Followers

Monday, October 31, 2011

பாகிஸ்தானில் புராதன இந்து கோயில் திறப்பு!




இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள பெஷாவர் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் 160 ஆண்டுகள் பழமையான கோரக்நாத் கோவில், பெஷாவர் கோர்ட்டின் உத்தரவின் படி திறக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், அங்குள்ள இந்துக்கள் புத்தாடைகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர். சிறுவர்கள் வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். இளைய தலைமுறையினர் பஜனை பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல், அவற்றிற்கேற்ப நடனமாடினர். இந்த கோவிலுக்கு 2 தரப்பினர் உரிமை கொண்டாடியதன் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, இந்த கோவில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-தின மலர்
31-10-2011
---------------------------------------------------------------------------------
10/31/2011 17:22:5
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து கோயில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோர் கூத்ரி பகுதியில் உள்ள இந்த கோயிலில் இந்து சமூகத்தினர் தீபாவளி கொண்டாடியதாகவும் அந்த பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. வழிபாட்டுக்காக கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதில் அந்த கோயில் அர்ச்சகர் ஒருவரின் பேத்தியான காம்லா ராணி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், எனது தாய் வயதாகிவிட்டாலும் கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். தற்போது கோயில் திறக்கப்பட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
--தினகரன்
----------------------------------------------------------------------------


PESHAWAR:
Despite the fact that they probably will not be given control of the property, the Hindu community in Peshawar rejoiced at the Peshawar High Court’s (PHC) orders to reopen a 160-year-old Hindu temple.
On September 15, after hearing a Hindu woman Phool Vatte’s plea, a two-member bench of the PHC directed the authorities to open up the historic Goraknath Temple, situated in the centre of the city’s archeological complex of Gor Kattri, for worship. The court also directed authorities to ensure security arrangements at the place of worship, adding that the control of the property would remain with the government.
However, nearly a week after the PHC’s orders, the shrine which has remained closed since partition is yet to be opened.
The temple belonged to Vatte’s husband Pandit Kambhu Ram, who at the time of partition sent an application to the settlement commissioner saying he would not shift to India and would stay in Pakistan and that his land should not be made waqf property, following which an order was issued by the settlement department, Vatte’s attorney Pervez Iqbal told The Express Tribune.
However, he said that the police later asked Vatte for permission to use the temple and its adjacent building for storing explosives, which she granted but had to struggle to regain its possession in 2002. Soon after, the police detained her son Kaka Ram and the Peshawar Development Authority (PDA) locked up the premises.
Pervez alleged that the police took away statues worth millions of rupees, a table estimated to be around Rs10.5 million and gold embellishments from the dome. He said that in 2003 they moved the Peshawar High Court with a petition which was rejected, after which they turned to civil court, where their case was rejected once again and they were told to approach the Evacuee Property Board (EVP). They were unable to go to the EVP due to financial constraints.
“Instead, what we did was, we wrote an application to the Supreme Court chief justice, the PHC chief justice and other functionaries which was when the PHC chief justice turned the application into a petition on a suo motu and allowed for worship to be carried out at the temple,” Pervez said.
The temple is an archeological site and hence, its control cannot be handed over to a private party, Dr Abdul Samad, consultant to the K-P Department of Archeology told The Express Tribune. The Hindu community can perform their worship anytime. However, the keys will not be handed over to them, he added.

Published in The Express Tribune, September 22nd, 2011.

---------------------------------------------------------------

Pakistan to re-open 160-year-old Hindu temple
September 23, 2011 9:01 pm
Peshawar: The Peshawar High Court’s has ordered the reopening of the 160-year-old Goraknath Temple to allow devotees to worship. The court also directed the Pakistan Government to take control of the temple that is situated in the centre of the Gor Kattri Archaeological Complex in Peshwar.
It also directed the authorities to ensure adequate security at the temple, the Express Tribune reports.
The court gave the order after hearing a Hindu woman Phool Vatte’s plea, whose husband Pandit Kambhu Ram owned the temple and had pleaded that his land should not be made Waqf property during the partition of the Indian sub-continent.
Vatte’s attorney, Pervez Iqbal, said the owner allowed the police to use the temple and its adjacent building for storing explosives, but had to struggle to regain its possession in 2002.
He said the earlier petitions seeking worship at the temple were rejected by the Peshawar High Court and a civil court.
“Instead, what we did was, we wrote an application to the Supreme Court chief justice, the PHC chief justice and other functionaries which was when the PHC chief justice turned the application into a petition on a suo motu and allowed for worship to be carried out at the temple,” Iqbal said.
A consultant to the Kyber Pakhtunkhwa Archaeological Department, Dr Abdul Samad, said the temple ownership cannot handed over to a private party as it is an archaeological site.

---------------------------------------------------------

இஸ்லாமிய நாடாகப் பார்க்கப்படும் பாகிஸ்தானில் மூடப்பட்ட இந்து புராதன கோவில் வழிபாட்டுக்காக திறந்து விடச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டு அங்கு வழிபாடும் நடக்கிறது. அதே சமயம் 800 ஆண்டுகளுக்கும் முன்பாக அயோத்தியில் தொழுகை நடத்தப்பட்ட பாபர் மசூதியை நேரம் குறித்து இடிக்கின்றனர். அதை அரசும் ராணுவமும் வேடிக்கை பார்த்து விட்டு இன்று வரை அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காமல் இருக்கிறது. ராமன் என்ற கற்பனை பாத்திரத்துக்கு கடவுள் அந்தஸ்தை கொடுத்து பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் எங்கள் ராமர் பிறந்தார் என்று அடம் பிடிக்கிறது ஒரு கூட்டம். இதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் எங்களின் நம்பிக்கைதான் ஆதாரம் என்று பதில் வருகிறது. இதில் நமது நாடு மதசார்பற்ற நாடாம்! மசூதியை இடித்த அத்வானிதான் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராம்.

வாழ்க ஜனநாயகம்.

அதே போல் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் இந்துக்கள் தங்களின் தெய்வங்களை வணங்குவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற ரீதியிலும் அப்பாவி இந்துக்கள் மனதில் விஷத்தை விதைக்கப்படுகிறது. இவர்கள் கூறும் இந்த கூற்றிலும் உண்மையில்லை என்பதையே இஸ்லாமிய நாடான பாகிஸதானில் அண்மையில் நடந்த கோவில் கும்பாபிசேகம் நமக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

19 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிகவும் அவசியமான பதிவு.

இந்த பதிவுக்கு தலைப்பை நீங்கள் இப்படி வைத்து இருந்திருக்கலாம்..!

""மதச்சார்பற்ற இந்திய ஹிந்துத்துவாவாதிகளுக்கு
மதச்சார்புள்ள பாகிஸ்தான் கொடுத்த செருப்படி""

Unknown said...

அடேங்கப்பா. எல்லா முஸ்லீமும் நல்லவங்கன்னு நீங்க எழுதினத பாத்து புல்லரிச்சுப்போயிட்டேன்

suvanappiriyan said...

சலாம் சகோ. ஆசிக்!

//இந்த பதிவுக்கு தலைப்பை நீங்கள் இப்படி வைத்து இருந்திருக்கலாம்..!

""மதச்சார்பற்ற இந்திய ஹிந்துத்துவாவாதிகளுக்கு
மதச்சார்புள்ள பாகிஸ்தான் கொடுத்த செருப்படி""//

சரியான வார்த்தை. வருகைக்ககும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//அடேங்கப்பா. எல்லா முஸ்லீமும் நல்லவங்கன்னு நீங்க எழுதினத பாத்து புல்லரிச்சுப்போயிட்டேன்//

அப்படி நான் எங்குமே எழுதவில்லையே! எல்லா மதததிலும் நல்லர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆனின் கட்டளைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தால் பிரசாரத்துக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும்.

'சாத்தான் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்'
-குர்ஆன் 114:5

'இறைவனை அஞ்சிக் கொள்' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது.
-குர்ஆன் 2:206

suvanappiriyan said...

வால்பையன்!

//சுவனபிரியன் என்ன சொல்ல வருகிறார், அரபிமொழியே இஸ்லாமிற்கு சொந்தம் என்றா?

அப்படியானால் இஸ்லாத்துக்கு முன் அரபிமொழியே இல்லையா?//

ஒரு முஸ்லிம் அரபியில் பெயர் வைப்பது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் வேறு மொழிகளில் அதாவது தங்களின் தாய் மொழிகளில் பெயர் வைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதைத்தான் சொல்ல வந்தேன். சுவனப்பிரியன், அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம் போன்ற அழகிய தமிழ் பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் முருகன், கணபதி, ராமன், ஏசு, போன்ற கடவுளாக மற்றவர்களால் சித்தரிக்கப்படும் பெயர்களை வைப்பதைத்தான் இஸ்லாம் கண்டிக்கிறது. தமிழைப் போலவே தொன்மையான மொழிகளில் ஒன்று அரபி. முகமது நபி இஸ்லாத்தை சொல்வதற்கு முன்பே அரபு மொழி சிறந்து விளங்கியது. பல பாடல்களும் இயற்றப்பட்டுள்ளது. பெரும் கவிஞர்களும் இருந்துள்ளார்கள்.

இப்றாஹீம்(ஆப்ரஹாம்) என்ற பெயர் அராபிய பெயர் அல்ல. ஆனால் முஸ்லிம்கள் பரவலாக வைக்கின்றனர்.

சார்வாகன் said...

ஸலாம் நண்பரே!
//""மதச்சார்பற்ற இந்திய ஹிந்துத்துவாவாதிகளுக்கு
மதச்சார்புள்ள பாகிஸ்தான் கொடுத்த செருப்படி//
இந்த செருப்படிக்கு அரபியில் என்ன வார்த்தை? இது அடிக்கடி இஸ்லாமிய பிரச்சாரகர்களால் பயன்படுத்தப்படுவதால் மார்க்கத்தில்(?) கட்டாயம் சொல்ல வேண்டிய வார்த்தையாக்த்தான் இருக்க வேண்டும்.குரான்& (சஹீஹ்)ஹதிஸில் இதற்கு ஆதாரம் உண்டா என்று ஒரு பதிவிடவும்!. நீங்கள் 1000 பதிவு போடுவதை விட நண்பரின் ஒரு வரி பின்னூட்டம் சிறப்பாக விளக்கி விட்டது. அழகிய முறையில் விளக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்& பாராட்டுகள்!!!!!!!!

1.பாகிஸ்தான் செய்தது நல்ல விஷயம்தான் .அங்கு இன்னும் அஹமதியாக்கள் அந்நாட்டின் சட்டப்படி முஸ்லிம்கள் அல்ல என்பது மாற்றப் படுவதும் எதிர்பார்க்கலாமா?

2.பாகிஸ்தான் செய்ததை முன் மாதிரியாக் கொண்டு சவுதி உட்பட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அனைத்து மததினரும் வழிபட தலங்கள் அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கலாமா?

3.இஸ்லாமில் இருந்து வேறு மதம் மாறினால் மரண தண்டனை எனும் சட்டம் மாறும் என எதிர்பார்க்கலாமா?

நன்றி

Anonymous said...

""மதச்சார்பற்ற இந்திய ஹிந்துத்துவாவாதிகளுக்கு
மதச்சார்புள்ள பாகிஸ்தான் கொடுத்த செருப்படி""//

விரைவில் உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்காகவே பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பெற்ற புண்ணிய பூமியாம் அரேபியாவில் இந்து கோயிலோ அல்லது இடிக்கப்பட்ட புராதன யூத கோயிலே திறக்கப்பட்டு "மதச்சார்புள்ள அரேபியா கொடுத்த செருப்படி"" என தலைப்பு வைக்க உமக்கு வாய்ப்பு வர வேண்டும் என அல்லாவை வேண்டுகிறோம்,இன்ஷா அல்லாஹ்!

suvanappiriyan said...

ஐ.நா., : யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் முழு நேர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்துடன் அமெரிக்கா வழங்கும் பல ஆயிரம் கோடி டாலர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.

ஐ.நா.,கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவில் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பாலஸ்தீனம் உறுப்பினராக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. இதற்கு இந்தியா உள்பல பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் இங்கு நடந்த ஓட்டெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு போதிய ஆதரவு ( 107 ஓட்டுக்கள் ) விழுந்தன, மொத்தம் இந்த அமைப்பில் 173 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த வெற்றிக்கு பாலஸ்தீன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அமெரிக்ககா மற்றும் இஸ்ரேல் கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நவம்பர் மாதம் வழங்க வேண்டிய 60 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா நிறுத்த முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டு முழுவதும் வழங்கும் மொத்த தொகையான 80 பில்லியன் டாலர் தொகையை நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவிற்கு கிடைக்கும் நிதியில் அமெரிக்கா பெருமளவில் ( 45 சதம் வரை ) தரும் நாடாக இருந்துள்ள வேளையில் இது பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் வாய்ப்புகளை இது பாதிக்கும் என்று இஸ்ரேல் தனது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டுள்ளது. மேலும் சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையைமுன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிராக இருக்கும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-Dinamalar
1-11-2011

suvanappiriyan said...

சார்வாகன்!

//இது அடிக்கடி இஸ்லாமிய பிரச்சாரகர்களால் பயன்படுத்தப்படுவதால் மார்க்கத்தில்(?) கட்டாயம் சொல்ல வேண்டிய வார்த்தையாக்த்தான் இருக்க வேண்டும். குரான்& (சஹீஹ்)ஹதிஸில் இதற்கு ஆதாரம் உண்டா என்று ஒரு பதிவிடவும்!. நீங்கள் 1000 பதிவு போடுவதை விட நண்பரின் ஒரு வரி பின்னூட்டம் சிறப்பாக விளக்கி விட்டது. அழகிய முறையில் விளக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்& பாராட்டுகள்!!!!!!!!//

அரபு நாடுகளில் 'செருப்பால் அடிப்பேன்' என்று சண்டையில் எவரும் சொல்லும் வழக்கமில்லை. இந்த வார்த்தை நம் நாட்டில்தான் பிரபலம். மதசார்பற்ற நாடு என்று பெருமைபட்டுக் கொள்கிறோம். எந்த தொல்லியல் ஆதாரமும் இல்லாமல் ஒரு கூட்டம் 'இது ராமர் பிறந்த பூமி' என்று புராதன பள்ளிவாசலை இடிக்கிறது. தற்போது கோர்ட்டும் அநியாயக்காரர்களுக்கு ஓரளவு சாதகமாகவே தீர்ப்பு வழங்குகிறது. இதன் தீவிரத்தை விளக்குவதற்காகவே நண்பர் ஆசிக் அந்த வார்த்தையை பயன்படுத்தினார். இன்றும் மசூதியை இடித்தது சரிதான் என்று வாதிடுபவர்களுக்காக சொன்னது அந்த வார்த்தை.

//1.பாகிஸ்தான் செய்தது நல்ல விஷயம்தான் .அங்கு இன்னும் அஹமதியாக்கள் அந்நாட்டின் சட்டப்படி முஸ்லிம்கள் அல்ல என்பது மாற்றப் படுவதும் எதிர்பார்க்கலாமா?//

அது எப்படி? முகமது நபிக்கு பிறகு வேறு நபி கிடையாது என்பது குர்ஆனின் கட்டளை. அதற்கு மாற்றமாக 'நான்தான் கடைசி நபி' என்று அஹமதியாக்களின் தலைவன் சொன்னால் அதை இஸ்லாமிய வரமபிற்குள் எப்படி கொண்டு வர முடியும்? அஹமதியாக்கள் சிறுபான்மை மதப்பிரிவாகவே தொடர்ந்து இருப்பார்கள்.
//2.பாகிஸ்தான் செய்ததை முன் மாதிரியாக் கொண்டு சவுதி உட்பட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அனைத்து மததினரும் வழிபட தலங்கள் அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கலாமா?//

சவுதி ஒரு இஸ்லாமிய நாடு. இந்த நாட்டின் சட்டதிட்டத்தின்படி இங்கு வேறு மதத்தின் வழிபாட்டுத்தலங்கள் கட்ட முடியாது. 100 சதவீதம் இஸ்லாமியர்களை கொண்டது சவுதி அரேபியா. அதே சமயம் சிரியா, பாலஸ்தீனம், துருக்கி, எகிப்து போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்யாக உள்ள நாடுகளில் சிறுபான்மையினரான கிறித்தவர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை கட்டி வழிபட்டு வருகிறார்கள். எந்த பிரச்னையும் இல்லை.
//3.இஸ்லாமில் இருந்து வேறு மதம் மாறினால் மரண தண்டனை எனும் சட்டம் மாறும் என எதிர்பார்க்கலாமா?//

குர்ஆனில் இதற்கு தண்டனையாக எங்கும் சொல்லப்படவில்லை. இது விஷயத்தில் அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டு.

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
/அரபு நாடுகளில் 'செருப்பால் அடிப்பேன்' என்று சண்டையில் எவரும் சொல்லும் வழக்கமில்லை/
இந்த செருப்படி குறித்து புஹாரி ஹதிதுகளில் தேடினோம்
What is this?

_____________
2316. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
"நுஐமான் அல்லது அவரின் மகன் மது அருந்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்! நாங்கள் செருப்புகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்."
Volume :2 Book :40

2691. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம், 'தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், 'தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது" என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்" என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, 'மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்" (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.
Volume :3 Book :53
விளக்குங்கள்
நன்றி

சார்வாகன் said...

ஸலாம் சுவனன்(செல்லமாக)

1./அஹமதியாக்கள் சிறுபான்மை மதப்பிரிவாகவே தொடர்ந்து இருப்பார்கள்/
உங்க‌ளிட‌ம் பிடித்த‌ விஷ‌ய‌மே உண்மையை உர‌க்க‌ கூறுவ‌தே!. இது மத உட் பூசல்.எனக்கு கருத்து இல்லை.ந‌ன்று

2/சவுதி ஒரு இஸ்லாமிய நாடு. இந்த நாட்டின் சட்டதிட்டத்தின்படி இங்கு வேறு மதத்தின் வழிபாட்டுத்தலங்கள் கட்ட முடியாது. 100 சதவீதம் இஸ்லாமியர்களை கொண்டது சவுதி அரேபியா/
இந்தியாவில் கூட‌ 1300 ஆண்டுக‌ளுக்கு முன் இஸ்லாம் கிடையாது.99% இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌த‌ம் மாறிய‌வ‌ர்க‌ளே!!!!!!!!!!.அது போல்
ஒரு வேளை கொஞ்ச‌ம் சவுதிக‌ள் இந்துக்க‌ளாக‌ மாறுகிறார்க‌ள் எனில்
அங்கு இந்து கோவில்கள் கட்டிக் கொள்ளலாம் அல்லவா!!!!!!!.

நமக்கு யூதம் ,கிறித்தவம் ,இஸ்லாம் இவற்றிடையே வித்தியாசம் பார்ப்பது கிடையாது.எல்லாம் ஒன்றுதான்.மத்திய கிழக்கில் ஒரு இஸ்லாமிய ஆண் கிறித்தவ பெண்ணை மண முடிப்பது மிக சாதாரணமான் ஒன்று.இஸ்லாம் கிறித்த்வ ,யூதர்களுக்கு சில உரிமைகளை வழங்குவதும் அறிவேன்.ஆகவே கிறித்தவ்ரகள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்வது பெரிய விஷயமில்லை.இந்த இஸ்ரேல் மட்டும் உருவாகமல் இருந்திருந்தால் யூதர்களுமே மத்திய கிழக்கின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கலாம்.ஆபிரஹாமின் பேரன்கள் ஒற்றுமையாக இருப்பது பெரிய காரிய‌மல்ல!!!!!!!!!!!.
நீங்கள் இந்து,புத்த ,இறைமறுப்பாளர்களுக்கு சவுதியில் ஒரு வழி சொல்லுங்கள்.
/குர்ஆனில் இதற்கு தண்டனையாக எங்கும் சொல்லப்படவில்லை/
இஸ்லாமில் இருந்து மதம் மாறுவதற்கு மரண தண்டனை ச‌வுதியில் ந‌டைமுறை ஷாரியாவில் இருக்கிற‌தா ?!!!
ந‌ன்றி

suvanappiriyan said...

சார்வாகன்!

//இந்தியாவில் கூட‌ 1300 ஆண்டுக‌ளுக்கு முன் இஸ்லாம் கிடையாது.99% இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌த‌ம் மாறிய‌வ‌ர்க‌ளே!!!!!!!!!!.அது போல்
ஒரு வேளை கொஞ்ச‌ம் சவுதிக‌ள் இந்துக்க‌ளாக‌ மாறுகிறார்க‌ள் எனில்
அங்கு இந்து கோவில்கள் கட்டிக் கொள்ளலாம் அல்லவா!!!!!!!.//

சவுதிகள் இந்துக்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படி மாறும்பட்சத்தில் அல்லவா இந்த கேள்வி வர வேண்டும்?

//இந்த இஸ்ரேல் மட்டும் உருவாகமல் இருந்திருந்தால் யூதர்களுமே மத்திய கிழக்கின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கலாம்.ஆபிரஹாமின் பேரன்கள் ஒற்றுமையாக இருப்பது பெரிய காரிய‌மல்ல!!!!!!!!!!!.//

வழிமொழிகிறேன்.

//நீங்கள் இந்து,புத்த ,இறைமறுப்பாளர்களுக்கு சவுதியில் ஒரு வழி சொல்லுங்கள்.//

இஸ்லாம் சிலை வணக்கத்துக்கும் இறை மறுப்புக்கும் நேர் எதிரானது என்பது நீங்கள் அறிந்ததே! சவுதி இஸ்லாமிய குடியரசாகவே உலக முடிவு நாள் வரை தொடரும். ஏனெனில் மெக்காவில் இஸ்லாமியர் அல்லாத அந்நிய ஆட்சி வராது என்று குர்ஆனும் சொல்வதால் இந்த நிலை தொடரவே செய்யும். பல ஆண்டுகள் இங்கு குடும்பத்தோடு சந்தோஷமாக இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் மத நம்பிக்கைகளை தங்களின் காம்பவுண்டுகளுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இன்றுவரை தங்களின் இந்து மதத்தை அவர்களில் எவரும் விட்டுக் கொடுக்கவில்லை. இதே நிலை தொடருவதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இல்லையே!

என்ன...தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறையும். பாலாபிசேகம், தேங்காய் உடைப்பது போன்ற காரியங்களை வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டி வரும். சிலர் இது போன்ற நாட்களில் விடுப்பு எடுத்துக் கொண்டு தாயகம் சென்று விடுவர்.

//இஸ்லாமில் இருந்து மதம் மாறுவதற்கு மரண தண்டனை ச‌வுதியில் ந‌டைமுறை ஷாரியாவில் இருக்கிற‌தா ?!!!//

இது பற்றிய உண்மை நிலவரம் எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் பிறகு சொல்கிறேன்.

ADMIN said...

நல்ல பல பகிர்வுகளை பகிர்ந்தைமக்கு நன்றி..!! உங்கள் வலைப்பதிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுகள்..!!

suvanappiriyan said...

தங்கம் பழனி!

//நல்ல பல பகிர்வுகளை பகிர்ந்தைமக்கு நன்றி..!! உங்கள் வலைப்பதிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுகள்..!!//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

Anonymous said...

1947-ல் 428 இந்து கோவில்கள் இயங்கிவந்தன. இப்போது 26 கோவில்களில் மட்டுமே வழிபாடு நடக்கிறது. பல கோவில்களில் வழிபாடு செய்ய இடையூறு காரணமாக மூடப்பட்டுவிட்டன. சில கோவில்களை முசுலிம்கள் ஆக்கிரமித்து உணவுவிடுதி போன்ற களியாட்ட விடுதியாக்கி விட்டார்கள். இதுதான் முசுலிம்கள் அதிகமிருக்கும் பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் நிலமை.

ஆனால் முசுலிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில் இதுவரை ஒரே ஒரு மசூதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. அதையும் பெருபான்மையான இந்துக்கள் எதிர்த்து கோபமடைந்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் யார் யாரை செருப்பால் அடிக்க வேண்டும்?

க்ருஷ்ணகுமார் said...

jenab, suvanapriyan, shalom. For whatever reason it may be, the efforts taken by baqi sthan (Pakisthan - bangladesh) is appreciable. Sometime back in the net, I read that in Tamizhnadu, a place called Melvisharam has been made sort of dal-ur-islam. With that news, I also read with pain that a pillayar temple there was converted as godown. then, could this be taken as a sample as to what is in store when a place becomes dar-ul-islam. khuda-hafiz

suvanappiriyan said...

சலாம் திரு கிருஸ்ணகுமார்!

//jenab, suvanapriyan, shalom. For whatever reason it may be, the efforts taken by baqi sthan (Pakisthan - bangladesh) is appreciable. Sometime back in the net, I read that in Tamizhnadu, a place called Melvisharam has been made sort of dal-ur-islam. With that news, I also read with pain that a pillayar temple there was converted as godown. then, could this be taken as a sample as to what is in store when a place becomes dar-ul-islam. khuda-hafiz//

நீங்கள் குறிப்பிடும் மேல்விசாரம் என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய பகுதி. நீங்கள் குறிப்பிடும் பிள்ளையார் கோவில் கொடோனாக மாற்றப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.

முன்பு இந்துக்கள் அந்த இடங்களில் வாழ்ந்திருக்கலாம். தற்போது அங்கு முஸ்லிம்கள் அதிகமாகி விட்டதால் கோவிலுக்கு அவசியம் இல்லாமல் போயிருக்கலாம். அந்த இடத்தை விலைக்கு வாங்கியவர் எப்படி அதனை பயன்படுத்த நினைக்கிறாரோ அது அவரது சொந்த விருப்பமல்லவா!

மேலும் சமணர்களின் பல கோவில்கள் தற்போது இந்து கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. பவுத்த கோவில்கள் பல இந்து கோவிலகளாக மறு உருவம் எடுத்துள்ளது. ஆதாரம் கேட்டீர்கள் என்றால் தருகிறேன். மனிதர்களின் சிந்தனை எப்படி மாறுகிறதோ அதன்படியே இறை வணக்கமும் மாறுபடுகிறது. எனவே இது ஒரு பிரச்னைக்குரிய விவகாரமாக எனக்குத் தெரியவில்லை. உங்கள் தரப்பில் இதற்கு மறுப்பு இருப்பின் தெரிவியுங்கள்.

முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி!

பாரதமாதா சேவா சங்சம், உடன்குடி ஒன்றியம் said...

1947-ல் 428 இந்து கோவில்கள் இயங்கிவந்தன. இப்போது 26 கோவில்களில் மட்டுமே வழிபாடு நடக்கிறது. பல கோவில்களில் வழிபாடு செய்ய இடையூறு காரணமாக மூடப்பட்டுவிட்டன. சில கோவில்களை முசுலிம்கள் ஆக்கிரமித்து உணவுவிடுதி போன்ற களியாட்ட விடுதியாக்கி விட்டார்கள். இதுதான் முசுலிம்கள் அதிகமிருக்கும் பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் நிலமை.

ஆனால் முசுலிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில் இதுவரை ஒரே ஒரு மசூதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. அதையும் பெருபான்மையான இந்துக்கள் எதிர்த்து கோபமடைந்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் யார் யாரை செருப்பால் அடிக்க வேண்டும்?

பாரதமாதா சேவா சங்சம், உடன்குடி ஒன்றியம் said...

1947-ல் 428 இந்து கோவில்கள் இயங்கிவந்தன. இப்போது 26 கோவில்களில் மட்டுமே வழிபாடு நடக்கிறது. பல கோவில்களில் வழிபாடு செய்ய இடையூறு காரணமாக மூடப்பட்டுவிட்டன. சில கோவில்களை முசுலிம்கள் ஆக்கிரமித்து உணவுவிடுதி போன்ற களியாட்ட விடுதியாக்கி விட்டார்கள். இதுதான் முசுலிம்கள் அதிகமிருக்கும் பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் நிலமை.

ஆனால் முசுலிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில் இதுவரை ஒரே ஒரு மசூதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. அதையும் பெருபான்மையான இந்துக்கள் எதிர்த்து கோபமடைந்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் யார் யாரை செருப்பால் அடிக்க வேண்டும்?