உலக முஸ்லிம்கள் அனைவரிடத்திலும் ஒரு நீங்காத கனவு என்றுமே இருந்து வரும். தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் புனிதத் தலங்கள் நிறைந்திருக்கும் மெக்கா மதீனாவை பார்க்க மாட்டோமா! ஹஜ் பயணத்தை முடித்து விட மாட்டோமா எனறு ஆவலுடன் பொருளாதார தன்னிறைவுக்காக காத்திருப்பர். ஏனெனில் ஹஜ் பயணம் என்பது செல்வந்தர்களுக்கு உரிய கடமை. கடன்கள் இல்லாமல் பொருளாதார தன்னிறைவு பெற்றவர்களுக்கே இது கடமையாகிறது.
'அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்றவர்களுக்கு கடமை'
-குர்ஆன் 3:97
ஒரு சிலருக்கு சம்பாதிக்க வந்த இடத்தில் போனஸாக சொற்ப செலவுகளிலேயே ஹஜ் பயணத்தை முடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இது போல் வாய்ப்பு கிட்டி இரண்டு முறை ஹஜ் பயணத்தை முடித்தவன் நான்.
மும்பை, உத்தர பிரதேசம் போன்ற பகுதிகளில் வறியவர்கள் கூட தங்களின் வருமானத்தில் தினமும் ஒரு பகுதியை ஹஜ் பயணத்துக்காக ஒதுக்குவார்களாம். இப்படி எழுபது என்பது வயது வரை பணம் சேர்த்து ஹஜ்ஜுக்கு வரும் இந்தியர்கள் பலரை நாம் பார்க்க முடியும்.
மெக்கா மதினாவில் பல ஆண்டுகள் வேலை செய்து வரும் சிலர் ஹஜ் முடிக்காமலேயே கூட நாடு திரும்பி விடுகின்றனர். சிலர் ஆர்வம காட்டுவதில்லை. இதே போல் தமிழகத்தில் பல கோடிகளுக்கு சொந்தக்காரரகளாக இருந்தாலும் ஹஜ் செய்து விடுவோம் என்ற எண்ணம் பலருக்கு வருவதில்லை.
ஆண்டான், அடிமை, ஏழை, பணக்காரன், கறுப்பன், சிவப்பன் என்ற பாகுபாடுகளை எல்லாம் தூரமாக்கி தைக்கப்படாத இரண்டு வெள்ளை துண்டுகளை உடுத்திக் கொண்டு 'இறைவனுக்கு அடிபணிய வந்து விட்டோம்' என்று உலக மக்கள் அனைவரும் ஒரு குரலில் எழுப்பும் ஓசை பல சாம்ராஜ்ஜியங்களை நிலைகுலையச் செய்தது. செய்து கொண்டிருக்கிறது. ஒரு முறை ஹஜ் செய்தவர் தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை கண்டிப்பாக தூரமாக்கி விடுவார். உலகையே தங்கள் காலடியில் வீழ்த்த துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாட்டு ஹாஜிகளும், ஆப்ரிக்க ஹாஜிகளும் ஓரணியில் நின்று அந்த ஏக இறைவனை வணங்குவதை பார்த்த பின்பு யாருக்குத்தான் வர்ணாசிரம எண்ணம் வரும்?
1, 2 நைட் கிளப்புகளே கதி என்று கிடந்த அமெரிக்க இள வயது மங்கைகள் இன்று குர்ஆனைப் பற்றிய ஆராய்ச்சியில்...
4.கறுத்த ஆப்பரிக்கருக்கும் வெள்ளை நிற அமெரிக்கருக்கும் ஒரே உடை...ஒரே வழிபாடு...ஒன்றாகவே தங்கவும் வேண்டும்.
5.குர்ஆனை ஆர்வமுடன் விளங்கி படிக்கும் இளைஞர்கள்....
6.தள்ளாத வயதிலும் இறைவனைப் பற்றிய பயம்...
7.ஹஜ்ஜை முடித்து வழக்கமான உடைக்கு திரும்பி ஓய்வு எடுக்கும் அமெரிக்க ஐரேப்பிய ஆப்ரிக்க முஸ்லிம்கள்
இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வருபவர்களில் எனது தாயாரும் ஒருவர். தந்தைக்கு உடல்நலம் ஒத்து வராததால் தாயார் மட்டும் ஹஜ்ஜுக்கு வருகிறார். அவருக்கு உதவி செய்வதற்காக நானும் 3 நாட்கள் மெக்கா செல்ல தீர்மானித்துள்ளேன். எந்த வித பிரச்னையும் இல்லாமல் நலமுடன் ஹஜ்ஜுப் பயணத்தை முடிக்க இறைவன் துணை புரிய வேண்டும். எனது தாயாரின் ஹஜ் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட சகோதர சகோதரிகளும் பிரார்த்திக்கவும்.
'நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் இறைவன் அறிகிறான். ஹஜ்ஜுக்கு தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் இறை அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! எனனை அஞ்சுங்கள்'
-குர்ஆன் 2:197
19 comments:
/இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வருபவர்களில் எனது தாயாரும் ஒருவர்/
ஸலாம் சகோ
தாயின் கடமையை நிறைவேற்றுவது மகனின் மிக சிறந்த காரியமாக் நான் கருதுகிறேன்.வாழ்த்துகள்.அன்னை இனிதே பயணம் முடித்து தாயகம் திரும்ப வாழ்த்துகள்.
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்...நெகிழ்ச்சியான பகிர்வு. என்னுடைய பிரார்த்தனைகளும்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல பதிவு படங்களுடன்
அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல பதிவு படங்களுடன்
//ஸலாம் சகோ//
சலாம்(உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) சகோ சார்வாகன்!
//தாயின் கடமையை நிறைவேற்றுவது மகனின் மிக சிறந்த காரியமாக் நான் கருதுகிறேன்.வாழ்த்துகள்.அன்னை இனிதே பயணம் முடித்து தாயகம் திரும்ப வாழ்த்துகள்.
நன்றி//
வாழ்த்துக்கு நன்றி!
சகோ அருள்!
//மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். "மறைக்கப்பட்ட இந்த தியாகத்தினை" விரிவாக மூன்று கட்டுரைகளில் எழுதியுள்ளேன்//
சுதந்திர போராட்டக் காலத்தில் நடந்த பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன. சிலவற்றை எடுத்துப் போட்டதற்கு நன்றி!
//அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்...நெகிழ்ச்சியான பகிர்வு. என்னுடைய பிரார்த்தனைகளும்...//
வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல பதிவு படங்களுடன்//
வஅலைக்கும் சலாம் சகோ ராக்கெட் ராஜா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல பதிவு படங்களுடன்//
வஅலைக்கும் சலாம் சகோ ராக்கெட் ராஜா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உங்கள் தாயார் நல்ல முறையில் ஹஜ் செய்து, சந்தோஷமாக திரும்பிவரவும், அவர்களுடைய மற்றும் இந்த வருடம் ஹஜ் செல்லக்கூடிய அனைவரின் ஹஜ்ஜையும் இறைவன் ஏற்றுக்கொள்ளவும் இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன்.
உங்கள் தாயாருக்கு சலாம் கூறுங்கள். ஹஜ்ஜின் பாக்கியம் எங்களுக்கும் விரைவில் கிடைக்க துஆ செய்யும்படி கேட்டுக்கொண்டதாக சொல்லுங்கள் சகோ!
வஅலைக்கும் சலாம் சகோ. அஸ்மா!
//உங்கள் தாயாருக்கு சலாம் கூறுங்கள். ஹஜ்ஜின் பாக்கியம் எங்களுக்கும் விரைவில் கிடைக்க துஆ செய்யும்படி கேட்டுக்கொண்டதாக சொல்லுங்கள் சகோ!//
அவசியம் சொல்கிறேன் சகோதரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்களது தாயார் இறுதிகடமையாய் இனிதாய் இலகுவாய் நிறைவேற்ற வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
ஹஜ்ஜில் தாயாருக்கு பணிவிடை செய்வது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு பெரும்பாக்கியம்!
அல்லாஹ் உங்களது செயலையும் அங்கீகரிப்பானாக ஆமீன்!
வஅலைக்கும் சலாம் ! சகோ ஜபருல்லாஹ்!
//ஹஜ்ஜில் தாயாருக்கு பணிவிடை செய்வது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு பெரும்பாக்கியம்!
அல்லாஹ் உங்களது செயலையும் அங்கீகரிப்பானாக ஆமீன்!//
உங்களது பிரார்த்தனை பலிக்கட்டும். வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.
தங்களின் தாயாரின் ஹஜ்ஜை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் தூவா செய்கிறேன்.
தங்களின் தாயாரின் ஹஜ்ஜை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் தூவா செய்கிறேன்.
தங்களின் தாயாரின் ஹஜ்ஜை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் தூவா செய்கிறேன்.
தங்களின் தாயாரின் ஹஜ்ஜை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் தூவா செய்கிறேன்.
சகோ பராரி!
//தங்களின் தாயாரின் ஹஜ்ஜை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் தூவா செய்கிறேன்.//
வருகைக்கும் தங்களின் பிரார்த்தனைக்கும் நன்றி!
சகோ. அஜீஸ்!
//தங்களின் தாயாரின் ஹஜ்ஜை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் தூவா செய்கிறேன்.//
வருகைக்கும் தங்களின் பிரார்த்தனைக்கும் நன்றி!
Post a Comment