யார் செய்திருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியதே!
தமிழ்மண நிர்வாகம் இது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தும் ஆர்வக் கோளாறினால் இது போன்ற நிலையை சில சகோதரர்கள் எடுத்துள்ளார்கள். இதில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. எனவே நமது நிலையை விளக்கி சவுதி இணையதள நிர்வாகத்துக்கு மெயில் அனுப்ப வேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் குறைந்தது 25 பேராவது அனுப்பினால்தான் தமிழ்மணம் சவுதியில் திரும்பவும் தெரிய வாய்ப்பிருக்கிறது.
எனவே தயவு செய்து சகோதரர்கள் உடன் மெயிலை கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/view?set_language=en
8 comments:
ஸலாம் அருமை சகோதரர் சுவனபிரியன் ..
இது முற்றிலும் தவறான முன்னுதாரணம்...மூர்கத்தனமான செயல்..அவர்கள் இறங்கி வந்திருக்கும் சூழலில்,இத பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணத்தில் இதை யார் செய்திருந்தாலும் எனது வன்மையான கண்டனங்கள்...
அரபு நாடுகளில் பிரமாத சகோதரர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...இப்படி செய்வது ஒட்டுமொத முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்த செய்யும் அறிவீனமான செயல்...
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்...
நான் எனது Unblock request அனுப்பிவிட்டேன்....
அன்புடன்
ரஜின்
வஅலைக்கும் சலாம் சகோ ரஜின்!
வேண்டுகோளை ஏற்று மெயில் அனுப்பியமைக்கு நன்றி! இனி இது போன்ற ஒரு தவறை தமிழ்மண நிர்வாகிகள் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம். வழக்கம்போல் நமது பணியை தொடருவோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்... என செய்தி அறிந்த அனைத்து முஸ்லீம் பதிவாளர்களூம் அணிவகுத்து செயலாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை இதில் பதிவிட மகிழ்கிறேன்.
சவூதியில் உள்ள முஸ்லீம் அல்லாத எவெரேனும் முஸ்லீம்களின் பெயரை உபயோகித்து இச்செயலை செய்திருக்கலாம் என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
எப்படியிருப்பினும் நம்முடைய நல்லெண்ண குறிக்கோளில் நாம் ஒன்றுபட்டு நிலைத்திடுவோம்.
====================================
தமிழ்மண நிர்வாகிகளுக்கு நான் அனுப்பிய மெயில்.
From: VANJOOR
Date: 2011/10/19
Subject: GOODWILL
To: admin@thamizmanam.com
Dear Administrators,
After I have registered the following comment
83.VANJOOR on October 18th, 2011 11:43 am
in link http://blog.thamizmanam.com/archives/359
HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்
I was delighted to receive positive response and support from majority of muslim
Bloggers to my call and agreed in good faith to forget and put an end to this unfortunate episode .
So let us shake hands in goodwill with goodwill for goodwill.
Your acknowledgement regarding this much appreciated.
Regards.
vanjoor
http://vanjoor-vanjoor.blogspot.com/
E&O.E.
=====================
83.VANJOOR on October 18th, 2011 11:43 am
in link http://blog.thamizmanam.com/archives/359
HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்
• VANJOOR on October 18th, 2011 11:43 am
திரு.சங்கரபாண்டி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மன உளைச்சலுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே !
வாசகர்களே !!
இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்மணத்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இடம் பெறாது என பரிபூரணமான நம்பிக்கையுடன்
மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த பாதையில் பயணிப்போம்.
நாம் சந்திக்கும் பல இடங்களில் ஒன்றாக தமிழ்மணமும் வழக்கம் போல் இருக்கட்டும்.
தன்மான உணர்வுடன் இதுவரையிலும் தமிழ்மணத்திலிருந்து தானாகவே விலகிக்கொண்ட அனைத்து சக முஸ்லீம் பதிவர்களும் மீண்டும் தமிழ்மணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் நேச கரம் நீட்டும் செயலாக இதுகாறும் தானாகவே விலகிக்கொண்ட மன உளைச்சலுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களை
தமிழ்மணம் அடையாளம் கண்டு தமிழ்மணம் தன்னிச்சையாக அவர்களை தமிழ்மனத்தில் இணைத்து திரு.சங்கரபாண்டியன் உள்ளிட்ட தமிழ்மண நிர்வாகிகளின் நேசக்கரத்தை வலுவூட்டலாமே ..
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது மிகவும் துரதஷ்ட வசமானது, இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
இந்த தடையை விலக்க சவுதியில் இருப்பவர்கள் மேற்கொடுத்த தளத்திற்கு சென்று உங்களுடைய unblock request கொடுக்க வேண்டும்.
விரைவில் தடை நீக்கப்படும் என எதிர்ப்பர்ப்போம்
வஅலைக்கும் சலாம்
வருகைபுரிந்து கருத்தைப் பதிந்த வாஞ்சூர் அண்ணன், ஹைதர் அலி, கார்பன் கூட்டாளி அனைவருக்கும் நன்றி! நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்போம்.
தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நானும் தங்கள் கருத்துக்கு உடன்பட்டு unblock request கொடுத்து விட்டேன்
//தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நானும் தங்கள் கருத்துக்கு உடன்பட்டு unblock request கொடுத்து விட்டேன்//
நன்றி சகோதரர் மஸ்தூக்கா!
Post a Comment