Followers

Thursday, October 20, 2011

லிபிய அதிபரை கொன்றாகி விட்டது....அடுத்து?




அமெரிக்கா நேட்டோவின் போர்வையில் மற்றொரு அநியாயத்தை நிறைவேற்றியிருக்கிறது. என்னதான் லிபிய அதிபர் மோசமானவராக இருந்தாலும் 42 ஆண்டு காலம் இந்த நாட்டை செல்வ செழிப்பிலேயே கொண்டு சென்றார். எண்ணெய் வளம் அதற்கு கைகொடுத்தது. அதிலும் எந்த நேரமும் அமெரிக்காவை தன் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டார். மற்ற முஸ்லிம் நாடுகளையும் அமெரிக்காவிடமிருந்து சற்று தூரமாக இருக்குமாறு உபதேசித்து வேறு வந்தார். தனது ஆட்சியை தக்க வைக்க சில நேரங்களில் அமெரிக்காவிடமும் ஒத்து போனார் கடாபி.

இது போதாதா... அமெரிக்க தனது குள்ள நரித் தனத்தை கடாபியின் எதிரிகளின் மூலம் கலவரமாக விதைத்தது. நேட்டோ படைகளின் மூலம் பல ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்தது. போதாதற்கு கடாபியின் ராணுவமும் பொதுமக்களை சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளியது. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி.

லிபிய எண்ணெய் வயல்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அமெரிக்காவின் திட்டம். ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் ஏதேதோ எதிர்பார்த்து சென்று முடிவில் கையை சுட்டுக் கொண்டது போல் லிபியாவிலும் அமெரிக்காவுக்கு சரியான எதிரடி காத்திருக்கிறது. மற்ற நாடுகளில் பெற்ற தோல்வியைவிட லிபியாவில் அமெரிக்கா மிக அதிகமாக இழப்புகளை சந்திக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

//Earlier, the US Secretary of State Hillary Rodham Clinton had offered millions of dollars in new aid to Libya in a so-called token of goodwill, and had urged the new leadership in the country to commit to a retribution-free future.//

அமெரிக்காவிற்க்குள்ளேயே இது போன்ற அடாவடியாக மற்ற நாட்டுக்குள் மூக்கை நுழைப்பதை பெரும்பான்மையோர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க மக்களை வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மேலும் மேலும் பல பிரச்னைகளை உண்டுபண்ணுகின்றன. ஆட்சியாளர்களோ லிபியாவுக்கு இத்தனை கோடி டாலர், இஸ்ரேலுக்கு இத்தனை கோடி டாலர் உதவி என்று பெருமையாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் அமெரிக்க மக்களின் கனவுகளை நனவாக்குமா? கடாபியும், சதாம் ஹுசைனும், ஹோஸ்னி முபாரக்கும் அந்நாட்டு மக்களால் எவ்வாறு பந்தாடப்பட்டார்களோ அது போன்ற நிலை ஒபாமாவுக்கும் வரும் காலம் வெகுதொலைவில் இல்லை.




இது ஒருபுறமிக்க லிபியாவுக்கு அருகிலேயே சோமாலியா மொகதிஸுவில் 42 குழந்தைகள் கடந்த வாரத்தில் மட்டுமே இறந்திருக்கின்றன. சுகாதாரமற்ற குடிநீர் 162 குழந்தைகளை காலரா பாதித்தவர்களாக மாற்றியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 75 சதவீதமான குழந்தைகள் டயரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

கூறுகெட்ட அமெரிக்க ஆட்சியாளர்களே!.... உங்களுடைய படைபலத்தையும் பொருளாதார வசதியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி இது போன்ற வறிய நாடுகளை தத்தெடுத்து அவர்களை நலமாக்கினால் உன் மக்கள் நலமாக வாழ மாட்டார்களா? வறிய நாடுகள் உங்களை வாழ்த்தாதா? இத்தனை நாடுகளிலும் கொள்ளையடித்து உன் நாட்டு மக்களுக்கு என்ன சுகத்தை கொடுத்து விட்டாய்?

இனியும் இதுபோன்ற அழிவுகள் தொடர்ந்தால் நம் கண் முன்னேயே அமெரிக்க தேசத்தின் அழிவுகளை வெகு சீக்கிரத்தில் காணலாம்.

--------------------------------------------------

உதாரணத்துக்கு சமீபத்திய பத்திரிக்கை செய்திகள்....

வெள்ளி, 14 அக்டோபர் 2011 13:39

லாஸ் ஏஞ்சல்ஸ், அக்.14- அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத் தில் சியல் பீச் நகரில் உள்ள ஒரு சலூனுக்குள் அடையாளம் தெரி யாத மனிதன் ஒருவன் புகுந்தான். அங்கிருந் தவர்களை நோக்கி அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 6 பேர் அந்த இடத்திலே யே பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மருத் துவமனையில் உயிர் இழந்தனர்.

அடையாளம் தெரியாத மனிதன் துப் பாக்கியால் சுட்ட தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் அந்த இடத் தை சுற்றி வளைத்தனர். துப்பாக்கியால் சுட்ட அந்த மனிதனை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெளியூரை சேர்ந்தவர் என்றும், காரில் வந்த அவர் சலூன் கடை அருகே காரை நிறுத்தி விட்டு சலூனுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற் காக துப்பாக்கியால் சுட் டார் என்பன போன்ற விவரங்களை காவல் துறையினர் வெளியிட வில்லை.
-viduthalai 18-10-2011


திங்கள், 17 அக்டோபர் 2011 14:13
டெகுசிகல்பா,அக்.17- ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள விமான நிலையத்தில் முகமூடி அணிந்த மனிதன் கண்மூடித்தனமாக சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் சான் பெட்ரோ சுலாவில் உள்ள லமெசா சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக் கிழமை நடந்தது. இது குறித்து காவல்துறை ஆணையர் ஜுலியன் ஹெர்நாண்ட்ஸ் கூறியதாவது: துப்பாக்கி ஏந்தி வந்த முகமூடி மனிதன் விமான நிலையத்தின், கார் நிறுத்தும் இடத்தில் காத்திருந்து அவர்கள் வந்ததும் சுட்டதில் அவர்கள் பலியானர்.3 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களும் ஆயுதங் களுடன்தான் வந்துள்ளனர்.ஆனால் அவற்றை அந்தக் கொலையாளி எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. முகமூடி அணிந்து வந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் தாக்குதல் நடத்தியதற் கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

-viduthalai 18-10-2011

14 comments:

ஹுஸைனம்மா said...

இவர்களின் ஆட்டமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதன் அடையாளமாகத்தான்
இஸ்ரேலில் “tent city protests"
மற்றும் “Occupy Wall Street" போராட்டங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களில் பரவி வருகிறது.

இரு போராட்டங்களுமே, மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை விட்டு, சொந்த நாட்டு மக்களைக் காப்பாறுங்கள் என்ற அந்நாட்டு மக்களின் கதறலைத்தான் வெளிப்படுத்துகின்றன.

Robin said...

// உங்களுடைய படைபலத்தையும் பொருளாதார வசதியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி இது போன்ற வறிய நாடுகளை தத்தெடுத்து அவர்களை நலமாக்கினால் உன் மக்கள் நலமாக வாழ மாட்டார்களா?// ஏன் இதை தீவிரவாதிகளுக்கு பண உதவி அளிக்கும் வளைகுடா நாடுகள் செய்யலாமே?

//இனியும் இதுபோன்ற அழிவுகள் தொடர்ந்தால் நம் கண் முன்னேயே அமெரிக்க தேசத்தின் அழிவுகளை வெகு சீக்கிரத்தில் காணலாம்.// அதற்காகத்தானே ஏங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் அமெரிக்காக்காரனோ இன்னும் தன் நாட்டில் இஸ்லாமியர்களின் குடியேற்றத்தையும் மசூதிகளையும் அனுமதித்து கொண்டிருக்கிறான்.

அஸ்மா said...

சலாம் சகோ. கடாபி ஒரு சர்வாதிகாரி என்றாலும் இங்கே பேசப்பட வேண்டியது அமெரிக்க பயங்கரவாதியின் அராஜகத்தைப் பற்றிதான் என்பதை (சுருக்கமாக) விளங்க வைத்துள்ளீர்கள்.

//உங்களுடைய படைபலத்தையும் பொருளாதார வசதியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி இது போன்ற வறிய நாடுகளை தத்தெடுத்து அவர்களை நலமாக்கினால் உன் மக்கள் நலமாக வாழ மாட்டார்களா? வறிய நாடுகள் உங்களை வாழ்த்தாதா? இத்தனை நாடுகளிலும் கொள்ளையடித்து உன் நாட்டு மக்களுக்கு என்ன சுகத்தை கொடுத்து விட்டாய்?//

அந்த நல்லெண்ணங்கள் இருந்தால்தான் எப்போதோ திருந்தியிருப்பார்களே..! அடுத்தவர்களின் கஷ்டங்களும், உயிரிழப்புகளும் அவர்களுக்கு சுகமாக தெரியும்போது தன் நாட்டு மக்களைப்பற்றி யோசிக்க நேரமேது சகோ இவர்களுக்கு?

//இனியும் இதுபோன்ற அழிவுகள் தொடர்ந்தால் நம் கண் முன்னேயே அமெரிக்க தேசத்தின் அழிவுகளை வெகு சீக்கிரத்தில் காணலாம்.//

நிச்சயமா! மனிதர்கள் அவர்களுக்கு எதிராக புறப்படுவதைவிட, அந்த இறைவனே அவர்கள் மீது தன் பிடியை இறுக்கும் காலத்தைதான் அவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் சகோ.

suvanappiriyan said...

சகோ. ஹூசைனம்மா!

//இவர்களின் ஆட்டமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதன் அடையாளமாகத்தான்
இஸ்ரேலில் “tent city protests"
மற்றும் “Occupy Wall Street" போராட்டங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களில் பரவி வருகிறது.//

இனி ஐரோப்பிய அமெரிக்க முறை. போராட்டங்கள் இனி கண்டிப்பாக விசுவரூபமெடுக்கும் என்று எதிர்பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

ராபின்!
//ஏன் இதை தீவிரவாதிகளுக்கு பண உதவி அளிக்கும் வளைகுடா நாடுகள் செய்யலாமே?//

எந்த வளைகுடா நாடும் வேறொரு நாட்டிலே ராணுவ முகாமை லட்சக்கணக்கான படைகளோடு அமைத்துக் கொண்டு அவர்களுக்கு சம்பளத்தையும் அந்த நாட்டிலிருந்தே கறக்கவில்லை. பாகிஸ்தான், சூடான், தாய்லாந்து போன்ற நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது உடன் பல விமானங்களில் உதவிப் பொருள்களை அனுப்பி வைத்ததில் முன்னணியில் நின்றது சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகள்தான். மேலும் எந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் வளைகுடாவிலிருந்து பணம் வருவதில்லை.

//அதற்காகத்தானே ஏங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் அமெரிக்காக்காரனோ இன்னும் தன் நாட்டில் இஸ்லாமியர்களின் குடியேற்றத்தையும் மசூதிகளையும் அனுமதித்து கொண்டிருக்கிறான்.//

கவலை வேண்டாம். கூடிய விரைவிலேயே அமெரிக்கா இஸ்லாமிய நாடாக மாறி விடும். அப்பொழுது அதன் ஆட்சியாளர்கள் குர்ஆனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செலுத்தும் போது இது போன்ற அக்கிரமங்கள் தானாக களையப்படும். அமெரிக்காவும் சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்.

suvanappiriyan said...

சலாம் சகோதரி அஸ்மா!

//நிச்சயமா! மனிதர்கள் அவர்களுக்கு எதிராக புறப்படுவதைவிட, அந்த இறைவனே அவர்கள் மீது தன் பிடியை இறுக்கும் காலத்தைதான் அவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
கொலைச்செய்தி நிச்சயமாக வருந்தத்தக்க செய்தி. இன்னாலில்லாஹி...

அரபு நாடுகளில் சற்று வெளிப்படையாக அமெரிக்க ஆதிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து வந்தவர்களுள் கடாஃபி முக்கியமானவர்.

அவரின் மிகப்பெரிய குற்றம், தனக்கு எதிரான தன் நாட்டு மக்களின் கலவரங்ககளை சர்வாதிகார மனதோடு ராணுவம் மூலம் கொன்றொழிக்கும் வேலையில் இறங்கியதால்தான் அவருக்கு இந்த கதி.

ஆனால், சமயோசிதமாக இந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டனர் அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகள்.

வேறு வழியின்றி உலகம் ஏதும் வாய்திறந்து சொல்ல முடியவில்லை. (இது... சதாமின் குவைத் ஆக்கிரமிப்பு போல இன்னொரு சாதகமான சூழல் ஆகிவிட்டது அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளுக்கு)

இவர்களுக்கு முக்கியம்... கந்தகம் கலக்காத லிபியாவின் உலகின் முதன்மை உலகத்தரம் வாய்ந்த கச்சா எண்ணெய்தான். மாறாக லிபியமக்களின் அமைதி அல்ல என்பது தெளிவு.

துனிசியா முன்னாள் அதிபர் போல போல கடாஃபி ராணுவ நடவடிக்கை எடுக்காது இருந்திருந்தால்...

அல்லது

எகிப்து போல லிபிய ராணுவம் மக்கள் பக்கம் இருந்திருந்தால்...

துனிசிய, எகிப்திய முன்னாள் அதிபர்கள் போல உலகில் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு தப்பித்து வாழ்ந்து கொண்டு இருந்திப்பார் கடாஃபி. அந்த நாடுகள் போல உயிரிழப்புகளும் இந்த அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் லிபியாவில் ஏற்பட்டும் இருந்திருக்காது.

ஆப்கன், இராக் தொடர்ச்சியாக... இன்று லிபியா.

அரபிய எண்ணெய் வள நாடுகளுக்கு இதோ இன்னொரு பாடம்.

அருமையான இடுகை. கூர்மையான குத்திக்கிழிக்கும் நிதர்சனமான வார்த்தைகள். ஆக்கத்துக்கு நன்றி சகோ.சுவனப்பிரியன்.

Anonymous said...

ஜனநாயகத்துக்கு வாய்ப்பில்லாத தேசத்தில் - இம்மாதிரியான நிகழ்வுகள், விரும்பதகாத மரணங்கள் மூலமே ஆட்சியாளர்கள் அகற்றப்படுவார்கள். ஜனநாயகம் தருவது உயிர் பலியற்ற மாற்றங்களை. அதை முஸ்லீம் நாடுகளில் காண இயலாதது வருத்தமான விஷயமே. அமெரிக்காவில் நடக்கும் சிறு சிறு வன்முறைகெல்லாம் இறைவன் பழிவாங்க துவங்கிவிட்டார் என்றால் - ஆப்கனிலும், பாகிஸ்தானிலும், இதர ஆப்பிரிக்க முஸ்லீம் நாடுகளில் நடக்கும், அவர்களுக்குள்ளேயே குண்டு வைத்து அழிவதற்கு என்ன காரணம் சொல்வீர்கள். அமெரிக்கா முஸ்லீம் நாடானால் என்ன ஆகும்? சர்வாதிகாரம் மலரும். மற்றொரு ஆப்கன் ஆகும். வேறென்ன.

Anonymous said...

அட உங்க பதிவை பிரான்சு நாட்டுலயெல்லாம் படிக்கறாங்க போல... நீங்க பதிவுல "லிபிய அதிபரை கொன்றாகி விட்டது....அடுத்து?"-ன்னு கேட்டதும் பயந்து போய் அடுத்தது 'சிரியா'ன்னு பதில் சொல்லி இருக்கானுக பாருங்க..
http://timesofindia.indiatimes.com/world/middle-east/Arab-Spring-Libya-over-Syria-next-says-France/articleshow/10445097.cms

suvanappiriyan said...

சலாம் சகோ. ஆசிக்!

//அவரின் மிகப்பெரிய குற்றம், தனக்கு எதிரான தன் நாட்டு மக்களின் கலவரங்ககளை சர்வாதிகார மனதோடு ராணுவம் மூலம் கொன்றொழிக்கும் வேலையில் இறங்கியதால்தான் அவருக்கு இந்த கதி.//

//துனிசிய, எகிப்திய முன்னாள் அதிபர்கள் போல உலகில் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு தப்பித்து வாழ்ந்து கொண்டு இருந்திப்பார் கடாஃபி. அந்த நாடுகள் போல உயிரிழப்புகளும் இந்த அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் லிபியாவில் ஏற்பட்டும் இருந்திருக்காது.//

தனக்கு எதிர்ப்பு கிளம்பிய உடனேயே நீங்கள் சொல்வது போல் ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கலாம். இங்கு தான் கடாபி தவறிழைத்தார். தவறுக்கான தண்டனையையும் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் அமெரிக்கா உதவுவதைத்தான் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

பெயரிலி!
//ஜனநாயகம் தருவது உயிர் பலியற்ற மாற்றங்களை. அதை முஸ்லீம் நாடுகளில் காண இயலாதது வருத்தமான விஷயமே.//

எப்படி..... கருணாநிதி என்ற கொள்ளைக்காரன் போய் ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரி வந்தது போலவா? இருக்கலாம். இந்தியாவிலும் தமிழகத்திலும் உயிர்ப்பலி இல்லை என்றாலும் ஊழலால் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் மேலும் ஏழையாகிறான். ஆக எல்லா ஆட்சி முறைகளிலுமே நல்லவையும் இருக்கிறது கெட்டவையும் இருக்கிறது. பல ஆண்டுகளாக சிறந்த இஸலாமிய ஆட்சி முறையை கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் சவுதி அரசையும் மன்னர் அப்துல்லாவையும் மறந்து விட்டீர்களே!

//அமெரிக்கா முஸ்லீம் நாடானால் என்ன ஆகும்? சர்வாதிகாரம் மலரும். மற்றொரு ஆப்கன் ஆகும். வேறென்ன.//

மற்றொரு சவூதி ஆகும். ஏனெனில் அமெரிக்காவில் அதிகம் படித்தவர்கள் உள்ளதால் குர்ஆனை விளங்கி அதன்படி ஆட்சி நடக்கும். ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கு மூல காரணமே அவர்கள் குர்ஆனை சரியாக விளங்காததும் படிப்பறிவற்ற மக்களாக இருப்பதுவுமே ஆகும்.

suvanappiriyan said...

பெயரிலி!

Arab Spring: Libya over, Syria next, says France

//அட உங்க பதிவை பிரான்சு நாட்டுலயெல்லாம் படிக்கறாங்க போல... நீங்க பதிவுல "லிபிய அதிபரை கொன்றாகி விட்டது....அடுத்து?"-ன்னு கேட்டதும் பயந்து போய் அடுத்தது 'சிரியா'ன்னு பதில் சொல்லி இருக்கானுக பாருங்க..//

ஹா...ஹா...ஹா...

எப்படியோ எகிப்து, துனிசியா, லிபியா போன்ற நாடுகளின் பொம்மை தலைவர்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு அங்கெல்லாம் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்காவும் பிரான்சும் இந்த வகையில் நல்லதையே செய்கின்றன. சிரியாவிலும் அது நடக்கட்டும்.

suvanappiriyan said...

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த ஒரு வாசகர் கடிதம்....

rit.cola (Delhi) replies to Sitaram
13 mins ago (01:19 AM)

Why and how come under Gaddafi...Libya had the highest Human Development Index rank in whole Africa in UNDP's 2010 report? Libya also had least infant mortality rate, lowest unemployment rate. Highest life expectancy. Free education, health, housing, electricity for its people! I'm surprised. (All those who don't believe please Google on Gaddafi and Human Development Report of UNDP 2010). I'm not trying to justify his dictatorship but yes I'm disturbed at this critical situation in Arab World where some nations like Egypt & Tunisia are having peaceful but huge protests against their dictatorships and some like Libya etc are being so called liberated by the military actions done by America and European countries like France and Britain. I have also read that Gaddafi was the biggest buyer of American arms but since last few years he was shifting his country's oil exports more to China, Russia, India etc. He had also been speaking against continuing with dollar as top currency and was trying to convince oil-producing African-Arab countries to start dealing only in gold to sell oil.

Anonymous said...

ஒசாமா நேற்று,இன்று கடாபி, நாளை யாரோ- இவை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அச்சம் தருகின்றன.
அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் உள் நாட்டில் மாற்றம்
கொண்டுவர வேண்டியே நடக்கின்றன,
அமெரிக்காவை இஸ்லாமிய/கிறித்துவ மத சார்புடைய நாடாக மாற்ற அல்ல.
அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் ஆயிரம் குறைகள் இருந்தாலும்
கிறித்துவர் அல்லாதோருக்கு உரிமைகள் தரப்படுகின்றன,தனி மனித
சுதந்திரம்,கருத்து சுதந்திரம் இருக்கிறது, பெண்களுக்கு உடை கட்டுப்பாடுகள் இல்லை.இப்படி பல காரணங்களுக்காக அமெரிக்காவையும்
ஐரோப்பாவையும் ஆதரிக்கலாம், அவை செய்வது எல்லாம் சரியல்ல என்றாலும்.
‘எந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் வளைகுடாவிலிருந்து பணம் வருவதில்லை’
வகாபியிசம் பரவ அப்பணமும் காரணம்
என்று இஸ்லாமியர்களே ஒப்புக்கொள்வார்கள்.இதை அண்மையில் இந்திய சுன்னி முஸ்லீம் அமைப்புகளின் தலைவரே கூறியிருக்கிறார்.