'நான் அந்த சாதி... நான் அந்த மதம்.. என்னை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்' என்று புலம்பாமல் முன்னேறுவதற்கு நீ என்னசெய்தாய்? அதை சிந்தி... வெற்றி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் பல வருடங்கள் கூட ஆகலாம். முயற்சி செய்'
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, December 31, 2022
உமர் காலித்
உமர் காலித்
800 நாட்கள் கடந்த பின்பும் இவரது முகத்திலுள்ள புன்னகையை பாசிசவாதிகளால் மாற்ற முடியவில்லை. தனது தங்கையின் திருமணத்துக்கு பெயிலில் வந்து விட்டு திரும்ப சிறைச்சாலைக்கு செல்கிறார் உமர் காலித்.
உத்ரகாண்ட் - ஹல்த்வானி
உத்ரகாண்ட் - ஹல்த்வானி
'எங்கள் பள்ளிக் கூடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இனி நாங்கள் எங்கு சென்று படிப்போம்? 'பேடி பச்சாவ்' 'பெண்களை காப்பாற்றுங்கள்' என்று கூறுகிறீர்கள். இன்று எங்களின் கல்விக்கு வழி என்ன மோடி அவர்களே?'
பாசிசவாதிகளிடமிருந்து பதில் இருக்குமா? முஸ்லிம்கள் தற்போது அதிகம் படிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்பது பாசிசவாதிகளின் திட்டம். துவண்டு விடாமல் இஸ்லாமிய சமூகம் வீறு கொண்டு எழுந்து எந்த விலை கொடுத்தாவது படிப்பில் அக்கறை செலுத்தி முன்னேறி மோடி அமித்ஸாக்களின் முகத்தில் கரியை பூச வேண்டும்.
அய்யய்யோ தப்பா கையை தூக்கிட்டேனே..
அய்யய்யோ தப்பா கையை தூக்கிட்டேனே..
அப்பாவுக்கு
பிடிக்காத டீம் போல.
டக்குனு சோகமாயிடுவோம்
ஆனந்த கூத்தாடினான்
ஒருகணம் திரும்பி பார்த்தான்
தந்தை சோகம் புரிந்தது
மறுகணமே தானும் சோகமானான்
எவ்வளவு அருமை......
உத்தரகாண்ட் - நைனிடால் - ஹல்த்வானி
உத்தரகாண்ட் - நைனிடால் - ஹல்த்வானி
அரசு தன்னுடைய 7000 காவல்துறையினரின் உதவியுடன் 4000 முஸ்லிம்களின் வீடுகளை இடித்துத் தள்ளியுள்ளது. பல ஆண்டு காலம் அங்கு வசித்து வருகின்றனர். புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு. இதே போன்ற இந்துக்களின் குடியிருப்புகளை அரசு ஆக்கிரமிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு மாற்று இடமும் கொடுக்கப்படவில்லை. குளிரில் வயதான மற்றும் சிறு குழந்தைகளோடு பரிதவித்து நிற்கிறது இஸ்லாமிய சமூகம்.
ஆண்ட பரம்பரை : பேண்ட பரம்பரை
ஆண்ட பரம்பரை : பேண்ட பரம்'பரை என்பது இதுதானோ!
சீ ச்சீ.. உலகில் எங்காவது இந்த அநியாயத்தை கண்டிருக்கீர்களா?
அது சாமி ஆட்டம் அல்ல.. சாதிவெறியாட்டம்
செருப்புகளை தலையில் வைத்து நடக்க சொல்லியபோது வராத சாமி ஆட்டம்..
சேரி பெண்களை மானபங்க படுத்திய போது வராத சாமி ஆட்டம்.
சேரியின் குடிசைகளை கொளுத்திய போது வராத சாமி ஆட்டம்.
குடிநீர் தொட்டியில் மலத்தை கொட்டியபோது வராத சாமி ஆட்டம்.
சக மனிதர்கள் கோயிலுக்குள் நுழையும் போது வருகிறதென்றால்....
அது சாமி ஆட்டம் அல்ல.. சாதிவெறியாட்டம்..
Friday, December 30, 2022
வாயை திறந்தாலே இந்த சங்கிக்கு பொய்தான்...
வாயை திறந்தாலே இந்த சங்கிக்கு பொய்தான்... இவனை எல்லாம் எதற்கு விவாதத்துக்கு அழைக்கிறார்கள்
இதற்கு முற்றுப் புள்ளி வையுங்கள்
'இன்று காவல் துறையிலிருந்து நீதிபதிகள் வரை ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டு பாபரி பள்ளியை இடித்து விட்டு அங்கு ராமனுக்கு கோவில் கட்டுகிறீர்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு எனது மகனோ, அல்லது பேரனோ இந்த அநியாய தீர்ப்பைக் கண்டு மனம் வருந்துவான். அந்த நாளில் ஒரு முஸ்லிம் நீதிபதியோ முஸ்லிம் காவல் துறை அதிகாரியோ இந்த அநியாய தீர்ப்புக்கு எதிராக வெகுண்டெழுந்து ராமர் கோவிலை இடித்து விட்டு அங்கு பாபர் பள்ளி யை நிர்மாணிக்க விரும்புவாறா? விரும்ப மாட்டாரா? ஆக இது ஒரு தொடர் கதையாக செல்லும். இதற்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.'
Thursday, December 29, 2022
இந்துக்கள் இவர்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய பிரதேசம்
ஜிராபூர் - ராஜ்கர்
இங்குள்ள கோசோலையில் பசு மாடுகள் கவனிப்பாறற்று தினமும் செத்து மடிகின்றன. பசுக்களை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவற்றை அடைத்து வைத்து தீனியும் போடாமல் கொடுமைபடுத்துகின்றனர். பசியினால் சில மாடுகள் இறந்த மாட்டின் சதைகளை உண்ணும் கொடுமையைக் காண்கிறோம்.
இவர்கள் உண்மையான பசு பக்தர்களாக இருந்திருந்தால் இப்படி பசுக்களை கொடுமைபடுத்துவார்களா? சாமான்ய மக்களுக்கு பசு பக்தியை ஏற்றி விட்டு இவர்கள் அதன் மாமிசத்தை நல்ல விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மாட்டுக் கறியை ஏற்றுமதி செய்வது பெரும்பாலும் பாஜக பிரமுகர்களே.. இந்துக்கள் இவர்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
Wednesday, December 28, 2022
மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் வரலாம்.
மொராக்கோ
22-12-2022
சென்ற வெள்ளிக் கிழமை உமர் கத்தாப் பள்ளிவாசலில் இமாம் வெள்ளிக் கிழமை பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போதே இறப்பு வந்து விடுகிறது. மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் வரலாம். நாம்தான் தயாராக இருந்து கொள்ள வேண்டும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.
இவனைப் போன்றவர்கள் நாட்டின் தேச விரோதிகள்.
இவனைப் போன்றவர்கள் நாட்டின் தேச விரோதிகள்.
'முஸ்லிம்களை பலம் குன்றியவர்களாக ஆக்க வேண்டும் என்றால் இவர்கள் வீட்டு பெண்களின் மேல் கை வையுங்கள். தானாக வழிக்கு வந்து விடுவார்கள்'
இவ்வாறு பொதுவில் கூவுகிறான். அங்கு அமர்ந்திருப்பவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். சனாதன தர்மமும், ஆர்எஸ்எஸூம் இவனை எப்படி சிந்திக்க வைத்துள்ளது பார்த்தீர்களா? இந்து ராஷ்ட்ரா அமைந்தால் ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதற்கு இவை எல்லாம் ஒரு சான்று.
முட்டாளே... முஸ்லிம்களின் உடலில் உயிர்உள்ளவரை ஓரிறைக் கொள்கையும், மனிதர்களில் யாருக்கும் தலை வணங்காமல் வாழும் வாழ்வியல் முறையும் உலக முடிவு நாள் வரையில் தொடரும். எங்கள் கையில் குர்ஆனும் நபிகளின் வாழ்வு முறையும் இருக்கும் காலமெல்லாம் எத்தனை மோடிக்கள் வந்தாலும் எத்தனை அமித்ஸாக்கள் வந்தாலும் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை உங்களின் கொட்டம் அதிகரிக்கும். அது முடிந்தவுடன் இந்து மக்களாலேயே நீங்கள் விரட்டி அடிக்கப்படுவீர்கள். கொஞ்ச காலம் பொறுங்கள்.
நிற வெறி ....
அமெரிக்கா...
நிற வெறி ....
வெள்ளையர்கள் கருப்பர்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி....
குஜராத் - வதேதரா
குஜராத் - வதேதரா
மஹாராஜா சயோஜிராவ் பல்கலைக் கழகம்.
இங்கு இஸ்லாமிய மாணவர் ஒருவர் ஓய்வு நேரத்தில் ஒரு ஒதுக்கு புறமாக கடமையான தொழுகையை நிறைவேற்றியுள்ளார். இதில் யாருக்கு என்ன சிரமம்? ஆனால் இந்துத்வா ஆதரவு மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பலாக அமர்ந்து பஜனை பாடிக் கொண்டுள்ளனர். இந்துத்வா இந்த நாட்டின் விஷம்.
Tuesday, December 27, 2022
வாழும் நடிகர் திலகம்....
வாழும் நடிகர் திலகம்....
நீ எத்தனை கோவில்கள் போனாலும்: எத்தனை புனித யாத்திரை மேற்கொண்டாலும் உன்னால் கொல்லப்பட்ட மக்களின் வாரிசுகள் மன்னிக்காதவரை அந்த இறைவன் உன்னை மன்னிக்கப் போவதில்லை
நீங்கள் மட்டும் அமரவில்லை.
'நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த இருக்கையில் நீங்கள் மட்டும் அமரவில்லை. உங்களின் தாய் தந்தையரின் கனவுகளையும் சுமந்து கொண்டு அமர்ந்துள்ளீர்கள். அவர்களின் கனவுகளை உங்களில் சிலர் நனவாக்குவதில்லை. அவர்களை உதாசீனப்படுத்துகிறீர்கள். கவுன் அணிந்து மருத்துவராகி இங்கு அமர்ந்துள்ளீர்கள். இதனைப் பார்த்து உங்களை விட உங்களின் தாய் தந்தையர் மிகுந்த சந்தோஷமடைவர். அந்த பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள்.'
கர்நாடகா - கும்தா
கர்நாடகா - கும்தா
இங்குள்ள பள்ளி குழந்தைகளை சுற்றுலா என்ற பெயரில் கோவில்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். போகும் வழியெங்கும் ராமன், ஹனுமான், பஜ்ரங் பளி என்று இந்து மத கடவுள்களின்பெயரை கட்டாயப்படுத்தி சொல்ல வைக்கின்றனர். இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தின் குழந்தைகளும் அங்கு இருப்பார்களே! இது தவறான முன்னுதாரணம் அல்லவா? சாதி வெறியையும், மூடப் பழக்கங்களையும் கொண்ட இந்து மத சடங்குகளை பால்ய பருவத்திலேயே கற்பிப்பது அதுவும் கல்விக் கூடங்களில் செயல்படுத்துவது சரியா? இந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் எப்படி செல்லும். பார்பனிய சனாதன தர்மத்தை மீண்டும் கட்டமைப்பதைத் தவிர வேறு எதனை சாதிக்கப் போகிறார்கள்.?
புதுக் கோட்டை - இறையூர்
சாதி வெறி
புதுக் கோட்டை - இறையூர்
பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் நுழைய தடை இருந்தது. அதனை நேற்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உடைத்து பட்டியல் இன மக்களும் கோவிலுக்குள் நுழைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமி ஆடிய மேல் சாதி பெண். இந்த பெண்ணின் தோற்றத்தை பார்த்தால் இவர் எந்த வகையில் அவர்களை விட உயர்ந்து விட்டார் என தெரியவில்லை. ஆட்சியர் உத்தரவின் பேரில் காவலர்கள் நாடகமாடிய அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
4000 வருடங்களாக பார்பனர்களால் புகுத்தப்பட்ட சாதி வெறியானது இன்று சாமான்ய மக்களையும் ஆட்டி படைக்கிறது
இந்த கொடுமை எந்த நாட்டிலாவது உண்டா?
'மூன்று தலைமுறைகளாக எங்கள் தாத்தா, அப்பா, நாங்கள் என்று எவருமே சாமியை தரிசிக்க விட்டதில்லை. கேட்டால் 'நீங்கள் கீழ்சாதி.. தீட்டுபட்டு விடும் என்கிறார்கள். விபூதி கூட மற்றவர்கள் மூலமாகத்தான் எங்களுக்கு கிடைக்கும்'
மண்ணின் மைந்தர்கள் தங்களின் குல தெய்வங்களை வணங்கவோ பார்க்கவோ மூன்று தலைமுறைகளாக அனுமதிக்கப்படவில்லை. இந்த கொடுமை எந்த நாட்டிலாவது உண்டா?
பிஜேபியில் சேர்ந்துள்ளான் வேலூரில் அடி வாங்கிய இப்றாஹிம்.
தொடர்ச்சியாக பல தவறுகளை செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்கவே பிஜேபியில் சேர்ந்துள்ளான் வேலூரில் அடி வாங்கிய இப்றாஹிம்.
சவுத் ஆப்ரிக்கா...
சவுத் ஆப்ரிக்கா...
ஆப்ரிக்கா கருப்பர்களின் பூர்வீக பூமி. வெள்ளையர்கள் தொழில் செய்வதற்காக குடியேறுகிறார்கள். அந்த மக்களை அடிமைகளாக்கி வெள்ளையர்கள் பெரும் பதவிகளில் அமருகிறார்கள். முடிவில் 'வெள்ளையர்கள் மட்டும்' என்று ஆங்காங்கே போர்டுகள் வைத்து கருப்பர்களை குளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. இன்றும் இது தொடர்கிறது. அதைத்தான் இந்த காணொளியில் பார்க்கிறோம்.
இதையே தமிழகததுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 4000 வருடங்களுக்கு முன்பு கைபர் கணவாய் வழியாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய கூட்டம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இங்குள்ள தமிழர்களை தீண்டத்தகாதவர்களாக மாற்றி அக்ரஹாரம் என்று உருவாக்கி மண்ணின் மைந்தர்களை ஒதுக்கி வைத்தனர். குளத்தில் குளிக்கவோ தண்ணீர் எடுக்கவோ தடுக்கப்பட்டனர். பெண்களின் மார்புக்குக் கூட வரி விதித்தனர். தங்கள் வீட்டு பெண்களின் மார்பை மறைத்து மண்ணின் மைந்தர்களின் மார்பை மறைக்க தடை விதித்தனர். சூத்திரன் பார்பனன் என்று மனிதர்களை பிரித்து சுக போக வாழ்வு இன்று வரை வாழ்கின்றனர்.
நாடும், மொழியும், இனமும் மாறினாலும் சனாதனம் என்பது உலகில் பொதுவாக உள்ளது. அரேபிய நாடுகளிலும் இதை விட மோசமாக இருந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்பு. நபிகள் நாயகத்தின் போதனையால் மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற எண்ணம் அந்த மக்களிடம் ஏற்பட்டு இன்று கருப்பர்களும் வெள்ளையர்களும் முஸ்லிம் என்ற ஒரு கோட்டுக்குள் வந்துள்ளனர். தமிழகத்திலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கிராமங்களில் இன்றும் அந்த அதிசயத்தைக் காணலாம்.
Monday, December 26, 2022
ஈரான்....
ஈரான்....
பெண் புரட்சி என்று பெயரிட்டு சங்கிகள் குதூகலிக்கிறார்கள். முக்காடு போடுவதும் போடாததும் அந்த பெண்களின் விருப்பம். அதை விடுத்து மார்க்க அறிஞர்களை இவ்வாறு தலைப்பாகைகளை தட்டி விட்டு ஓடுவதுதான் பெண்ணியமா? ஹிஜாப் ஒரு பெண்ணுக்கு எந்த அளவு பாதுகாப்பு என்பதை இஸ்லாமிய பெண்கள் அறிவர். முகத்தை மூடாமல் அணியக் கூடிய ஹிஜாபால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இதனை சில காலம் கழித்து ஈரானிய பெண்கள் உணர்ந்து கொள்வர்.
#பாலாஜி_பாலா என்ற சகோதரரின் பதிவு இது
#பாலாஜி_பாலா என்ற சகோதரரின் பதிவு இது
. நேற்று முன்தினம் இரவு திடிரென என்மகளுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு இரவு11.00 மணிக்கு அனுமதித்தோம். சிகிச்சைக்கு தேவையான ஒரு மருந்து வெளிபோய் வாங்கவேண்டிய சூழ்நிலை. இரவு 12க்கு மேல்சென்றதால் எல்லா மருந்துகடைகளும் மூடி இருந்தது.
ஒருவர் சொல்ல கேட்டு சுந்தரம் டாக்கிஸ் "பாவா மெடிக்கல்" அவர்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ஏழுப்பினோம். உடனே திரு.சதாம் மற்றும் அவர் குடும்பத்தினர் அவர்கள் கடையை திறந்து வேண்டிய மருந்துகளை தந்து ஒரு ருபாய் கூட வாங்காமல் . " முதலில் குழந்தையை பாருங்கள் ஜி போங்க பணம் எதுவும் வேண்டாம்" என்று சொல்லி மருந்துகளை தந்து உதவினார்கள். இப்போது குழந்தை நலமுடன் இருக்கிறாள். தேவையில்லாத பல விஷயங்களை பதிவு போடுகிறோம். என்னதான் நேரில் சென்று நன்றி கூறினாலும் மனம் நிறைவு பெறவில்லை
அதான் இந்த நன்றி பதிவு. வாழ்க அவர் தொண்டு வாழ்க அவர்தம் குடும்பம்...
சாத்வி பிரக்யா சிங்
சாத்வி பிரக்யா சிங்
நேற்று கர்நாடகாவில் பேசும் போது '' உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நமது பாரம்பரியத்தை கற்றுக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் கத்தி போன்ற ஆயுதங்களை தயாராக வைத்திருங்கள். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) பதில் கொடுக்க எந்த நிலையிலும் தயாராக இருங்கள்'
மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தி பல முஸ்லிம்களின் உயிர்கள் போக காரணமாயிருந்தவள். சிறையில் இருந்த இவளை மோடி அரசு விடுதலையாக்கி எம்பியாகவும் ஆக்கியுள்ளது. தற்போது செல்லும் இடமெல்லாம் விஷத்தை கக்கி வருகிறாள். மோடியால் விளைந்த தீமைகளில் இதுவும் ஒன்று. அனைத்துக்கும் ஒரு நாள் பதில் உண்டு. ஆட்சி மாற்றத்தில் அது நிகழும்.
நீயும் ஒரு தமிழ் குடி அவனும் ஒரு தமிழ் குடி
நீயும் ஒரு தமிழ் குடி அவனும் ஒரு தமிழ் குடி நமக்குள்ள எதுக்கு இந்த குடி சண்ட நாம தானே தமிழர் குடிகள் என்று ஒன்னு சேர சொல்லி கூப்பிடுறோம் ..
மனுஸ்ருமிதி
25-12-2022
மும்பை
இதே நாளில்தான் அம்பேத்கார் மனிதர்களை பேதம் பார்க்கும் மனுஸ்ருமிதியை தீயிட்டு பொசுக்கினார்.
அதே நாளில் மும்பையில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் மனு ஸ்ருமியை தீயிட்டு பொசுக்கினர். இந்திய நாட்டில் இந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளதற்கு முழு முதற்காரணம் இந்த மனு ஸ்ருமிதி. இன்றும் இதனை புனித நூலாக 5 சதவீத மக்கள் மதித்து வருகின்றனர். அந்த ஐந்து சதவீதம் யார் என்பதும் உங்களுக்கு தெரியும்.
Sunday, December 25, 2022
ராகுல்காந்தி பாதயாத்திரையில் காவி உடைகளும்....
ராகுல்காந்தி பாதயாத்திரையில் காவி உடைகளும்....
''கோவில் மசூதி குருத்வாரா உருவானது இறை வழிபாட்டுக்காக : ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்காக அல்ல. 80 கோடி மக்கள் ரேஷன் கடைகளில் பைகளை தூக்கிக் கொண்டு நிற்பதை பார்க்கிறோம். எவ்வளவு வறுமையில் மக்கள் உள்ளனர்? சனாதன தர்மத்தில் இரண்டறை மீட்டர் காவி உடை உடுத்திக் கொண்டு யார் வந்தாலும் அவரை பகவான் என்று மக்கள் பூஜிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சாமியாராக மாறுவதும் சாமியாராக நடிப்பதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதனை பிரித்துப் பார்க்க முயலுங்கள். ஹிந்துவோ முஸ்லிமோ எதுவாக இருந்து விட்டு போ. ஆனால் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள முதலில் பழகு. ''
வயது முதிர்ந்த முதியவர்
ஹரியானா...
வயது முதிர்ந்த முதியவர் இளம் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். ஹனிமூனுக்கு மலேசியா போகிறார்கள். இதே காரியத்தை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் ஊடகத்தில் பெரும் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கும்.
ஜெய் ஸ்ரீ ராம்னு கோஷம் வேற
இதை விட ஒருவன் மனைவியைக் கேவலப்படுத்த முடியுமா ! மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிப்பவன் ஆண்மகனாக இருக்க முடியாது . தன் மனைவியின் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க சொல்பவனை மனிதனாகவே ஏற்று கொள்ள முடியாது .
இதுக்கு ஜெய் ஸ்ரீ ராம்னு கோஷம் வேற... சங்கீஸ்
தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக
25:12:2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக ஏழைகளுக்கு வழங்குவதற்காக அல்லாஹ்வின் உதவியால் உணவு தயார் செய்யப்படுகிறது.
Saturday, December 24, 2022
திருவாங்கூரில் நாடார்கள்
மலர்மன்னன் அவர்கள் விமர்சனம் செய்த புத்தகம் திருவாங்கூரில் நாடார்கள் எப்படி நடத்தப்பட்டனர் எனபதைப்பற்றியதே. சிவகாசி நாடார், கொங்கு நாடார், வடமாவட்ட நாடார்கள் போன்றோரை இங்கு தொடர்பு படுத்திப் பேசக்கூடாது. திருவாங்கூர் நாடார்கள் என்போர் கன்யாகுமரி நாடார்கள், மற்றும் நெல்லை, தூத்துக்குடியும் வரும். இம்மக்களின் பெரும்போலோர் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயர் அவர்கள் இடையங்குடியைத் தலைமையிடமாகக்கொண்டு தேவ வார்த்தைகளை எங்களிடையே பரப்பினார். இடையங்குடி கன்யாகுமரியிலிருந்து முக்கால் மணினேரம்தான்.
கிருத்துவம் வருவதற்குமுன் நடந்த செயல்களே இப்புத்தகத்தில் பேசப்படுகிறது. அப்போது திருவாங்கூர் நாயர்கள் எங்களையும் தலித் சகோதர்களையும் தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள்; எங்கள் பெண்களையும் மார்பை மறைக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தினார்கள். இது வரலாறு. தலித்துப்பெண்களின் மானத்திற்காக கேரள தலித்து தலைவரான ஐயன் காளி நாயர்களோடு போராடினார். அவர்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். எங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க திருவாங்கூரை மறைமாவட்டமாகக் கொண்டு வெள்ளைக்கார கிருத்துவ தலைவர்களாலேயே முடிந்தது.
இன்றும் இம்மாவட்டங்களில் இந்து நாடார்கள் வறுமைப்பிடியில்தான் வாழ்கிறார்கள் பனையேறி நாடார்களாக. மேலும் இவர்களே இந்துத்வாவினரின் பிடிக்கு ஆளாகி, உரோமன் கத்தோலிக்க மீனவர்களோடு மோதினார்கள். இன்றளவும் அம்மோதல் தொடர்கிறது.
கிருத்துவ நாடார்களிடையே கல்வியறிவு, மற்றும் வாழ்க்கைத்தர உயர்வு என்றாகி பலர் உன்னாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயரவர்கள், மறைத்திரு போப்பையரவர்கள், மறைத்திரு மர்காஷியஸ் ஐயரவர்கள் போன்றோரின் தேவ ஊழியமே இதற்குக்காரணமென்றால் மிகையாகாது. இவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்கள். இவர்கள் இல்லாதிருந்தால் நாங்களும் பிராமணர்களுக்கு அடிமைகளாகத்தான் வாழ்ந்து மீனவர்களோடும் தலித்துகளோடும் மோதிக்கொண்டிருப்போம்.
இம்மாவட்ட நாடார்களை விடுத்துப்பார்த்தால், மதுரை மீனாட்சி கோயிலுக்குள் ஏன் நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை? உயர்திரு வைத்தியநாத ஐயர் அவர்கள் அக்கோயிலில் உள்ளுழைவு போராட்டம் நடத்திய போது, தலித்து இளைஞர்களையும் நாடார் ஜாதி இளைஞர்களையும் சேர்த்துத்தானே தன்னுடன் அழைத்துச்சென்றார். இல்லையா ? இது மற்ற மாவட்டங்களிலும் அன்று நாடார்கள் தீண்டத்தகாதவராகவே பிராமணர்கள் வைத்த நீதியில் நடத்தப்பட்டார்கள் என்று காட்டுகிறது.
-ஜெபசிங் ஞானதுரை
பாட்டன், பூட்டன் காலத்தில் சபரிமலைக்கு செல்ல முடியாது.
30 ஆண்டுகள் சபரிமலை சென்றவர்களை குருசாமி என்பார்கள், இன்று எல்லா சாதியினரும் சபரி மலைக்கு செல்கின்றனர். ஆனால் நம் பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்களால் சபரிமலைக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் கேரளாவில் கோயில்களை சுற்றியுள்ள சாலையில் ஆடு,மாடு,பன்றி கூட நடக்கலாம். மனிதர்கள் நடக்க கூடாது என்ற நிலை இருந்தது.
பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என திருவிதாங்கூருக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதற்கும் சட்டம் இயற்றப்பட்டது.இன்று அனைத்து தரப்பினரும் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான உரிமையை வாங்கி கொடுத்தது பெரியார்!
எங்கள் வீட்டில் பசு இறந்து விட்டது
பார்பனன்:
உன் அறிவு கெட்டு விட்டதா என்ன? எங்கள் வீட்டில் பசு இறந்து விட்டது. அதை எடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்து... போ...
தலித்:
பசு உயிரோடு இருந்தபோது உன்னுடையது. அது இறந்தவுடன் என்னுடையதா? உயிரோடு இருந்தபோது அதிலிருந்து நெய்யையும், பாலையும் எடுத்து சாப்பிடுவது நீங்கள்: அது இறந்தவுடன் அதனை தூக்க மட்டும் நாங்களா?
பார்பனன்:
ஏய் பிராமணனை எதிர்த்தா பேசுகிறாய்? இறந்த பசுவை தூக்குவதற்கு கூலியாகத்தான் மாட்டின் தோலும் அதன் மாமிசமும் உனக்கு கிடைக்கிறதே?
தலித்:
ஓ... நீங்கள் பிராமணனா? ஒன்று செய்யுங்கள். இனிமேல் இறந்த பசுக்களை நீங்களே எடுத்துச் செல்லுங்கள். அதன் தோலையும் அதன் மாமிசத்தையும் நீங்களே புசியுங்கள்... ஹா... ஹா....
ராஜஸ்தான்
ராஜஸ்தான்
கோவில் பூசாரி கோவிலில் ஒரு சிறு வயது பெண்ணிடம் தவறாக நடந்து மாட்டிக் கொண்டான். அங்கிருந்து தப்பி தனக்கு புகலிடம் குஜராத்தான் என்று ஓடி ஒளிந்து கொண்டான். அடையாளம் தெரியாதிருக்க முழுவதுமாக முகச் சவரமும் செய்து கொண்டான். இருந்தும் அவனை அடையாளம் கண்டு காவல் துறை தற்போது கைது செய்துள்ளது.
பெல்ஜியம் கல்லூரி மாணவி
பெல்ஜியம் கல்லூரி மாணவி
கத்தோலிக்க குடுமப பின்னணியைக் கொண்டவர் 21 வயதான சிலகி. கல்லூரி மாணவியான இவர் குர்ஆனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்கிறார். இஸ்லாமிய உடைகளை விரும்பி அணிகிறார். இஸ்லாமிய சட்ட திட்டங்களை கற்றுக் கொள்கிறார்.
'நான் ஹிஜாப் அணிந்தவுடன் எனது நண்பர்கள் என்னை விட்டு தூரமாகிறார்கள். 'ஹாய்' கூட சொல்வதில்லை. சிரியாவுக்கு சென்று அங்கு வெடி குண்டுகளை வீசப் போவதாக என் காது படவே பேசுகின்றனர்' என்கிறார் சில்கி.
இந்த உலகில் இஸ்லாமியனாக வாழ்வது என்பது மிகப் பெரும் போராட்டமாகிப் போயுள்ளது. இதன் மூலம் அவர்களின் உறுதி மேலும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5663
சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.
இந்த நாட்டின் சாபக்கேடு இந்த காவிகும்பல்
ஒரு திரைப்பட கதாநாயகி காவி நிற பிகினி போட்டது எங்க மனச புண்படுத்தீருச்சின்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச இதே காவிகும்பல் தான், இப்ப கிறிஸ்தவர்கள் மதிக்கும் Santa உடையை தீயிட்டு எரிக்கிறார்கள்.
இந்த நாட்டின் சாபக்கேடு இந்த காவிகும்பல்Friday, December 23, 2022
ஹரியானா - குர்காவுன்
ஹரியானா - குர்காவுன்
23-12-2022
நேற்று வெள்ளிக் கிழமை இடப் பற்றாக்குறையால் வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்ற விரிப்புகளை விரித்திருந்தனர் முஸ்லிம்கள். அங்கு வந்த இந்துத்வா குண்டர்கள் 'பொது இடங்களில் தொழ அனுமதிக்க முடியாது' என்று கூறி பிரச்னை செய்ய ஆரம்பித்தனர். அரை மணி நேர தொழுகையை தடுக்கும் இந்துத்வாக்கள் பல மணி நேரம் பொது வெளிகளின் பஜனைகளை அரங்கேற்றுவார்கள்.
முஸ்லிம்கள் பிரச்னை வேண்டாம் என்று விரிப்புகளை அகற்றி உள்ளேயே தொழுது கொண்டனர்.
ராம ராஜ்யம்
உத்தர பிரதேசம் - ஜான்பூர் சனாதனம்
உத்தர பிரதேசம் - ஜான்பூர்
பள்ளியின் மதிய உணவை ஒரு தலித் பெண் சமைத்துள்ளார். தலித் பெண் சமையல் செய்வதை கண்டு கோபமடைந்த மேல் சாதி ஆசிரியர் அவர் செய்த சமையல் சாதங்களை கீழே கொட்டி தனது சாதியின் பெருமையை காட்டியுள்ளார்.
சனாதனம் இந்த மக்களை எந்த அளவு மூடர்களாக ஆக்கியுள்ளது பாருங்கள். ஒரு வேளை சோற்றுக்கே அல்லாடும் பல கோடி மக்களை கொண்ட நமது நாட்டில் இவ்வாறு சாதியின் பெயரால் கீழே கொட்டுகிறீர்களே... அடப் பாவிகளா? இந்த நாடு உருப்படுமா
चाहे जितना दुनिया आगे बढ़ जाए, लगता नही कि ये जातिवाद की सोच कभी बदलेगी! #जौनपुर में एक शिक्षक ने पूरा खाना इसलिए फेक दिया, क्यूंकि वह खाना नीची जाति की रसोइया ने बनाया था! खबर पिछले सप्ताह #UttarPradesh जौनपुर की है!
No matter how much the world moves forward, it does not seem that this thinking of casteism will ever change! #जौनपुर a teacher threw away the whole meal because it was prepared by a low caste cook! The news is of Jaunpur last week #UttarPradesh !
நடிகை மும்தாஜ்
சமீபத்தில் நடிகை மும்தாஜ் முஸ்லிம்களின் புனித தளமான மக்காவிற்கு சென்று உம்ரா எனும் இறைவணக்கம் செய்துவிட்டு ஒரு பதிவினை போட்டிருந்தார்
அதில் அவர் குறிப்பிட்டது பலர் எனது கடந்த காலத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் நான் அதிலிருந்து வெளிவந்து வந்து விட்டேன் இனி அதனை தேடாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்
அதனை படித்து கொண்டிருக்கும் போதே நமது பள்ளிவாசலில் கரும்பலகையில் எழுதியிருந்த இந்த செய்தி கண்ணில் பட்டது
அருவருக்கத்தக்க (சொற்கள் மற்றும்)செயல்கள் எதில் இருந்தாலும் அவை அதனை அசிங்கப்படுத்திவிடும் வெட்கம் எதில் இருந்தாலும் அது அதனை அழகாக்கிவிடும்
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்:திர்மிதீ 1897
ஆம் மும்தாஜின் முந்தைய செயலோ அருவருப்பானது
இன்றைய வெட்கமோ அழகானதாக உள்ளது
உண்மையான அழைப்புப்பணி
கத்தரில் FIFA World cup விளையாட்டு அரங்கங்களில் விதிக்கப்பட்ட மது தடை, மேற்கத்திய ஊடகங்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்து இருந்தது அனைவரும் அறிந்த சங்கதி.
தற்போது போட்டி முடிவடைந்தபின் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய ரசிகர்கள், உள்ளூர் ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்கள், வெறுப்பை பரப்பிய ஊடகங்களின் முதுகெலும்பை முறித்துப் போட்டிருக்கின்றன.
இங்கிலாந்து நாட்டிலிருந்து தன் தந்தையுடன் பயணித்து விளையாட்டைக் கண்டுகளித்த 19 வயதான பெண் விசிறி எல்லீ மொலொஸன், Reuters க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"பாதுகாப்புக்காக என் தந்தை என்னுடன் பயணித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனும் அளவிற்கு கத்தரில் நான் கண்ணியமாக நடத்தப்பட்டேன்" என்றார்.
"பொதுவாக இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கால்பந்தாட்டப் போட்டிகளில் பெண் ரசிகைகள் மீதான வன்முறையும், பாலியல் துன்புறுத்தல்களும் இருக்கும். ஆனால், கத்தரில் அத்தகைய அசம்பாவிதங்கள் எதுவுமே இல்லை. இதற்கு முதன்மையான காரணம் மது தடை செய்யப்பட்டது தான் என கருதுகிறேன்!" என்றும் கூறியுள்ளார்.
அதே போல், அர்ஜென்ட்டினாவிலிருந்து கத்தர் வந்த 21 வயது பெண் விசிறியான ஏரியானா கோல்டு, ஊடகங்களுக்கு இவ்வாறு நேர்காணல் அளித்துள்ளார்.
"கத்தர் நாடு பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பானது என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என் நாட்டில் கத்தர் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், கத்தர் வந்தபின்னர் நேரில் நான் கண்டவற்றிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் கண்டேன். இங்கே நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்."
இன்னொரு பெண் ரசிகையான எம்மா ஸ்மித், இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரத்தில் இருந்து வந்து, நாடு திரும்பியுள்ளவர். இவர், "கத்தர் அரசு அரங்கங்களில் மதுவைத் தடை செய்திருப்பதால், யாருக்கும் எவ்வித குறையும் இருப்பதாக உணரவில்லை. நிஜத்தைச் சொல்வதானால், கத்தரின் மது தடையால் நான் மிக அமைதியான, அழகான சூழலைக் கண்டேன்."
எனில், கத்தரில் மதுவே கிடைப்பதில்லையா எனக் கேட்டு உரிமைப் போராளிகள் கேட்டை ஆட்ட வேண்டாம். கைக்கெட்டும் தொலைவில் எளிதாகக் கிடைப்பதற்கும், பல்வேறு ஒழுக்க விதிமுறைகளில் ஒப்பமிட்டு, சிரமப்பட்டு கிடைப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
FIFA World Cup சரித்திரத்தில் இதுவரை இல்லாத - இந்த முதல் முறை மதுத் தடையை நீக்க பல்வேறு நாடுகளால் கத்தர் எதிர்கொண்ட அழுத்தங்கள், வார்த்தைகளால் சொல்லி மாளாது.
உண்மையான அழைப்புப்பணி என்பது, சொல்லில் மட்டுமல்ல... செயலில் காண்பிப்பதே! என்ற இறைத்தூதரின் வாழ்வை அழுத்தமாக நிரூபித்திருக்கும் கத்தருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!
- முஹம்மது சர்தார், கத்தரிலிருந்து
(ஆங்கில ஊடகங்களின் செய்திகளை, தோராய மொழியாக்கம் செய்துள்ளேன். இத்தகைய நேர்காணல்களை நேர்மையுடன் வெளியிட்டுள்ள Reuters க்கு நன்றி. News link is in the comment)
Thursday, December 22, 2022
குஜராத் - வதேதரா
குஜராத் - வதேதரா
தலித் இளைஞனை சராமாரியாக தாக்கும் மேல் சாதி கும்பல். சாதி வெறியானது இவர்களை மிருகமாகவே மாற்றி விட்டது.
Wednesday, December 21, 2022
சபையில் வலப்புறம் பேணுதல்.
21-12-2022
நேற்று மஹ்ரிப் நேர தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது பள்ளியின் வாதில் குளிரினால் ஒரு கதவு அடைக்கப்பட்டிருந்தது. மற்ற கதவு வழியே ஒரு நபர் மட்டுமே செல்ல வழி இருந்தது. என்னை விட வயதில் மூத்த ஒரு சவுதி நாட்டவர் வந்தார். அவர் முன்னே செல்வதற்காக அவருக்கு எனது கைகளால் 'செல்லுங்கள்' என்று சைகை செய்தேன். அவரோ புன் முறுவலோடு என்னிடம் 'லா.... எமீன் அவ்வல். அன்த ரூஹ் அவ்வல்' (இல்லை. வலப்புறம்தான் முதலில். எனவே நீ முதலில் போ' )என்று என்னிடம் சொன்னார். அதாவது இருவர் வந்தால் வலப்புறம் உள்ளவரே முதலில் செல்ல வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் கட்டளை. அதனை அங்கு செயல்படுத்துகிறார் அந்த சவுதி.
இஸ்லாம் வருவதற்கு முன்பு தாங்கள்தான் மொழியில் உயர்ந்தவர்கள்: நாங்கள் பேசும் மொழி தவிர்த்து உலகில் மற்றவர்கள் பேசுகின்ற மொழிகள் அனைத்தும் ஊமை கள் பேசும் பாஷை என்று கிண்டலடித்த காலம் உண்டு. நபிகள் நாயகம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவுடன் நிலைமை தலைகீழாக மாறுகிறது. அது இன்று வரை அரபுகளின் வாழ்வில் தொடர்கிறது. 'நீ மனிதர்களை சமமாக நடத்தவில்லை என்றால்: உன்னை உயர்ந்தவனாக கருதினால் உனக்கு சொர்க்கம் கிடைக்காது: மனிதர்களில் ஏற்றத் தாழ்வு காண்பிப்பதை இறைவன் விரும்ப மாட்டான் என்ற நபிகளின் போதனை இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சபையில் வலப்புறம் பேணுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்
புஹாரி : 2571 அனஸ் (ரலி).
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.
புஹாரி : 2351 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).
சங்கிகள் ஏன் தமிழ்நாட்டை கண்டாலே காண்டாகிறார்கள்??
சங்கிகள் ஏன் தமிழ்நாட்டை கண்டாலே காண்டாகிறார்கள்??
இதோ அதற்கான பதில்Tuesday, December 20, 2022
தொழுகை
ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும், கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.
...இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்... (அல் குர்ஆன் 29:45).
சோனி பில் வில்லியம்ஸ் (Sonny Bill Williams)
சோனி பில் வில்லியம்ஸ்
நியூஸிலாந்தை பிறப்பிடமாகக் கொண்டவர். உலக குத்துச் சண்டை போட்டிகளில் பலவற்றை வென்றவர். தற்போது இஸ்லாமிய மார்க்கத்தால் கவரப்பட்டு முஸ்லிமாக தனது வாழ்வை தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியா சிட்னியில் பள்ளிவாசல் மற்றும் கலாசார கழகத்தை உண்டாக்க பொருள் திரட்டி தனது பொருளாதாரத்தையும் தந்து இன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இஸ்லாத்தை ஏற்க வைத்துள்ளார். இவரது பயணம் மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.
பரங்கி பழம்
நம்ம நாட்டுல பரங்கி பழம் எளிதாக கிடைக்கும் அதற்கு இங்கு மதிப்பு இல்லை . நாம் பாதம்,பிஸ்தானு பெரும் முதலாளிகள் விளம்பரங்கள் செய்து விற்பனை செய்வதை கௌரவமாக வாங்கி சாப்பிட்டு வருகிறோம் .
நான் கொஞ்சம் ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன் அரபு நாடுகளில் பணி செய்த அனுபவம் உண்டு அங்கு குழந்தை இன்மை பிரச்சினை மிக குறைவு , அங்கு முழுக்க முழுக்க சுகப்பிரசவம் தான் ஆகுது . அரேபியர்கள் வீடுகளில் அடுத்த அடுத்த உயரங்களில் குழந்தைகள் இருப்பார்கள் . அந்த பிள்ளைகளை வளர்க்க நம் நாடுகளில் இருந்து நிறைய பெண்கள் பணி அமர்த்த படுவார்கள் . அரேபிய தம்பதிகளுக்கு வேலையே அடுத்த அடுத்து குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டும் தான் .
இங்கு நம்ம நாட்டுல ஒரு குழந்தை பெற்று எடுக்க லட்சம்,கோடினு செலவு பண்றோம் . இதற்கு காரணம் நாம் மாறிய அந்நிய வாழ்க்கை முறை தான் .
நம்ம நாட்டுல நாம் வீடு அருகில் கிடைக்க கூடிய பரங்கி பழ விதைகளை குப்பையில் தூக்கி எறிந்து விடுகிறோம் . நம்ம தூக்கி வீசும் இதன் விதைகள் தான் அரேபியர்கள் கைகளில் எப்போதும் இருக்கும் . அரேபியர்கள் இல்லற வாழ்வில் முழு நிறைவோடு வாழ முதற் காரணம் நம் ஊர் பரங்கி விதைகள் .
இந்த பரங்கி பழங்களை நாம் குப்பையில் தூக்கி எறிவோம்,, அல்லது கோயில் அன்னதானம் செய்ய வழங்குவோம் . இந்த பரங்கி பழ விதைகள் விலை மதிப்பு மிகுந்தது இதை நான் நம் ஊரில் மக்கள் அதிகம் செலவு செய்யும் அதிகப்படியான helth centre , weight loss மையங்களில் பார்க்கிறேன் .
நம் ஊர் பணக்கார பெண்களுக்கு பரங்கி பழமே தெரியாது பரங்கி விதை எப்படி தெரியும். இப்ப organic foods பாரம்பரிய உணவு இவை பணக்காரர்கள் உணவாக மாறி இருக்கிறது . இந்த பணக்கார மக்கள் தங்கள் உணவு தேவையை உழவர்களிடம் இருந்து பெரும் போது அதற்க்கான முழு பயனும் அவர்களுக்கு கிடைக்கும் .
அரசியல் கட்சிக்கு, நடிகருக்கு ,யூடியூப்பருக்கு எல்லாம் எவ்வளோ பேசும் நாமும் நமது ஊடகங்களும் ஒரு நிமிடம் உழவர்களின் பொருளுக்காக பேசினால்
மக்களுக்கு எளிதாக அந்த பொருட்கள் பற்றிய புரிதல் வரும் மக்கள் அதை தேட தொடங்குவார்கள் . உழவு , உணவு, உடல்,, உயிர், ஆன்மா!....
பரங்கி விதைகளை நாம் தொடர்ந்து உண்டு வரும் போது புகை பழக்கம் , மது பழக்கம் வேகமாக மறந்து போகும் உடல் மற்றும் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும் .
பரங்கி பழம் நம்ம ஊரில் சும்மாவே கிடைக்கும் அப்படி கிடைத்தால் அந்த பழத்தை நீங்கள் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் கூட அதன் விதைகளை எடுத்து காயவைத்து எடுத்து வையுங்கள் . ஒரு முறை அந்த விதைகளை உங்கள் வாய் மென்று விட்டால் அடுத்து அடுத்து அந்த விதை உங்களை உண்ண தூண்டும் .
காப்பி
பேஸ்ட்
Monday, December 19, 2022
மறுபடியும் முதலில் இருந்தா? தாங்குமா உலகம்?
மறுபடியும் முதலில் இருந்தா? தாங்குமா உலகம்?
சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த முறை இறப்பு விகிதம் முன்பை விட அதிகமாக இருக்குமாம். மிக கவனமாக இருப்போம்.
Sunday, December 18, 2022
இஸ்ரேலின் நம்பமுடியாத தொழில்நுட்பம்
இஸ்ரேலின் நம்பமுடியாத தொழில்நுட்பம்
- பார்வைக் குறைபாடுள்ள துரதிர்ஷ்டவசமானவர்கள் எல்லாவற்றையும் நாம் செய்வது போலவே பார்க்க உதவுகிறது. ஆஹா அருமையான கண்டுபிடிப்பு - பிராண்ட் அம்பாசிடர் 'மெஸ்ஸி. '
. . . . . . . . .
அனைத்திற்கும் ஆயிரம் வருடப் பெருமை பேசி காலம் கழிப்பதில் எந்த பயனும் இல்லை.
அப்படிப் பேசுவதால் நாம் முன்னேறப் போவதும் இல்லை.
அதை வைத்து புதியதாக மக்களுக்குப் பயன் உள்ள உபகரணங்களை, உக்திகளை, வழிகளைக் கண்டுபிடிக்க முயல வேண்டும். அதில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கான கல்வி, பயிற்சி இளம் தலைமுறைக்குக் கொடுக்க வேண்டும்.
அமெரிக்க ஆயுதங்களைத் தம் நாட்டு வளங்களைக் கொடுத்து வாங்கி குவிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட்டு, அவர்கள் ஆதரவில் கை கட்டி நிற்பதை விட்டு, தாமே தயாரிக்க அரபு நாடுகள் முன்னேறாத வரை இவர்கள் வீழ்வதில் அதிக நாட்கள் ஆகாது.
அதுபோல், நாம் நமது கல்வியை ஆக்க பூர்வ வாழ்விற்குப் பயன்படும் வழியில் கற்காது, நம் நாட்டின் அரசு பதவிகளில் ஆதிக்கம் செலுத்தாத வரை நாமே நமக்குப் பெட்டியைச் செதுக்குகிறோம். என்பதே உண்மை.
இதற்குப் பலர் பலவகையில் காரணம் கற்பிக்கின்றனர். விவாதங்கள் செய்கின்றனர். இவர்கள் நமக்குத் தேவை இல்லை.
நம் சமுதாயம் ஆதிக்கம் பெற, உயர்வு பெற வழிகாட்டும், கல்வி கொடுக்கும், பயிற்சி கொடுக்கும் தலைமைகளும் குழுக்களும், கட்சிகளும் தேவை.
.ஒரு நேர உணவு கொடுத்து உள்ளம் மகிழாதீர்கள். ஏழைகளுக்குத் திருமணம் என்று பல ஆயிரங்களுக்கு விளம்பர பேனர்கள், மேடை அலங்காரங்கள், வரதட்சணைகள், தங்கத் தாலி, காணொளிப் பதிவு, பத்திரிக்கை விளம்பரம் என ஆடம்பரம் வேண்டாம். எளிய திருமணம் இவை அல்ல. அப்படிச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை.
மற்றவர் உழைத்து வாழ, சுயமாக வாழ உறுதுணையாக இருங்கள். அவர்கள் எப்பொழுதும் கை நீட்டி நீங்கள் கொடுத்து மகிழ்வது நல்லதல்ல.
குஜராத்...
குஜராத்...
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிடும் பிஜேபியினர்.
வேறு யாராவது இவ்வாறு கோஷமிட்டால் தேச விரோத பட்டம் சூட்டப்படும்.
இஸ்லாமியர்களால் சாலமோ (இத்தாலி) வில் ஒரு பல்கலைக் கழகம் நிர்மாணிக்கப்பட்டது.
கிபி 841
ஐரோப்பாவில் முதன் முதலாக இஸ்லாமியர்களால் சாலமோ (இத்தாலி) வில் ஒரு பல்கலைக் கழகம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பிறகு அதன் நீட்சியாக டொலெடோ, செலிலி, க்ரான்டா போன்ற பகுதிகளிலும் இஸ்லாமியர்களால் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. அங்கு படித்து பட்டம் பெறுபவர்களுக்கு அரபுகளின் உடையான தவ்ப் அணிவிக்கப்பட்டது. பட்டம் பெறுபவர்கள் தங்கள் நாடுகளுக்கு அதே உடையோடு சென்று அதனை அறிமுகப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக உலகமெங்கும் பட்டம் பெறுபவர்களின் உடையாக அது மாறிப் போனது.
நேற்று கால்பந்து விளையாட்டில் பட்டம் வென்ற அணிக்கு அரபு உடையை உடுத்தி அழகு பார்த்தனர். இதனை சிலர் விமரிசித்திருந்தனர். இந்த உடையானது கல்லூரி படிப்பிலிருந்தே துவங்குவதை அவர்கள் ஏனோ அறிந்திருக்கவில்லை.
பிகினி அணிந்திருந்தது எதிர்ப்பலையை உருவாக்கி இருக்கிறது.
விரைவில் வெளிவரவிருக்கும் 'பத்தான்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பேஷரம்' பாடலில் தீபிகா படுகோன் காவி கலர் பிகினி அணிந்திருந்தது எதிர்ப்பலையை உருவாக்கி இருக்கிறது.
அப்படி அவர் காவி அணிந்து கொண்டதை நானும் எதிர்க்கிறேன்.
- சுதந்திர இந்தியாவில் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் அப்பாவிகள் சாகக் காரணமான தீவிரவாதிகள் அணிந்த நிறம் அது.
- அக்கலவரங்களில் நினைக்கவே நடுநடுங்கும் வன்புணர்வுகளை அரங்கேற்றிய காமக்கொடூரர்கள் அணிந்த நிறம் அது.
- மாடு கடத்துகிறார்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொலை செய்த சைக்கோக்கள் அணிந்த நிறம் அது.
- சாமியார்கள் போர்வையில் மாநாடு நடத்தி இன ஒழிப்புக்கு திட்டங்கள் வகுத்த கொலைகாரக் கூட்டம் அணிந்த நிறம் அது.
- கலாச்சாரத்தைக் காக்கிறோம் என பப், நைட் கிளப்களில் புகுந்து பெண்களை அடித்துத் துரத்திய முட்டாப்பீசுகள் அணிந்த நிறம் அது. –
ஆன்மீகப் பம்மாத்துப் பண்ணி சாமியார் வேடமிட்டு ஆயிரம் கோடிகளில் புழங்கி, அதுவும் போதாதென ஆசிரமம் வரும் பெண்களை பாலியல் தொல்லை செய்த கேடிகளின் நிறம் அது.
- மானுட வரலாற்றின் மாபெரும் கருணையாளனை, ஒரு மகாத்மாவை சுட்டுக் கொலை செய்யக் காரணமாக இருந்த நிறம் அது.
அந்த நிறத்தைப் போய் அன்பும், அழகும், பரிவும், கருணையும் நிறைந்த எங்கள் தீபிகாவுக்கு அணிவித்ததற்காக படத்தின் இயக்குனருக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன்.
Sridhar Subramaniam
Saturday, December 17, 2022
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா அந்த மக்களுக்கு கொடுத்த பரிசு
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா அந்த மக்களுக்கு கொடுத்த பரிசு.
மற்றொரு நாட்டை ஆக்கிரமித்து அதன் வளங்களை சுரண்டி அந்த மக்களை அழிப்பதை எந்த மண்ணின் மைந்தன் பொறுத்துக் கொள்வான். இது தீவிரவாதமாகாதா? இதனை கண்டித்து அவன் ஆயுதம் எடுத்தால் அது மட்டும்தான் தீவிரவாதமா?
காவி உடை உடுத்தினால் ராஜ உபசாரம்.
'ஒன்பது வருடமாக காவி உடையில் நான் ரயிலில் பயணித்துள்ளேன். ஒரு முறை கூட டிக்கெட் எடுத்ததில்லை. டிடிஆர் வந்து 'பாபா.. சாப்டீங்களா?' என்று பவ்யமாக கேட்பார். ஒரு முறை கூட என்னிடம் டிக்கெட் கேட்டதில்லை'
இதனை சிரித்துக் கொண்டே சொல்கிறான். சாமான்யன் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் சிறைவாசம். காவி உடை உடுத்தினால் ராஜ உபசாரம். இதுதான் வட மாநிலங்கள்.
முழக்கமிடும் துருக்கிய மாணவர்கள்.
உகுர் குதாய் என்ற எழுத்தாளர் நபிகள் நாயகத்தைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்பினார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடும் துருக்கிய மாணவர்கள்.
நாடு, மொழி, இனம் என்று அனைத்தையும் கடந்து அன்பு செலுத்தப்டுபவர் நபிகள் நாயகம் அவர்கள். அந்த அளவு அவர்களால் நாங்கள் தெளிவான மார்க்கத்தைப் பெற்றுள்ளோம். எனவேதான் அவர்களது கண்ணியத்துக்கு ஒரு சிறு இழுக்கை யாராவது ஏற்படுத்தினாலும் உலக முஸ்லி;கள் கொதித்தெழுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)