Followers

Showing posts with label சவூதி. Show all posts
Showing posts with label சவூதி. Show all posts

Sunday, February 04, 2018

ரியாத் தமிழ்ச் சங்கத்தில் திருச்சி சிவா அவர்கள்! (1)


ரியாத் தமிழ்ச் சங்கத்தில் திருச்சி சிவா அவர்கள்! (1)

நேற்று ரியாத் தமிழ்ச் சங்கத்தின் விழாவில் திருச்சி சிவா எம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். விழா ஆரம்பமாக திருக்குர்ஆன் ஓதப்பட்டது. பிறகு அதன் தமிழாக்கமும் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு சிறுவர் சிறுமியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அவர்களோடு சேர்ந்து அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களும் தமிழத் தாய் வாழ்த்தை பாடினர். பலரும் பேசி முடித்தவுடன் திருச்சி சிவா அவர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். திருச்சி சிவா அவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்த எனது பார்வையை அடுத்த பதிவில் பார்போம். அதை விட முக்கியமாக எனக்கு இன்னொன்று பார்வையில் பட்டது.

அதாவது திருக்குர்ஆன் ஓதப்படும் போதும் அதன் தமிழ் அர்த்தத்தை வாசித்த போதும் அரங்கத்தில் யாரும் எழுந்திருக்கவில்லை. அதே நேரம் தமிழ்த்தாய் வாழத்து பாடப்படும் போது அரங்கமே எழுந்து நின்றது. அந்த அரங்கத்தில் இருந்தது பெரும்பாலும் இஸ்லாமியர்களே! திருக்குர்ஆன் ஓதப்படும் போது எழுந்திருக்காத இஸ்லாமியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

இஸ்லாத்தைப் பொருத்த வரை எழுந்து நின்று மரியாதை செய்யும் வழக்கம் இல்லை. தற்போது நபிகள் நாயகம் உயிரோடு இருந்து எங்கள் முன்னால் வந்தால் கூட மரியாதை நிமித்தமாக எழுந்திருக்க மாட்டோம். அவ்வாறு எழுந்திருக்கக் கூடாது என்று கட்டளையும் இட்டுச் சென்றுள்ளார். ஒரு மனிதருக்கோ அவர் கொண்டு வந்த மார்க்கத்துக்கோ மரியாதை செய்வதென்பது அதன்படி நடந்து காட்டுவதாகும். எனவேதான் குர்ஆன் ஓதப்படும்போது அதற்காக இஸ்லாமியர்கள் எழுந்திருக்கவில்லை.

ஆனால் தமிழர்களின் மரபு என்பது மரியாதை நிமித்தம் எழுந்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வழக்கத்துக்கு மதிப்பளித்து தமிழ்த்தாய் வாழ்த்து படித்த போது இஸ்லாமியரும் எழுந்து நின்று அந்த வழக்கத்துக்கு மதிப்பளித்தனர். அவ்வாறு எழுந்திருக்கா விட்டாலும் அதனை ஒரு குறையாக நாமும் பார்பதில்லை. தமிழ் இந்துக்களும் பார்பதில்லை.

ஆனால் காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்திருக்காததை நாமும் காணொளியில் கண்டோம். தேசிய கீதத்துக்கு எழுந்து நின்ற விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காததது சமஸ்கிரதத்துக்கு கீழ் தான் தமிழ் இருக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியே ! தமிழ் மொழி ஒரு நீச பாஷை என்று பல காலம் இவருக்கு முன் இருந்தவர்கள் தைரியமாக எழுதியும் வந்துள்ளனர். இஸ்லாமியரின் வழக்கத்தையும் தமிழ் இந்துக்களின் வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கே இதனை இங்கு பதிந்தேன்.....

திருச்சி சிவா அவர்களின் பேச்சுக்களில் எனக்கு பிடித்த சில வார்த்தைகளை அடுத்த பதிவுகளில் பதிகிறேன்.













Monday, September 11, 2017

நீரை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்...!!!

சவுதி அரபியாவில் வெப்பம் கடுமையாக இருப்பதால் சாலைகளில் செல்பவர்களுக்கு குளிர்ந்த நீரை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்...!!!

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் உண்மையான இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்துகொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி (6011)




Thursday, December 24, 2015

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்



நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு வரும் ஞாயிறன்று செல்கிறேன். அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?'

'ஆந்திரா... கர்நூல்' அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

(இது ஒரு மீள் பதிவு)

Friday, October 09, 2015

சவுதி காவலர்களும் நம் நாட்டு காவலர்களும் - ஒரு ஒப்பீடு!





ஒரு சவுதி காவல் துறை உயரதிகாரி இறைவனை தொழ வேண்டிய நேரம் வந்தவுடன் ரோட்டின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு தொழ ஆரம்பித்து விடுகிறார். சவுதியில் இது அன்றாடம் நிகழ்ந்து வரும் நிகழ்வு. இவ்வாறு இறைவனுக்கு பயந்த ஒரு அதிகாரி கண்டிப்பாக லஞ்சம் வாங்க மாட்டார்: பொய் கேசு போட மாட்டார். லாக்அப் மரணங்களை நிகழ்த்த மாட்டார்.

ஆனால் நமது காவல்துறையில் பெரும்பாலான நபர்கள் காக்கி உடையை உடுத்தி விட்டால் வானளாவிய அதிகாரம் வந்து விட்டதாக எண்ணி அனைவரையும் ஒருமையில் அழைக்கின்றனர். பெரும்பாலான காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். லாக்அப் மரணங்களும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இறைவனைப் பற்றிய உண்மையான பயம் இவர்களுக்கு இல்லாததாலேயே இவ்வாறு தாறுமாறாக நடக்கின்றனர்.

சவுதியில் தவறு செய்யும் காவலர்களே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நம் நாட்டைப் போன்று 80 சதவீதம் அழுகி விடவில்லை என்பதையே சொல்ல வந்தேன். உண.மையான இறை பக்தி நம் நாட்டு காவலர்களுக்கும் வந்தால் ஒருக்கால் மாற்றம் வருமோ என்னவோ?

--------------------------------------------------------------

'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல் புகாரி 4918, 6072,6657

'நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது.' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல்: முஸ்லிம் 5109

'ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு இறைவனைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்தி விட்டு அதற்காக இறைவனைப் புகழும் போதும் இறைவன் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திப் படுகிறான்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ்
நூல் முஸ்லிம் 4915

இது போன்று சிறிய விஷயங்களில் கூட நாம் இறைவனை நினைவு கூறுவதால் நமக்குள் மறைந்திருக்கும் ஆணவமும் அகங்காரமும் சிறிது சிறிதாக விலகும்.. இறைவனைப் புகழ்வதால் இறைவனுடைய தகுதி நம்மால் உயர்ந்து விடப் போவதில்லை. இதன் மூலம் நமது தகுதியை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாமே உயர்த்திக் கொள்கிறோம்.

Wednesday, September 16, 2015

வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவு!



சென்ற செப்டம்பர் 11 அன்று நடந்த மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்கு வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகையை வழங்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் சொந்தங்களை இழந்தவர்களுக்கு இந்த பொருளுதவியானது மிக உதவிகரமாக இருக்கும்.

பின் லாடன் குரூப்பின் பாக்கர் பின் லாடன் முதல் முக்கிய அதிகாரிகள் வரை எவரும் நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்காமல் சவுதியை விட்டு வெளியேற முடியாது என்ற கண்டிஷனும் போடப்பட்டுள்ளது.


- இறந்தவர்களின் எண்ணிக்கை : 111

- காயமுற்றவர்கள் : 238+

- இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு - 1 கோடி, 78 லட்ச ருபாய்

- காயமடைந்தவர்களுக்கு - 89 லட்ச ருபாய்

- இந்த நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட மக்கள் கோர்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதை தடுக்காது

- சவுதி அரசு செலவில், இறந்து போனவர்களின் குடும்பத்தினர் இருவர் அடுத்த வருடம் ஹஜ் செய்யலாம்

- இந்த வருடம் ஹஜ் செய்ய முடியாத நிலையில் காயமுற்றவர்கள், அடுத்தவருடம் மன்னரின் விருந்தினராக ஹஜ் செய்யலாம்

- காயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு சவுதியில் தங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள பயண விசா அளிக்கப்படும்

" "என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.

போபாலில் நடந்த விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம் இன்று வரை முழுமையான இழப்பீட்டுத் தொகையை அந்த மக்களுக்கு வழங்கவில்லை. அதே நேரம் விபத்து நடந்த சில நாட்களிலேயே அதற்கு முடிவையும் கண்ட மன்னர் சல்மானுக்கு இறைவன் மேலும் அபிவிருத்தியை தந்தருள்வானாக!

Tuesday, August 25, 2015

அரசு அனுமதி இல்லாமல் ஹஜ் செய்வோர் கவனத்திற்கு!



சவுதியில் வேலை செய்து வருவோர் குறைந்த செலவுதானே என்பதால் ஒவ்வொருவரும் நான்கு முறை ஐந்து முறை ஹஜ் செய்கிறார்கள். இதை பெருமையாக வெளியில் சொல்லவும் செய்கிறார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறைதான் அரசு அனுமதிக்கும் என்பதால் ஆர்வமிகுதியால் சிலர் அரசு அனுமதியின்றி ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடன் இல்லாமல் வசதியுடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும். அதை விடுத்து அரசுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக குறைந்த பணத்தைக் கொடுத்து கள்ளத்தனமாக வண்டிகளில் ஏறி ஹஜ் பயணம் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு உதவி செய்பவர்களுக்கும் ரூம் அமைத்து கூடாரம் அடித்துக் கொடுப்பவர்களுக்கும் சவுதி அரசு 100000 ரியால் அபராதமும் இரண்டு வருட் சிறை தண்டனையையும் கொடுக்கிறது. இந்த வருடம் இதனை கடுமையாக அமுல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு கள்ளத்தனமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் பலருக்கு சிரமத்தை கொடுக்கிறோம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். வெளிநாட்டு ஹஜ் பயணிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல நாள் சிரமப்பட்டு வருகின்றனர். சவுதி அரசு பல நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையையே ஒதுக்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு. கழிவறைக்கு பிரச்னையாகும், குடி தண்ணீருக்கு பிரச்னையாகும், கஃபாவை வலம் வரும் போதும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் கூடும் போது எத்தகைய அசௌகரியங்கள் ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் மேற்கொண்டும் கள்ளத் தனமாக லட்சக் கணக்கில் மக்கள் கூடினால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

எனவே இறைவனும் விரும்பாத சவுதி அரசும் கண்டிப்புடன் கூறியுள்ள கள்ளத் தனமான ஹஜ் பயணத்தை இனியாவது தவிர்போம். தகுதிக்கு மீறி இறைவன் எவரையும் சிரமப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அரசு அனுமதியோடு ஹஜ் செய்வோம். அதுவரை பொறுத்திருப்போம்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
25-08-2015

Monday, August 24, 2015

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்!



கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் கிட்டத் தட்ட 114000 ஹாஜிகள் கஃபாவை வலம் வர முடியும். 76000 ஸ்கொயர் ஃபீட்டில் இந்த விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து விரிவாக்கப்பணிகளும் ஹாஜிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஹஜ் கிரியைகள் முடிந்தவுடன் அக்டோபர் 14 முதல் வழக்கம் போல் விரிவாக்கப் பணிகள் தொடரும் என்று இதற்கான பொறுப்பு அதிகாரி சுல்தான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.....

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2015

Wednesday, August 19, 2015

தாய்லாந்த் ஹாஜிகளின் முதல் குரூப் மதினா வருகை!



18-08-2015 அன்று 1500 பேர் கொண்ட முதல் தாய்லாந்த் ஹாஜிகள் குரூப் மதினா விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த வருடம் தாய்லாந்திலிருந்து மட்டும் 10400 பேர் ஹஜ் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்துள்ளனர். தாய்லாந்த் எம்பாஸியின் மூத்த அதிகாரி தானிஸ் நா சொங்க்லா விமான நிலையம் வந்து தனது நாட்டு ஹாஜிகளை வரவேற்று உபசரித்தார்.

'தாய்லாந்து அரசு ஹாஜிகளின் புனித பயணத்தை மிக முக்கிய நிகழ்வாகக் கருதுகிறது. ஹாஜிகளின் முதல் குரூப்பை வரவேற்கும் வாய்ப்பு பெற்றதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஹாஜிகளின் பயணத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் தங்கள் கடமைகளை செய்ய ஒத்துழைத்து வரும் சவுதி அரசுக்கு தாய்லாந்து அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் நா சொங்க்லா.

தகவல் உதவி
சவுதி கெஜட்
19-08-2015

Monday, August 10, 2015

டிவியில் சீரியல் பார்ப்பதை விட இப்படி முயற்சிக்கலாமே!



அமெரிக்காவில் மேல்படிப்புக்காக சென்ற இந்த பெண்கள் தங்களின் கல்லூரி ஓய்வு நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க திட்டமிட்டனர். அதன்படி இவர்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனமாக பரிணமித்து பல அரிய பணிகளை தங்கள் நாடான சவுதி அரேபியாவில் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் பெயர் Joy of Youth (JOY).

இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலுள்ள வாலா அபு சபீன் கூறுகிறார் 'ஜெத்தாவில் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளோடு வறுமையில் வாடி வரும் ஒரு பெண்ணைப் பற்றி கேள்வி பட்டோம். எங்கள் குழு அங்கு விரைந்தது. 30 பேர் கொண்ட எங்கள் குழு எட்டு மணி நேரம் அந்த வீட்டில் தொடர்ந்து வேலை செய்தோம். உடைந்த மர சாமான்களை சரி செய்துகொடுத்தோம். முழு வீட்டிற்கும் பெயிண்ட் அடித்து புது பொலிவாக்கினோம். பாத் ரூம், சமையல் அறை என்று அனைத்து இடங்களையும் மிக சுத்தமாக துடைத்து அழகாக்கினோம்.

ஆறு பேர் கொண்ட அந்த குடும்பத்துக்கு இவற்றை எல்லாம் செய்து கொடுக்க பெரும் தொகை செலவழிக்க வேண்டி வரும். அந்த ஆறு பேரையும் அவர்களது சொந்தக் காரர்கள் வீட்டில் எட்டு மணி நேரம் தங்க வைத்தோம். அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவர்களை அழைத்து தங்களின் வீட்டை பார்க்க வைத்தோம்' என்கிறார். சயீத் அஸ்கர் என்ற பெண்மணியும் இதனை ஆமோதித்தார்.

சயீத் அஸ்கர் மேலும் கூறும் போது 'இது எங்களுக்கு பெரும் சவாலான பணி. குறைந்த நேரத்தில் ஒரு வீட்டையே மாற்றி அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனை ஒரு சேலஞ்சாகவே எடுத்து செய்தோம். இது போன்று மேலும் பெரிய தொண்டுகளை செய்வதற்கு இது எங்களுக்கு ஒரு பயிற்சி களமாக இருந்தது.' என்கிறார்.

முஹம்மது அஃப்னான் கூறுகிறார் 'எட்டு மணி நேரத்தில் ஒரு வீட்டையே மாற்றி அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. குழுக்களாக பிரித்துக் கொண்டு இதனை செய்வோம். வேலை முடிந்தவுடன் அவர்களிடம் சாவியை கொடுக்கும் போது நன்றிப் பெருக்கால் அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகும். நாங்கள் பட்ட சிரமங்களுக்கு அதுவே கூலியாக எங்களுக்கு தெரியும். இது போன்று வசதியற்ற குடும்பங்களை தேடிச் சென்று உதவி வருகிறோம்' என்கிறார்.

சவுதி பெட்ரோல் பணத்திலேயே சிறு வயதிலிருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட இந்த பெண்மணிகள் வறியவர்க்கு உதவுவதை நோக்கமாக கொண்டு இந்த பணிகளை எடுத்துச் செய்கின்றனர். வறியவர்க்கு பொருளாலும் உடலாலும் உதவுவதை இஸ்லாம் வலியுறுத்துவதால் இவர்களின் பெற்றோரும் இந்த பெண்களை அனுமதிக்கின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
10-08-2015

காலை எட்டு மணியிலிருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து டிவி சீரியல்களாக பார்த்து வரும் நம் தமிழக பெண்கள் இந்த சவுதி பெண்மணிகளைப் போல மாறுவார்களா?

டாஸ்மாக் கடைகளில் மது குடிக்க ஆண்களுக்கு போட்டியாக வரிசையில் நிற்பதை இனியாவது குறைத்துக் கொள்வார்களா?

சவுதி ஏர்லைன்ஸில் கிடைத்த மன மகிழ்ச்சிகள்!





நான்கு மாத தாய் தமிழக விடுப்புக்குப் பின் சவுதி வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தேன். இளைய மகனிடம் விமான நிலையத்தில் விடைபெற்றுக் கொண்டு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் சென்று அமர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் ஒரு சகோதரர் வந்து அமர்ந்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். என்னைப் பற்றி நான் சொல்லும் போது இணையத்தில் 'சுவனப்பிரியன்' என்ற புனைப் பெயரிலும் அவ்வப்போது எழுதி வருகிறேன் என்று சொன்னவுடன் 'அடடே.... நீங்கள் தான் சுவனப்பிரியனா? உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று பல நாட்களாக முயற்சி செய்து வருகிறேன். இறைவன் இன்று உங்களை எனக்கு பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டான்' என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நாகூரை சொந்த ஊராகக் கொண்ட சகோதரர் இத்ரீஸ் அவர்கள் என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். பல முறை இணையத்தின் மூலம் பேசிக் கொண்டாலும் இன்று தான் முதன் முதலாக அவரை நேரில் சந்தித்தேன்.

தனது ஊரான நாகூரில் தற்போது ஏகத்துவ சிந்தனை எந்த அளவு வந்துள்ளது என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார். தனது மகனின் எதிர்கால படிப்புக்காக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க எந்த அளவு சிரமப்பட்டார் என்பதையும் ஆர்வமுடன் சொல்லிக் கொண்டு வந்தார். ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய சமூகத்தில் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை சகோதரர் இத்ரீஸ் அவர்களின் பேச்சு எனக்கு உணர்த்தியது.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே பகல் நேரத் தொழுகையான லுஹரின் நேரம் வரவே இருவரும் தொழுகைக்கு தயாரானோம். பிரயாணத்தில் பகல் நேர மற்றும் மாலை நேர தொழுகைகளை சேர்த்து தொழுது கொள்ள அனுமதி இருப்பதால் இரண்டு தொழுகைகளையும் சேர்த்து தொழுது கொண்டோம்.

ஏர் லங்கா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் அருகில் அமர்ந்திருப்பவர்களிடமிருந்து மதுவின் நெடி குடலை பிரட்டும். பலமுறை இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டு விமானத்தில் பயணிக்கவே ஆசை அதிகம். ஆனால் மதுவின் பிரச்னையால் நமது நாட்டு விமானங்களை கூடிய வரை தவிர்த்து விடுவேன்.

சவுதி ஏர்லைன்ஸில் ஒரு சிறப்பம்சம் பிராயண பிரார்த்தனையோடு 'அல்லாஹூ அக்பர்... இறைவன் பெரியவன்' என்ற முழக்கத்தோடு விமானத்தை எடுப்பர். அடுத்து நாம் தொழுது கொள்வதற்கு என்றே பிரத்யேகமாக இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். அங்கு விமானத்தின் உள் சகோதரர் ஒருவர் தொழுவதைத்தான் பார்க்கிறோம். இதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ள சவுதி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தை பாராட்டுவோம். சவுதி ஏர் லைன்ஸை பின் பற்றி மற்ற விமான சேவை நிறுவனங்களும் தங்கள் விமானத்திலும் மதுவை முற்றாக தவிர்ப்பார்களாக! தொழுவதற்காக பிரத்யேக இடங்களையும் ஏற்படுத்தித் தருவார்களாக!

Tuesday, July 28, 2015

சவுதி அரேபியா நலமுடன் வந்து சேர்ந்தேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்!

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக!

தாய் தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களை கழித்த பின் இறைவன் அருளால் நலமுடன் சவுதி அரேபியா வந்து சேர்ந்தேன். தொடர்ந்த வேலை காரணமாக முகநூல் பக்கம் வர இயலவில்லை. இனி வேலையை அனுசரித்து அவ்வப்போது இணையத்தின் பக்கம் வருவேன் இறைவன் நாடினால்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, July 18, 2015

நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!



நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!

'நோயாளிகளின் நண்பர்கள் குழு' என்ற அமைப்பு மருத்துவ மனைக்கு விஜயம் புரிந்தது. துப்புறவு தொழிலாளர்கள் பலர் வாகன விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து 20 மேற்பட்ட விலையுயர்ந்த மொபைல் போன்களையும் வேறு சில பொருட்களையும் அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தனர் இந்த அமைப்பினர்..

இந்த வேலை செய்பவர்களை நம் நாட்டில் 'தோட்டிகள்' என்று இழிவாக பார்த்து அவர்களை கீழ் சாதியாக ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் இந்த அரபுகள் உழைப்பதில் எந்த இழிவும் இல்லை என்பதை உணர்ந்து அந்த மக்களை பெருநாள் தினத்தன்று மருத்துவ மனைக்கே சென்று நலம் விசாரித்த பண்பு பாராட்டத் தக்கது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
18-07-2015

பெருநாள் தினத்தன்று மாலை நேரங்களில் பெரும்பாலான சவுதிகள் குடும்பம் சகிதமாக நோய் வாய் பட்டவர்களை நலம் விசாரிக்க சென்று விடுவர். இதனை நான் நேரிலேயெ பார்த்துள்ளேன். இந்த பழக்கத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.

நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில்

”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

நூல் ஆதாரம்:(ஸஹீஹ் முஸ்லிம்)

Thursday, July 16, 2015

ஒரு மில்லியன் மக்கள் கஃபாவில் தொழுகையில் ஈடுபட்டனர்










ஏறத்தாழ ஒரு மில்லியன் உலக முஸ்லிம்கள் இறை இல்லமான கஃபாவிலும், மதினா ஹரமிலும் தங்களின் இறைக் கட்டளையான இரவுத் தொழுகையை நிறைவேற்றிய போது எடுத்த படம்.

சத்தமில்லாத புரட்சி!

ஆர்ப்பாட்டமில்லாத இறை வழிபாடு!........

உலக மீடியாக்கள் மறைத்தாலும் அதையும் மீறி வெளி வரும் செய்திகள்.....

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதிகெஜட்
16-07-2015

Wednesday, July 15, 2015

கண் பார்வையற்றவர்கள் கூட்டாக செய்த உம்ரா புனித பயணம்!



World Assembly of Muslim Youth (WAMY) 'வாமி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஜெத்தாவிலிருந்து 22 கண் பார்வையற்றவர்கள் புனித உம்ரா பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த அமைப்பின் டைரக்டர் முஹம்மத் அல் ஜஹ்ரானி கூறும் போது 'இவ்வாறான நிகழ்ச்சிகள் வருடம் முழுக்க நடத்த திட்டமிட்டுள்ளோம். இது போன்ற நிகழ்வுகள் குறையுடைய மக்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலரிடமிருந்து நிறைய கோரிக்கைகளும் வந்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செய்ய திட்டமிட்டுள்ளோம்.' என்று கூறினார்.

இறைவன் இந்த குறையுடைய மக்களின் உம்ரா பயணத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய கூலியைத் தருவானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
09-07-2015

Wednesday, July 08, 2015

இஃப்தார் உணவு வழங்கலில் அமெரிக்க மாணவர்கள்!



அமெரிக்காவில் கல்லூரியில் பாடங்கள் பயின்று வரும் சவுதி மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க ரமலானுக்கு கூட்டாக சவுதி வருகை புரிந்தனர். மாலை நேரங்களில் நோன்பு திறப்பவர்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கும் பணியில் தாங்களாகவே முன் வந்து சேவையில் ஈடுபட்டனர். ஏழைகளுக்கு உணவு உடை போன்றவற்றையும் இலவசமாக வழங்கினர்.

நம் நாட்டு கல்லூரி மாணவர்களும் இதனை பின்பற்றலாமே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
07-07-2015

Tuesday, July 07, 2015

என் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிய தருணங்கள்!



எனது பழைய நண்பர். நான் கணிணி கற்றுக் கொள்ள ரியாத்தில் உள்ள எனது ரூமுக்கே வந்து இலவசமாக பாடம் எடுத்தவர். ஒரு நாள் சவுதியின் ரியாத் நகரில் ரமலான் மாதத்தில் ரோட்டை க்ராஸ் செய்த போது வாகனம் மோதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . விஷயம் கேள்விப் பட்டவுடன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன். உயிர் பிரிந்தது. மறு நாள் எனது நண்பனின் உடலை நஸீம் மைய வாடியில் அடக்கம் செய்து விட்டு வந்தோம்.

எனது நண்பனுக்கு இரண்டு குழந்தைகள். நண்பனின் மனைவிக்கு ஓரிரு வருடத்தில் வேறொரு நல்ல மணமகனைப் பார்த்து மறுமணம் செய்து கொடுத்து விட்டனர். தற்போது நண்பனின் மனைவியும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். ஆனால் நண்பனின் தாயாரும் அவரது தங்கையும் தனியாக வீட்டில் உள்ளனர். தந்தை இறந்து விட்டார். இதை எல்லாம் கேள்விப்பட்ட நண்பனின் ஓனர் (கபில்) வருடாவருடம் ரமலானில் தாயாருக்கு பணம் அனுப்புவார். வேலை செய்யும் நாட்களில் மிகவும் சிரத்தையாக வேலை செய்து கம்பெனியை முன்னுக்கு கொண்டு வந்ததால் எனது நண்பனின் மீது மிகுந்த பாசம். இறந்தவுடன் பல லட்சங்களை தாயார் பெயருக்கு அனுப்பி வைத்தார். அது அல்லாமல் வருடாவருடம் ரமலானில் பண உதவி செய்வார். என் மூலமாகத்தான் அந்த பணம் தாயாரை சென்றடையும். நான் சவுதியில் இருக்கும் போது எனது தாயாருக்கு அனுப்பி பணத்தை கொடுக்கச் சொல்வேன். அது போல் இந்த முறையும் ரமலானில் பணம் வந்தது. 17000 ஆயிரம் இந்திய ரூபாய் எனது பெயருக்கு வந்தது.

தற்போது ஊரில் இருப்பதால் சவுதி முதலாளி கொடுத்த பணத்தை நானே நேரில் சென்று அந்த தாயிடம் எனது கையால் கொடுத்தேன்.. மகனை நினைத்து அழுதார். எனக்கும் கண் கலங்கியது. 'உங்களை எல்லாம் பார்க்கும் போது இறந்து போன எனது மகனைப் பார்ப்பது போல் உள்ளது. அடிக்கடி வந்து போய்க் கொண்டிருங்கள்' என்று விடை கொடுத்தார். கனத்த மனத்தோடு எனது நண்பனின் வீட்டிலிருந்து வெளியேறினேன்.

எத்தனையோ பணம் படைத்தவர்கள் சம்பளம் தராது ஏமாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் பல வருடங்களுக்கு முன்பு இறந்த ஒரு தொழிலாளிக்காக இன்றும் மறக்காமல் பண உதவி செய்து வரும் அந்த அரபியை நினைத்துப் பார்தேன். இறைவனிடம் இது போன்று பலருக்கும் தயாள குணத்தை தந்துதவும்படி பிரார்த்தித்தேன்.

"நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம் “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்”

(அல்-குர்ஆன் 63:9,10)

Friday, July 03, 2015

சவுதி அரசு தெரு பிச்சைக்காரர்களை கைது செய்து வருகிறது!



சவுதி அரேபியாவில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரிக்கிறதால் அவர்களை அரசு கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்து கண்டித்து அனுப்புகிறது. தெருக்களில், சிக்னல்களில் சிறுவர்களையும் சிறுமிகளையும் ஆப்ரிக்க நாட்டவர் உலாவ விட்டு நிறைய பணம் பண்ணுகிறார்கள். இது போன்று சில்லரையை மாற்றி வைத்துக் கொண்டு வரிசையாக 100 பேருக்கு போடும் பழக்கம் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. எனவேதான் சவுதியின் தலைமை முஃப்தி அப்துல் அஜீஸ் அல் ஷேக் இவ்வாறாக சிக்னலில் நிற்கும் பிச்சைக் காரர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று பொது மக்களுக்கு தடை விதித்துள்ளார்.

இது போன்று 100 பெருக்கு விநியோகிப்பதை விட 5 பேரையோ அல்லது ஒருவரையோ தேர்ந்தெடுத்து அவரை பிச்சைக்கார தொழிலிலிருந்து விடுவிக்க வேண்டும். எனது ஓனர் இவ்வாறு பணம் கேட்டு யாராவது வந்தால் 'என்னிடம் வேலை இருக்கிறது செய்கிறாயா?' என்று கேட்பார். சிலர் ஒத்துக் கொண்டு வேலை செய்வர். சிலர் விருப்பமில்லாமல் பணம் வாங்காமலும் சென்று விடுவர். இது ஒரு சிறந்த நடைமுறை.

தற்போது தமிழகத்தில் எங்கள் கிராமத்திலும் பிச்சைக்காரர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. ஜகாத், ஃபித்ரா என்ற நடைமுறையை முன்பு பெரும்பாலான இஸ்லாமியர்கள் விளங்காமல் இருந்தனர். தற்போது வருமானம் ஈட்டுவதிலிருந்து கணக்கு பண்ணி தரப்படும் பணம் யாரை சென்று அடைய வேண்டும் என்பதை அதிக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர். எனவே அவர்கள் வீடு தேடி சென்று கொடுத்து விடுகின்றனர்.

10000, 20000 ஆயிரம் என்று குறிப்பிட்ட ஒரு ஏழைக்கு கொடுத்து அவருக்கு ஒரு சிறு தொழிலை நாமே அமைத்துக் கொடுக்க வேண்டும். அவரை நமது கண்காணிப்பில் வைத்திருந்தால் பிச்சை எடுக்கும் தொழிலையும் நாட மாட்டார். ஒரு பிச்சைக்காரரை கௌரவமான உழைக்கும் மனிதனாக மாற்றிய பெருமையையும் நாம் பெறுவோம். 'பைத்துல் மால்' என்ற பொது திட்டத்தை அமுல்படுத்தி அனைவரின் ஜகாத்தையும் ஒருமுகப்படுத்தி பல ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குவோம். எங்கள் கிராமத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

எனவே இந்த ரமலானில் நமது பொருளாதாரம் ஒரு ஏழையையாவது தூக்கி விடக் கூடிய வகையில் அமைய வேண்டும். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதனைத்தான்.

சவுதியில் பாறை நகருகிறதாம் - தினகரனின் புருடா.... :-)



ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் மட்டும் சுமார் 30 நிமிடங்களுக்கு மிதக்கும் விசித்திர பாறை !!

சவுதி அரேபியாவில் AL-Hassa பகுதியில் ஒரு பெரிய பாறையொன்று ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சுமார் 30 நிமிடங்களுக்கு தரையிலிருந்து 11 செண்டி மீட்டர் உயரத்தில் மிதக்கிறதாம். 1989ல் ஏப்ரல் மாதம் அதாவது 17 வருஷத்துக்கு முன்பு இந்த பாறைக்கு பின்னால் ஒரு தீவிரவாதி ஒளிஞ்சிருந்ததாகவும் அவனை போலீசார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக கூறுகின்றனர்.இப்பவும் அந்த பாறையில் ரத்தக்கறைகளை கானலாமெனவும், கல் மேலே உயரும் போது அந்த கறை கறுத்து ஈரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊர் மக்கள் அதை அழிக்க முயன்றதாகவும்... அழித்தாலும் அது பின்னர் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.

தகவல் உதவி
தினகரன் நாளிதழ்

சுத்த பொய். ஒரு சிறந்த நாளிதழ் இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிடலாமா? இஸ்லாத்தை மேன்மைபடுத்தி எத்தனையோ செய்திகள் தினம் வந்து கொண்டிருக்க இந்த செய்தியை தேடிப் பிடித்து போடுவதன் மூலம் இஸ்லாம் பத்தோடு பதினொன்று என்பதை வாசகர்களுக்கு காட்டி முட்டாளாக்குவதானேயொழிய வேறொன்றுமில்லை.

சவுதி அரேபியாவில் 25 வருடம் வேலை பார்க்கும் எனக்கு இந்த செய்தியை யாரும் சொன்னதில்லை. அல் ஹஸாவுக்கும் சென்றுள்ளேன். அப்படி ஒரு பாறையை நான் கண்டதில்லை. அதற்கு சொல்லப்பட்ட கதையையும் நான் கேட்டதில்லை. இணைய தளத்தில் போட்டதை எடுத்து தினகரன் போட்டுள்ளது. அதற்கு சவுதி அரசின் ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

வெப்ப விரிசலால் சில நேரம் பாறைகள் விரிவடைவதால் சிறிது அசைவுகள் ஏற்படலாம். இது நம் நாட்டிலும் ஏற்படும். நகரும் கற்களை நாமும் படித்திருக்கிறோம். அதற்கு அறிவியல் காரணங்கள் உண்டு. அது போன்று ஆய்வு செய்து போடாமல் இஸ்லாத்தின் பெயரால் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதை தினகரன் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

http://www.dinakaran.com/Gallery_Detail.asp…

Sunday, June 28, 2015

ஏமன் அகதிகளுக்கு சவுதி அரேபியாவின் நிவாரணப் பணிகள்!



சவுதி அரேபிய மன்னர் சல்மான் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஏமன் அகதிகளுக்கான உதவிகளை செய்தது. முதல் கட்டமாக 50000 உணவு பொட்டலங்களும் 40000 பிரட் பாக்கெட்டுகளும் நூற்றுக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்களும் மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களும் மனிதாபிமான முறையில் வழங்கப்பட்டன.

சவுதி ஏமன் பார்டரில் உள்ள அல் வதீயா செக் பாயிண்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கே இந்த நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் பணியானது ஏமனில் நிலைமை சீராகும் வரை தொடர்ந்து நடைபெறும் என்று இதற்கான பொறுப்பதிகாரி ரஃபா அல் சபா தெரிவித்தார்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
20-06-2015

Monday, June 22, 2015

மதினா அமீர் ஃபைஸல் சாமான்யர்களோடு நோன்பு திறப்பு!



புனித மதினாவின் அமீர் ஃபைஸல் பின் சல்மான் செக்யூரிடி நபர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்த காட்சி. சவுதி ஆட்சியாளர்கள் அனைவரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயணிப்பது மக்களோடு மக்களாக. மக்களாட்சியோ மன்னராட்சியோ எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அதனால் மக்கள் பயன் பெற வேண்டும். நம் நாட்டில் நடப்பது மக்களாட்சியாக இருந்தாலும் அதனால் சாமான்யன் எந்த பலனையும் அடைய முடியவில்லை. அரசியல் வாதிகளின் வாரிசுகள்தான் கோடி கோடியாக சொத்து சேர்க்கின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-06-2015