலேயே 10 கோடி பேருக்கு அதிகமாக உணவளிக்கலாம். ஒரு அமெரிக்கரின் 72 வயது சராசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் உணவு:


1. 11 - கால்நடைகள்

2. 3 - ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள்

3. 23 - பன்றிகள்

4. 45 - வான் கோழிகள்

5. 1100 - கோழிகள்

6. 391 கிலோ - மீன்கள்


மேலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் சைவ உணவை உட்கொண்டால், உணவு உற்பத்தி 1000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் படி எட்டும். 1000 கோடி மக்கள் என்பது 2050-ல் இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6,60,000 விலங்குகள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுதப்படும் தண்ணீரில் பாதியளவு அசைவ உணவு தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
//விலங்குகளின் உடம்பிலிருந்து பெறப்படும் பால் சைவம்தான் என்பதற்க்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆராய்ச்சியையும் தினமலர் வெளியிடவில்லை.//

முதலில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம்.

//நான் சொல்வதை விட தினமலர் சொன்னால் உங்களுக்கு உடனே விளங்கும். இதற்குதான் இஸ்லாம் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்புக்காக மேலதிகமாக சில உடைகளை கொடுக்கிறது. விரும்பி முஸ்லிம் பெண்கள் அணியும் போது அதை தடுப்பது நியாயமா? உயிர் போன அந்த பள்ளி சிறுமியின் நிலைக்கு உடை குறைப்புதானே காரணம்.//

பாதுகாப்பு யாரிடம் இருந்து. கடவுள் படைத்த(!) அதே மனிதனிடமிருந்து தானே!!!

suvanappiriyan said...

//முனியாண்டி விலாசில் போடப்படும் மட்டன் பிரியாணிக்கு வெட்டப்படும் இறைச்சி ஹலல் கிடையாது, முனியாண்டி விலாஸ் இறைச்சி ஹலல் இல்லையே எப்படி முஸ்லிம்கள் உண்ணுகிறீர்கள் என்று கேட்டால் உங்கள் முகத்தில் என்ன ஆடும் என்று சொல்லவும் ?//

என் முகத்தில் எதுவும் ஆடாது. ஏனென்றால் முனியாண்டி விலாசுக்கு நான் சாப்பிட சென்றால் ஆனியன் தோசை, ரவாதோசை, பூரி, இட்லி, சப்பாத்தி இத்தோடு நிறுத்திக் கொள்வேன். பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மனது சொன்னால் புகாரி ஹோட்டலுக்குள் புகுந்து விடுவேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சீனு!

நீங்கள் கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கு

இங்கு பதில் இருக்கிறது. இதில் சொல்லாத மற்ற விபரங்களையும் பின்னர் விளக்குகிறேன்.

சீனு said...

அங்க என்ன இருக்கு?

//1. கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துவது உயிர் வதையா? இல்லையா?//

உயிர் வதை தான். ஆனால் அந்த கால்நடைகளிடம் சென்று "நீ இப்படி 'கஷ்டப்பட்டு' விவசாயப் பனிகளை செய்ய இஷ்டமா? இல்லை, உனக்கு வலிக்காமல் உன்னை கொன்று விடவா?" என்று கேட்டு சொல்லுங்களேன். விவசாயப்பணியில் ஈடுபடுத்தப்படும் விலங்குக்காவது அதற்கு உணவும் ஓய்வும் கொடுக்கபடுகிறது, இல்லையா?

//2. கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துவது உயிர் வதையா? இல்லையா?//

பொதுவாக கன்றுகள் தாய்ப்பாலை பருக்கச் செய்து மீதம் இருக்கும் பாலைத்தான் மனிதன் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்பது என் கருத்து. பாலுக்காகவே பசுக்கள் வளர்ப்பதும் ஒரு வகையில் உயிர் வதை தான். ஆனால், அதை விட வதை, அதை கொன்று திண்பது. கோழி, மீன் போன்றவற்றை திண்பதிலாவது ஒரு லாஜிக் இருக்கு. காரணம், இவையும் சிறு புழுக்கள் போன்ற உயிர்களை கொன்று தின்கிறது (பசிக்காக). ஆனால், ஆடும் மாடும் சுத்த சைவம்.

//3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியா னால் தாவரங்களையும், காய் கனிகளை யும் உண்பது உயிர் வதை இல்லையா?
4. மனிதன் அருந்துகின்ற தண்ணீ ரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர் வதையா? இல்லையா?//

இதற்கு பேலே சொல்லியிருக்கிறேன்.

//5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?//

கண்டிப்பாக உயிர் வதை தான்.

//அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?//

தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் சாப்பிடாததற்கு காரணம், அதன் உடலில் கிருமிகள் இருக்கலாம் என்பதால் என்று நினைக்கிறேன்.

//மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?//

இந்த கொள்கை அங்கு தேவையில்லை.

//மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.//

உயிரை கொல்வதில் கூட 'உங்கள்' இஸ்லாமிய முறையே சிறந்தது என்று மார் தட்டுபவர்களை என்னவென்று சொல்ல? அதுவும் மனிதாபிமான முறையாம்... :(

//எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.//

நான் ஜெயிலுக்கு போறேன்...நான் ஜெயிலுக்கு போறேன்...நான் ஜெயிலுக்கு போறேன்...

//சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.//

அது கூட அறிவியல் முறையில் தான் கண்டுபிடிக்கமுடிகிறது, இல்லையா? :)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் உண்டாவதாக் சகோ.ஆஷிக்,
////ஒ அப்படியா!!!!!!!!!. அப்படின்னா, தானாக அமைதியான முறையில் இறந்து போன ஆட்டையோ மாட்டையோ சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அது சைவம் ஆகிடுமா? யாரும் அவைகளை துடிக்க துடிக்க வெட்டவில்லையல்லவா, அதனால் அந்த கறி சைவம்தானே?////--அதானே..! சரியான கேள்வி..!

இங்கே அசைவத்தை சைவம் என்று சொல்லி சாப்பிட வைக்கும் தினமலரின் பார்ப்பன நரித்தனம் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தட்ஸ் ஆல்.

ஆனால், பார்ப்பனர்களை கண்ணா பின்னா என்று எதிர்த்து விமர்சிக்கும் சகோ.கோவி கண்ணன், எதற்கு பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டும் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

////முனியாண்டி விலாஸ் இறைச்சி ஹலல் இல்லையே எப்படி முஸ்லிம்கள் உண்ணுகிறீர்கள் என்று கேட்டால் உங்கள் முகத்தில் என்ன ஆடும் என்று சொல்லவும் ?////---'முனியாண்டி விலாசின் இறைச்சி ஹலால் இல்லை' என்று உங்களுக்....கே, தெரிந்திருக்கும்போது முஸ்லிம்களுக்கு தெரிந்திருக்காதோ? என்னே ஒரு அறிவார்ந்த கேள்வி..?

பாவம் இவர் முகத்தில்தான் பூணூல் ஆடுகிறது..! இதுநாள்வரை இவரை நான் நாத்திகர் என்றல்லவா தவறாக நினைத்து இருந்தேன்..! ஆர்.எஸ்.எஸ். விஸ்வரூபம் நன்றாக புரிகிறது. போலிகள் இன்னும் எத்தனையோ..? அவ்வப்போது தெரிந்து கொள்கிறோம்.

Aashiq Ahamed said...

சகோதரர் சீனு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய கருத்தை படித்த பிறகு என்னுள் தோன்றும் சில கேள்விகள்,

-----
ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம்.
-----

அப்படியென்றால் தானாக, அமைதியான முறையில் இறந்து போன மத்திய நரம்பு மண்டலம் உள்ள உயிரினங்களை உண்ணலாமா? அவைகளை யாரும் துன்புறுத்தவில்லை, துடிக்க துடிக்க வெட்டவில்லை. இயற்கையான மரணம். உங்களுடைய சைவத்திற்கான definition இதற்கு பொருந்தவில்லை என்பதால், தானாக இறந்த உயிரினங்களை உண்பது சைவம் தானே?

இதற்கு தாங்கள் பதிலளித்தால் என்னுடைய அடுத்த கேள்விக்கு செல்கின்றேன், இன்ஷா அல்லாஹ். அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே கேட்கின்றேன். உங்களுடைய பதில் படிக்கும் யாருக்கும் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கும். தங்களின் பதிலை எதிர்பார்க்கும்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anisha Yunus said...

ஹ ஹா... உண்மையிலேயே பதிவை விட மறுமொழிகள்தான் மிக சுவாரசியமாக இருக்கின்றன, அதே நேரம் நிறைய தகவல்களும் தருகின்றன. :)

தாய்ப்பால் பற்றிய கேள்வி ஒரு வித்தியாசமான கேள்வி, அதே போல் சகோ. ஆஷிக் அவர்களின் கேள்வியும், தானாக இறந்த விலங்கின் மாமிசம் சைவமா. :)

நன்றி சகோ, பகிர்விற்கும், பதில்களுக்கும் :)

suvanappiriyan said...

சகோ...அன்னு!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தருமி said...

சுவனப்பிரியன்,
மற்றைய பதிவுக்குரிய பின்னூட்டங்களை இங்கே இடுவதில் என்ன பொருள் என்று புரியவில்லை; அதிலும் குறை சொல்லி ஒரு பின்னூட்டம் இட்டுருக்கிறீர்கள் - ஆனால் அதற்கான என் பதிலையும் இங்கே இடுவதுதானே நியாயம்?

நான் அந்தப் பதிவில் இட்ட பின்னூட்டம்:


//மற்றவர்களின் பின்னூட்டங்களை அனுமதித்து என் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதின் மூலம்....//

என்ன சுவனப்பிரியன்
உங்கள் பின்னூட்டத்தை நான் மட்டுறுத்தியுள்ளேனா ... தவறு. அப்படி ஏதும் நான் செய்யவில்லை; 200 பின்னூட்டங்களை அடுத்து மற்றவை அடுத்த பக்கத்தில் தொடர்கின்றன. நானும் இதைப்போல் சில பின்னூட்டங்கள் வரவில்லையே என்று குழம்பி நின்றேன். நீங்களும் அது போல்தானோ ...?

//இன்னும் மருத்துவரை நீங்கள் அணுகவில்லை என்று நினைக்கிறேன்...//

இப்படி முடிவதுதானேநீங்கள் கடைசியாக எழுதிய பின்னூட்டம்? i have checked your last comment; this is the one. இதுவும் இருக்கே...

இதுக்கெல்லாம் ஏன் பகுத்தறிவின் மேல் உங்களுக்குக் கோபம்? ”கடவுளின் / அல்லாவின் தவறு” என்று நான் எழுதியதற்காக என் பின்னூட்டத்தை மறுத்தது போல் நான் மறுப்பது இல்லையே!

நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

தருமி said...

சுவனப்பிரியன்,
மற்றைய பதிவுக்குரிய பின்னூட்டங்களை இங்கே இடுவதில் என்ன பொருள் என்று புரியவில்லை; அதிலும் குறை சொல்லி ஒரு பின்னூட்டம் இட்டுருக்கிறீர்கள் - ஆனால் அதற்கான என் பதிலையும் இங்கே இடுவதுதானே நியாயம்?

நான் அந்தப் பதிவில் இட்ட பின்னூட்டம்:


//மற்றவர்களின் பின்னூட்டங்களை அனுமதித்து என் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதின் மூலம்....//

என்ன சுவனப்பிரியன்
உங்கள் பின்னூட்டத்தை நான் மட்டுறுத்தியுள்ளேனா ... தவறு. அப்படி ஏதும் நான் செய்யவில்லை; 200 பின்னூட்டங்களை அடுத்து மற்றவை அடுத்த பக்கத்தில் தொடர்கின்றன. நானும் இதைப்போல் சில பின்னூட்டங்கள் வரவில்லையே என்று குழம்பி நின்றேன். நீங்களும் அது போல்தானோ ...?

//இன்னும் மருத்துவரை நீங்கள் அணுகவில்லை என்று நினைக்கிறேன்...//

இப்படி முடிவதுதானேநீங்கள் கடைசியாக எழுதிய பின்னூட்டம்? i have checked your last comment; this is the one. இதுவும் இருக்கே...

இதுக்கெல்லாம் ஏன் பகுத்தறிவின் மேல் உங்களுக்குக் கோபம்? ”கடவுளின் / அல்லாவின் தவறு” என்று நான் எழுதியதற்காக என் பின்னூட்டத்தை மறுத்தது போல் நான் மறுப்பது இல்லையே!

நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அனைவர் மீதும் ஸலாம் உண்டாவதாக...

நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்...

தாவரங்களும் உயிருள்ள ஜீவன்கள்தான் என்று...!

அவை... கருவறை-மண்ணுக்குள் நீர் 'அருந்து'கின்றன...
பூமிக்கு வெளியே முளைவிட்டு பிறக்கின்றன... காற்றை சுவாசிக்கின்றன...
உணவு தயாரிக்கினறன...
அதனை உட்கொண்டு அதன் மூலம் வளர்கின்றன...
பின்னர் பூத்து பூப்படைந்து-பருவம் அடைகின்றன...
இனப்பெருக்கம் செய்கின்றன... கடைசியில் ஒருநாள் இறக்கின்றன...

சில தாவரங்கள் "தொட்டாலே சினுங்குமே"? தொடு உணர்ச்சி உண்டே? எனில், உலகில் வாழும் உயிருள்ள இவற்றின் கனிகளை, காய்களை, பூக்களை, இலைகளை, தண்டுகளை, வேர்களை ஒடித்து பறித்து பிய்த்து சாப்பிடுவதும் அசைவம்தானே..? அதற்கு கத்த வாய் இருந்தால் நிச்சயம் "வலிக்கிறது" என்று கத்தும்தானே..?

ஆக... மனிதன் சாப்பிடக்கூடிய உண்மையான 'சைவம்' என்றால் எது?

baleno said...

சீனுவின் விளக்கம் அறிவுபூர்வமானது. கோவி.கண்ணன் குடுகுடுப்பையும் குறிப்பிட மறந்த அசைவ முக்கிய உணவான பன்றியை நினைவுபடுத்தியுள்ளார். இருவருக்கும் பாராட்டுகள்.

சீனு said...

//ஒ அப்படியா!!!!!!!!!. அப்படின்னா, தானாக அமைதியான முறையில் இறந்து போன ஆட்டையோ மாட்டையோ சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அது சைவம் ஆகிடுமா? யாரும் அவைகளை துடிக்க துடிக்க வெட்டவில்லையல்லவா, அதனால் அந்த கறி சைவம்தானே?//

உங்கள் (பதில்) கேள்வி ஆச்சரியமானது, உயிரை கொன்று தின்பது சரியல்ல என்றால், தானாக இறந்தால் தின்னலாமா என்ற கேள்வியே தவறு. சரி! தானாக இறந்த உயிரை உண்பதும் சரியல்ல என்பதே என் கருத்து.

suvanappiriyan said...

தருமி!

//200 பின்னூட்டங்களை அடுத்து மற்றவை அடுத்த பக்கத்தில் தொடர்கின்றன. நானும் இதைப்போல் சில பின்னூட்டங்கள் வரவில்லையே என்று குழம்பி நின்றேன். நீங்களும் அது போல்தானோ ...?//

உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் தான் தவறு என் மேல் என்று தெரிந்தது. தவறுக்கு வருந்துகிறேன். நாளை வந்து உங்களுக்கும், நோவுக்கும், திருச்சிக்காரனுக்கும் பதிலளிக்கிறேன். குடுகுடுப்பை கேட்ட கேள்விகளுக்கு நோவுக்கு கொடுத்த பின்னூட்டத்திலேயே பதில் இருக்கிறது.

////he cheats not only the world, but also himself.//

மிகச்சரி - புரிந்து கொண்டோருக்கு.//

இந்து மதத்திலேயே எங்களால் போராடி வெற்றியைப் பெற்று விட முடியும் என்ற எண்ணத்தில் இருக்கும் திருச்சிக்காரன் போன்ற பிராமணர்களைத் தவிர்த்த பிற்ப்படுத்தப் பட்ட மக்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது. இடம் மாறி வந்திருக்கிறது.

suvanappiriyan said...

பலேனோ!

//சீனுவின் விளக்கம் அறிவுபூர்வமானது. கோவி.கண்ணன் குடுகுடுப்பையும் குறிப்பிட மறந்த அசைவ முக்கிய உணவான பன்றியை நினைவுபடுத்தியுள்ளார். இருவருக்கும் பாராட்டுகள்.//

பன்றிகளின் மேல் இவ்வளவு பாசமா! இந்த செய்தியையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பன்றிக் காய்ச்சல் (Swine Flu) என்பது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சல் மரணத்தையே ஏற்படுத்தும். புளூ வைரஸ் டைப் ஏ (எச்1 என்1) என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் ஏற்படுகிறது. பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் இந்த வைரஸ் தாக்கக்கூடும். இதில் எச்1 என்1, எச்1 என்2, எச்3 என்2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. பன்றிகளிலிருந்து, மனிதர்களுக்கு வைரஸ் பரவும் வேகம் குறைவு தான் என்றாலும், பாதிக்கப்பட்ட மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக வேகமாக நோய் பரவும். பன்றி இறைச்சி, உணவு மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை. இந்த நோய் தொற்றியவர்களுக்கு, கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடம்புவலி, சளி, இருமல், தொண்டை எரிச்சல் போன்றவை இருக்கும். சில நேரங்களில் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். பாதிக்கப்பட்ட நபர்கள் இருமினாலும், தும்மினாலும் கூட இந்த எச்1 என்1 வைரஸ் வேகமாக பரவி, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களுக்கு மரணமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

""பன்றிகளுக்கு இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி உள்ளது. ஆனால், மனிதர்களுக்கு தடுப்பூசி இல்லை. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு வைரசுக்கு எதிரான மருந்துகள் உள்ளன. நியூரோமினிடேஸ் இன்கிபிடார்ஸ் வகையைச் சேர்ந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனளிக்கும்,'' தேனியைச் சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி, ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு எச் 1 என்1 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த பன்றிக் காய்ச்சல் வைரஸ், அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவில் 91 பேர், மெக்சிகோவில் 26 பேர், ஜெர்மனியில் மூன்று பேர், இஸ்ரேலில் இருவர், நியூசிலாந்தில் மூன்று பேர், ஸ்பெயினில் நான்கு பேர், இங்கிலாந்தில் ஐந்து பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் தாக்குதலில் மெக்சிகோவில் ஏழு பேர் இறந்துவிட்டனர்.

பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது. அதில் மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்சிகோவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில், பன்றி, பறவைகள் மற்றும் மனிதர்களுக்கான ஜீன்கள் ஒருசேர அமைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் அமைப்பு இதுவரை உலகில் எங்குமே இல்லை. இந்த புதிய வைரஸ் மனிதர்களிடம் அதிவேகமாக பரவி தாக்கி வருகிறது. மெக்சிகோ சென்று விட்டு ஐதராபாத் திரும்பிய ஒருவருக்கு இந்நோய் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. மருத்துவ சோதனையில் அவருக்கு நோய் தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இந்தியாவில் இதுவரை இந்த பன்றிக் காய்ச்சல் மனிதர்களை தாக்கியதாகவோ, மனிதர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. ஆனால் 2004ம் ஆண்டு டில்லி, மிசோரம், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இந்நோய் பரவல் ஏற்பட்டு, கால்நடைத்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், மனிதர்கள் பாதிக்கப்படவில்லை.

"மெக்சிகோ நாட்டுக்கு தேவையில்லாமல் யாரும் செல்ல வேண்டாம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பலத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பொது இடங்களிலும், பொதுமக்கள் வசிப்பிடங்களிலும் திரியும் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பன்றிகளுக்கு இந்நோய் வந்ததில்லை. மேலும் மேலை நாடுகளைப் போல இங்கு பன்றி வளர்ப்பு ஒரு மிகப்பெரிய தொழிலாக இல்லை. இதனால் விலங்குகளுக்கான நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம்., அரசு நிறுவனம், பன்றிகளுக்கான தடுப்பூசியை தேவையின்மை கருதி உற்பத்தி செய்யவில்லை.


-பழைய செய்தி.

பன்றியை இஸ்லாம் ஏன் தவிர்த்துக் கொள்ளச் சொன்னது என்பதை இந்த செய்தி நமககு நன்கு தெளிவு படுத்தும்.

suvanappiriyan said...

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

1. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

4. பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.

5. கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7. பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

-பழைய செய்தி.

பன்றியை இஸ்லாம் ஏன் தவிர்த்துக் கொள்ளச் சொன்னது என்பதை இந்த செய்தி நமககு நன்கு தெளிவு படுத்தும்.

Aashiq Ahamed said...

சகோதரர் சீனு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் பதில் எனக்கு ஆச்சர்யமளிக்கின்றது. நீங்கள் "சைவம்" என்றால் என்னவென்று definition சொன்னீர்கள். அதனை அடிப்படையாக வைத்து தான் //அப்படியென்றால் தானாக, அமைதியான முறையில் இறந்து போன மத்திய நரம்பு மண்டலம் உள்ள உயிரினங்களை உண்ணலாமா?// என்று கேட்டேன்.

அதற்கு பதிலென்ற பெயரில் தாங்கள் கூறியது //தானாக இறந்த உயிரை உண்பதும் சரியல்ல என்பதே என் கருத்து//.

ஏன் சரியல்ல?. சரியல்ல என்று கருதும் தாங்கள் அதற்கு விளக்கத்தை அளிப்பதுதானே நியாயம்?. வெறுமனே சரியல்ல என்று கூறுவதால் என்ன பயன்? நீங்கள் சொன்ன சைவத்திற்கான விளக்கத்தில் தான் நான் கேட்ட கேள்வி வரவில்லையே? அப்புறம் ஏன் "இறந்த உயிரை உண்பதும் சரியல்ல" என்று கூறுகின்றீர்கள்?

இல்லையென்றால் தாங்கள் கூறிய definition தவறா? (அதெல்லாம் சரி, சைவதிற்கான உங்கள் definitionனை எந்த புகழ் பெற்ற ஆங்கில அகராதியில் இருந்து எடுத்தீர்கள்?, reference கொடுத்தால் செக் செய்ய ஏதுவாக இருக்கும்)

விலங்குகளின் இறைச்சியில் கொழுப்பு இருப்பதால் அது சைவமாகாது என்று சிலர் சைவத்துக்கு விளக்கம் சொல்லுகின்றார்களே? அந்த விளக்கத்துக்கு மாற போகின்றீர்களா?

-----
உயிரை கொன்று தின்பது சரியல்ல என்றால், தானாக இறந்தால் தின்னலாமா என்ற கேள்வியே தவறு
-----

என்னுடைய கேள்வி ஏன் தவறு என்று விளக்குங்கள். நரம்பு மண்டலத்தை அறுத்து உயிரை துடிதுடிக்க கொன்று தின்பதுதான் சைவம் என்று தாங்கள் தான் சொன்னீர்கள். தினமலரும் அப்படிதான் கூறுகின்றது. அப்படியானால் இயல்பாக இறந்த உயிரை சாப்பிடுவது சைவத்தில் சேர வேண்டுமல்லவா?. இது எப்படி தவறான கேள்வியாகும். தயவுக்கூர்ந்து விளக்குங்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுதான். தினமலரின் பதிலும் சரி, உங்களுடைய பதிலும் சரி, படிப்பவர் யாருக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும். உங்களை நீங்கள் திருப்திபடுத்தி கொள்ள சொல்லும் பதிலாகவே அமையும்.

யாரும் தாங்கள் விரும்பியதை உண்ண உரிமை உண்டு. ஆனால், அதற்கு விளக்கம் என்ற பெயரில் தவறான தகவல்களை கொடுப்பதுதான் சிறிது நெருடுகின்றது. அதனை தெளிவுபடுத்தி கொள்ள தான் உங்களிடம் கேட்டேன். தாங்களோ பதில் என்ற பெயரில் மேலும் குழப்பத்தையே எனக்கு அளித்திருக்கின்றீர்கள்.

நான் தினமலருக்கு சொன்ன அதே கருத்தையே உங்களுக்கும் சொல்கின்றேன். இது தான் சைவம்/அசைவத்தோட அளவுகோல்னா உங்களை நீங்களே ஏமாத்திக்குரீங்கன்னு அர்த்தம். சாரி...

நன்றி,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஏக இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

சீனு said...

//நான் ஏற்கனவே சொன்னதுதான். தினமலரின் பதிலும் சரி, உங்களுடைய பதிலும் சரி, படிப்பவர் யாருக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும். உங்களை நீங்கள் திருப்திபடுத்தி கொள்ள சொல்லும் பதிலாகவே அமையும்.//

சரி விடுங்க பாஸு. படிக்கிறவங்க தெரிஞ்சிகிட்டும்...

anonymous said...

Unga madhathulayum koraanlayum iwlo logic paathiruntha, neengallam eppavo urupatrupeenga sir. But please ippadiye urupadaamale irunga. appo thaan naan munnera mudiyum. Thanks. :)

suvanappiriyan said...

அனானி!

குர்ஆனின் படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் வெற்றி பெற்றே வந்திருக்கிறார்கள். குர்ஆனை தங்கள் வாழ்வாக கொள்ளாமலும், குர்ஆனை தவறாக விளங்கியவர்கள் வேண்டுமானால் உருப்படாமல் போயிருக்கலாம்.

அடுத்து ஒருவன் தாழ்வில்தான் உங்கள் வாழ்க்கையே ஓடுகிறது போல் இருக்கிறது. எண்ணமே சரியில்லையே! எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு முதலில் வாருங்கள்.

Aashiq Ahamed said...

சகோதரர் சீனு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

--------
சரி விடுங்க பாஸு. படிக்கிறவங்க தெரிஞ்சிகிட்டும்...
--------

உங்களுடைய கருத்தையும், அதே போன்று இருந்த தினமலரின் பதிலையும் "படித்தலாலேயே" அப்படியொரு கேள்வி கேட்டேன் சகோதரரே.

கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

ஓர் உயிரை கொல்லாமல் மற்றொரு உயிர் உயிர் வாழவே முடியாது, இது நியதி.

தாவரங்களை கொன்று திண்பவர்கள் அது உயிர் வதையில் சேராது என்று வாதிப்பார்கலானால் அது முற்றிலும் தவறு. தாவரங்களும் உணர்கின்றன, வலியையும் உணர்கின்றன, தாவரங்களுக்கு rudimentary nerve structure என்று உள்ளது, அது தான் வலியை உணரக்கூடியதாக உள்ளது. ஒரு இலையை அதிலிருந்து எடுத்தாலோ அல்லது அதை தொட்டால் கூட அது உணரக்கூடியதாக உள்ளது. மேலும் மற்ற தாவரங்களோடு பேசுவதாக உள்ளது என்பது மேலும் ஆச்சர்யமான விஷயம்.

அது பற்றி மேலும் அறிய கீழ உள்ள சுட்டியை பார்க்கலாம்:

http://www.viewzone.com/plants.html

ஆக உயிரை துடி துடிக்க கொன்று திண்ண கூடாது என்று நினைப்பவர்கள் தாவரங்களையும் திண்ணாமல் இருப்பார்களானால் அவர்களின் வாதத்தில் மாறாமல் இருப்பவர்கள் என்று நம்பலாம்.

அப்படி சைவத்தை மட்டும் சாப்பிட்டு சில அத்தியாவசிய புரோதங்களை விடுபவர்கள் உட்பட மனிதன் தன்னை அறியாமலேயே வருடத்திற்கு சராசரியாக 570 சிறு பூச்சிகளை தின்கிறான் என்பது கூடுதல் செய்தி.

suvanappiriyan said...

கார்பன் கூட்டாளி!

வருகைக்கும் சிறந்த தகவல்களை அளித்தமைக்கும் நன்றி! அசைவம் சாப்பிடாதவர்கள் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்தையும் இழக்கிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில அசைவப்பிரியர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது எப்படி சைவத்தில் அடங்கும் என்பதையும் இவர்கள் யோசிப்பதில்லை.

மஸ்தூக்கா said...

////முனியாண்டி விலாஸ் இறைச்சி ஹலல் இல்லையே எப்படி முஸ்லிம்கள் உண்ணுகிறீர்கள் என்று கேட்டால் உங்கள் முகத்தில் என்ன ஆடும் என்று சொல்லவும் ?////---'முனியாண்டி விலாசின் இறைச்சி ஹலால் இல்லை' என்று உங்களுக்....கே, தெரிந்திருக்கும்போது முஸ்லிம்களுக்கு தெரிந்திருக்காதோ? என்னே ஒரு அறிவார்ந்த கேள்வி..?

பாவம் இவர் முகத்தில்தான் பூணூல் ஆடுகிறது..! இதுநாள்வரை இவரை நான் நாத்திகர் என்றல்லவா தவறாக நினைத்து இருந்தேன்..! ஆர்.எஸ்.எஸ். விஸ்வரூபம் நன்றாக புரிகிறது. போலிகள் இன்னும் எத்தனையோ..? அவ்வப்போது தெரிந்து கொள்கிறோம்.//
கோவி(ச்சுக்கிட்ட)கண்ணன் எங்கே?

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா!

Unknown said...

//மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில அசைவப்பிரியர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். //

சைவ பிரியர்கள் என்று குறிப்பிட பட வேண்டும் என நினைக்கிறேன்.

suvanappiriyan said...

கார்பன் கூட்டாளி!

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!