Followers

Friday, November 18, 2011

பிஜேபியே புறம் தள்ளுகிறது நரேந்திர மோடியை!



தற்போது மீடியாவெங்கும் அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான் என்ற பிரசாரம் மறைமுகமாக இந்துத்வாவினரால் திணிக்கப்படுகிறது. குஜராத் ஒளிர்கிறது. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற பொய் செய்திகளை மீடியாக்கள் தினம் தினம் தந்து வருகிறது. இப்படி ஒரு பொய்யான பில்டப்பை மோடிக்கு கொடுத்து எப்படியாவது பிரதமராக்கிவிட பலர் பகல்கனவு காணுகின்றனர். ஆனால் பிஜேபிக்கு உள்ளேயே நரேந்திர மோடியை எந்த அளவு விரும்பத்தகாத சக்தியாக பார்க்கின்றனர் என்பதற்கு நேற்றைய செய்தி ஒரு சிறந்த உதாரணம்.

Bharatiya Janata Party president Nitin Gadkari has told party leaders that there may be no need for Gujarat Chief Minister Narendra Modi to campaign in the high-stake Assembly elections due next year in Uttar Pradesh, BJP sources told The Hindu.
-The Hindu News Paper
18-11-2011

'உத்தர பிரதேச மாநிலத்துக்கு அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலின் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வர வேண்டிய அவசியம் இல்லை' என்று பிஜேபி தலைவர் நிதின் கட்காரி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவருக்கு தெரியும். ஏற்கெனவே ராமர் கோவிலை கட்டாமல் காலம் தாழ்த்தி வருவதால் இந்துக்களின் ஓட்டு சிதறிக் கிடக்கிறது. இதில் சகுனியைப் போல் நரபலி மோடியை கொண்ட வந்து பிரசாரத்தில் பயன்படுத்தினால் நடு நிலையாளர்களின் கொஞ்சநஞ்ச ஓட்டும் கையை விட்டுப் போய்விடும். எனவே தயவு செய்வு மோடி பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

இவர்களின் கூட்டணியில் இருக்கும் நிதிஸ்குமாரோ 'பீகாருக்குள் நரேந்திர மோடியின் வாசமே வேண்டாம்' என்று புறந்தள்ளி விட்டார். அப்படி ஒரு நிலை எடுத்ததால்தான் இன்று அவர் பீகாரின் முதல்வராக வீற்றிருக்கிறார்.

20 சதம் கூட வர வாய்ப்பில்லாத இவர்களுக்குள் 'யார் பிரதமர்' என்ற குஸ்தி மோடிக்கும் அத்வானிக்கும் இப்போதே தொடங்கி விட்டது.

இனி ராம பக்தி பிஜேபியில் கரை புரண்டு ஓடும். பாபர் மசூதி இருநத இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று அனைவரும் துண்டை போட்டு தாண்டுவார்கள். மேல்சாதி பத்திரிக்கைகள் அதற்கு தூபம் போடும். இந்தியாவை ஒளிர வைக்க மோடி வருகிறார் என்று நெஞ்சறிந்து மேல்சாதி பத்திரிக்கைகள் கட்டுரை வரையும்.

இந்துவில் வந்த ஒரு வாசகரின் உள்ளக் குமுறல்.

As mentioned by Justice Katju, media has bigger role to play in the society. Modi, Prime Ministerial candidate? I am worried of more blood. We need peace, no more blood.
from: Wish to be unidentified.
Posted on: Nov 18, 2011 at 12:59 IST

சரி...உண்மையிலேயே மோடியால் குஜராத் ஒளிர்கிறதா அல்லது தேய்கிறதா என்பதை 'புதிய ஜனயாகத்தில் ' வந்த கட்டுரையைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

…..1990 களில் சிறு விவசாயிகளே பெரும் பண்ணையாளர்களிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2000ஆவது ஆண்டுக்கு பிறகு நவீன பண்ணையாளர்கள், சிறு விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் பண்ணை ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் படிப்படியாக விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டு வருகின்றனர். நவீன உழுபடைக் கருவிகள் மூலம் பண்ணை விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், கூலி விவசாயிகளுக்கும் வேலை கிடைப்பதில்லை. மேலும் ஒப்பந்த விவசாயத்தின் ஓரினப் பயிர் சாகுபடியால், மண் வளம் இழப்பும் பாசன வசதிகள் சூறையாடப்படுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமாகி வருகின்றன……
……..மேலும், உயிர்ம எரிபொருள் விவசாயத்திற்கு என்கிற பெயரில் , ரிராயல் எனர்ஜி, டாட்டாலையன்ஸ், எஸ்ஸார், அரவிந்த் மில்ஸ், அவினி சீட்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன. இம்மாநிலத்தின் கணிசமான தரிசு நிலங்கள் கட்ச், சௌராஷ்டிரம் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் இந்நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் குஜராத்தின் மக்கள் தொகையில் 5 முதல் 8 சதமாக உள்ளனர்; சுமார் 25 முதல் 40 இலட்சம் குடும்பங்கள் இந்நிலங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மேய்ச்சல் நிலத்தின் அனுபோக உரிமை பறிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிவாழ் மக்கள் கால்நடைகளை விற்றுவிட்டு நகர்புறங்களில் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர்.

……குஜராத்தின் ஒட்டுமொத்த பருத்தி விவசாயத்தில் 54 சதம் பி.டி. பருத்தி விதை (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி) கொண்டு பயிரிடப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதையை விற்பனை செய்கின்றன. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனைத்தும் பி.டி. பருத்தி விதைக்குக் காப்புரிமை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களாகும். மான்சான்டோதான் விலையைத் தீர்மானிக்கிறது. இதனால் பருத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இலாபமில்லை; காய் புழு நோயையோ கட்டுப்படுத்தவும் முடியவில்லை…..

…..இவை தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் வளர்ச்சி மையங்கள் என்ற பெயரில் வெளிப்படையாக நிலப்பறிப்பிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. நிர்மா லிமிடெட் என்ற சிமெண்ட் நிறுவனத்திற்கு பாவ்நகர் மாவட்டத்தில் சுமார் 3500 ஹெக்டர் வளமிக்க விவசாய நிலத்தைப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுமார் 50,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, டாடா நானோ கார் உற்பத்தி உதிரிப் பாக உற்பத்திக்காக ஏழு கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் நிலம் பறிக்கப்படவுள்ளது….

…..பாரம்பரிய விவசாயத்தை அழிப்பது, உலகமயமாக்கலுக்கு ஏற்ப விவசாயத்தை ஏற்றுமதிக்கானதாக மாற்றுவது, ஏழை நடுத்தர விவசாயிகளை நிலமற்ற கூலிகளாகச் சிதறடிப்பது, பன்னாட்டு ஏகபோக விவசாயக் கம்பெனிகளின் தரகுப் பெருமுதலாளிகளின் வரம்பற்ற ஆதிக்கத்தை நிறுவுவது, இதற்காகப் பெயரளவில் இருந்துவந்த தடைகளை நீக்குவது என்பதுதான் மோடி அரசு செய்துவரும் ‘முன்னுதாரணமிக்க சாதனைகள்’…..

- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

அடுத்து பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்து மதம் தழைத்து விடும். இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் ஒடுக்கப்படுவார்கள் என்ற நினைப்பில் சிலர் இருக்கலாம். இந்து மதத்தில் சீர்திருத்தத்தை செய்யாத வரை அந்த மதம் தழைக்க வழியில்லை. மாறாக மோடி, அத்வானி போன்றோரின் துணையால் சிலரின் (குஜராத்தைப் போல்) ரத்தத்தைக் குடிக்கலாம். வேறு ஒன்றும் ஆகப் போவதில்லை.

5 comments:

VANJOOR said...

நரேந்திர மோடிக்கு விசா கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்.

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 15, 2011


வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா தரக் கூடாது என அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து மோடிக்கு விசா தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது.

இந் நிலையில் கடந்த 2008ம் ஆண்டு நியூஜெர்சியில் நடைபெற்ற குஜராத் கலாச்சார மாநாட்டில் பங்கேற்க சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்தார். அப்போதும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது.

நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க தெரிவித்தது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

எனினும் அமெரிக்க வர்த்தகத்துக்கு குஜராத் மாநிலம் சிறந்த வரவேற்புக்குரிய சூழலைப் பெற்றுள்ளது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தொழில் வளர்ச்சி, முதலீடுகள் விஷயத்தில் இந்தியாவில் குஜராத் முன்னணி மாநிலமாக திகழ்வதாக சமீபத்தில் அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்திருந்தது.

மேலும் நரேந்திர மோடியை பிரதமராக முன் நிறுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்வதாக அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


மீண்டும் விசா மறுப்பு:

இந் நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலாளர் ராபர்ட் பிளேக், விசா மறுப்புக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


SOURCE: THAT’STAMIL.

suvanappiriyan said...

டோண்டு சார், குஜராத்துக்கு டிக்கெட் நான் ஸ்பான்சர் செய்கிறேன், ஒரு எட்டு பார்த்துட்டு வந்து, பதிவு போடுங்க.

இந்த கரண்ட் கட் சமாசாரம் லிங்க் மீண்டும் பாருங்க. http://nunippul.blogspot.com/2008/06/blog-post.html
டாஸ்மாக் இல்லை, ஆனால் இர்ண்டு வயசு குழந்தையில் இருந்து ஊரே, முக்கியமாய் ஏழைகள் மாவா, பான்பராக் போன்றவைகளை மென்னு துப்பி தீர்க்கிறார்கள். தெருவில் எங்கு பார்த்தால் காலி பான்பராக் பாக்கெட்டுகள் கொட்டி கிடக்கும்.
சரசரமாய் கடைகளில் தொங்கும், வாய் கான்சர் மிக சாதாரணம். பசி மந்தித்து, ஒல்லி ஒல்லியாய்
பஞ்ச பரதேசியாய் அலையும் குழந்தைகள் . மக்களை போதைக்கு பழக்கி அடிமைப்படுத்துவது
அதே அரசாங்கம்தான்.
ஊரில் மிக மிக குழந்தை தொழிலாளர்கள் அதிகம். மருத்துவமனைகளில் கூட பன்னிரெண்டு வயசு பிள்ளைகள், (அழுக்கு) வெள்ளைக் கோட்டு போட்டுக் கொண்டு டாக்டருக்கு உதவும்.

இதே கூத்து, பார்மசிகளிலும்.
தமிழகத்தில் ஏழைகள் உண்டு, ஆனால் பஞ்ச பரதேசிகள் குஜராத்தில்தான். பரம ஏழைகள்,
கூலி வேலை, ரோடு போடும் வேலைக்கு வரும் பழங்குடி இன மக்கள். அத்தனையும் ஃளோடிங்க்
பாபுலேஷன். கல்லு, மண்ணில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கும்.

சின்ன சின்ன குழந்தைகள் கூட கூட்டமாய் ரயில்வே ஸ்டேஷன், சிக்னல்களில் பிச்சை எடுக்கும்.
நான் பார்த்தவரையில் நல்ல விஷயமாய் நினைப்பது, சீரான ரோடுகள். ஆனால் வண்டி ஓட்டுபவர்கள், எந்த போக்குவரத்து விதியையும் மதிக்க மாட்டார்கள். சின்ன சின்ன பிள்ளைகள் கூட ஸ்கூட்டர், பைக் ஓட்டும். டிராபிக் போலீஸ்க்கு நல்ல வரும்படி .

-நன்றி
ராமசந்திரன்உசா.
டோண்டு பதிவு

suvanappiriyan said...

//நரேந்திர மோடிக்கு விசா கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்.

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 15, 2011//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி வாஞ்சூர் பாய்.!

suvanappiriyan said...

நரேந்திர மோடியை சட்டம் நெருங்குகிறது.......

http://www.thehindu.com/news/national/article2647290.ece?homepage=true

மொட்டைபையன் said...

சுவனப்பிரியன் எப்ப பி.ஜே.பி உறுப்பினரானீங்க....இல்ல கட்சிக்குள்ளாற உளவுப்படை வச்சிருக்கீங்களா...??????இவ்வளவு தெளிவா பி.ஜே.பி பத்தி சொல்லுறீங்க... எதுக்கும் எச்சரிக்கையா இருங்க அவங்களும் ஒங்களமாதிரி நீங்க தொடர்பு வச்சிருக்கிற தீவிரவாத இயக்கத்த பத்தி புட்டு புட்டு வைக்கப் போறாங்க...சரியா